Please Login to view full dashboard.

சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை

Author : Admin

11  
Topic updated on 02/15/2019 05:03am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

நவீன சர்வதேச சமூகத்தினுள் எந்தவொரு நாட்டுக்கும் சர்வதேச விவகாரங்களில் தலையிடாது இருக்க முடியாது. அதனை விசேடமான முறையில் கையாள வேண்டும். அதற்கான விசேடமான வெளிநாட்டுக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும்.

  •  நாடுகள் சர்வதேச சமூகத்தினுள் செயற்படும் விதம் வெளிநாட்டுக் கொள்கை மூலம்
    வெளிக் காட்டப்படுகின்றது.
  •  ஒரு நாடு ஏனைய நாடுகளுடன் பேணும் தொடர்புகள் மூலம் தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ளல் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளின் சாராம்சத்தைக் காட்டும் வெளியீடு வெளிநாட்டுக் கொள்கை எனக் கருதப்படும். – நோர்மன் ஹில். (Norman Hill)
  • வெளிநாட்டுக்கொள்கை என்பது ஒரு நாடு ஏனைய நாடுகளுடன் இடைத்தொடர்புகளைப் பேணும்போது பின்பற்றும் கோட்பாடுகளும் நடைமுறைகளும் உள்ளடங்கும் கூற்றாகும்.
    (Rathnaswamy).
  • இதன்படி ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை இரண்டு அடிப்படைப் பகுதிகளால்ஆனது. அவையாவன:
    •  ஒரு நாடு சர்வதேச சமூகத்தில் ஏனைய நாடுகளுடன் தொடர்புகளைப் பேணும்போது
      நிறைவேற்ற எதிர்பார்க்கின்ற தேசிய நோக்கங்களும் அபிலாஷைகளும் யாவை
      என்பதும்,
    • அவற்றை நிறைவேற்றப் பின்பற்றும் நடைமுறை எதுவென்பதும் ஆகும்.
  • ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்குதலுடன் தொடர்புடைய காரணிகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1. அகக் காரணிகள்
2. புறக் காரணிகள்
3. கொள்கை வகுக்கும் காரணிகள்

1. அகக் காரணிகள்

  • புவியியல் நிலைமைகள்
  • வரலாறு
  • நாட்டினால் செய்யக்கூடியவை (தேசிய இயலுமை)
  • மக்கள் கருத்து

2. புறக் காரணிகள்

  •  உலகின் தேசிய அரச முறைமையின் இன்றைய நிலையும் அதன் செயற்பாடும்.
  • சர்வதேச சட்டங்களும் சர்வதேச நிறுவனங்களின் செயற்பாடுகளும்.
  • சர்வதேச தொடர்புகளில் வளர்ச்சியடைந்துள்ள தொழினுட்ப மாற்றங்கள்.

ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையின் நோக்கங்கள் 

1. பிரதான அல்லது அடிப்படை நோக்கம் (Core Values)

– நாட்டின் நிலவுகையை உறுதிசெய்துகொள்ளல்.
– பாதுகாப்பு தொடர்பாக முக்கியமான பிரதேசங்களையும் இடங்களையும் பாதுகாத்துக் கொள்ளல்.
– அரசியல் ரீதியான நிறுவனங்களையும் தேசிய ஒருமைப்பாட்டையும் பாதுகாத்தல்.
– பொருளாதார அபிவிருத்த

2 . நடுத்தர அளவிலான நோக்கங்கள் (Middle class Objectives)

– வர்த்தகத்தை அபிவிருத்தி செய்துகொள்ளல்.
– வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளல்.
– வெளிநாட்டுச் சந்தையை விரிவுபடுத்தல்.
– நாட்டின் சமூக நலன்களை உயர்மட்டத்திற்குக் கொண்டுவருதல்.
– நாட்டின் கௌரவத்தை சர்வதேச சமூகத்தில் வளர்த்தல்.

3. அகில உலக – நீண்டகால நோக்கங்கள் (Universal Long Range Objectives)

சர்வதேச சமூகத்தினுள் தமது நிலவுகையைப் பேண வேண்டுமென நாம் நம்பும் சமூக சூழலைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்ட நோக்கங்கள்.

1948 இலிருந்து 1971 வரையான காலப்பகுதியில் வெளிநாட்டுக் கொள்கையை முடிவுசெய்தலும் தீர்மானித்தலும் அதனைச் செயற்படுத்த முடிவு செய்ததும் தீர்மானித்ததும் அதனை செயற்படுத்த அதிகாரமளிக்கப்பட்டிருந்த பிரதமரினாலாகும். இலங்கையில் வெளிநாட்டுத் தொடர்புகளைப் பேண ஒரு அமைச்சு இருக்கவில்லை. அதற்காக பிரதம மந்திரியினால் நிருவகிக்கப்பட்ட திணைக்களம் ஒன்று மாத்திரமே இருந்தது.

1977 இல் வெளிநாட்டுக் கருமங்களை வழிநடத்த தனியான ஒரு அமைச்சும் அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.

  • சுதந்திரத்தின் பின்னர் ஆரம்ப காலத்தில் வெளிநாட்டுக் கொள்கை தொடர்ந்து
    மாற்றமடைந்து வந்தது. அரசாங்கங்கள் மாறும்போது கொள்கையும் மாறியது.
1948 - 1956 வரை
  • இக்காலகட்டத்தில் ஐ.தே.க. அரசாங்கங்கள் ஆட்சியிலிருந்தது வெளிநாட்டுதவிகள் பெறும் போக்கு இக்காலப்பகுதியில் விருத்தியடைந்தது.
  •  இக்காலகட்டத்தில் பிரித்தானியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் சார்பானதும் ரஷ்யாவிற்கும் கம்யூனிஸ்ட் நாடுகளுக்கும் எதிரான கொள்கையை இலங்கை
    பின்பற்றியது. இதற்கான காரணிகள் வருமாறு
  • சுதந்திரத்தின் பின்னரான ஆரம்ப காலகட்டத்தில் பிரித்தானியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நெருக்கமான உறவு நிலவியது.
  • 150 வருடகாலம் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக இருந்தமை.
  • 1948 இல் இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையே செய்யப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம். இதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்திலும் திருகோணமலை துறைமுகத்திலும் படை முகாம்களை வைத்திருக்க பிரித்தானியாவிற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
  • சுதந்திரம் பெற்றவுடன் இலங்கைக்கு பொதுநலவாய சங்கத்தில் பூரண அங்கத்துவம் கிடைத்தமை.
  • இலங்கைக்கும் பிரித்தானியாவிற்குமிடையே நிலவிய பொருளாதாரத் தொடர்புகள்.

இலங்கை 1948 இல் மே, டிசம்பர் மாதங்களிலும் 1949 செப்டெம்பரிலும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் கோரி விண்ணப்பித்தபோது ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை உபயோகித்து அதனை எதிர்த்தது. அவ்வாறு நிராகரித்தமைக்குக் காரணம் இலங்கை ஒரு பரிபூரண சுதந்திரமடைந்த நாடல்ல என்று ரஷ்ய வெளிநாட்டமைச்சர் கூறினார்.

இலங்கையில் அப்போது ஆட்சியிலிருந்த ஐ.தே.கட்சி கடும் கம்யூனிஸ்ட், சமசமாஜ, மார்க்ஸ்வாத எதிர்ப்பு கொள்கையைக் கொண்டிருந்தது. அதேபோன்று அன்று சோவியத் ரஷ்யா உட்பட்ட கம்யூனிஸ்ட் நாடுகளின் எழுச்சி பற்றி மேற்குலக நாடுகளும் அதற்கு சார்பான நாடுகளும் அச்சமடைந்திருந்தன. இந்தியத் தலைவரான பிரதமர் நேரு கம்யூனிஸத்தின் நோக்கம் ஜனநாயகத்தை அழிப்பது என்று கூறியிருந்தார்.

இந்நிலைமைகள் காரணமாக சுதந்திரமடைந்த ஆரம்ப காலத்தில், கம்யூனிஸத்திற்கு எதிரானதும் பிரித்தானியாவிற்கு சார்பானதுமான போக்கு இலங்கை வெளியுறவுக் கொள்கையில் காணப்பட்டது. இதனால் கம்யூனிஸ்ட் நாடுகளுடன் எதுவித ராஜதந்திர தொடர்புகளும் பேணப்படவில்லை. அது மாத்திரமல்ல. எந்தவொரு கம்யூனிஸ்ட்வாதிக்கும் இந்நாட்டுக்கு வரவும் இடமளிக்கவில்லை.

உதாரணம் :

1. கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் 10 ஆது ஆண்டு விழாவிற்கு வருகை தரவிருந்த ரஷ்ய, சீன, பிரான்சு தேச தலைவர்களுக்கு இலங்கைக்கு வர விசா அனுமதி வழங்காமை.

2. கம்யூனிஸ்ட்வாதி எனக் கருதிய பிரித்தானிய சமாதானக் குழுவின் தலைவருக்கு இலங்கைக்கு விஜயம் செய்ய விசா மறுக்கப்பட்டமை.

3. கம்யூனிஸ்ட்வாதத்துடன் தொடர்புடைய நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் போன்றவற்றை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு தடை விதித்தமை.

இக்கொள்கையை குறிப்பிட்டளவில் மாற்றியமைத்த இரண்டு சந்தர்ப்பங்களை இக்காலகட்டத்தில் காணமுடிகிறது.

1. சீன அரசை இராஜதந்திர ரீதியில் அங்கீகரித்தமை.
2. 1952 இல் சீனாவுக்கும் இலங்கைக்குமிடையில் ஏற்பட்ட இறப்பர் – அரிசி ஒப்பந்தம்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலக சந்தையில் ஏற்பட்ட பாரியளவான அரிசித் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியது. 1952 இன் நடுப்பகுதியில் இலங்கை அரசு அரசி கோரி உலக நாடுகளிடம் விண்ணப்பித்த
போதிலும் அதனை எந்த உலக நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேசமயம் இறப்பர் விலை குறைந்தமையும் இலங்கைக்கு பெரும் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்தது. இச்சமயத்தில் இலங்கை முகங்கொடுத்த நெருக்கடியிலிருந்து விடுபட மேற்படி இறப்பர் அரிசி ஒப்பந்தம் இலங்கைக்கு பெரிதும் உதவியது.
இதன் பின்னரும் கம்யூனிச நாடுகளுடன் எதுவித தொடர்பும் பேணப்படவில்லை. குறைந்த பட்சம் சீனாவுடன் கூட தூதுவர் மட்டத் தொடர்பு உருவாக்கப்படவில்லை.

இதன் பின்னரும் கூட இலங்கையின் கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை என 1955 இல் பாண்டுங் மகாநாட்டில் இலங்கை பிரதமர் ஜோன் கொத்தலாவல ஆற்றிய உரையிலிருந்து தெளிவாகிறது.

1956 - 1965 வரை

1956 இல் நடைபெற்ற தேர்தலில் திரு.பண்டாரநாயக்கவின் இலங்கை சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்தது. 1960 மார்ச், யூன் காலம் தவிர்ந்த 1965 வரையான காலத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியே பதவியிலிருந்தது.

இக்கட்சி இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பில் செல்வாக்கு செலுத்திய வெளி/ உள் காரணிகள் பலவாகும்.

  1. ஜோசப் ஸ்ராலினின் பின்ன, ரஷ்யாவின் ஆசியா தொடர்பான கொள்கை மாற்றமடைதல்.
  2.  கம்யூனிஸ்ட் நாடுகள் தொடர்பாக திரு. பண்டாரநாயக்காவின் மனப்பாங்கு.
  3. 1956 இல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிலிருந்த அரசுடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்பும் கம்யூனிஸ்ட் வாதம் தொடர்பாக மக்களின் மனப்பாங்கு மாற்றமடைந்தமையும்
    திரு. பண்டாரநாயக்கவின் முதலாவது உரையின்போது புதிய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை வெளியிடப்பட்டது.
  • அதன் மூலம் அரசு, எந்தவொரு பிரிவினரையும் சாராது இருப்பதாகவும்
  •  கட்டுநாயக்க, திருகோணமலை முகாம்கள் திரும்பப் பெறப்படுமெனவும் அறிவித்தார்.
  • 1958 இல் செக்கோஸ்லேவேக்கிய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்தார்.
  • 1956 வரை பிரித்தானியாவுடனும் ஏனைய மேற்கு நாடுகளுடனும் பேணிய உறவு மாறாது பேணப்படல்.
  •  ரஷ்யா, ஹங்கேரிப் பிரச்சினையில் தலையிட்டபோது திரு. பண்டாரநாயக்க நடுநிலைமை வகித்தமை மூலம் அதுவரை பேணிய உறவு சீர்கெடாமல் பேணப்பட்டது.
  • சீனப் பிரதமர் 1957 இல் இலங்கைக்கு விஜயம் செய்த சமயத்தில் வெளியிட்ட கூட்டறிக்கையில், பெரிய, சிறிய நாடுகள் யாவும் சமமானவை என்றும் எந்தவொரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடும் உரிமை இல்லை என்றும் நிராயுதக் கொள்கை மூலம் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பிற்கான
    அடிப்படையை உருவாக்கல் பற்றியும் குறிப்பிடல்.
  • சீன இந்திய எல்லைப் பிரச்சினையின்போது நடுநிலைமை வகித்தமையும் நடுநிலையான ஆசிய நாடுகளுடன் சேர்ந்து அதனை சமாதானப்படுத்த முயற்சி எடுத்தமையும்.
  • சீனாவுடனும் இந்தியாவுடனும் கடல் வழி தொடர்புகளை மேம்படுத்தல்.
  • இந்தியத் தோட்டத் தொழிலாளரின் (மலையகத் தமிழர்) பிரஜா உரிமைப் பிரச்சினயை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்தலும் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை
    வளர்த்துக் கொள்ளல்.
1963 இல் இலங்கைக்கும் ஒல்லாந்துக்கும் இடையிலான ஒப்பந்தம்

இக்காலகட்டத்தில் கம்யூனிச நாடுகளுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் மூலம் வர்த்தக, கைத்தொழில், விவசாய, நிதி உதவிகளைப் பெற்று இலங்கையின் மேற்படி துறைகளை வளர்த்தல்.
இவ்வாறு உருவாக்கிய வெளிநாட்டுக் கொள்கைகளில் இற்றைவரை நிலைத்திருக்கும் கொள்கையாவது,

  • அணிசேராக் கொள்கை.
  • அணு ஆயுத உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிகளுக்கு எதிரான கொள்கை.
  • ஏனைய நாடுகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பைப் பேண நடவடிக்கை எடுத்தல் மற்றும் இலங்கை பிரதிநிதித்துவம் செய்யாத நாடுகளுடன் இராஜதந்திர உறவைப் பேண முயற்சி எடுத்தல்.
  1. இதற்கிணங்க, 1957 ஒக்டோபர் 15 ஆம் திகதி திருகோணமலை துறைமுகமும் 1957 நவம்பர் 01 ஆம் திகதி கட்டுநாயக்கவும் சட்டரீதியாக இலங்கையால் பொறுப்பேற்கப்பட்டதன் மூலம் முதல் நோக்கம் நிறைவேறியது.
  2. 1957 இல் ரஷ்யாவுடனும் சீனாவுடனும் பொருளாதார, கலாசார, இராஜ தந்திர உபாய தொடர்பு ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.
  •  மார்க்ஸிசவாத சஞ்சிகைகள், பத்திரிகைகளுக்கான தடை நீக்கப்பட்டது.
  • 1957 இல் சீன பிரதமருடன் அந்நாட்டு கலாசாரக் குழு இலங்கைக்கு விஜயம் செய்தது.
  • 1964 இல் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் உரிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது மாத்திரமின்றி இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்பும் கருத்தாழமுள்ளதாகப் பேணப்பட்டது.
  • 1963 – 1965 காலகட்டத்தில், இலங்கை வெளிநாட்டுச் செலாவணி தொடர்பாக பெரும் பிரச்சினையை எதிர்நோக்கியது. இது தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் இரண்டு தீர்வுகளை முன்வைத்தனர். பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டு உதவி தேவையென தர்க்கிக்கப்பட்டது. அதன்படி முதன்முதலாக 1965 இல் வெளிநாட்டுச் செலாவணி, வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிக்கும் பிரதான காரணியாக மாறியது. இதனைத் தீர்க்க இலங்கை சுதந்திரக் கட்சி – சமசமாஜ கூட்டரசாங்கம் மேற்கு நாடுகளின் உதவியை நாடியது. இதன் பயனாக இலங்கையின் பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வுகாண உலக வங்கி நிபுணர் குழுவொன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

1965 இல் பதவிக்கு வந்த அரசாங்கம், மேற்படி கொள்கைகளை முன்னெடுத்துச் சென்றது. அதனை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தது. இதற்காகப் பின்வரும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

  1. பொருளாதார உதவி பெறத் தேவையான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கல்.
    உதாரணம் :- திட்ட உருவாக்கத்துக்கான அமைச்சொன்றை ஏற்படுத்தல்.
  2.  உலக வங்கியினால் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறான இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை மேற்குலக பலமிக்க நாடுகளினால் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு
    வடிவமைத்தல்.
  3. இவ்வரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படமாட்டாதென அறிவிக்கப்பட்ட போதிலும் அந்நாடுகளுடன் இராஜ தந்திர
    தொடர்புகள் மாற்றப்படவில்லை.
  4. 1965 – 1970 ஆண்டுகளின் நாட்டின் வெளிநாட்டுக்கொள்கை பிரதானமாக வெளிநாட்டுதவி பெறுவது தொடர்பானதாகவே இருந்தது.

1970 இல் ஐக்கிய முன்னணி அரசு தேர்தலுக்கு முன்னர், தாம் பதவிக்கு வந்தவுடன், மேற்படி கொள்கைகள் மாற்றமடையுமென அறிவித்தபோதிலும் அவ்வாறு
மாற்றப்படவில்லை.

1965 இன் பின்னர், சர்வதேச மட்டத்தில் நடந்த முக்கிய மாற்றம்

  • இந்தியா, தெற்காசியாவின் மிகப் பலமான நாடாக மாற்றமடைதல்.
  • சோவியத் ரஷ்யா தெற்காசியாவுக்கு வெளியிலுள்ள மிகவும் பலம் வாய்ந்த நாடாக மாறுதல்.

இது தொடர்பான 1970 பதவிக்கு வந்த அரசின் கொள்கை பின்வருமாறு:

  1. இந்தியாவிடமிருந்தும் ரஷ்யாவிடமிருந்தும் விலகியிருக்க முயற்சி செய்தல்.
  2. அவற்றுக்கு எதிராக அமெரிக்காவுடனும் சீனாவுடனும் நெருக்கமான தொடர்பைப் பேணல்
  • 1971 ஏப்ரலில் சீனாவுடனான தொடர்புகள் பலவீனமடைந்ததன் விளைவாக அமெரிக்காவுடனான தொடர்புகள் அதிகரித்தன.
  • 1976 இல் அணிசேரா நாடுகளின் சம்மேளனத்தை இலங்கையில் நடத்தியதன் மூலம் இலங்கையின் நடுநிலைமைக் கொள்கை அதிகரித்தது.
  • 1964 இல் ஏற்படுத்திய சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இந்நிலை மேலும் உறுதியடைந்தது. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் கொண்டிருந்த தனிப்பட்ட தொடர்பை உபயோகித்து இந்தியாவுடன் சிறந்த நட்புறவைப் பேண இலங்கைப் பிரதமரினால் முடிந்தது.
  • 1977 இல் பதவிக்கு வந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தனது வெளிநாட்டுக் கொள்கை பற்றிய ஆரம்ப உரையின்போது அணிசேராமை தனது வெளிநாட்டுக் கொள்கை எனக் கூறினார்.
  • இந்திய பிரமர் இந்திரா காந்தியின் தலைமையில் 1983 இல் புதுடில்லியில் நடந்த அணிசேரா நாடுகள் சம்மேளனத்தின் மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் ஏழ்மை நிலை பற்றி அபிவிருத்தியடைந்த நாடுகளின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கப்பட்டது.
  •  1985 இல் சார்க் அமைய உடன்படிக்கையில் ஒப்பமிட்டு பிராந்திய ஒற்றுமைக்கான அடித்தளமிடல்.
  • இவ்வாறு இந்தியாவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தபோதிலும் இலங்கையானது பாகிஸ்தானுடனும் அமெரிக்காவுடனும் நெருக்கமான தொடர்பைப் பேணி வந்தது.
  • இச்சமயத்தில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிக்கும் பிரதான காரணியாக அமைந்தது. LTTE யுடன் இலங்கை அரசு கொண்டிருந்த மோதலாகும். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இலங்கை அரசு மேற்குல உதவியை நாடியதனால் இந்திய உறவு சீர்குலைந்தது. இலங்கை அரசு இவ்வமைப்பிற்கு இந்தியா உதவுவதாக குற்றஞ் சாட்டியது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் குறிப்பிடத்தக்களவு
    விரிசல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் LTTE யினரை வெற்றிகொள்ள இருந்தபோது இந்தியா விமான வழியாக உணவுப் பொட்டலங்களை வீசி அவ்வெற்றியைத் தடுத்தது.
  • இந்த நிகழ்வின் பின்னர் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகள் பாராமுகமாயின. இதனால் இந்திய உதவி தவிர்க்க
    முடியாததாயிற்று. இதன் விளைவாக 1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.
  • LTTE அமைப்பு ஒப்புகொண்ட மாதிரி செயற்படாமையால் இந்தியா சமாதானப் படையை இலங்கைக்கு அனுப்பியது. இது நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் விரிசலடையச் செய்தது.
  • ஜனாதிபதி பிரேமதாச இந்திய சமாதானப் படையை திரும்பியனுப்பிய போதிலும் இந்தியாவுடன் முன்னர் இருந்த (1970 களில்) உறவு புத்துயிர்பெறவில்லை.
  • ஜனாதிபதி ஜயவர்தன, ஜனாதிபதி பிரேமதாச ஆகியோரின் பதவிக்காலம் பூராவும்
    இலங்கை மேற்குலகுடன் நெருக்கமான உறவைப் பேணி வந்தது. இதில் 1977 இல் செயற்படுத்திய திறந்த பொருளாதாரக் கொள்கை அதிக செல்வாக்கைக் கொண்டிருந்தது.
  • 1994 இல் பதவிக்கு வந்த பொது சன ஐக்கிய முன்னணி அரசு, இந்திய – இலங்கை உறவை சீர்செய்தது.
  • இலங்கை இந்தியாவை ஒரு பலமான நாடாக ஏற்றுக்கொண்டது. இந்தியா – இலங்கையின் இனப் பிரச்சினையை ஒரு உள்நாட்டுப் பிரச்சினையாக ஏற்றுக்கொண்டது. இதுவரை இந்தியா இவ்விடயத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடவில்லை.
  • இவ்வாறு இந்தியாவுடன் நல்லுறவைப் பேணிய அதேசமயம் மேற்கு நாடுகளுடனும் நெருங்கிய தொடர்பு பேணப்பட்டது.
  • 2000 ஆம் அண்டு பதவிக்கு வந்த அரசின் வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிக்கும் காரணி இனப்பிரச்சினையாகும்.
  • பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினயைத் தீர்த்துக்கொள்ளுமாறு மேற்கு நாடுகளினால் அரசுக்கு ஏற்படுத்திய அழுத்தத்தை மறுத்த அரசு அதற்கான போர் நடவடிக்கையை கையாண்டது. இது இலங்கையின் சர்வதேச, வெளிநாட்டுக் கொள்கைகளை மாற்றியது.
  • மேற்கு நாடுகளுடனான நட்புறவான வெளிநாட்டுக் கொள்கையை இலங்கை பின்பற்றிய போதிலும் அந்நாடுகள் இலங்கையுடன் இணக்கமற்ற கொள்கையை கையாண்டபடியால் இலங்கை அரசு ஈரான், லிபியா, மியன்மார் போன்ற நாடுகளுடன் தனதுறவை வலுப்படுத்தியது.

இவ்வாறு அந்தந்த காலகட்டத்தில் வெளிநாட்டுக் கொள்கை மாற்றமடைந்த முறையின் அம்மாற்றங்களை ஏற்படுத்துவதில் செல்வாக்கு செலுத்திய காரணிகளும் வெளிக்கொணரக் கூடியவாறு இப்பாடம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அவ்வாறே மேலே விவரிக்கப்பட்டவாறு இன்று இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை எத்திசையில் பயணிக்கும் போக்கைக் கொண்டிருக்கின்றது என்பதும் விளக்கப்பட வேண்டும்.

RATE CONTENT 0, 0
QBANK (11 QUESTIONS)

நாடொன்றின் வெளிநாட்டுக் கொள்கையின் நோக்கம் அல்லாதது,

Review Topic
QID: 21578
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 21679
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – 1948 – 1956 காலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மேற்கை சார்ந்ததாகவும் கம்யூனிசத்தை எதிர்ப்பதாகவும் இருந்தது.

கூற்று II – 1956 இல் S.W.R.D. பண்டாரநாயக்கா அணி சேராக் கொள்கையை அறிமுகஞ் செய்தார்.

Review Topic
QID: 21684
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – அண்மைக்கால வருடங்களில் இலங்கையின் வெளி நாட்டுக் கொள்கையில் அரசியல் நோக்கங்களை விட பொருளாதார நோக்கங்களே முதன்மை இடத்தைப் பெறுகின்றன.

கூற்று II –  சோவியத் யூனியனின் வீழ்ச்சி அண்மைக் கால இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைப் போக்கு மாற்றமுறுவதில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்தியது.

Review Topic
QID: 21696
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கத்தின் பிரதான செயற்பாட்டாளர் – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – வெளிவிவகார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் ஆவார்.
B – பிரதம மந்திரியாவார்.
C – மந்திரி சபையாகும்.
D – வெளிவிவகார அமைச்சராவார்.
E – ஜனாதிபதியாவார்.

Review Topic
QID: 21721
Hide Comments(0)

Leave a Reply

நாடொன்றின் வெளிநாட்டுக் கொள்கையின் நோக்கம் அல்லாதது,

Review Topic
QID: 21578

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 21679

கூற்று I – 1948 – 1956 காலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மேற்கை சார்ந்ததாகவும் கம்யூனிசத்தை எதிர்ப்பதாகவும் இருந்தது.

கூற்று II – 1956 இல் S.W.R.D. பண்டாரநாயக்கா அணி சேராக் கொள்கையை அறிமுகஞ் செய்தார்.

Review Topic
QID: 21684

கூற்று I – அண்மைக்கால வருடங்களில் இலங்கையின் வெளி நாட்டுக் கொள்கையில் அரசியல் நோக்கங்களை விட பொருளாதார நோக்கங்களே முதன்மை இடத்தைப் பெறுகின்றன.

கூற்று II –  சோவியத் யூனியனின் வீழ்ச்சி அண்மைக் கால இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைப் போக்கு மாற்றமுறுவதில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்தியது.

Review Topic
QID: 21696

இலங்கையில் வெளிநாட்டுக் கொள்கை உருவாக்கத்தின் பிரதான செயற்பாட்டாளர் – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – வெளிவிவகார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் ஆவார்.
B – பிரதம மந்திரியாவார்.
C – மந்திரி சபையாகும்.
D – வெளிவிவகார அமைச்சராவார்.
E – ஜனாதிபதியாவார்.

Review Topic
QID: 21721
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank