Please Login to view full dashboard.

ஜனாதிபதியின் செயற்பாடுகள்

Author : Admin

53  
Topic updated on 02/15/2019 02:51pm

ஜனாதிபதியும் அமைச்சரவையும்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
1978 அரசியலமைப்புச் சட்டத்தின் 30.2 உறுப்புரையில் குறிப்பிட்டுள்ளதன்படி இலங்கைக் குடியரசின் ஜனாதிபதி அரசின் நிறைவேற்றுத்துறையினதும் அரசாங்கத்தினதும் தலைவர் என்பதுடன் ஆயுதப்படைகளின் பிரதான கட்டளையிடும் அதிகாரயும் ஆவார்.

43.1 உறுப்புரையின் கீழ் குடியரசு நிர்வாகத்தை செயற்படுத்துவதற்காக நிர்வாகம் தொடர்பான ஆணையிடும் அதிகாரம் கொண்ட அமைச்சரவை ஒன்று இருக்கும். இவ் அமைச்சரவை பாராளுமன்றத்துக்கு கூட்டாகப் பொறுப்புக் கூறவும் பதிலளிக்கவும் கட்டுப்பட்டுள்ளது.

43.2 உறுப்புரையின் ஜனாதிபதி அமைச்சரவையின் அங்கத்தவராவதுடன் அதன் தலைவருமாவார். ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் இடையிலான தொடர்புமேற்படி உறுப்புரையின் ஊடாக உருவாகின்றது.

  • அமைச்சரவை தொடர்பாக ஜனாதிபதிக்குரிய கடமைக்கூறு. 43.3 உறுப்புரையில் காட்டப்பட்டுள்ள விதமாக பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதன் மூலம் ஆரம்பமாகிறது. ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் இடையிலான தொடர்பு இவ்வுறுப்புரை ஊடாக உருவாகிறது.
  • பாராளுமன்றத்தில் அதிகமானோரில் நம்பிக்கை பெறுபவர் என ஜனாதிபதி கருதும் பிரதிநிதியை பிரதமர் பதவிக்கு நியமித்தல் வேண்டும்.
  • அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிகையும் அமைச்சுகளின் எண்ணிக்கையும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் விடயங்களும் பொறுப்புகளும் ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படுகின்றன.
  • அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றப்பிரதிநிதிகளில் இருந்து அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார். இதற்காக தேவையெனின் பிரதம அமைச்சரின் அபிப்பிராயத்தைப் பெறலாம்.
  • அமைச்சரவையை நியமிக்கும் போது தன்னிடம் வைத்திருக்க வேண்டும் எனக் கருதும் எந்தவொரு அமைச்சையும் அதேபோன்று அமைச்சர்களுக்கு வழங்கப்படாத எந்தவொரு விடயத்தை அல்லது கருமத்தை தனக்குக் கீழ் வைத்திருக்கவும் ஜனாதிபதிக்கு முடியும்.
  • இதன்படி ஜனாதிபதிக்குக் கீழ் வைத்திருக்கக்கூடிய அமைச்சுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தொடர்பில் வரையறைகள் இல்லை என்பதோடு அது ஜனாதிபதியின் விருப்பப்படி தீர்மானிக்கப்படும்.
  • ஜனாதிபதி அமைச்சரவையின் தலைவர் என்ற வகையில் அமைச்சரவைக் கூட்டல் தலைமை வகித்தல் அமைச்சரவைக் கூட்டங்களின் நிகழ்ச்சிகள் நிரலைத் தயாரித்தல் என்பன அவரால் மேற்கொள்ளப்படும்.
  • ஜனாதிபதி அமைச்சரவையின் தலைவராக இருந்தபோதிலும் அமைச்சரவை பாராளுமன்றத்துக்கு கூட்டாக பொறுப்பு கூறவேண்டிய போதிலும் ஜனாதிபதி அத்தேவையில் இருந்து நீங்கியவராவார்.
  • அமைச்சரவையின் கட்டமைப்பைத் தீர்மானித்தல் அமைச்சர்களை நியமித்தல் அவர்களுக்கு விடயங்களைப் பொறுப்பளித்தல் அரசாங்கத்தின் கொள்களைத் தீர்மானித்தல் ஆகிய அனைத்தும் தொடர்பாக ஜனாதிபதி ஒப்பாரும் மிக்காருமற்ற அதிகாரத்தை அனுபவிக்கின்றார்.

ஜனாதிபதியும் சட்டவாக்கத்துறையும்

  •  42வது உறுப்புரையானது அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாகவும் மக்கள் பாதுகாப்புத் தொடர்பாக நடைமுறையில் அமுலில் இருக்கும் சட்டங்கள் உள்ளடங்கலாக வேறு யாதாயினும் சட்டங்களின் கீழும் தனது அதிகாரம் பொறுப்பு கருமங்கள் என்பவற்றை உரியமுறையில் நிறைவேற்றல் ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூறுவார்.
  • 65.1 உறுப்புரையானது 41ம் உறுப்புரைக்கமைய செயலாளர் நாயகம் பதவிக்கு நியமிக்கப்படும் நபர் ஜனாதிபதியினால் அரசியலமைப்புச் சபைக்கு சிபாரிசு செய்யப்பட வேண்டியதுடன் அரசியலமைப்புச் சபை அதனை அங்கீகரித்தல் மாத்திரமே ஜனாதிபதி அந்நபரை நியமனஞ் செய்ய முடியும்.
  • 65.1 உறுப்புரையானது பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகமத்தை அவரது பதவிக் காலத்திற்கு முன்னர் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரம் உண்டு. எனினும் இவ்வதிகாரத்தைப் பின்வரும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே பிரயோகித்தல் வேண்டும்.

அ.65.5.(இ) உறுப்புரைக்கேற்ப செயலாளர் நாயகம் நோய்வாய்ப்படும்போது அல்லது உடல் உளவியல் ரீதியாக பலவீனமடையும் போதும்

அ.65.5.(ஈ) உறுப்புரைக்கு அமைய பாராளுமன்றம் செயலாளர் நாயகத்துக்கு எதிராக நிறைவேற்றும் பிரேரணை ஒன்றின் மூலம்

  • 65.6 உறுப்புரையானது செயலாளர் நாயகம் தமது பதவிக்குரிய கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள இயலாது போகுமிடத்து செயலாளர் நாயகத்துக்கு பதில் கடமையாற்ற 41.இ உறுப்புரைக்கு அமைய நபர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.
  • 70 உறுப்புரையானது சட்டவாக்கத்துறையினரை கூட்டுதல் பிற்போடுதல் கலைத்தல் என்பன ஜனாதிபதியால் ஆற்றப்பட வேண்டும்.

அ.பிற்போடுதல். 70.2 உறுப்புரைக்கமைய ஜனாதிபதியால் பாராளுமன்றத்தின் கூட்டத்தைப் பிற்போடுவதற்கான பிரகடனத்தில் அதனை மீண்டும் கூட்டும் திகதியும் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். அத்திகதி பிரகடனம் வெளியிடப்பட்ட திகதியில் இருந்து இரண்டு மாதங்களுக்கு மேற்படலாகாது.

ஆ. கலைத்தல். 70வது உறுப்புரையில் ஏ பீ சி டி ஆகிய துணை உறுப்புரைகளில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தல் வேண்டும்.

  • 70.ஏ உறுப்புரை பொதுத்தேர்தல் ஒன்றின் பின் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றமொன்றினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றின் மூலம் கோரிக்கை விடப்பட்டாலொழிய தெரிவுசெய்யப்பட்ட தினத்தில் இருந்து ஒரு வருடம் செல்லும்வரை பாராளுமன்றத்தைக் கலைத்தலாகாது.
  • 70.பீ உறுப்புரை பொதுத்தேர்தல் ஒன்றின் பின் பாராளுமன்றம் கூடும் முதல் அமர்வின்ன போது முன்வைக்கப்படும் அரசாங்கக் கொள்கைப் பிரகடனம் பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டாலும் கூட ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத’தல் கூடாது.
  • 70.சி உறுப்புரை ஜனாதிபதிக்கெதிராக குற்றப்பிரேரணை ஒன்று முன்வைக்கப்படும். அது நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் வேளை பாராளுமன்றத்தைக் கலைத்தல் கூடாது.
  • 70.டி உறுப்புரை வருடாந்த வரவுசெலவு அறிக்கை பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்படும் இரண்டாம் முறையும் அது நிராகரிக்கப்பட்டால் 70வது உறுப்புரையைக் கவனியாது பாராளுமன்றத்தைக் கலைக்கலாம்.
  •  33.அ உறுப்புரை அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தைப் பாராளுமன்றத்தினால் சமர்பித்தல்.
  • 33.ஆ உறுப்புரை பாராளுமன்ற முதல் அமர்வுகளுக்கு தலைமை தாங்குதல். இந்த ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக பாராளுமன்றம் ஜனாதிபதியுடனான தொடர்புகளை அமைச்சரவை ஊடாகச் செய்யலாம். அமைச்சரவை ஜனாதிபதியையும் பாராளுமன்றத்தையும் இணைக்கும் பிணைப்பு ஆகும்.

ஜனாதிபதியும் நீதித்துறையும்

1978 இன் 2ம் இலக்க நீதிமன்ற ஏற்பாட்டுச் சட்டத்தின் மூலம் கீழ்வரும் நீதிமன்றமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  1. உச்ச நீதிமன்றம்
  2. மேன்முறையீட்டு நீதிமன்றம்
  3. மேல் நீதிமன்றம்
  4. மாவட்ட நீதிமன்றம்
  5. நீதிவான் நீதிமன்றம்
  6. ஆரம்ப நீதிமன்றம்
  • இவற்றில் முதல் மூன்று நீதிமன்றங்களும் உயர்நிலை நீதிமன்றங்கள் எனவும் ஏனையவை கீழ்நிலை நீதிமன்றங்க்ள எனவும் அழைக்கப்படும்.
  • உச்ச நீதிமன்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் இச்சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்தது.
  • 107(1) பிரதம நீதி அரசரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் உச்ச நீதிமன்றத்தினதும் மேன்முறையிட்டு நீதிமன்றத்தினதும் அனைத்து நீதிபதிகளும் 41(இ) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதியால் தனது சுய கையொப்பத்தைக் கொண்ட ஆவணமொன்றின் மூலம் நியமிக்கப்படுவார்.
  • 41(இ) உறுப்புரை மூலம் ஜனாதிபதியினால் அரசியலமைப்புச் சபைக்கு செய்யப்படும் சிபாரிசின் பேரில் அச்சிபாரிசை ஆராய்ந்து அரசியலமைப்புச் சபை அனுமதி வழங்கியதன் பின்னர் நீதித்துறைக்கான பின்வரும் நியமனங்களை ஜனாதிபதி மேற்கொள்ளலாம்.

1. பிரதம நீதியரசர் உயர் நீதிமன்றத்தின் ஏனைய நீதிபதிகள்
2. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் ஏனைய நீதிபதிகளும்
3. நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள்
4. சட்டமா அதிபர்

