Please Login to view full dashboard.

நிரம்பல் ஊக்குவிப்புக் கொள்கை

Author : Admin

4  
Topic updated on 02/15/2019 10:07am

Please Login to view the QuestionPlease Login to view the Question

  • உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக பிரதிகளை வழங்குவது நிரம்பல்
    ஊக்குவிப்புக் கொள்கை என அழைக்கப்படும்.
  • நிரம்பல் அதிகரிப்புக் கொள்கையினைச் செயற்படுத்தும் போது
    முதலீடு அதிகரிக்கும் உற்பத்திச் செலவு குறைந்து உற்பத்திக்
    காரணிகளின் விளைதிறன் அதிரிக்கும்.
  • இவ்வாறு பிரதான பேரினப் பொருளாதார மாறியினை எதிர்பார்த்த
    மட்டத்துக்குக் கொண்டு வருவதற்கு நிரம்பல் ஊக்குவிப்புக்
    கொள்கை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகப் பல்வேறு நிரம்பல் அதிகரிப்புக்
    கொள்கை நடவடிக்கைகளைப் பயன்படுத்த முடியும்:

    • வரிச் சீரமைப்பு
    • தனியார் மயமாக்கல்
    • சட்டதிட்டங்களைத் தளர்த்துதல்
    • ஊழியர் சந்தை மறுசீரமைப்பு
    • மூலதனச் சந்தை மறுசீரமைப்பு

 

வரிச் சீரமைப்பு
  • உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வரியமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவது வரிச் சீரமைப்பு ஆகும்.
  • வரிவிதிப்பானது சந்தையின் போட்டித் தன்மையைப் பாதிப்பதால் உற்பத்தி, நுகர்வு, முதலீடு, சேமிப்பு போன்றவற்றில் உத்தம மட்டத்தைப் பேண முடியாதுள்ளது.
  • எனவே வரியை அறவிடுவதால் சந்தையின் போட்டித் தன்மைக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் வரி விதிப்பில் நடுநிலைமைத் தன்மை பேணப்பட வேண்டும் என்பதே வரிச் சீரமைப்பு ஆகும்.
  • அத்தகைய நடவடிக்கைகளாவன:
    • வரி மன்னிப்பு வழங்கல்.
    • வரியை வெட்டுதல்.
    • வரியைக் குறைத்தல்.
தனியார் மயமாக்கல்
  • அரச உரிமையின் கீழ்க் காணப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளில் தனியார் துறையையும் தொடர்புபடுத்திக் கொள்வது தனியார் மயமாக்கல்  ஆகும்.
  • பின்வரும் வழிகளில் தனியார் மயமாக்கல் இடம்பெறலாம்:
    • அரச முயற்சியின் முழு உரிமையையோ அல்லது உரிமையில் ஒரு பகுதியையோ தனியாருக்கு விற்றல்.
    • அரச முயற்சியின் முகாமைத்துவத்தை தனியாரிடம் ஒப்படைத்தல்.
    • அரச துறைக்குரிய சில தேவைகளை தனியார் துறையிடமிருந்து பெற்றுக் கொள்ளல்.
சட்டத்திட்டங்களைத் தளர்த்துதல்
  • பொருளாதாரத்தின் போட்டித் தன்மை குறைவதற்குக் காரணமாய் உள்ள சட்டங்களால் ஏற்படுத்தப்பட்டதும் , சமூக ரீதியில் ஏற்படுத்தப்பட்டதுமான ஒழுங்குகள், தடைகளை நீக்குதல் சட்டதிட்டங்களை தளர்த்துதல் எனப்படும்.
  • அவையாவன:
    • தொழில் முயற்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கான சட்ட விதிகளை இலகுபடுத்தல்.
    • சுதந்திர வர்த்தகத்திற்கு தடையாக உள்ள அரச மேற்பார்வைகளை தளர்த்தல்.
    • சமூக காரணிகளால் (இலஞ்சம்), கொடுக்கல் வாங்கல் செலவுகள் அதிகரிப்பதைத் தடுத்தல்.
ஊழியச் சந்தையை மறுசீரமைத்தல்
  • ஊழியச் சந்தையின் போட்டி நிலைக்கு தடை ஏற்படாதவாறு கேள்வி, நிரம்பல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் இதுவாகும்.
  • உ+ம்:
    • அழுத்தம் தரும் தொழிலாளர் சட்டங்களை நீக்குதல்.
    • ஊழியர் ஆட்சேர்ப்பின் போது தகைமையற்றோரை ஆட்சேர்ப்பு செய்யாதிருக்க நடவடிக்கை எடுத்தல்.
    • தொழிற்பயிற்சி தொடர்பாக ஊழியருக்கு அறிவுறுத்தல்.
மூலதனச் சந்தையை மறுசீரமைத்தல்
  • உற்பத்தி அதிகரிப்பதற்குத் தடையாக உள்ள மூலதனப் பற்றாக்குறையைத் தீர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே இதுவாகும்.
  • அத்தகைய நடவடிக்கைகளாவன:
    • வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவித்தல்.
    • சலுகை நிபந்தனையில் வெளிநாட்டுக் கடன் பெறல்.
    • சேமிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தல்.
    • மூலதன வினைத்திறனைப் பெருக்குதல்.
RATE CONTENT 0, 0
QBANK (4 QUESTIONS)

பின்வருவனவற்றில் பெரும்பாலும் நிரம்பல் பக்கப் பொருளாதாரக் கொள்கைக்கான உதாரணமாகக் கருதப்படக் கூடியது எது?

Review Topic
QID: 30634
Hide Comments(0)

Leave a Reply

உற்பத்தியை ஊக்குவிப்பதுடன் தொடர்புடைய நிரம்பல் பக்க ஊக்குவிப்புக் கொள்கை நடைமுறைகளாவன,

Review Topic
QID: 30655
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் பெரும்பாலும் நிரம்பல் பக்கப் பொருளாதாரக் கொள்கைக்கான உதாரணமாகக் கருதப்படக் கூடியது எது?

Review Topic
QID: 30634

உற்பத்தியை ஊக்குவிப்பதுடன் தொடர்புடைய நிரம்பல் பக்க ஊக்குவிப்புக் கொள்கை நடைமுறைகளாவன,

Review Topic
QID: 30655
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank