Please Login to view full dashboard.

மனிங் சீர்திருத்தம்

Author : Admin

4  
Topic updated on 02/15/2019 12:47am

மனிங் சீர்திருத்தத்தின் சிபாரிகள்:

  • சட்டசபை உறுப்பினரின் எண்ணிக்கை 37 ஆதிகரிக்கப்பட்டமை.
  • சட்டநிர்வாக சபையிலே சுதேசிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டமை.
  •  பிரதேசவாரி பிரதிநிதித்துவம் விரிவாக்கம் செய்யப்பட்டமை.
  •  நிதிக்குழு ஒன்று சிபாரிசு செய்யப்பட்டமை.
  •  சங்கங்களுக்கு சட்டசபையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டமை.
  •  மகாணசபை அடிப்படையிலான தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட்டமை.
  •  சட்டசபை

 

சட்ட சபை

உத்தியோக பற்றுள்ளோர் 14                                                                    உத்தியோக பற்றற்றோர் 23
                                                                                  தேர்தல் மூலம் 16                     நியமனம் மூலம் 07

தொகுதி ரீதியாக 11                        கண்டியர் 02
சங்கம் மூலம் 02                              இந்திய தமிழர் 01
இன ரீதியாக 03                                முஸ்லீம் 01
விசேடம் 03

 

தொகுதி ரீதியாக தெரிவுசெய்யப்பட்டோர்

  • மேல்மகாணம் 03
  • ஏனைய ஒவ்வொரு மாகாணத்திலும் தலா ஒருவர் வீதம் 08

சங்கம் ரீதியாக தெரிவுசெய்யப்பட்டோர்

  • கரைநாட்டு உற்பத்தியாளர் சங்கம் 01
  •  இலங்கை வர்த்தக சங்கம் 01

இனரீதியாக தெரிவுசெய்யப்பட்டோர்

  •  ஐரோப்பியர் 02
  •  பறங்கியர் 01

சட்டநிர்வாக சபை

  • மனிங் சீர்திருத்தம் 1921 ஆம் ஆண்டு இலங்கைக்கு சிபாரிசு செய்த சட்டநிர்வாக சபையில் சுதேசிகள் சால்பாக 3 அங்கத்தவர் இடம்பெற வாய்ப்பளிக்கப்பட்டது.
  •  தமிழர் 01 , சிங்களவர் 01, ஐரோப்பியர் 01 பிரதிநிதித்துவம் பெற வாய்ப்பளிக்கப்பட்டது.
  •  இவ்வாய்ப்பு உத்தியோக பற்றற்றோர் அரசாங்க நிர்வாகம் தொடர்பாக அனுபவமும் பயிற்சியும் பெற வாய்ப்பளித்தது.

பிரதேசவாரி பிரதிநிதித்துவம் விரிவாக்கம் செய்யப்பட்டமை

  •  மனிங் அரசியல் சீர்திருத்தம் பிரதேசவாரி பிரதிநிதித்துவத்தை 11 ஆக உயர்த்தியது.
  •  இதனால் இலங்கையின் பல்வேறு பிரதேசத்தையும் சேர்ந்த மக்கள் பிரதிநிதி சட்டவாக்க கழகத்திற்கு தெரிவுசெய்யப்படவும் பல்வேறு பிரதேசவரின் அரசியல் அபிலாசை அரசியல் அரங்கிற்கு கொண்டு வாய்ப்பேற்பட்டது.

நிதிக்குழு சிபாரிசு செய்யப்பட்டமை

  •  மனிங் சீர்திருத்தம் அரசாங்க நிதிவிடயங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கும் நிதிசார் விடயங்களை கண்காணித்து கட்டுப்படுத்தவும் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவும் கணக்காய்வு நடவடிக்கையை மேற்கொள்ளவும் வரவு செலவு திட்ட விவகாரங்களை கையாளவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பே நிதிக்குழுவாகும்.
  •  குடியேற்ற நாட்டு காரியதரிசி தலைமையில் இக்குழு உருவாக்கப்படும்.
  •  இக்குழுவின் பணிகள்:
    • அரசாங்க வருமானத்தை திரட்டி கொள்ளும் வழிமுறை பற்றி தீர்மானித்தல்.
    • வரிவிதிப்பு கொள்கையை தீர்மானித்தல்.
    • வரவு செலவு திட்டத்தினை தயாரித்தல்.
    • திணைக்களம், அரச அமைப்புக்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றி தீர்மானித்தல்.
    • தேர்தல் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல்.
    • அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவு பற்றி தீர்மானித்தல்.

சங்கங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டமை:

  • மனிங் சீர்திருத்தம் உத்தியோக பற்றற்ற உறுப்பினர்களில் 2 உறுப்பினர்களை சங்கங்களுக்கான பிரதிநிதித்துவமாக வழங்கியது.
  • இது தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதித்துவமாக அமைந்தமை மற்றொரு சிறப்பம்சமாகும்.

 

மகாண அடிப்படையிலான தேர்தல் தொகுதி

  • இலங்கை ஒன்பது மகாண தேர்தல் தொகுதியாக பிரிக்கப்பட்டு அத்தொகுதியிலிருந்து வரையறுக்கப்பட்ட 11 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

 

மனிங் சீர்திருத்தத்தின் நன்மைகள்:

  • உத்தியோக சார்பற்றோர் எண்ணிக்கையை உத்தியோக சார்புள்ளோரின் எண்ணிக்கையிலும் பார்க்க உயர்த்தியது.
  •  தேசாதிபதி வசமிருந்த நிதி அதிகாரம் நிதிக்குழு உருவாக்கப்பட்டு கையளிக்கப்பட்டமை.
  •  பிரதேச ரீதியான தேர்தல் தொகுதியை அறிமுகப்படுத்தியமை.
  • முதன்முதலாக சட்டநிர்வாக சபையிலே சுதேசிகள் அங்கம் பெற்றமை.
  •  சட்டவாக்க தீர்மானங்களுக்கு சுதேசியரில் தங்கியிருக்கும் நிலை உருவாகியது.
  •  சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கியமை.

 மனிங் சீர்திருத்தத்தின் குறைபாடுகள்:

  • இலங்கையின் சிறுபான்மையினரின் கோரிக்கையான மீண்டும் இனவாரி பிரதிநிதித்துவத்தை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
  • தேசாதிபதி உத்தியோக பற்றுடைய உறுப்பினர், பற்றற்ற நியமன உறுப்பினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் சட்டவாக்க கழகத்தில் செல்வாக்கு செலுத்த வாய்ப்பேற்பட்டது.
  • இலங்கை சிறுபான்மையினர் பிரதிநிதித்துவ ரீதியாக பின்தள்ளப்பட்ட நிலை உருவாகியது.
  • எல்லோருக்கும் வாக்குரிமை வழங்கப்படவில்லை.
  • வாக்குரிமை அடிப்படையில் சமூக ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுத்தது.
  • இலங்கை தேசிய காங்கிரஸை பிளவுபடுத்துவதில் பங்காற்றியது.
  • தேசாதிபதியிடம் ரத்து அதிகாரம் வழங்கியிருந்தது.
RATE CONTENT 0, 0
QBANK (4 QUESTIONS)

1921 இல் தாபிக்கப்பட்ட சட்ட நிரூபண சபை
A – 37 உறுப்பினர்களை உள்ளடக்கியிருந்தது.
B – முதற் தடவையாக உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டிருந்தது.
C – தேர்தல் தொகுதிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட உத்தியோகத்தரல்லாத 11 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
D – வாணிப மன்றினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இரு உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.

Review Topic
QID: 19595
Hide Comments(0)

Leave a Reply

1910 ஆம் ஆண்டு அரசியல் சீர்திருத்தம்- பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 19616
Hide Comments(0)

Leave a Reply

1921 ஆம் ஆண்டின் மனிங் அரசியல் யாப்பு- பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 19619
Hide Comments(0)

Leave a Reply

1921 அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் முக்கிய பண்புகளாவன
A – சட்டமன்றில் உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களைப் பெரும்பான்மையினராக ஆக்கியமை
B – நிறைவேற்று மன்றுக்கு இரு உத்தியோகத்தரல்லாத சட்ட மன்ற உறுப்பினர்களை நியமித்தமை.
C – கண்டிச் சிங்களவர்களை ஒரு சிறுபான்மை ஜனக் குழுவாக அங்கீகரித்தமை
D – உத்தியோகத்தரல்லாத பதினொரு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்குப் பிரதேசவாரித் தேர்தல் தொகுதிகளை அறிமுகம் செய்தமை

Review Topic
QID: 20018
Hide Comments(0)

Leave a Reply

1921 இல் தாபிக்கப்பட்ட சட்ட நிரூபண சபை
A – 37 உறுப்பினர்களை உள்ளடக்கியிருந்தது.
B – முதற் தடவையாக உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்டிருந்தது.
C – தேர்தல் தொகுதிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட உத்தியோகத்தரல்லாத 11 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
D – வாணிப மன்றினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இரு உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.

Review Topic
QID: 19595

1910 ஆம் ஆண்டு அரசியல் சீர்திருத்தம்- பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 19616

1921 ஆம் ஆண்டின் மனிங் அரசியல் யாப்பு- பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 19619

1921 அரசியல் யாப்புச் சீர்திருத்தத்தின் முக்கிய பண்புகளாவன
A – சட்டமன்றில் உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களைப் பெரும்பான்மையினராக ஆக்கியமை
B – நிறைவேற்று மன்றுக்கு இரு உத்தியோகத்தரல்லாத சட்ட மன்ற உறுப்பினர்களை நியமித்தமை.
C – கண்டிச் சிங்களவர்களை ஒரு சிறுபான்மை ஜனக் குழுவாக அங்கீகரித்தமை
D – உத்தியோகத்தரல்லாத பதினொரு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்குப் பிரதேசவாரித் தேர்தல் தொகுதிகளை அறிமுகம் செய்தமை

Review Topic
QID: 20018
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank