Please Login to view full dashboard.

மனித உரிமைகள் ஆணைக்குழு

Author : Admin

0  
Topic updated on 02/16/2019 03:08am

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
• இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது 1996ம் ஆண்டின் 21ம் இலக்கச் சட்ட மூலத்தின் ஊடாக ஆணைக்குழு தாபிக்கப்பட்டது.
• இவ் ஆணைக்குழு 05 உறுப்பினர்களைக் கொண்டது.
• ஆணைக்குழு உறுப்பினர்கள் அரசியல் யாப்பின் 18ம் திருத்தத்திற்கமைய பாராளுமன்ற பேரவையின் அவதானிப்பின் மூலம் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்.
• இவ்ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார்.
• மரபு சார் நீதித்துறை முறையில் இருந்து வேறுபட்ட பிணக்குகளைத் தீர்க்கும் ஒரு நிறுவனம்.
• பணிகள்:
• அடிப்படை உரிமைகள் மீறுதல் மீறப்படுதலுக்கு அண்மியதாக இருக்கும் நிலைமை தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்தலும் புலன் விசாரணை செய்தலும் இணக்கப்படுத்தல் ஒற்றுமைப்படுத்தல் மூலம் அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுத்தல்.
• அடிப்படை உரிமைகளை மேம்படுத்தல் விருத்தி செய்தல் பாதுகாத்தல் தொடர்பான சட்ட நிர்வாக ரீதியான கட்டளைகளை அமைப்பதற்கான ஆலோசனைகளை அரசாங்கத்திற்கு வழங்குதல்.
• தேசிய சட்டங்கள் நிர்வாகக் கொள்கைகள் சர்வதேச மனித உரிமைதரக் கட்டுப்பாடுகளை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றி அரசாங்கத்திற்கு விதந்துரைகளை செய்தல்.
• மனித உரிமைகள் துறையில் ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச ரீதியில் பங்களிப்புச் செய்யும் உடன்பாடுகளின் அவசியம் பற்றி அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்தல்.
• மனித உரிமைகள் தொடர்பாக அறிவூட்டல் விருத்தி செய்தல் மற்றும் மனித உரிமைகளுக்கு இயைபாக ஆய்வுகளை நடத்துதல்.
• இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களாவன
மனித உரிமைகளை மீறல்களைப் புலனாய்வு செய்தல்.
மனித உரிமைகளுக்காக மாகாண மட்டக் குழுக்களை அமைத்தல்.
• இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றி வரும் பங்குகள் :
• அடிப்படை உரிமை மீறல்கள் அல்லது மீறப்படுதலுக்குட்படவுள்ளமை பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்தல் இணக்கப்படுத்தல் ஒற்றுமைப்படுத்தல் என்ற வழிமுறைகள் மூலம் தீர்த்து வைத்தல்.
• அடிப்படை உரிமைகள் மேம்படுத்தல் விருத்தி செய்தல் பாதுகாத்தல் தொடர்பான சட்ட மற்றும் நிருவாக ஏற்பாடுகள் என்பவற்றைத் தயாரிப்பதில் அரசாங்கத்திற்கு ஆலோசணை வழங்குதல்.
• தேசிய சட்டங்களையும் நிர்வாக நடவடிக்கைகளையும் சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கும் ஏற்றுக் கொள்ளுதலுக்கும் அசைவானதாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அரசாங்கத்துக்குச் சிபாரிசுகளை முன்வைத்தல்.
• மனித உரிமைகள் பரப்பில் இடம்பெறும் ஒப்பந்தங்கள் மற்றும் வேறு சர்வதேச ஆவணங்கள் என்பவற்றில் பங்காற்றுவதன் மற்றும் உடன்படுவதன் அவசியம் பற்றி அரசாங்கத்துக்கு சிபாரிசு செய்தல்.
• மனித உரிமைகள் பற்றி அறிவூட்டல் விருத்தி செய்தல் மனித உரிமைக் கல்வியை வழங்கல்
• மனித உரிமைகள் பற்றி பிரதேச மட்டத்தலி; செயற்படுவதற்கென பிரதேச குழுக்களை நியமித்து அவற்றிற்கு அதிகாரங்களை வழங்கி செயற்படுத்தல்.
• உயர் நீதிமன்றம் ஆணைக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தும் ஒரு விடயம் சம்பந்தமாக ஈடுபட்டு உயர் நீதிமன்றம் விதிக்கும் நடவடிக்கைகளை எடுத்தல்.

RATE CONTENT 5, 1
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank