Please Login to view full dashboard.

கூலியைத் தீர்மானித்தல்

Author : Admin

0  
Topic updated on 02/15/2019 06:49am
  • நிறைபோட்டிச்சந்தை ஒன்றில் கூலி விகிதத்தைத் தீர்மானிப்பதற்குப் பல காரணிகள் காரணமாகின்றன.
  • உழைப்புக்குக் காணப்படும் கேள்வி மற்றும் நிரம்பல் கூலி விகிதத்தை தீர்மானிக்கும் போது முக்கியமானவை.

நிறைபோட்டி நிறுவனமொன்றினால் உழைப்புக்கு ஏற்படுத்தப்படும் கேள்வி அளவிற்கான அடிப்படை

  • எல்லை வருமானம்
  • விளைதிறன்
  • உழைப்புக்காக செலுத்த வேண்டிய எல்லைச் செலவு

screenshot-22

  • W – உழைப்புச் சந்தையில் கேள்வி நிரம்பலுக்கேற்ப தீர்மானிக்கப்பட்டுள்ள வேதனமட்டமாகும். இவ்வேதன மட்டம் நிறுவனங்களினால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  • V – நிறுவனம் வேலையில் ஈடுபடுத்தியுள்ள உழைப்பு அலகுகளின் தொகையாகும்.
  • நிறுவனம் வேலையில் ஈடுபடுத்தியுள்ள உழைப்பு அலகுகளின் எண்ணிக்கை MRP = MFC என்ற இடத்தில் தீர்மானிக்கப்படும்.
  • போட்டி ரீதியான ஊழியச் சந்தையொன்றின் ஒவ்வொரு நிறுவனத்தினதும் உழைப்புக்கான கேள்வியின் கிடையான கூட்டுத்தொகையினால் உழைப்புக்கான சந்தைக் கேள்விக்கோடு அமைக்கப்படும்.
  • தனிநபர் உழைப்பு நிரம்பல் வேதனத்தின் ஒரு நேர்க்காரணியாகும்.
  • உழைப்பின் நிரம்பல் வேதன மட்டத்தின் நேர்ச்சார்பாக அமைவது உழைப்பின் நிரம்பலை அதிகரிக்கும்போது அதன் அமையச் செலவும் அதிகரிக்கின்ற காரணத்தினாலாகும்.
  • ஒவ்வொரு உழைப்பாளனினதும் தனிப்பட்ட உழைப்பு நிரம்பலைக் கிடையாகக் கூட்டுவதன் மூலம் சந்தையில் உழைப்பின் நிரம்பல் பெறப்படுகிறது.
  • உழைப்பிற்கான சந்தைக்க கேள்வியும் உழைப்புக்கான சந்தை நிரம்பலும் சமப்படும் போது ஊழியத்துக்கான போட்டிச் சந்தையொன்றில் வேதனமட்டமும் பரிமாற்றப்படும் உழைப்பு அலகுகளின் தொகையும் தீர்மானிக்கபடும்.

screenshot-23

  • L1 என்பது உழைப்புக்கான போட்டிச் சந்தையொன்றில் வேலையில் ஈடுபட்டுள்ள உழைப்பு அலகுகளின் தொகையாகும்.
    • மெய்யான உழைப்புச் சந்தை ஒன்றில் சம்பள வேறுபாடும் காணப்படுகிறது.

சம்பள வேறுபாடுகளை தீர்மானிக்கும் காரணிகள்

  • உழைப்பாளர்கள் ஓரினமற்ற தன்மை.
  • தொழிற் கவர்ச்சியின் பல்வேறுபட்ட தன்மைகள்.
  • உழைப்புச் சந்தையின் பூரணமற்ற தன்மை.
  • உழைப்பின் அசைவுக்குக் காணப்படும் தடைகள்.
  • தொழில் நிச்சயமற்ற தன்மையில் காணப்படும் வேறுபாடுகள்.
  • தொழிற்சங்க செல்வாக்குகள்.

சம்பள வேறுபாடுகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் பல்வேறு வழிகளில் தலையிடுகின்றது.

சம்பள வேறுபாடுகளைக் குறைப்பதற்கு அரசு தலையிடும் வழிமுறையாவது இழிவுக் கூலி நிர்ணயித்தல் ஆகும்.

உழைப்புச் சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் உழைப்பாளனைப் பொறுத்து நியாயமானதாக இல்லாதவிடத்து சமநிலைச் சம்பள மட்டத்துக்கு மேலாக நிர்ணயிக்கப்பட்ட சம்பள மட்டமொன்றை சட்டரீதியாக நிர்ணயிப்பதே இழிவுக்கூலி.

screenshot-24

இழிவுக்கூலி நிர்ணயிக்கப்பட்ட பின்னர் உழைப்புச்சந்தையில் மிகையான உழைப்பு நிரம்பல் ஒன்று காணப்படும்.

 

RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank