Message for Students

உயர்தர மாணவர்களின் கல்வித் திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இவ் இணையத்தளமானது மாணவர்களின் இணையவழி கல்விக்கான ஒரு வளமாகும். ஒவ்வொரு பாடமும் புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப சிறிய தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டு சுருக்கமான மற்றும் தெளிவான குறிப்புக்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்புகளிலும் அவற்றிற்குரிய வினாக்களும் விடைகளும் தொகுக்கப்பட்டு மாணவர்கள் இலகுவாக படிப்பதற்கு மிக எளிய முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் மாணவர்கள் அலகு ரீதியாக பல்தேர்வு மற்றும் கட்டுரை வினாக்களை கேள்வி வங்கி (Qbank) மூலமாகவும் பயிற்சி செய்து தமது செயல்திறன்களை சோதனை செய்ய முடியும்.

இப்புதிய கட்டமைப்பானது உயர்தர மாணவர்கள் பரீட்சைக்கு மிகவும் சிறந்த முறையில் ஊக்கமளிக்கும். மேலும் இவ் இணையத்தளம் மூலம் மாணவர்கள் தமது பாடங்கள் தொடர்பான முக்கிய குறிப்புகள் மற்றும் சந்தேகங்களை Comment மூலம் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். எமது இவ் இலவச இணையவழி கல்வி உயர்தர மாணவர்களுக்கு சிறந்த ஒரு வளமாக அமையும் என்பது எமது நம்பிக்கை .

Recent Questions

48 000 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் ஆபிரிக்காவுக்கு வெளியிலான ஓர் இடத்தில் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டவையாக இனங்காணப்பட்டுள்ள அம்பு – வில் தொழினுட்பத்தைச் சேர்ந்த பழமையான ஒரு தொகுதிப்பொருட்கள் தொல்பொருள் ஆய்வாளர்களால், இலங்கையின் குகையொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
அக் குகை எது?

Review Topic

மன்னாரில் அமைந்துள்ள தம்பபவனி மின்வலு நிலையம் 2020 டிசெம்பர் மாதத்தில் தேசிய மின்வலுத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. அது ஒரு

Review Topic

இலங்கையில் சில பிரதேசங்களில் சோளப் பயிர்ச்செய்கையினை சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ‘சேனை’| என உள்;ரில் அழைக்கப்பட்ட ஒருவகை மயிர்க்கொட்டிகள் தாக்கத்துக்கு உள்ளாக்கியது. இம்மயிர்க்கொட்டிகளைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட மற்றுமொரு பெயர் யாது?

Review Topic

பின்வருவனவற்றுள் 2021 ஜூன் மாதத்தில் நடைபெற்ற 2019-2021 ICC உலக டெஸ்ட் கிரிக்கெட்
வெற்றிக்கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில் போட்டியிட்ட இரண்டு நாடுகளும் எவை?

Review Topic

2021 இல் உள்நாட்டு சந்தையில் விற்பனையாகிய தேங்காய் எண்ணெயின் தரம் தொடர்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. அதன் மூலம் அபாயகரமான சேதனம் அடங்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட சேர்வையின் பெயர் என்ன?

Review Topic

கன்யா டீ அல்மேடா(Kanya D’ Almeida) 2021 இல் ஒரு குறித்த சர்வதேச இலக்கிய விருதை வென்ற முதலாவது இலங்கையர் எனும் சிறப்பைப் பெற்றார். அவர் பெற்ற விருதின் பெயர் யாது?

Review Topic

பின்வருவனவற்றுள் கொரோனா வைரசு நோய் – 2019 (COVID -19) இற்கு எதிராகப் பயன்படுத்தப்படாத தடுப்பு மருந்து எது?

Review Topic

2021 மே மாதத்தில் இரசாயனப் பொருட்களைப் சுமந்து வந்த, பண்டப் போக்குவரத்து கப்பலொன்று, சூழலில் பாரிய அழிவை ஏற்படுத்தியவாறு இலங்கை கரையோரத்திற்கு அப்பால் தீப்பற்றிக்கொண்டது. அக்கப்பலின் பெயர் யாது?

Review Topic

வீட்டில் செய்யப்படும் பின்வரும் எந்தச் செயல் சூழலுக்கு தீங்கு பயக்கக்கூடியது?

Review Topic

2021 ஜூலை 11 ஆம் திகதி ரிசட் பிரென்சன் (Richard Branson) உட்பட ஒரு தொகுதிப் பயணிகளை குறை ஒழுக்கு விண்வெளிக்கு ஏற்றிச்சென்ற விண்வெளி ஓடத்தின் பெயர் யாது?

Review Topic

Recent Public Feedback

No Recent Comments Available on this Category

Recent Video or Images

No Recent Videos Available on this Category

Topic Updates