Please Login to view full dashboard.

முரண்பாடு தீர்த்தல்

Author : Admin

6  
Topic updated on 02/15/2019 09:51am
  • மனிதருக்கிடையே உருவாகும் மோதல்கள் வன்முறை மோதல்களாக உருவெடுப்பதால் அழிவுபூர்வமான விளைவுகளே ஏற்படும்.
  •  எனவே அவ்வழிவுகளை இழிவளவாக்கி, மனிதருக்கிடையே உருவாகும் மோதல்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான உத்திகளை ஆயும் பணிகள் சமூக விஞ்ஞானங்களின் துணையுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
  • அதற்கமைய மோதல் தீர்வு சார்ந்த எண்ணக்கருக்கள் சிலவற்றை இனங்காண்பது முக்கியமானது.

I. மோதல் தவிர்த்தல் (Cease fire)
II. மோதல் இணக்கப்பாடு ( Mediation)
III. மோதல் முகாமை (Management)
IV. மோதல் தீர்வு (Resolution)
V. மோதல் நிலைமாற்றம் (Transformation)

மோதல் தவிர்த்தல்

  • மோதல் தவிர்த்தலானது ஒரு புறத்தே பல்வேறு நாடுகளினுள் தோன்றிய அழிவு ரீதியான மோதல்களை காரணமாக ஏற்பட்ட அழிவுகளுக்கான ஒரு எதிர்வினையாகும்.
  • மறுபுறத்தே, அது ஆயுதமேந்திய ஏதாவது அழிவு ரீதியான மட்டம் வரையில் மோதல் விருத்தியடைந்து செல்ல இடமளிக்காத வகையில் அவற்றை இலகுவாகக் கையாளத்தக்க ஒரு வழிமுறையாகும்.
  • எதிர்ப்பு வகையான மோதல் இல்லாத நிலைமையில் எதிர்காலத்தில் அவ்வாறானதொன்று தோன்றும் எனக் கருதி, அதனைத் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல். அதாவது அதன் எளிமையான கருத்து, வன்முறை மோதல் ஏற்படத்தக்க சாத்தியங்களைத் தவிர்த்தலாகும்.
  • தற்போது தோன்றியுள்ள மோதலொன்று எதிர்காலத்தில் அழிவுபூர்வமாக வன்முறை நிலைமையாக உருவெடுக்கும் எனக் கருதி அதனைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
  • ஆயுதமேந்திய மோதல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுத்தல். அதாவது மோதலொன்று தீர்க்கப்பட்டதன் பின்னர் மீண்டும் அம்மோதல் தலைதூக்கத்தக்க சாத்தியங்களை இல்லாது ஒழித்து ஆவன செய்தலே இதன் கருத்தாகும்.

மோதல் இணக்கப்பாடு

  • மோதல் இணக்கப்பட்டு என்பது, மோதல் தவிர்ப்பிலும் பார்க்க வேறுபட்ட ஒரு செயன்முறையாகும்.
  • இணக்கப்படுத்தலின்போது நிகழுவது, வன்முறை மோதலின் வன்முறைத்தன்மையை தணித்தலாகும்.
  • மோதல் தணித்தலின்போது மோதலுக்கு ஏதுவாகவுள்ளள விசேடமான மற்றும் ஒட்டுமொத்த காரணங்களின்பால் கணிசமான கவனஞ் செலுத்தப்படுவதில்லை. வன்முறை மோதுகையின் உக்கிரத்தன்மையை இழிவாக்குவதே அதன் நோக்கமாயிருத்தல்.

மோதல் முகாமை

  • மோதல்களைக் கையாளுவதற்கான ஒர் உத்தியாக 1980 களின் பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு செயன்முறையாக “மோதல் முகாமை” யைக் குறிப்பிடலாம்
  • முதன்மையான மையவிடயம் மோதலுடன் தொடர்புடைய தரப்பினரிடத்தே உடன்பாடான (+) நடத்தை மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படத்தக்க வன்முறைகளை வரையறைப்படுத்தலும் தவிர்த்தலுமாகும்.
  • உயிரோட்டமான மோதலொன்றுடன் தொடர்புறும் பின்வரும் குறிக்கோள்களை உச்ச அளவுக்கு அடைதலே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மோதல் முகாமையின் எதிர்ப்பார்ப்பாக அமைகிறது.

I. மோதலின் வன்முறையையும் அழிவு மட்டத்தையும் இழிவளவாக்கல்.
II. மோதலின் உக்கிரத்தன்மையையும் மக்களை அழிக்கும் வகையிலான ஆயுதங்களைப் பயன்படுத்தும் நிலைமை வரை பரவுவதையும் தவிர்த்தல்.
III. வேறு திசைகளில் கிடையாக மோதல் பரவுவதைத் தவிர்த்தல்.

மோதல் தீர்வு  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • மோதல் தீர்வு என்பது மோதல் தவிர்த்தல், மோதல் இணக்கப்படுத்தல், மோதல் தீர்த்தல், மோதல் நிலைமாற்றல் ஆகிய சகல அம்சங்களையும் உள்ளடக்கிய பரந்ததோர் செயன்முறையொன்றாகும்.
  • ஆக்கபூர்வமாகவும் அமிச்சை முறையிலும் பிரச்சினைகளைத் தீர்த்து மோதல்களுடன் தொடர்புடைய சகல தரப்பினரதும் தனித்துவம் தொடர்பான பெறுமானங்களை இனங்கண்டு அவர்களது மானுடத் தேவைகளையும் ஆசைகளையும் இனங்கண்டு, தேவையான வழிவகைகளை மேற்கொள்ளல் மோதல் தீர்வில் அடங்கியுள்ளது என்பது அவர்களது அபிப்பிராயமாகும்.
  • மோதல் இணக்கப்படுத்தல் அல்லது மோதல் முகாமை என்பனவற்றில் இருந்து வேறுபட்ட செயல்களும் மோதல் தீர்வில் அடங்கியுள்ளது என்பது இக்கருத்தின் மூலம் தெளிவாகின்றது.
  • மோதல் தீர்வு என்பது பல முக்கியமான இயல்புகளை உள்ளடக்கியுள்ளது என்பது மேற்படி கருத்துக்களை ஒட்டுமொத்தமாக நோக்கும்போது தெளிவாகின்றது.

I. மோதலுடன் தொடர்புடைய மற்றும் அதற்கு அடிப்படையாக அமைந்துள்ள காரணிகளை வேரோடு களையச் செயற்படுதல்.
II. மோதல் தரப்பினரிடையே புதிய தொடர்புகளை உருவாக்குவதற்காகச் செயற்படுதல்.
III. உடன்பாடான (Positive) மனப்பாங்குகளைப் பிறப்பித்தல்.
IV. வன்முறை மீண்டும் தலைதூக்குவதற்கான சாத்தியங்களை நீக்குதல்.

மோதல் நிலைமாற்றம்

  • மோதல் தீர்வு மூலம் மோதலுடன் தொடர்புடைய தரப்பினருக்கு இடையே காணப்படும் எதிர்ப்புத் தன்மைகளைத் தணித்து சகல தரப்பினரும் திருப்தியடையக் கூடியவாறான ஒரு நிலைமையை ஏற்படுத்துவதற்காக செயற்படுவதாகும்.
  •  மோதல் நிலைமாற்றத்தை மூன்று விதமாக வரைவிலக்கணப்படுத்தலாம்.

◊ ஓட்டுமொத்த மோதல் சூழமைவை (Context) மாற்றியமைத்தல்.
◊ மோதல் தரப்பினரின் தொடர்புகளை மாற்றியமைத்தல்.
◊ வலுவூட்டலுக்கூடாக (Empowerment) மோதலுடன் தொர்புடைய ஆட்களின் மட்டங்களை மாற்றியமைத்தல்.

RATE CONTENT 5, 1
QBANK (6 QUESTIONS)

மோதல் நிலைமாற்றத்துடன் தொடர்புடைய சேர்மானம்,
A – நீண்டகால நம்பிக்கைகளும் எடுகோள்களும்
B – ஒட்டுமொத்த மோதல் சூழமைவை மாற்றியமைத்தல்
C – மோதல் தரப்பினரின் தொடர்புகளை மாற்றியமைத்தல்
D – விசேட தேவைகள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளல்
E – வன்முறை மீண்டும் தலைதூக்குவதற்கான சாத்தியங்களை நீக்குதல்

Review Topic
QID: 21032
Hide Comments(0)

Leave a Reply

மோதல்களை சமாதானமாகத் தீர்த்துக் கொள்ளும் ஜனநாயக சமூகத்தில் பிரஜை ஒருவரிடம் வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்பு அல்லாதது,

Review Topic
QID: 21037
Hide Comments(0)

Leave a Reply

மோதல் நிலைமாற்றத்துடன் தொடர்புடைய சேர்மானம்,
A – நீண்டகால நம்பிக்கைகளும் எடுகோள்களும்
B – ஒட்டுமொத்த மோதல் சூழமைவை மாற்றியமைத்தல்
C – மோதல் தரப்பினரின் தொடர்புகளை மாற்றியமைத்தல்
D – விசேட தேவைகள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளல்
E – வன்முறை மீண்டும் தலைதூக்குவதற்கான சாத்தியங்களை நீக்குதல்

Review Topic
QID: 21032

மோதல்களை சமாதானமாகத் தீர்த்துக் கொள்ளும் ஜனநாயக சமூகத்தில் பிரஜை ஒருவரிடம் வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்பு அல்லாதது,

Review Topic
QID: 21037
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank