Please Login to view full dashboard.

உற்பத்திச் சாத்திய வளையியின் நடைமுறைசார் உபயோகங்கள்

Author : Admin

22  
Topic updated on 02/15/2019 06:18am

உற்பத்திச் சாத்திய வளையியின் நடைமுறைசார் உபயோகங்கள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • அமயச் செலவை விளக்க
  • வளங்களின் அருமைத் தன்மையை அறிய
  • வளங்களின் பயன்பாட்டை அறிய
  • உற்பத்தி இயலளவில் ஏற்படும் மாற்றங்களை அறிய
  • வள விளைதிறன் மாற்றமடைய காரணமாயுள்ள விடயங்களை விளக்க.
  • பொருளாதார பின்னடைவு, பொருளாதார மந்தம், பொருளாதார மீட்சி, பொருளாதாரத் தடை, பொருளாதார வளர்ச்சி, வீழ்ச்சி போன்றவற்றால் பொருளாதாரமொன்றில் ஏற்படும் மாற்றங்களை அறிய உற்பத்திச் சாத்திய வளையி பயன்படும்.

அருமையை உற்பத்திச் சாத்திய எல்லையில் நோக்கினால்

  • உற்பத்திச் சாத்திய எல்லைக்கு அப்பால் அமைந்துள்ள புள்ளி ஒன்றில் உற்பத்தி இடம்பெற முடியாமை வளங்களின் அருமையைக் காட்டும்.

eco-3

உற்பத்தி சாத்திய எல்லைக்கு அப்பால் உள்ள B புள்ளி அருமையைக் காட்டும்.

வளங்களின் பூரணமான பயன்பாடு /பூரண நிறைதொழில் மட்டம்

  • நாடொன்றில் வரையறுத்துத் தரப்பட்டுள்ள வளங்கள் யாவும் பூரணமாகவும் அதி உச்சமட்ட விளைதிறனாகவும் உற்பத்தியில் கையாளப்படும் போது உற்பத்திச் சாத்திய எல்லையில் உள்ள புள்ளியொன்றில் உற்பத்திச் சேர்க்கை இடம்பெறும்.
  • இதனை பூரண நிறைதொழில் மட்டம் என்பர்.
  • இதன்போது ஏதாவது ஒரு பண்டத்தின் உற்பத்தி அளவை அதிகரிக்கும்போது மாற்று உற்பத்தி அளவு குறைந்து அமையச் செலவு தோன்றும்.

01-eco

உற்பத்தி சாத்திய எல்லையிலுள்ள புள்ளிகள் A,B,C,D பூரண நிறைதொழில் மட்டத்தைக் காட்டும்.

வளங்களின் பூரணமற்ற பயன்பாடு / குறைதொழில் மட்டம்

  • நாடொன்றில் வரையறுத்துத் தரப்பட்ட வளங்கள் பூரணமாக உற்பத்தியில் பயன்படுத்தப்படாமலும், வளங்களின் அதி உச்ச மட்ட விளைதிறன் அடையப்படாமலும் காணப்படுமாயின் உற்பத்திச் சாத்திய எல்லைக்கு உட்புறமுள்ள புள்ளியொன்றில் உற்பத்தி இடம்பெறும்.
  • இதனை குறைதொழில் மட்டம் /வேலையின்மை என்பர்.
  • சாத்திய வளையிக்கு இடப்புறம் /உட்புறம் அமைந்த உற்பத்திச் சேர்க்கை புள்ளியொன்று எல்லைக்கு நகரும் போது அமயச் செலவு தோன்றாது

eco-4

D புள்ளி குறைதொழில் மட்டத்தைக் கருதும். அது E,F,C இற்கு நகர்ந்தால் அமையச்செலவு 0 ஆகும்.

பொருளாதரப் பின்னடைவு நீங்கும் போது / பொருளாதார மீட்சி ஏற்படும் போது

உற்பத்திச் சாத்திய எல்லைக்கு உட்புறம் / இடப்புறம் உள்ள உற்பத்திச் சேர்க்கைப் புள்ளி உற்பத்திச் சாத்திய எல்லைக்கு அண்மையிலுள்ள உற்பத்திச் சேர்க்கைப் புள்ளிக்கு / உற்பத்திச் சாத்திய எல்லையிலுள்ள உற்பத்திச் சேர்க்கைப் புள்ளிக்கு நகரும்.

eco-4C புள்ளி D க்கு நகருதல், அல்லது F புள்ளி E க்கு நகருதல்.

சாத்தியமான வள வெளியீட்டாற்றல் /சாத்தியமான வள உற்பத்தி இயலளவு

  • நாடொன்றில் வரையறுத்துத் தரப்பட்டுள்ள வளங்களை பூரணமாகவும் அதி உச்ச விளைதிறனாகவும் பயன்படுத்தி பெறத்தக்க உற்பத்திச் சேர்க்கையே சாத்தியமான வள உற்பத்தி இயளலளவு ஆகும்.
  • உற்பத்திச் சாத்திய எல்லையிலுள் உற்பத்திச் சேர்க்கைப் புள்ளிகள் சாத்தியமான வள வெளியீட்டாற்றலைக் காட்டும்.
    உ – ம்
    A, B, C புள்ளிகள்

eco-5

பொருளாதார வளர்ச்சி / பொருளாதாரச் செழிப்பு

  • நாடொன்றினது சாத்தியமான வள உற்பத்தி இயலளவு தொடர்ச்சியாக அதிகரிக்கும் நீண்ட கால செயற்பாடு பொருளாதார வளர்ச்சியாகும்.
  • இதன்போது உற்பத்திச் சாத்திய வளையி வெளிப்புறம் / வலப்புறம் நகர்வடையும்.
  • நாடொன்றின் உற்பத்தி இயலளவை அதிகரிக்கச் செய்யும் காரணிகள்
    அ) வளக்கிடைப்பனவுகள் அதிகரித்தல்.
    ஆ) வளவிளைதிறன்கள் அதிகரித்தல்.
    உ – ம்
    2003 முதல் 2012 வரையான காலத்தில் ஒரு பொருளாதாரமடைந்த 25% பொருளாதார வளர்ச்சியை வருமாறு காட்டலாம்.

eco-6

AB வளையி CD க்கு நகர்தல் 25% பொருளாதார வளர்ச்சி

உற்பத்திச் சாத்திய எல்லை வலதுபுறம் / வெளிப்புறம் நகர்வடைய பொறுப்பாகவுள்ள காரணிகள்

  • வளத்திரட்சி அதிகரித்தல்
    • புதிய வளங்களின் பயன்பாடு
    • புதிய முதலீட்டுப் பெருக்கம்
    • சிறப்படைந்த தொழிற்படையின் குடிவருகை
    • வெளிநாட்டு முதலீட்டு வருகை
    • வெளிநாட்டு உதவி கிடைத்தல்
    • கீழ்கட்டுமான விருத்திகள்
  • வள விளைதிறன் அதிகரித்தல்
    • நவீன நுட்பங்களின் வருகை
    • முகாமைத்துவ மேம்பாடு
    • மனித மூலதன விருத்தி
    • தொழிற்படை சிறப்புத் தேர்ச்சியடைதல்
    • உலகமயமாதல் விரிவடைதல்

பொருளாதார வீழ்ச்சி / பொருளாதார நலிவு

  • நாடொன்றினது சாத்தியமான வளங்களின் உற்பத்தி இயலளவு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைதல் பொருளாதார வீழ்ச்சியாகும்.
  • இதன்போது உற்பத்திச் சாத்திய வளையி இடதுபுறம் / உட்புறம் நகர்வடையும்
  • உ – ம்
    2005 முதல் 2015 வரையான காலத்தில் ஒரு பொருளாதாரம் அடைந்த 20% வீழ்ச்சியை வருமாறு காட்டலாம்.

eco-7AB வளையி CD க்கு நகர்தல் 20% பொருளாதார வீழ்ச்சி

நாடொன்றின் உற்பத்தி இயலளவை நலிவடையச் செய்யும் காரணிகள் /உற்பத்திச் சாத்திய வளையியை இடப்புறம் நகரச் செய்யும் காரணிகள்

  • வளத்திரட்சி குறைதல் / வளங்கள் அழிவடைதல்.
    • இயற்கை அனர்த்தங்களால் வளங்கள் அழிவடைதல்.
    • போரினால் வளங்கள் அழிவடைதல்.
    • பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படல்/ வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்படல்.
    • வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுதல்.
    • சிறப்படைந்த தொழிற்படையின் குடி அகல்வுகள்
    • சனத்தொகை அழிவுகள்
  • வளவிளைதிறன்  திறன் குறைதல்.
    • தொழில்நுட்ப தொகுதி அழிதல்.
    • முகாமைத்துவத்தின் பின்னடைவு
    • தொழிலாளர் வினைத் திறன் பின்னடைதல்
    • தொழிற்படையின் சிறப்புத் தேர்ச்சியில் பின்னடைவு

வள விளைதிறன்

மெய்யான வெளியீட்டளவை உற்பத்திக்குப் பயன்படுத்திய மொத்த உள்ளீட்டின் அளவால் வகுத்துப் பெறப்படுவதே வளவினைதிறன் ஆகும்.
இது உள்ளீடு ஒன்றிற்கான சராசரி உற்பத்திக் காரணி விளைதிறன் எனப்படும்.
econ

வளவிளைதிறனில் மாற்றத்தை ஏற்படுத்தும்  காரணிகள்

  1.  தொழில்நுட்பம்
  2.  மனித மூலதனம்
  3. முகாமைத்துவம்
  4.  தொழிற்பகுப்பும் சிறப்புத்தேர்ச்சியும்
  5.  சமூக மூலதனம்
  6. இயற்கை மூலதனம்
  • இக்காரணிகள் முன்னேற்றமடைந்தால் வளவிளைதிறன் அதிகரிக்கும்.
  • மாறாக இக் காரணிகள் மோசமடைந்தால் வளவிளைதிறன் குறையும்.
  • வளவளைதிறன் கூட PPC வளையி வலதுபுறம் நகரும்.
  • வளவிளைதிறன் குறைய PPC இடதுபுறம் நகரும்.

வளவிளைதிறன் அதிகரிப்பும் 

  • முன்னைய உள்ளீட்டில் முன்னரைவிட கூடிய வெளியீடுகள் பெறப்படல் வளவிளைதிறன் அதிகரிப்பு எனப்படும்.
  • வெளியீடொன்றுக்கான உள்ளீட்டின் அளவு குறைதல் எனவும் இதனைத் கூறலாம்.
  • இதன் போது உற்பத்திச் சாத்திய எல்லை வலப்புறம் நகரும்.

வளவிளைதிறன் வீழ்ச்சியும்

  •  முன்னைய உள்ளீட்டில் முன்னரைவிட குறைந்த வெளியீடுகள் பெறப்படல் வளவிளைதிறன் வீழ்ச்சியாகும்.
  • வெளியீடொன்றுக்கான உள்ளீட்டின் அளவு அதிகரித்தல் எனவும் இதனைக் கூறலாம்.
  • இதன்போது உற்பத்திச் சாத்திய வளையி இடதுபுறம் நகரும்.
    உ – ம்
    வளவிளைதிறன் அதிகரிப்பதை AB வளையி CD ஆக நகர்வதாகவும்  வளவிளைதிறன் குறைவதை AB வளையி EF ஆக நகர்வதாகவும் காட்டலாம்.

eco-8

 

RATE CONTENT 0, 0
QBANK (22 QUESTIONS)

தற்போதைய உலகப் பொருளாதார பின்னடைவினால் (recession) மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும். பொருளாதார வீழ்ச்சியினால் ஜப்பானியப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய உடனடி விளைவு,

Review Topic
QID: 27447
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் விடயங்களில் பொருளாதாரமொன்றின் சாத்தியவள வெளியீட்டை (potential output) அதிகரிக்க ஏதுவாக அமையாதது,

Review Topic
QID: 27456
Hide Comments(0)

Leave a Reply

சமூகத்தில் பின்வருவனவற்றில் உற்பத்தி இயல்தகவு எல்லையை வெளிப்புறமாக நகர்வடையச் செய்யாதது

Review Topic
QID: 27473
Hide Comments(0)

Leave a Reply

எல்லா உற்பத்தி நடவடிக்கைளிலும் வளங்கள் பூரண பதிலீடுகளாகப் பயன்படுத்தப்படுமாயின் பின்வருவனவற்றில் எக்கூற்று உண்மையாகும்?

Review Topic
QID: 27474
Hide Comments(0)

Leave a Reply

உற்பத்தி இயல்தகவு வளையியின் உட்புறமுள்ள புள்ளி ஒன்றினால் காட்டப்படுவது

Review Topic
QID: 27492
Hide Comments(0)

Leave a Reply

நாடொன்றின் உற்பத்தி இயல்தகவு எல்லையின் வழியே

Review Topic
QID: 27498
Hide Comments(0)

Leave a Reply

போட்டிச் சந்தையொன்றில் வெளிவாரிகளற்ற நிலையில் வள ஒதுக்கீட்டு வினைத்திறன் நிலவுவது, எல்லாச் சந்தைகளிலும் விலை

Review Topic
QID: 27508
Hide Comments(0)

Leave a Reply

சாத்திய வெளியீடு என்பது,

Review Topic
QID: 27511
Hide Comments(0)

Leave a Reply

ஒரு பொருளாதாரமானது உற்பத்தி வினைதிறனை அடைந்துள்ளமையைக் காட்டுவது,

Review Topic
QID: 27517
Hide Comments(0)

Leave a Reply

தற்போதைய உலகப் பொருளாதார பின்னடைவினால் (recession) மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும். பொருளாதார வீழ்ச்சியினால் ஜப்பானியப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய உடனடி விளைவு,

Review Topic
QID: 27447

பின்வரும் விடயங்களில் பொருளாதாரமொன்றின் சாத்தியவள வெளியீட்டை (potential output) அதிகரிக்க ஏதுவாக அமையாதது,

Review Topic
QID: 27456

சமூகத்தில் பின்வருவனவற்றில் உற்பத்தி இயல்தகவு எல்லையை வெளிப்புறமாக நகர்வடையச் செய்யாதது

Review Topic
QID: 27473

எல்லா உற்பத்தி நடவடிக்கைளிலும் வளங்கள் பூரண பதிலீடுகளாகப் பயன்படுத்தப்படுமாயின் பின்வருவனவற்றில் எக்கூற்று உண்மையாகும்?

Review Topic
QID: 27474

உற்பத்தி இயல்தகவு வளையியின் உட்புறமுள்ள புள்ளி ஒன்றினால் காட்டப்படுவது

Review Topic
QID: 27492

நாடொன்றின் உற்பத்தி இயல்தகவு எல்லையின் வழியே

Review Topic
QID: 27498

போட்டிச் சந்தையொன்றில் வெளிவாரிகளற்ற நிலையில் வள ஒதுக்கீட்டு வினைத்திறன் நிலவுவது, எல்லாச் சந்தைகளிலும் விலை

Review Topic
QID: 27508

சாத்திய வெளியீடு என்பது,

Review Topic
QID: 27511

ஒரு பொருளாதாரமானது உற்பத்தி வினைதிறனை அடைந்துள்ளமையைக் காட்டுவது,

Review Topic
QID: 27517
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank