Message for Students

உயர்தர மாணவர்களின் கல்வித் திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இவ் இணையத்தளமானது மாணவர்களின் இணையவழி கல்விக்கான ஒரு வளமாகும். ஒவ்வொரு பாடமும் புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப சிறிய தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டு சுருக்கமான மற்றும் தெளிவான குறிப்புக்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்புகளிலும் அவற்றிற்குரிய வினாக்களும் விடைகளும் தொகுக்கப்பட்டு மாணவர்கள் இலகுவாக படிப்பதற்கு மிக எளிய முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் மாணவர்கள் அலகு ரீதியாக பல்தேர்வு மற்றும் கட்டுரை வினாக்களை கேள்வி வங்கி (Qbank) மூலமாகவும் பயிற்சி செய்து தமது செயல்திறன்களை சோதனை செய்ய முடியும்.

இப்புதிய கட்டமைப்பானது உயர்தர மாணவர்கள் பரீட்சைக்கு மிகவும் சிறந்த முறையில் ஊக்கமளிக்கும். மேலும் இவ் இணையத்தளம் மூலம் மாணவர்கள் தமது பாடங்கள் தொடர்பான முக்கிய குறிப்புகள் மற்றும் சந்தேகங்களை Comment மூலம் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். எமது இவ் இலவச இணையவழி கல்வி உயர்தர மாணவர்களுக்கு சிறந்த ஒரு வளமாக அமையும் என்பது எமது நம்பிக்கை .

Recent Questions

5 வருட காலம் கொண்ட செயற்றிட்டமொன்றுக்கு இயந்திரமொன்றைக் கொள்வனவு செய்வதற்கு ரூ. 5 000 000 முதலீடு தேவைப்படுகின்றது. இச்செயற்றிட்டத்தின் முடிவில் இதன் எஞ்சிய பெறுமதியானது ரூ. 1 000 000 ஆகும். கணக்கீட்டுத் திரும்பல் வீதமானது (ARR) 20% ஆக இருப்பின், இச்செயற்றிட்டத்தின் சராசரி வருடாந்த இலாபம் எவ்வளவு? (சராசரி வருடாந்த இலாபத்தினைச் சராசரி முதலீட்டினால் பிரிப்பதன் மூலம் ARR கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்செயற்றிட்டமானது ஒவ்வொரு வருடமும் சமமான இலாபத்தினை ஈட்டுகின்றதெனக் கொள்க.)

QID: 35867
Review Topic

ஏனைய காரணிகள் மாறாதிருக்கும் போது பின்வருவனவற்றுள் எவை செயற்றிட்டமொன்றின் தேறிய நிகழ்காலப் பெறுமதியில் அதிகரிப்பினை ஏற்படுத்தும்?
A – எதிர்பார்க்கப்படும் காசுப் பாய்ச்சல்களில் அதிகரிப்பு
B – ஆரம்ப முதலீட்டு கிரயத்தில் குறைவு
C – சொத்தின் எஞ்சிய பெறுமதியில் அதிகரிப்பு
D – தேவைப்படும் திரும்பல் வீதத்தில் அதிகரிப்பு

QID: 35865
Review Topic

கம்பனியொன்று உற்பத்தியில் பயன்படுத்திய அதன் பழைய இயந்திரமொன்றிற்குப் பதிலாக புதிய இயந்திரமொன்றினைக் கொள்வனவு செய்ய விரும்புகிறது. பழைய இயந்திரத்தினதும் புதிய இயந்திரத்தினதும் பயன்தரு பாவனைக்காலம் தனித்தனியே 4 வருடங்களாகும். பின்வரும் தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

புதிய இயந்திரம் வாங்கப்படுமாயின் ஆரம்ப தேறிய காசு வெளிப்பாய்ச்சல் மற்றும் 4 ஆம் வருடத்தில் காசு உட்பாய்ச்சல் :

QID: 35863
Review Topic

பின்வருவனவற்றுள் எவை ஏனைய காரணிகள் மாறாத நிலையில் செயற்றிட்டமொன்றின் தேறிய நிகழ்கால பெறுமதியில் அதிகரிப்பை ஏற்படுத்தும்?
A – கழிவீட்டு வீதத்தில் குறைவு
B – வருடாந்த பெறுமானத்தேய்வில் குறைவு
C – ஆரம்ப முதலீட்டில் குறைவு
D – தேறிய செயற்பாட்டு காசு உட்பாய்ச்சலில் குறைவு

QID: 35861
Review Topic

கம்பனியொன்றின் புதிய செயற்றிட்டத்தின் காசுப் பாய்ச்சல்களைக் கணிக்கும்போது பின்வருவனவற்றுள் எவ்விடயங்கள் உள்ளடக்கப்படும்?
A – இச்செயற்றிட்டத்தில் பயன்படுத்தவதற்கெனப் பெறப்பட்ட இயந்திரத்தின் கிரயம்
B – இந்த இயந்திரத்தின் பெறுமானத் தேய்வு
C – இந்த இயந்திரத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் எஞ்சிய பெறுமதி
D – இச்செயற்றிட்டத்தின் காரணமாக ஏற்படும் செயற்பாட்டுக் கிரயங்கள்
E – இச்செயற்றிட்டத்திற்கான சந்தை ஆய்வினை மேற்கொள்வதற்காக ஏற்படும் செலவுகள்

QID: 35860
Review Topic

சாத்தியமான செயற்றிட்டமாக அடையாளம் காணப்பட்ட புதிய உற்பத்தி செய்முறை ஒன்றை தாபிப்பது தொடர்பில் எழுந்த பின்வரும் கிரயங்களில் எவைகளை மூலதனமாக்கக் கூடிய அபிவிருத்திக் கிரயங்களாக இனங் காணமுடியும்?
A – உற்பத்தி செய்முறையினை அபிவிருத்தி செய்வதற்குப் பயன்படுத்திய மூலப் பொருள்கள்
B – ஊழியர்கள் உற்பத்தி செய்முறையுடன் பரிச்சயமாவதற்கான பயிற்சிக் கிரயம்
C – உற்பத்தி செய்முறையின் சாத்தியத் தன்மையை மதிப்பிடல் தொடர்பில் ஏற்பட்ட ஆலோசனைக் கட்டணங்கள்
D – உற்பத்தி செய்முறையைத் தாபிக்கும் போது பயன்படுத்தப்பட்ட ஆய்வுகூட உபகரணங்களிற்கான பெறுமானத் தேய்வு

QID: 35858
Review Topic

ஒரு செயற்றிட்டத்திலிருந்து எழும் பின்வரும் காசுப் பாய்ச்சல்களில் எது தேறிய நிகழ்கால பெறுமதி முறையின் அடிப்படையில் மதிப்பிடப்படும் தேறிய காசுப் பாய்ச்சலினை கணிப்பதுடன் தொடர்பற்றதாக இருக்கும்?

QID: 35856
Review Topic

பின்வரும் விடயங்கள் கம்பனி ஒன்றின் புதிய செயற்றிட்டத்துடன் தொடர்பானவை.
(A) செயற்றிட்டத்தில் பயன்படுத்திய மூலப்பொருட்களின் கிரயம்
(B) செயற்றிட்டத்திற்கான இயந்திரத்தின் பெறுமானத் தேய்வு
(C) புதிய செயற்றிட்டம் காரணமாக கம்பனியில் ஏற்பட்ட மேலதிக மேந்தலைகள்
(D) செயற்றிட்ட இயந்திரத்தின் எதிர்பார்க்கப்பட்ட எஞ்சிய பெறுமதி
மேலுள்ள விடயங்களில் புதிய செயற்றிட்டத்தின் காசுப் பாய்ச்சலை மதிப்படும்போது உள்ளடக்க வேண்டியவை எவை?

QID: 35855
Review Topic

ஒரு வருட இறுதியில் 10%கழிவீட்டு வீதத்தில் ரூபா 11 100 இற்கான நிகழ்காலப் பெறுமதி

QID: 35854
Review Topic

பணத்திற்கு காலப்பெறுமதி உண்டு. ஏனெனில்

QID: 35853
Review Topic

Recent Public Feedback

Jeyaranjan Kajatharany
Praveen Gamer
Praveen Gamer
mohamed asraak
mohamed asraak
Thinusha Chandrakumar
Mohamed Rifkhan
Mohamed Rifkhan
M Kuka
M Kuka

Recent Video or Images

Topic Updates