  • 107.4 உறுப்புரை பிரதம நீதியரசர் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் ஏனைய நீதிபதிகளும் ஜனாதிபதி முன்னிலையில் செய்யும் சத்தியப் பிரமாணத்தின் மூலம் தமது கடமைகளைப் பொறுப்பேற்றல் வேண்டும்.
  • 109.1 உறுப்புரை உயர் நீதிமன்றத்தின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரை பாராளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத அங்கத்தவர்கள் உட்பட ½ பங்கினரின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றின் பேரில் பதவியில் இருந்து நீக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
  • 109.1 உறுப்புரை உயர் நீதிமன்றத்திலோ மேன்முறையீட்டு நீதிமன்றத்திலோ தற்காலிகமாக ஏற்படும் வெற்றிடங்களுக்காக 42(இ) உறுப்புரையில் உள்ளபடி பதில் கடமை ஆற்றும் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
  • 110.1 உறுப்புரை உயர் நீதிமன்றத்தின் அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவருக்கு மற்றுமொரு எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் பிறிதொரு கருமமொன்றைச் செய்யுமாறு விதிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
  • 110.3 உறுப்புரை உயர் நீதிமன்றத்திலோ அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றத்திலோ நிரந்தர சேவையில் இருக்கும் நீதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் ஜனாதிபதியின் எழுத்து மூலமான விருப்பம் இன்றி நீதித்துறை நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகாது.
  • 111.2 (அ) உறுப்புரை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதி மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தல் வேண்டும்.
  • 112(ஆ) உறுப்புரை நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் சிபாரிசின் பேரில் மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி பதவியில் இருந்து நிறுத்தி வைக்க முடியும். மேலும் அவர்கள் ஜனாதிபதியின் விடயக் கட்டுப்பாட்டுக்கு உட்படுவர்.
  • 34.1 உறுப்புரை குற்றவாளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
  • 129.1 உறுப்புரை ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும் அதிகாரம்

ஜனாதிபதியும் அரச சேவையும்

  • அரசியலமைப்புச் சட்டத்தின் 30.1 உறுப்புரையக்கு அமைய ஜனாதிபதி நிறைவேற்றுத்துறையின் தலைவராவார். இதன் பிரகாரம் முழுமையான அரச சேவையையும் கட்டுப்படுத்தி தனி அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
  • ஜனாதிபதி சுயவிருப்பப்படி அரச சேவையில் செய்யக்கூடிய நியமனங்கள் உயர் அரச உத்தியோகத்தர்கள் இவ்வகையில் அடங்குவர்.
  • அரசியலமைப்புச் சட்டத்துடன் இணைந்து செய்யவேண்டிய நியமனங்கள் . இது இருவகை இயல்புகளைக் கொண்டது
  • அரசியலமைப்புச் சபையின் சிபாரிசின் பேரில் செய்யப்பட வேண்டிய நியமனங்கள். இதில் பின்வரும் நியமனங்கள் அடங்கும்

1. தேர்தல் ஆணைக்குழு
2. அரச சேவை ஆணைக்குழு
3. தேசிய பொலிஸ் ஆணைக்குழு
4. லஞ்சம் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழு

  • அரசியலமைப்புச் சபையின் அனுமதியின் கீழ் ஜனாதிபதியால் வழங்கப்படும் நியமனங்கள். இதில் பின்வரும் நியமனங்கள் அடங்கும்.

1. சட்டமா அதிபர்
2. கணக்காய்வாளர் நாயகம்
3. பொலிஸ்மா அதிபர்
4. ஒம்பூட்மன்
5. பாராளுமன்றச் செயலாளர் நாயகம்

ஜனாதிபதியும் அரச சேவை ஆணைக்குழுவும்

அரச சேவை ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் ஒன்பது பேரும் அவர்களில் ஒருவர் தலைவராகவும் அரசியலமைப்புச் சபையின் சிபாரிசின் பேரில் சனாதிபதியினால் நியமிக்கப்படுவர்.

அரசியலமைப்புச் சபையின் சிபாரிசின் பேரில் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை பதவி நீக்கும் அதிகாரமும் சனாதிபதிக்கு உண்டு. மேலும் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு மேற்படாத காலத்துக்கு லீவு அனுமதிக்கவும் அக்காலப்பகுதிக்காக மற்றுமொருவரை நியமிக்கும் அதிகாரமும் சனாதிபதிக்கு உண்டு.

அரசியலமைப்புச் சட்டத்தின் 55.3 உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள விதமாக அனைத்துத் திணைக்களத் தலைவர்களையும் நியமித்தல், பதவி உயர்த்துதல், இடமாற்றம் செய்தல், ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுதல், வேலை நீக்கம் செய்தல் ஆகியன அமைச்சரவைக்கு உரியவைகளாகும். ஆணைக்குழுவின் கருத்துக்களைப் பெற்று இந்த அதிகாரங்களை அமைச்சரவை செயற்படுத்துதல் வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இரு சரத்துக்களிலும் சனாதிபதி பதவியை ஒப்புநோக்குகையில் சனாதிபதி அமைச்சரவையின் உறுப்பினரும் அதன் தலைவரும் ஆவார் என்ற கருத்து வெளிப்படுத்தப்படுகின்றது. சனாதிபதி, திணைக்களத் தலைவர்களை தன் சுய விருப்பத்தின் அடிப்படையில் நியமனம் செய்வதற்கான அதிகாரம் நடைமுறையில் காணக்கூடியதாக உள்ளது. ஏனைய விடயங்கள் எதுவும் சனாதிபதி அறியாமலோ சனாதிபதியின் அனுமதியின்றியோ நடைபெறுவதில்லை. அரச சேவையை நிர்வகிப்பதில் சனாதிபதி ஒப்புவமையற்ற அதிகாரத்தைப் பெற்றுள்ளார் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. அரசியலமைப்புச் சபை செயலிழந்து காணப்படும் காலப்பகுதிகளில் அரச சேவையின் அநேக நியமனங்கள் சனாதிபதியினால் வழங்கப்படுகின்றன என்பதனை உதாரணங்களாகக் காட்டலாம்.

RATE CONTENT 0, 0
QBANK (53 QUESTIONS)

சரியான கூற்று/ கூற்றுக்கள்
A – எந்த நேரத்திலும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றலாம்.
B – பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பெரும்பாலான பாராளுமன்ற முன்னுரிமைகளை ஜனாதிபதி அனுபவிக்கலாம்.
C – பாராளுமன்றத்தினால் வாக்கு எடுப்பின்போது ஜனாதிபதி தனது வாக்கினை இடலாம்.
D – பாராளுமன்றத்தினைக் கணக்கில் எடுக்காது அரசியல் யாப்புத் திருத்ததிற்கான ஒரு பிரேரணையினை மக்கள் தீர்ப்புக்கு விடலாம்.

Review Topic
QID: 21513
Hide Comments(0)

Leave a Reply

ஜனாதிபதி
A – மாற்றுவாக்கினை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறையினூடாக தெரிவு செய்யப்படுகிறார்.
B – பாராளுமன்ற அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்படுகிறார்.
C – மக்களால் ஒரு மக்கள் தீர்ப்பின் போது தெரிவு செய்யப்படுகிறார்.
D – நாடு முழுவதற்குமான தேர்தல் தொகுதியினால் தெரிவு செய்யப்படுகிறார்.

Review Topic
QID: 21514
Hide Comments(0)

Leave a Reply

ஜனாதிபதி பின்வரும் காரணங்களுக்காக பதவியிலிருந்து நீக்கப்படலாம்.
A – அவர் உடல், உள ரீதியாக நிரந்தரமாக செயற்பட முடியாதவராகி விட்டால்
B – தேசத்துரோகக் குற்றமிழைத்ததாக நிரூபிக்கப்பட்டால்
C – அரசாங்கத்துக்கு எதிராகப் பராளுமன்றம் நம்பிக்கையில்லாத் தீர்மான மசோதாவை நிறைவேற்றினால்
D – அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றம் நிராகரித்தால்

Review Topic
QID: 21515
Hide Comments(0)

Leave a Reply

ஜனாதிபதி
A – அமைச்சுக்கான செயலாளர்களை நியமிக்கிறார்.
B – வழக்குத் தொடரப்படுவதிலிருந்து விடுபட்டிருக்கின்றார்.
C – விகிதசம தத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறை மூலம் தெரிவு செய்யப்படுகிறார்.
D – பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் அமைச்சர்களாக நியமிக்கும் கடமைப்பாடு இல்லை.

Review Topic
QID: 21516
Hide Comments(0)

Leave a Reply

ஜனாதிபதி,
A – பாராளுமன்றத்துக்கு பொறுப்புச் சொல்ல வேண்டும்.
B – ஒரு வருடத்துக்குள் இரு தடவைக்கு மேல் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது.
C – நீதி சேவை ஆணைக்குழுவினால் பதவி நீக்கப்படலாம்.
D – பாராளுமன்றத்தின் அங்கீகாரம் இல்லாமலேயே ஒப்பந்தங்களில் ஒப்பமிடலாம்.

Review Topic
QID: 21518
Hide Comments(0)

Leave a Reply

ஜனாதிபதி,
A – ஆறு வருடங்கள் கொண்ட குறிக்கப்பட்ட காலத்திற்குப் பதவி வகிப்பர்.
B – ஒரு பழிமாட்டறைதல் மூலம் பதவியிலிருந்து நீக்கப் படலாம்.
C – பழிமாட்டறைதல் நடைமுறையின்போது நீதி விசாரணைக்கு உட்பட வேண்டும்.
D – உயர் நீதிமன்றினைக் கலந்தாலோசித்து போரையும் சமாதானத்தையும் பிரகடனம் செய்வார்.

Review Topic
QID: 21519
Hide Comments(0)

Leave a Reply

ஜனாதிபதி
A – பிரதம மந்திரியால் நியமிக்கப்பட்டார்.
B – நாம நிருவாகியாக இருந்தார்
C – அரசாங்கத்தின் தலைவராக இருந்தார்.
D – அதிகாரங்கள், நிலை என்பவற்றில் சோல்பரி யாப்பின் மகாதேசாதிபதியை ஒத்தவராக இருக்கவில்லை.

Review Topic
QID: 21520
Hide Comments(0)

Leave a Reply

நிறைவேற்று ஜனாதிபதி – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 21521
Hide Comments(0)

Leave a Reply

நிறைவேற்று ஜனாதிபதிப் பதவிக்குப் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 21523
Hide Comments(0)

Leave a Reply

‘இணைந்து செயலாற்றுதல்” என்பதைச் சிறப்பாக விபரிக்கும் கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 21524
Hide Comments(0)

Leave a Reply

சனாதிபதி
A – அரசின் தலைவராவார்.
B – அரசாங்கத்தின் தலைவராவார்.
C – நிருவாகத்தின் தலைவராவார்.
D – நீதித்துறையின் தலைவராவார்.

Review Topic
QID: 21525
Hide Comments(0)

Leave a Reply

சனாதிபதி
A – பிரதமரை நிதமும் தமது கட்சியிலிருந்து நியமிக்க முடியாது.
B – பிரதம நீதியரசரை பதவி விலக்கக் கூடிய ஒரே அதிகாரியாவார்.
C – சிறுபான்மையினருக்கு பாகுபாடு காட்டும் மசோதாவை இரத்து செய்ய முடியும்.
D – இணைந்த செயற்பாடு இடம்பெறும் காலப்பகுதியில் அரசாங்கத்தின் தலைவராவார்.

Review Topic
QID: 21526
Hide Comments(0)

Leave a Reply

சனாதிபதி
A – தேவைப்படின் ஒரு மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட முடியும்.
B – பாராளுமன்றைக் கலைப்பதன் மூலம் குற்றப் பிரேரணை விவாதத்தைத் தடுக்க முடியாது.
C – அரசுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் ஒரு ஒழுங்கமைப்பைத் தடை செய்ய முடியும்.
D – பாராளுமன்றின் அனுமதியின்றி ஒப்பந்தங்களில் கைச்சாத்திட முடியும்.

Review Topic
QID: 21527
Hide Comments(0)

Leave a Reply

1978 அரசியல் யாப்பின் கீழ் ஜனாதிபதி
A – ஆறுவருட பதவிக் காலத்துக்கு மக்களால் தெரிவு செய்யப்படுகிறார்.
B – இரண்டு தவணைகளுக்கு மட்டுமே பதவி வகிக்க முடியும்.
C – பாதுகாப்பு உள்ளிட்ட மக்களின் நிறைவேற்று அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றார்.
D – பாராளுமன்றுக்குப் பொறுப்புக் கூற மாட்டார்.

Review Topic
QID: 21528
Hide Comments(0)

Leave a Reply

1978 யாப்பின் கீழ் பாராளுமன்றம்
A – 225 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
B – மக்களின் சட்டவாக்க அதிகாரத்தைப் பிரயோகிக்கும் தனியானதும் பிரத்தியேகமானதுமான உரிமையைப் பெற்றுள்ளது.
C – உள்ளகக் கருமங்களை நிலையியற் கட்டளைகளின் படி மேற்கொள்கிறது.
D – வருடத்தில் குறைந்தது இரு முறைகளாவது கூட வேண்டும்.

Review Topic
QID: 21529
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைப் பலப்படுத்தும் நோக்கில் அரசியல் யாப்பின் மீதான 17 ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

கூற்று II – 17ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவை ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

Review Topic
QID: 21530
Hide Comments(0)

Leave a Reply

1978 அரசியல் யாப்பு – பிழையான கூற்று

Review Topic
QID: 21531
Hide Comments(0)

Leave a Reply

1978 யாப்பின் கீழ் ஜனாதிபதி – பிழையான கூற்று

Review Topic
QID: 21532
Hide Comments(0)

Leave a Reply

1978 இரண்டாம் குடியரசு யாப்பின் கீழுள்ள ஜனாதிபதி
A – எத்தனை தடவையும் பதவி வகிக்கலாம்.
B – தடைகளற்ற பரந்த நிறைவேற்று, சட்டவாக்க, நீதி அதிகாரங்களைப் பெற்றுள்ளார்.
C – மேற்கொள்ளும் செயல்கள் ஒரு விஷேட தீர்மானமின்றி பாராளுமன்றில் விவாதிக்கப்படலாம்.
D – அரசியல் யாப்பின் மூலம் சட்டத்துக்கு மேலானவராக வைக்கப்பட்டுள்ளார்.
E – பொதுவாக யாப்புசார் சர்வாதிகாரி என்று விபரிக்கப்படுகின்றார்.

Review Topic
QID: 21534
Hide Comments(0)

Leave a Reply

1978 யாப்பின் கீழுள்ள ஜனாதிபதி:
A – ஆறு வருடப் பதவிக் காலத்துக்கு மக்களால் நேரடியாகத் தெரிவுசெய்யப்படுகிறார்.
B – மக்களின் நிறைவேற்று அதிகாரத்தைப் பிரயோகிக்கும் மீயுயர் கருவியாவார்.
C – நிறைவேற்றுப் பணிகளைப் புரிவதில் பாராளுமன்றுக்குப் பொறுப்புக்கூறக் கடமைப் படாதவராவார்.
D – 18ஆம் யாப்புத் திருத்தத்தின்படி எத்தனை தடவைகளும் தெரிவு செய்யப்படுவதற்குத் தகுதியுடையவராவார்.
E – பாராளுமன்றில் நிறைவேற்றப்படும் ஒரு குற்றப் பிரேரணையின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படுவார்

Review Topic
QID: 21535
Hide Comments(0)

Leave a Reply

1978 யாப்பின்படி ஜனாதிபதிப் பதவி வறிதாகி ஒரு வாரிசாளர் தெரிவு செய்யப்படும் வரையிலான இடைக் காலப்பகுதிக்கு ஜனாதிபதியாகப் பணியாற்றுபவர்:

Review Topic
QID: 21537

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank