Please Login to view full dashboard.

அரசாங்க அதிகாரம் பிரயோகிக்கப்படும் முறைகள்

Author : Admin

43  
Topic updated on 02/15/2019 11:06am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

அரசாங்க அதிகாரம்

  • கோட்பாட்டு ரீதியாக அரசாங்கத்திற்கன்றி அரசுக்கே இறைமை அதிகாரம் உரித்தாகின்றது. ஆனால் நடைமுறையில் அரசின் சார்பாக அரசாங்கமே அவ்வதிகாரத்தை பிரயோகிக்கின்றது.
  • அரசுக்கு உரித்தான இறைமை அதிகாரத்தை அரசின் சார்பாக அரசாங்கம் பிரயோகிப்பது அரசாங்க அதிகாரம் எனப்படுகின்றது.
  • இறைமை அதிகாரத்தின் உரிமையாளன் என்ற வகையில் உள்வாரியாகவும் வெளிவாரியாகவும் இவ்வதிகாரத்தை அரசாங்கமே பிரயோகிக்கின்றது.

அரசாங்க அதிகாரம் பிரயோகிக்கும் வழிமுறைகள்

  • அரசாங்கத்தின் அதிகாரம் சட்டமுறையானது என மக்களை நம்பச் செய்வதன் மூலமாகும்.
  • அச்சுறுத்தல் மற்றும் சன்மானம் வழங்குதல் மூலமாகும்.
  • அதிகாரத்தை பிரயோகிப்பதன் மூலமாகும்.
  • தண்டிப்பதன் மூலமாகும்.

அரசாங்கம் அதிகாரத்தை பிரயோகிக்கும் கருவிகள்

  1. காவல்துறை
  2. சிவில் சேவை

காவல்துறை

  • அரசாங்க அதிகாரத்தை பிரயோகிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவி காவல்துறையாகும்.
  • இதன் பணிகளாவன,
  1. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்தல்.
  2. சட்டத்தை மீறுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக தண்டனை பெற்றுக் கொடுத்தல்.
  3. மக்களின் நாளாந்த செயற்பாட்டை பராமரித்தல்.
  4. அரசாங்கத்திற்கும் அரச அமைப்பிற்கும் பாதுகாப்பை வழங்குதல்.

சிவில்சேவை

  • அரசாங்கத்தின் கொள்கைகள், தீர்மானங்கள் மக்களிடம் கொண்டு செல்லும் கருவியே சிவில்சேவை எனப்படும் நிரந்தர நிர்வாகமாகும்.
  • இலங்கையின் நிர்வாக சேவை மத்திய அரசாங்கம் மற்றும் மாகாணசபை ஆகிய இரண்டிற்காகவும் பணிபுரியும் சிவில்சேவை உத்தியோகத்தர்களைக் கொண்டுள்ளது.

அரசாங்க அதிகாரத்தை கட்டுப்பட்டுத்தும் வழிமுறைகள்

  • தடைகளும் கட்டுப்பாடுகளும் இல்லாத அரசாங்க அதிகாரமானது நிச்சயமாக சர்வதிகாரம் தோன்றுவதற்குக் காரணமாக அமையும். இதனால் அரசாங்கம் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகளாக,
  • முறைசார் கட்டுப்பாடுகள்
  1.  அரசியலமைப்பு
  2.  வலுவேறாக்கம்
  3.  தடைகள் சமன்பாடுகள்
  4.  நீதிப்புனராய்வு
  • முறைசாரா கட்டுப்பாடுகள்
  1. எதிர்க்கட்சி
  2. ஊடகம்
  3. சிவில்சமூகம்

அரசியலமைப்பு:
அரசியமைப்பில் அரசாங்கம் ஒன்றின் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவற்றின் அமைப்பு மற்றும் தொழிற்பாடு பற்றி தெளிவாக வரையறுக்கப்படுவதுடன் அவை ஒன்றையொன்று மீறிச் செல்லாத வகையில் அரசியல் அமைப்பு  ரீதியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும்.

வலுவேறாக்கம்:
அரசாங்க அதிகாரம் கட்டுப்படுத்தப்படுவதுடன் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக நடப்பது தவிர்க்கப்படும்.

நீதிப்புனராய்வு அதிகாரம்:
சட்டத்துறையின் சட்டங்களும் நிறைவேற்றுத்துறையின் செயற்பாடுகளும் அரசியலமைப்பிற்கு இசைவானதா? எனப் புனராய்வு செய்து இசைவற்றதாயின் அவற்றின் செல்லுபடியாகும் தன்மையை இரத்து செய்வதற்கு நீதித்துறைக்குள்ள அதிகாரம்

எதிர்க்கட்சி:
எதிர்க்கட்சி ஆளும் கட்சியின் செயற்பாட்டில் விழிப்புடன் இருந்து ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
பதவியிலிருந்து கட்சி அதிகாரத்தை முறைகேடாகப் பிரயோகித்தால் அதனை தடுப்பது எதிர்க்கட்சியின் நோக்கமாகும்.

ஊடகம்:
முறைகேடான அரசியல் பற்றி மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லல்.
ஆட்சி செயன்முறையில் திறந்த தன்மையைப் பேணச் செய்தல்.
முறைகேடான அரசாங்கத்திற்கு எதிரான பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குதல்.

சிவில் சமூகம்
அரசாங்க அதிகாரத்தை தன்னிச்சையாக மாறுவதைத் தடுத்தல் மற்றும் ஊழல் மிக்க அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் அதிகாரத்தை செய்வதற்கும் மனித உரிமைகளை மீறுவதற்கும் எதிராக கிளர்ந்தெழுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளல்.

அரசாங்கம் அமைப்புக்களும் பணிகளும்

சட்டத்துறை Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • ஒரு அரசாங்கத்தின் முக்கிய தொழிற்பாடு நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுவதாகும்.
  • பொதுவாக சட்டமன்றங்கள் பாராளுமன்றம் என்ற பெயரினாலேயே அழைக்கப்படுகின்றன. ஆனால் சில நாடுகளில் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.
    உதாரணம்: அமெரிக்கா – காங்கிரஸ்
  • முன்னைய சோவியத் யூனியன் : சுப்ரீம் சோவியத்
    இந்தியா: சட்டமன்றம்
  • சட்டமன்றங்களின் பணிகள் அரசாங்கத்தின் அமைப்பைப் பொறுத்து வேறுபடும்.
    உதாரணம்:
    சர்வாதிகார அரசியல் சட்டமன்றம் – வெறும் ஆலோசனை சட்டமன்றம்
    ஜனாதிபதி அரசாங்க முறை – வரையறுக்கப்பட்ட மன்றம்
    பாராளுமன்ற அரசாங்க முறை – மிக அதிக பணிகள் கொண்ட சட்டமன்றம்

சட்டமன்றத்தின் பணிகள்

1. நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுதல்.
2. நிறைவேற்றுத்துறையை கட்டுப்படுத்தல் :
• பழிமாற்றிறைதல் மற்றும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம்
• நிறைவேற்றுத்துறை சமர்ப்பிக்கும் மசோதாக்களுக்கு அங்கீகாரம் வழங்காமை
• நிறைவேற்றுத்துறையிடம் கேள்வி கேட்டல் மற்றும் அதனை விமர்சித்தல்
3. நிறைவேற்றுத்துறையை தேவையான பெரும்பான்மை பலத்தை வழங்குதல். அதாவது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு தேவையான பெரும்பான்மையை வழங்குதல்.
4. பொது நிதியை கட்டுப்படுத்தல்
• அரச கருமங்களை மேற்கொள்வதற்கு தேவைப்படும் பணத்தின் அளவு, அதனை பெற்றுக்கொள்ளும் முறை என்பவற்றை அனுமதித்தல்.
5. நீதித்துறை பணிகள்
• குற்றப்பிரேரணையை விசாரித்து முடிவு கூறுதல்.
• பாராளுமன்ற சிறப்புரிமை மீறல்களை விசாரித்தல்
6. நியமனப் பணிகள்
உதாரணம்: இந்தியாவில் ஜனாதிபதியை தெரிவு செய்தல்.
அமெரிக்காவில் ஜனாதிபதியோடு சில நியமனங்களை மேற்கொள்ளல்.
சுவிஸ்லாந்தில் சமஷ்டிக் கவுன்சிலின் உறுப்பினர்களையும் சமஷ்டி நீதிமன்றின் நீதிபதிகளையும் நியமித்தல்.
7. அரசியல் யாப்பை திருத்துதல்.
அரசியல் யாப்பினை உருவாக்கும் திருத்தும் பணிகளை சட்டமன்றம் மேற்கொள்கின்றது.
8. எதிர்கால தலைவர்களையும் உருவாக்குதல்.
9. பொதுசன அபிப்பிராயத்தை வெளிப்படுதல்.

சட்டத்துறையின் நவீன போக்குகள்
1. அரசியல் கட்சி முறையின் வளர்ச்சி
2. சட்டத்துறை ஒரு பாரிய நிறுவனமாக இருப்பதனால் அவசரமாக தீர்மானங்களை எடுக்க முயன்றமை.
3. நிறைவேற்றுத்துறை தொடர்ச்சியாக பலமடைந்து வருதல்.
4. நீதிப்புனராய்வு அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்துறையின் சட்டங்களை இரத்துச் செய்யும் அதிகாரத்தை நீதித்துறை பெற்றுள்ளமை.
5. சட்டத்துறையின் உறுப்பினர்களால் நிபுணர்களின் உதவியை உடனடியாகவும் எளிதாகவும் பெற்றுக் கொள்ள முடியாமை.

சட்டமன்றத்தின் அமைப்பு:

  • சட்டமன்றங்கள் ஓரவை சட்டமன்றங்களாகவும், ஈரவை சட்டமன்றங்களாகவும் காணப்படலாம்.

ஓரவைச் சட்டமன்றம்

  • நாட்டின் சட்டமியற்றும் அதிகாரம் ஒரேயொரு சபையிடம் வழங்கப்படுமாக இருந்தால் அது ஓரவை சட்டமன்றம் எனப்படும்.
  • சட்டத்துறையானது பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரபல்யமான மன்றம் ஒன்றினை மட்டும் கொண்டிருப்பின் அது ஒரு மன்ற முறை எனப்படும்.
    உதாரணம் : இலங்கை, நியூசிலாந்து, இஸ்ரேல்

ஒருமன்ற முறைக்கு ஆதரவான கருத்துக்கள்:

  • மக்களின் சட்ட இறைமை பிரிக்கப்படாதிருக்கும்.
  • மக்களின் விருப்பு இரண்டாகப் பிளவுபடுவதைத் தடுக்க முடிவதுடன் செயற்திறனை அதிகரிக்க முடிகின்றது.
  • சட்டமியற்றுதல் என்ற ஒரு வேலையை இரண்டு முறை செய்யவேண்டியதில்லை. இதனால் காலதாமதம் தவிர்க்கப்படுகின்றது.
  • செலவு மிகக் குறைவு.
  • புதிய அரசுகளுக்கும் சிறிய அரசுகளுக்கும் இம்முறை சிறந்ததாகக் காணப்படுகின்றது.

ஒருமன்ற முறைக்கு எதிரான கருத்துக்கள்:

  • அதிகாரங்கள் ஒரு சபையிடம் மட்டும் குவிந்திருப்பதால் சர்வதிகார தன்மை கொண்டதாக காணப்படும்.
  • அவரசமாகவும் தீர ஆலோசனை இன்றியும் மக்கள் நலன் பாதிக்கக்கூடிய சட்டங்கள் இயற்ற வழிவகுக்கும்.
  • தேர்தலில் விரும்பாத அறிஞர்கள், நிபுணர்களின் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
  • சிறுபான்மை மக்களின் பொதுசன அபிப்பிராயம் வெளிப்படுவது குறைவாக இருக்கும்.
  • சட்டமன்றத்தின் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சி தான்தோன்றித்தனமாகச் செயற்பட முற்படலாம்.
  • பல்லின மக்கள் வாழும் நாடுகளுக்கும் பெரிய அரசுகளுக்கும் ஓரவை சட்டமன்றம் பொருத்தமில்லை.

ஈரவைச் சட்டமன்றம்

  • நாட்டின் சட்டமியற்றும் அதிகாரம் இருசபைகளிடம் வழங்கப்பட்டிருந்தால் அது ஈரவைச் சட்டமன்றம் எனப்படும்.
    உதாரணம் : அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து

இருமன்ற முறைக்கு ஆதரவான கருத்துக்கள்:

  • கீழ்ச்சபை தனது எல்லையைத் தாண்டி அவசரமாகவும் தீர ஆலோசனை இன்றியும் சட்டவாக்கம் செய்வது தடுக்கப்படுகின்றது.
  • ஒருமன்ற முறையால் தோன்றும் சர்வதிகாரநிலையை தடைசெய்ய முடிதல்.
  • பொதுத்தேர்தலில் போதிய பிரதிநிதித்துவம் பெற முடியாதவர்களுக்கு பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுத்தல்.
  • முதலாம் மன்றத்தின் வேலைப்பளுவினை இரண்டாம் மன்றம் குறைக்க கூடியதாக இருக்கின்றது.
  • சிறுபான்மை மக்களின் நலன் பாதுகாக்கப்படுவதோடு அவர்களின் பிரதிநிதித்துவமும் பாதுகாக்கப்படுகின்றது.
  • பெரிய நாடுகளுக்கும் பல்லின மக்கள் வாழும் நாடுகளுக்கும் பொருத்தமானது.

இருமன்ற முறைக்கு எதிரான கருத்துக்கள்

  • சட்டத்துறை இருமன்றங்களைக் கொண்டிருக்கும் போது பொதுமக்கள் விருப்பு இரண்டாகப் பிளவுறும்.
  • இருமன்ற முறையினால் சட்டவாக்கத்தின் போது தேவையற்ற காலதாமதம் ஏற்படுகின்றது.
  • ஒரே வேலையை செய்வதற்கு தேவையற்ற வகையில் இரண்டு மன்றங்கள் இருப்பதினால் அரசின் செலவு அதிகமாகின்றது.
  • பொதுவாக இரண்டாம் மன்றம் பிற்போக்கு சக்திகளின் உறைவிடமாக இருப்பதனால் சமூக முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றது.

நிர்வாகத்துறைPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • நிறைவேற்றுத்துறை என்பது சட்டவாக்கத்துறை இயற்றிய சட்டங்களுக்கேற்ப நாட்டின் நிர்வாகத்தை நடாத்துகின்ற நிறுவனமாகும்.
  • நிர்வாகத்துறையின் பணிகள்:
    1. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டல்.
    2. பகிரங்க சேவையை கட்டுப்படுத்தல்:
    • அமைச்சுக்களையும் இலாகாக்களையும் பரிபாலித்தல்,வழிநடத்துதல், மேற்பார்வை செய்தல்.
    • உயர் பகிரங்க அலுவலர்களை நியமித்தல், பதவி உயர்வு வழங்குதல், இடமாற்றம் செய்தல், நீக்குதல்.
    3. சட்டத்துறை பணிகள்:
    • சட்டமன்றங்களை கூட்டல், கலைத்தல், ஒத்திவைத்தல்
    • அவசர காலங்களில் உரை நிகழ்த்துதல்
    • செய்திகளையும் தூதுவர்களையும் அனுப்புதல், மசோதாக்களை முன்வைத்தல்.
    • மசோதாக்களுக்கு இறுதி அங்கீகாரம் வழங்குதல்.
    4. நீதித்துறை பணிகள்:
    • மேல்நிலை நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தல்.
    • யாப்பு ரீதியான முறையில் அகற்றுதல்.
    • குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குதல்.
    • அரசாங்க வழக்கறிஞர்களை நியமித்தல்.
    5. அவசர பாதுகாப்பு பணிகள் :
    • முப்படைகளுக்கும் மற்றும் பொலிஸ், உயர் பதவிளுக்கும் ஆட்களை நியமித்தல் மற்றும் நீக்குதல்
    • அவசரகால சட்டத்தையும் ஊரடங்கு சட்டத்தையும் பிரகடனப்படுத்துதல்.
    • போரையும் சமாதானத்தையும் பிரகடனப்படுத்தல்.
    6. நிதிசார்ந்த பணிகள்:
    • வரவு – செலவு திட்டத்தை தயாரித்தல்.
    • சட்டமன்றில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அதனை நடைமுறைப்படுத்தல்.
    7. வெளிநாட்டு விவகாரம்:
    • வெளிநாடுகளில் தனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தல்.
    • வெளிநாட்டுக்கொள்கைகளை வகுத்தலும் நடைமுறைப்படுத்தலும்.
    • இராஜதந்திர அதிகாரிகளை நியமித்தல், ஏற்றுக்கொள்ளுதல்.
    • வெளிநாடுகளோடு ஒப்பந்தங்களில் ஈடுபடுதல்.
    8. சடங்கு முறையான பணிகள்:
    • அரச விழாக்களுக்கு தலைமை தாங்குதல்.
    • கௌரவ பட்டங்களை வழங்குதல்.
    • அரச இலட்சிணையைப் பேணிப் பாதுகாத்தல்.
    9. கட்டளை பிறப்பித்தல் :
    • பொதுக்கொள்கைகள், தீர்மானங்கள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஆணைகளையும் கட்டளைகளையும் பிறப்பித்தல்.
    10. ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை நடைமுறைப்படுதல்.
    • சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப சட்டத்துறை நிறைவேற்றுத்துறைக்கு ஒப்படைக்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தல்.

நிர்வாகத்துறையின் நவீன போக்கு

  • அரசின் செலவுகள் அதிகரித்தல்.
  • அரசின் பொதுநலக் கொள்கையின் வளர்ச்சி
  • அரசியல் கட்சி முறையின் வளர்ச்சி
  • ஒரு செயற்றிறன் மிக்க தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நிர்வாகத்துறைக்கு உள்ளதிறன்
  • நிர்வாகத்துறையால் நிபுணத்துவ ஆலோசனைகளையும் உதவிகளையும் அவசரமாகப் பெற்றுக்கொள்ள முடிதல்

நீதித்துறை Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • சட்டத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான விவரணத்திற்கும் சட்டத்தின் பிரயோகத்திற்கும் பொறுப்பான அரசாங்கத்துறையே நீதித்துறையாகும்.
  • தற்கால அரசுகளின் முக்கியத்துவம் வாய்ந்ததுறையாக திகழ்கின்றது. பேராசிரியர் பிரைஸின் வார்த்தைகளில் கூறின் “நீதித்துறையின் மேன்மையே ஓர் அரசாங்கத்தின் உயர்வைக் காட்டும் அளவுகோலாகும்”.

நீதித்துறையின் பணிகள்:

  • நீதியை நிர்வகித்தல்
  • சட்டங்களுக்கு விளக்கமளித்தல்.
  • ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பாக நடைமுறையிலுள்ள சட்டம் தெளிவற்றதாகவும் மௌனமாகவும் இருந்தால் அச்சட்டத்திற்கு விளக்கமளிப்பதோடு புதிய சட்டங்களையும் நீதித்துறை உருவாக்குகின்றது.
  • பிரஜைகளின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாத்தல்.
  • அரசியல் யாப்பை பாதுகாத்தல்:
  • நீதித்துறை அரசியல் யாப்பிற்கு விளக்கப்படுகின்றது. சட்டத்துறையும் நிறைவேற்றுத்துறையும் பிறப்பிக்கும் சட்டங்கள் அரசியல் யாப்போடு ஒத்துப்போக்கின்றனவா? என்பதை பரிசீலனை செய்கின்றது.
  • ஆலோசணை வழங்கும் பணி
    சட்டங்கள் தொடர்பான நெருக்கடி நிலைகள் உருவானால் அதனைத் தீர்த்து வைப்பதில் சட்டத்துறைக்கும் நிறைவேற்றுத்துறைக்கும் நீதித்துறை ஆலோசணை வழங்கி உதவுகின்றது.
  • கூட்டாட்சியைப் பாதுகாத்தல்.
    கூட்டாட்சியில் நீதித்துறையானது மாநிலத்திற்கும் மற்றும் மாநிலங்களுக்கிடையிலும் ஏற்படுகின்ற பிணக்குகளைத் தீர்த்து வைத்து,கூட்டாட்சியின் இருப்பை பாதுகாக்கின்றது.
  • நாட்டினுடைய பொது கொள்கைகளை பாதுகாத்தல்.
  • அரசாங்க அலுவலர் மீது அல்லது நாட்டில் ஏற்படும் மிகப்பெரிய அழிவுகள், கலவரங்கள், சமுதாய பிரச்சனைகள் ஆகியவற்றை விசாரிக்கும் விசாரணைக் குழுவாகச் செயற்படல்.
RATE CONTENT 0, 0
QBANK (43 QUESTIONS)

ஒரு அரசியல் யாப்பின் உள்ளடக்கத்தினை சரியாக விபரிக்காத கூற்றினை இனங்காண்க.

Review Topic
QID: 16934
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் யாப்பு வாதத்தினை சரியாக விபரிக்கும் கூற்றினை இனங்காண்க.

Review Topic
QID: 16938
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் யாப்பொன்றிலே கட்டாயம் இடம்பெற வேண்டியவற்றோடு மிகக் குறைந்தளவு பொருத்தமுடைய கூற்றினை இனங் காண்க.

Review Topic
QID: 16940
Hide Comments(0)

Leave a Reply

அரசியலமைப்பு வாதத்திற்குப் பொருத்தமான சேர்மானத்தை இனங்காண்க.
A – ஒவ்வொரு அரசும் ஓர் அரசியலமைப்பைக் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கின்றது.
B – அது தனிப்பட்டவர்களின் உயர்தன்மையையன்றி சட்டத்தின் உயர்தன்மையையே காட்டுகின்றது.
C – அது அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குப் பலமான கட்டுப்பாடுகளை வழங்குகின்றது.
D – ஒரு ஜனநாயக அரசியல் முறை நடைமுறையில் இருப்பதை அரசியலமைப்பு வாதம் குறித்து நிற்கின்றது.

Review Topic
QID: 16952
Hide Comments(0)

Leave a Reply

ஓர் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படக் கூடாத விடயத்தைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 16968
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் நவீன யாப்பொன்று பொதுவாகச் செய்யாததை அடையாளப்படுத்துக.

Review Topic
QID: 16971
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் அரசியல் யாப்பொன்றில் உள்ளடக்கப்படுவதற்கு குறைந்தளவு வாய்ப்புடையது யாது?

Review Topic
QID: 16979
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் யாப்பொன்றில் உள்ளடக்கப்படக் கூடாத அம்சத்தைக் குறிப்பிடுக.

Review Topic
QID: 16989
Hide Comments(0)

Leave a Reply

ஒரு நாட்டுக்கு ஏன் ஓர் அரசியல் யாப்பு அவசியமாகின்றது. பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – முழு நாட்டுக்கும் ஒரு தனி மத்திய அதிகாரம் இருக்கும்.
B – மத்திய அரசுக்கும் உள்ர்ளூ மன்றுக்குமிடையில் அதிகாரப் பகிர்வு.
C – சட்டங்கள், கொள்கைகள் மற்றும் பொருளாதார தத்துவத்தை வழங்குவதற்கு
D – மனித உரிமைகளை அடக்குவதற்கு

Review Topic
QID: 17016
Hide Comments(0)

Leave a Reply

யாப்புவாதம் என்பதன் பொருள் யாது? சரியான விடையைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 17018
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் யாப்பு என்பது
A – முழுமையாக எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத சட்ட ஆவணமாகும்.
B – அரசு மற்றும் அரசாங்கம் பற்றிய மூலச் சட்டங்களை உள்ளடக்குகிறது.
C – அரசாங்கம் மற்றும் அதன் செயற்பாடுகளுக்கு சட்டமுறைத் தன்மையை வழங்குகிறது.
D – ஜனநாயக ஆட்சிக்கான மூலத்தளமாகும்.

Review Topic
QID: 17411
Hide Comments(0)

Leave a Reply

அரசாங்கம் தனது அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளாவன
A – அரசாங்கத்தின் அதிகாரம் சட்டமுறையானது என மக்களை நம்பச் செய்வதன் மூலமாகும்.
B – சன்மானம் வழங்குதல் மற்றும் அச்சுறுத்தல் மூலமாகும்.
C – அதிகாரத்தைப் பிரயோகிப்பதன் மூலமாகும்.
D – சமய மற்றும் ஒழுக்க நம்பிக்கைகளின் மூலமாகும்.
E – தண்டிப்பதன் மூலமாகும்.

Review Topic
QID: 17419
Hide Comments(0)

Leave a Reply

அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளாவன
A – பொலீஸ் மற்றும் சிவில் சேவை
B – அரசியல் யாப்பு
C – வலு வேறாக்கம்
D- தடைகள் சமன்பாடுகள் முறை
E – நீதிப் புனராய்வு அதிகாரம்

Review Topic
QID: 17420
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் யாப்பு என்பது
A – ஜனநாயக ஆட்சியின் அடிப்படைத் தளமாகும்.
B – நாட்டின் அடிப்படைச் சட்டமாகும்.
C – அரசையும் அரசாங்கத்தையும் ஒழுங்குப்படுத்தும் மூலக் கொள்கைகளின் தொகுப்பாகும்.
D – அரசாங்கத்தின் சட்டமுறைத் தளமாகும்.
E – அரசின் அடிப்படை நோக்கங்களை விவரிக்கும் ஆவணமாகும்.

Review Topic
QID: 17424
Hide Comments(0)

Leave a Reply

சட்டத்துறை என்பது
A – தனிமன்ற முறை இருமன்ற முறை என இருவகைப்படும்.
B – அரசாங்கத்தின் முத்துறைகளுள் பாரிய தாபனமாகும்.
C – அரசியல் முறைமையில் சட்டமுறையான சட்டவாக்குனர் என்று ஏற்கப்படுகின்றது.
D – அரச நிதியின் பொறுப்பாளராகும்.
E – அரசாங்கத்தின் நிறைவேற்று, நீதித் துறைகளை விடக் கீழானதாகும்.

Review Topic
QID: 17427
Hide Comments(0)

Leave a Reply

நிறைவேற்றுத்துறை என்பது
A – அரசாங்கத்தின் திட்டங்களையும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனமாகும்.
B – அரசியல் மற்றும் நிரந்தர நிர்வாகம் என்ற இரு பகுதிகளைக் கொண்டதாகும்.
C – தனது பணிகளை பொலிஸ் மற்றும் அரசாங்க சேவையினூடாக நிறைவேற்றுகின்றது.
D – தனது மனச்சாட்சிக்கன்றி வேறு எவருக்கும் பொறுப்புக் கூறுவதில்லை.
E – அனைத்தாண்மைமுறை, ஜனாதிபதிமுறை, பாராளுமன்றமுறை என மூவகையினதாகும்.

Review Topic
QID: 17428
Hide Comments(0)

Leave a Reply

நீதித்துறை என்பது
A – நீதித் தீர்மானங்களை எடுப்பதற்கு உத்தியோக ரீதியாக அதிகாரம் வழங்கப்பட்ட அரசாங்கத்தின் மூன்றாவது துறையாகும்.
B – சுதந்திரமானதாகவும் பக்கச்சார்பற்றதாகவும் தைரியமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
C – நிறைவேற்றுத் துறையின் விருப்புகளுக்கேற்பச் செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
D – நீதியினதும் நேர்மையினதும் உயர் பாதுகாவலன் எனக் கருதப்படுகின்றது.
E – பிரதம நீதியரசரின் தலைமையின் கீழமைந்த மேல் நிலை, கீழ்நிலை என்ற நீதிமன்றப் படிநிலையமைப்பினைக் கொண்டதாகும்.

Review Topic
QID: 17429
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் அமைப்பு என்பது: – பிழையான கூற்று

Review Topic
QID: 17475
Hide Comments(0)

Leave a Reply

சட்டத்துறை என்பது:- பிழையான கூற்று

Review Topic
QID: 17495
Hide Comments(0)

Leave a Reply

நிறைவேற்றுத்துறை என்பது:- பிழையான கூற்று

Review Topic
QID: 17496
Hide Comments(0)

Leave a Reply

நீதித்துறை என்பது:- பிழையான கூற்று

Review Topic
QID: 17499
Hide Comments(0)

Leave a Reply

ஒரு அரசியல் யாப்பின் உள்ளடக்கத்தினை சரியாக விபரிக்காத கூற்றினை இனங்காண்க.

Review Topic
QID: 16934

அரசியல் யாப்பு வாதத்தினை சரியாக விபரிக்கும் கூற்றினை இனங்காண்க.

Review Topic
QID: 16938

அரசியல் யாப்பொன்றிலே கட்டாயம் இடம்பெற வேண்டியவற்றோடு மிகக் குறைந்தளவு பொருத்தமுடைய கூற்றினை இனங் காண்க.

Review Topic
QID: 16940

அரசியலமைப்பு வாதத்திற்குப் பொருத்தமான சேர்மானத்தை இனங்காண்க.
A – ஒவ்வொரு அரசும் ஓர் அரசியலமைப்பைக் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கின்றது.
B – அது தனிப்பட்டவர்களின் உயர்தன்மையையன்றி சட்டத்தின் உயர்தன்மையையே காட்டுகின்றது.
C – அது அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குப் பலமான கட்டுப்பாடுகளை வழங்குகின்றது.
D – ஒரு ஜனநாயக அரசியல் முறை நடைமுறையில் இருப்பதை அரசியலமைப்பு வாதம் குறித்து நிற்கின்றது.

Review Topic
QID: 16952

ஓர் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படக் கூடாத விடயத்தைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 16968

பின்வருவனவற்றுள் நவீன யாப்பொன்று பொதுவாகச் செய்யாததை அடையாளப்படுத்துக.

Review Topic
QID: 16971

பின்வருவனவற்றில் அரசியல் யாப்பொன்றில் உள்ளடக்கப்படுவதற்கு குறைந்தளவு வாய்ப்புடையது யாது?

Review Topic
QID: 16979

அரசியல் யாப்பொன்றில் உள்ளடக்கப்படக் கூடாத அம்சத்தைக் குறிப்பிடுக.

Review Topic
QID: 16989

ஒரு நாட்டுக்கு ஏன் ஓர் அரசியல் யாப்பு அவசியமாகின்றது. பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – முழு நாட்டுக்கும் ஒரு தனி மத்திய அதிகாரம் இருக்கும்.
B – மத்திய அரசுக்கும் உள்ர்ளூ மன்றுக்குமிடையில் அதிகாரப் பகிர்வு.
C – சட்டங்கள், கொள்கைகள் மற்றும் பொருளாதார தத்துவத்தை வழங்குவதற்கு
D – மனித உரிமைகளை அடக்குவதற்கு

Review Topic
QID: 17016

யாப்புவாதம் என்பதன் பொருள் யாது? சரியான விடையைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 17018

அரசியல் யாப்பு என்பது
A – முழுமையாக எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத சட்ட ஆவணமாகும்.
B – அரசு மற்றும் அரசாங்கம் பற்றிய மூலச் சட்டங்களை உள்ளடக்குகிறது.
C – அரசாங்கம் மற்றும் அதன் செயற்பாடுகளுக்கு சட்டமுறைத் தன்மையை வழங்குகிறது.
D – ஜனநாயக ஆட்சிக்கான மூலத்தளமாகும்.

Review Topic
QID: 17411

அரசாங்கம் தனது அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளாவன
A – அரசாங்கத்தின் அதிகாரம் சட்டமுறையானது என மக்களை நம்பச் செய்வதன் மூலமாகும்.
B – சன்மானம் வழங்குதல் மற்றும் அச்சுறுத்தல் மூலமாகும்.
C – அதிகாரத்தைப் பிரயோகிப்பதன் மூலமாகும்.
D – சமய மற்றும் ஒழுக்க நம்பிக்கைகளின் மூலமாகும்.
E – தண்டிப்பதன் மூலமாகும்.

Review Topic
QID: 17419

அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளாவன
A – பொலீஸ் மற்றும் சிவில் சேவை
B – அரசியல் யாப்பு
C – வலு வேறாக்கம்
D- தடைகள் சமன்பாடுகள் முறை
E – நீதிப் புனராய்வு அதிகாரம்

Review Topic
QID: 17420

அரசியல் யாப்பு என்பது
A – ஜனநாயக ஆட்சியின் அடிப்படைத் தளமாகும்.
B – நாட்டின் அடிப்படைச் சட்டமாகும்.
C – அரசையும் அரசாங்கத்தையும் ஒழுங்குப்படுத்தும் மூலக் கொள்கைகளின் தொகுப்பாகும்.
D – அரசாங்கத்தின் சட்டமுறைத் தளமாகும்.
E – அரசின் அடிப்படை நோக்கங்களை விவரிக்கும் ஆவணமாகும்.

Review Topic
QID: 17424

சட்டத்துறை என்பது
A – தனிமன்ற முறை இருமன்ற முறை என இருவகைப்படும்.
B – அரசாங்கத்தின் முத்துறைகளுள் பாரிய தாபனமாகும்.
C – அரசியல் முறைமையில் சட்டமுறையான சட்டவாக்குனர் என்று ஏற்கப்படுகின்றது.
D – அரச நிதியின் பொறுப்பாளராகும்.
E – அரசாங்கத்தின் நிறைவேற்று, நீதித் துறைகளை விடக் கீழானதாகும்.

Review Topic
QID: 17427

நிறைவேற்றுத்துறை என்பது
A – அரசாங்கத்தின் திட்டங்களையும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனமாகும்.
B – அரசியல் மற்றும் நிரந்தர நிர்வாகம் என்ற இரு பகுதிகளைக் கொண்டதாகும்.
C – தனது பணிகளை பொலிஸ் மற்றும் அரசாங்க சேவையினூடாக நிறைவேற்றுகின்றது.
D – தனது மனச்சாட்சிக்கன்றி வேறு எவருக்கும் பொறுப்புக் கூறுவதில்லை.
E – அனைத்தாண்மைமுறை, ஜனாதிபதிமுறை, பாராளுமன்றமுறை என மூவகையினதாகும்.

Review Topic
QID: 17428

நீதித்துறை என்பது
A – நீதித் தீர்மானங்களை எடுப்பதற்கு உத்தியோக ரீதியாக அதிகாரம் வழங்கப்பட்ட அரசாங்கத்தின் மூன்றாவது துறையாகும்.
B – சுதந்திரமானதாகவும் பக்கச்சார்பற்றதாகவும் தைரியமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
C – நிறைவேற்றுத் துறையின் விருப்புகளுக்கேற்பச் செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
D – நீதியினதும் நேர்மையினதும் உயர் பாதுகாவலன் எனக் கருதப்படுகின்றது.
E – பிரதம நீதியரசரின் தலைமையின் கீழமைந்த மேல் நிலை, கீழ்நிலை என்ற நீதிமன்றப் படிநிலையமைப்பினைக் கொண்டதாகும்.

Review Topic
QID: 17429

அரசியல் அமைப்பு என்பது: – பிழையான கூற்று

Review Topic
QID: 17475

சட்டத்துறை என்பது:- பிழையான கூற்று

Review Topic
QID: 17495

நிறைவேற்றுத்துறை என்பது:- பிழையான கூற்று

Review Topic
QID: 17496

நீதித்துறை என்பது:- பிழையான கூற்று

Review Topic
QID: 17499
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank