Please Login to view full dashboard.

மக்கள் செயன்முறைகள்

Author : Admin

18  
Topic updated on 02/15/2019 04:06am

பொதுசன அபிப்பிராயம்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

அரசாங்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் , அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள், நிகழ்வுகள் என்பன பற்றி பொதுமக்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களின் பொதுமைப்படுத்தப்பட்ட நிலையே பொதுசன அபிப்பிராயமாகும்.

பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குவதில் பாதிப்புச் செலுத்தும் காரணிகள்:-
1. குடும்பம்                                                  2. கல்வி
3. சமூக ஸ்தாபனங்கள்                        4. அபிப்பிராயத் தலைவர்கள்
5. பொருளாதார விடயங்கள்              6. அரசியற் கட்சிகள்

பொதுசன அபிப்பிராயத்திற்கான நிபந்தனைகள்:-

  • பொதுமக்கள் புத்திசாலிகளாகவும் பொதுவிடயங்களில் தொடர்ச்சியான ஈடுபாடுள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
  • வெகுசன செய்தித்தொடர்புச் சாதனங்கள் பரவலானதாகவும் நேர்மையானதாகவும் சுயநலன்களுக்கு இடம் கொடுக்காததாகவும் இருத்தல் வேண்டும்.
  • அபிப்பிராயம் தெரிவிக்கும் சுதந்திரம் நிலவுதல் வேண்டும்.
  • சிறுபான்மைக் குழுக்கள் சமாதான முறையில் தமது கருத்துக்களை வெளியிட உரிமையிருக்க வேண்டும்.
  • சனத்தொகை ஒருமைப்பாடுடையதாகவும் ஒரு பொதுவான நலன்களையுடையதாகவும் இருக்க வேண்டும்.
அமுக்கக்குழுக்கள்[qpop id='17525'][qpop id='17535'][qpop id='17548'][qpop id='17876'][qpop id='17884'][qpop id='17926']

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கமாகக் கொள்ளாமல் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர் மீது அழுத்தத்தை பிரயோகிப்பதன் மூலம் தமது தனிப்பட்ட நலன்களை நிறைவேற்ற செயற்படும் ஸ்தாபனமே அமுக்கக்குழுக்கள் எனப்படும்.

இவை அரசியலில் மறைமுகமாகச் செயற்படும் குழுக்களாகும்.

அமுக்கக்குழுக்களின் பண்புகள்:-

  • அமுக்கக்குழுக்கள் அவை சார்ந்த அமைப்புக்களின் தனிப்பட்ட நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
  • அமுக்கக்குழுக்கள் தமது நலன்களுக்காக அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன.
  • பொதுக்கொள்கைகளை உருவாக்குவதற்கான தகவல்களை அரசாங்கத்திற்கு வழங்குகின்றன.
  • அரசியல் விடயங்கள் தொடர்பாக அபிப்பிராயங்களை உருவாக்குகின்ற முகவர்களாக விளங்குகின்றன.
  • அரசாங்க செயற்பாடுகள் பற்றி மக்களை அக்கறையுடன் இருக்கச் செய்யும் ஊடகங்களாக விளங்குகின்றன.

அமுக்கக்குழுக்கள் தமது செல்வாக்கை பிரயோகிக்கும் வழிமுறைகள்:-

  • அரசியல் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருத்தல்.
  • எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்.
  • ஊர்வலங்கள்.
  • துண்டுபிரசுரங்கள்.
  • சுவரொட்டிகள்.
  • வெளியீடுகள்.
  • பரிசில்கள் வழங்குதல்.
  • இலஞ்சம் வழங்குதல்.
  • ஆலோசனை.

அமுக்கக்குழுக்கள் பிரதானமாக இரு வகைப்படும்

  1. நிரந்தரமான அமுக்கக்குழுக்கள் / கருத்தாடு அமுக்கக்குழுக்கள்
    அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாட்டையும் உன்னிப்பாக அவதானித்து அதனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தின் மீது தொடர்ச்சியாக அழுத்தத்தை பிரயோகித்தல்.
    உதாரணம் : 1.ஊடக அமைப்பு                                     2.மதபீடங்கள்
  2. தற்காலிகமான அமுக்கக்குழுக்கள் / நலன்நாடும் அமுக்கக்குழுக்கள்
    தத்தமது தன் நலன்களின் மீது மட்டும் கவனம் செலுத்தி அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை பிரயோகித்தல்.
    உதாரணம்:  1.ஆசிரியர் சங்கம்                                  2.வைத்தியர் சங்கம்

அமுக்கக்குழுக்களின் நன்மைகள்:-

  • தாம் சார்ந்த மக்கள் பிரிவினரின் மேல்நிலையாக்கத்திற்கு உதவுகின்றன.
  • தாம் சார்ந்த சமூகப் பிரிவினரை அரசியல் சக்தியாக மாற்றுகின்றன.
  • சமூக ஏற்றத்தாழ்வுகளை சீர்செய்ய உதவுகின்றன
  • அரசாங்கத்திற்கு நல்ல ஆலோசனைகளையும் தகவல்களையும் வழங்குகின்றன.

அமுக்கக்குழுக்களின் குறைபாடுகள்:-

  • நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை முன்வைக்கப்பார்க்கின்றன.
  • சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகள் வளரக் காரணிகளாக அமைகின்றன.
  • அமுக்கக்குழுகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடுகள்:

அரசியல் கட்சிகள் அமுக்கக்குழுக்கள்  இடையிலான வேறுபாடுகள்:-

அரசியல் கட்சிகள்

அமுக்கக்குழுக்கள்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கமாக் கொண்டு செயற்படுபவை. அரசியல் அதிகாரத்திலிருப்பவர் மீது அழுத்தத்தை பிரயோகிப்பதன் மூலம் தமது தனிப்பட்ட நோக்கத்தை அடைய செயற்படுபவை.
பரந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டவை. குறுகிய நோக்கத்தை அடிப்படையாக கொண்டவை.
கட்சியின் அங்கத்துவம் பரந்தது. அமுக்கக்குழுக்களின் அங்கத்துவம் குறுகியது
கட்சிகள் தம்மை அமுக்கக்குழுக்களாக மாற்றிக் கொள்வதில்லை. அமுக்கக்குழுக்கள் காலப்போக்கில் தம்மை அரசியல் கட்சிகளாக மாற்றிக் கொள்கின்றன.

அமுக்கக்குழுக்களுக்கும் கட்சிகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள்:-

  • பொதுமக்களால் உருவாக்கப்படும் அமைப்பு
  • பொதுமக்களின் நலன்களை மையமாகக் கொண்டது
  • அரசாங்க பொதுக்கொள்கையை வகுப்பதில் பங்கெடுக்கின்றன.
  • அரசாங்க போக்கினை ஒழுங்குபடுத்துவதில் செல்வாக்கு செலுத்துகின்றன.
  • நல்லாட்சியை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு வழங்குகின்றன
  • ஜனநாயகத்தை பாதுகாக்க துணைபுரிகின்றன.
  • மக்கள் மத்தியிலே அரசியல் அறிவு , அரசியல் விழிப்புணர்ச்சி என்பவற்றை கட்டியெழுப்ப துணைபுரிகின்றன.
  • அரசியல் கலாசார முன்னேற்றத்திற்கு துணைபுரியும் அமைப்பாக செயற்படுகின்றன.

சிவில் சமூகம்[qpop id='18049'][qpop id='18053']

ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் சமுதாயத்திலே காணப்படுகின்ற அரசாங்கம் , குடும்பம் , சந்தை ஸ்தாபனங்கள் ஆகிய மூன்று நிறுவனங்களையும் தவிர அரசியல் சமுதாயத்தில் செயற்படுகின்ற அனைத்து ஸ்தாபனங்களின் கூட்டு மொத்தமே சிவில் சமூகம் எனப்படும்.

London School Of Economics :- ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் சமுதாயத்திலே பொதுநலனை நோக்கமாகக் கொண்டு அதற்கான பொறுப்புக்களை தமக்கிடையே பங்கீடு செய்து கொண்டு பரஸ்பரம் அதிகார பிரயோகமின்றி கூட்டாக செயற்படுவதற்கு தயாராகவுள்ள சமூகமே சிவில் சமூகம் எனப்படும்.

சிவில் சமூக அமைப்புக்கள் சில :
• உலக வங்கி
• ஆசிய அபிவிருத்தி வங்கி
• டிரான்ஸ் வெரன்ஸி இன்ரநஷ்னல்

சிவில் சமூகத்தின் பிரதான பண்புகள்:

  • கூட்டுச் செயற்பாடுகள்.
  • அதிகாரப்பிரயோகமின்மை.
  • தனித்துவம் அல்லது அடையாளம்.
  • ஆள்புலத்தை நிச்சயமாக இனங்காண முடியாமை.

சிவில் சமூகம் உருவாவதற்கு செல்வாக்கு செலுத்திய காரணிகள் :-

  • மூன்றாம் மண்டல நாடுகளில் அரசாங்கங்களின் ஜனநாயகம் பலவீனமடைதல்.
  • இயற்கை மற்றும் மானிட வளங்கள் காணப்பட்டாலும் பொருளாதார விருத்தியை மேற்கொள்ள முடியாது போனமை.
  • ஊழல்,மோசடி வினைத்திறனின்மை.
  • பொதுமக்களின் அரசியலறிவு மேலோங்கியமை.
  • சிவில் சமூகம் முரண்பட்ட ஒரு சக்தியாக செயற்படுவதன் மூலமும் ஆட்சியின் காவல் நாயாகச் செயற்படுவதன் மூலமும் நல்லாட்சியைக் கட்டியெழுப்புவதில் தாக்கத்தை செலுத்துகின்றன.

சிவில் சமூகத்தின் பணிகள்:-

  • சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்தல்.
  • மனித உரிமைகளைப் பாதுகாத்தல்.
  • நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் உறுதி செய்தல்.
  • சூழல் பாதுகாப்பு.
  • தனிப்பட்டவரின் சமூக பொருளாதார அபிவிருத்தி.
  • சமூகத்தில் சமாதான கலாசாரத்தை உருவாக்குதல்.

RATE CONTENT 0, 0
QBANK (18 QUESTIONS)

அமுக்கக் குழுக்களை விபரிக்கும் மிகவும் பொருத்தமான கூற்றினை இனங்காண்க.

Review Topic
QID: 17525
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் கட்சிகள் அமுக்கக் குழுக்கள் தொடர்பான சில இயல்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

A – நலன்களைத் தெரிவு செய்து குறைத்து மொத்தமாக்குகிறது.
B – பாதுகாத்து முன்னேற்றும் ஒழுங்கமைப்புகள் எனக் கொள்ளப்படுகின்றன.
C – அவற்றின் பன்மைத் தன்மை மேலான அரசியல் அபிவிருத்திகளின் ஒரு அடையாளமாகக் கொள்ளப்படுகின்றது.
D – அதிகாரத்தினைக் கைப்பற்றுதல் ஒரு நோக்கமல்ல.
E – அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் ஒழுங்கமைப்புகள்
F – ஆளுபவர்களுக்கும் ஆளப்படுவோருக்குமிடையில் நேரடித் தொடர்பினை ஏற்படுத்துகிறது.
G – பொதுக் கொள்கை மீது செல்வாக்கு செலுத்த முயலும் குழுக்கள்.
H – தலைவர்களை ஆட்சேர்த்துப் பயிற்சி வழங்கும் முகவர்களாக செயலாற்றுதல்.

அமுக்கக் குழுக்களுக்கு பயன்படுத்தக் கூடிய இயல்புகளைத் தரும் சேர்மானத்தை அடையாளம் காண்க.

Review Topic
QID: 17535
Hide Comments(0)

Leave a Reply

அமுக்க குழுக்களுக்குப் பொருத்தமான சரியான சேர்மானத்தை தெரிவு செய்க.
A – அவை தேர்தல் அல்லது வன்முறையின் ஊடாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றன.
B – அவை தனிப்பட்ட நலன்களைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் தாபிக்கப்பட்டுள்ளன.
C – அவை கொள்கை வகுப்போருக்குத் தகவல்களை வழங்கும் மூலாதாரமாகச் செயற்படுகின்றன.
D – அவை அரசாங்கச் செயற்பாடுகள் பற்றி மக்களைக் கரிசனையுடன் இருக்கச் செய்யும் ஊடகமாகச் செயற்படுகின்றன.

Review Topic
QID: 17548
Hide Comments(0)

Leave a Reply

அமுக்கக் குழுக்களை விளக்குவதற்குப் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 17876
Hide Comments(0)

Leave a Reply

அமுக்கக் குழுக்களுக்குப் பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அவை அபிப்பிராயத்தை உருவாக்கும் முகவர்களாகும்.
B – அவை பொதுக் கொள்கைளை உருவாக்குவதற்கு அரசாங்கத்துக்குத் தகவல்களை வழங்குகின்றன.
C – அவை தனிப்பட்ட நலன்களை மேம்படுத்துவதற்கே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
D – அவை அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்காகக் கொண்ட அரசியல் ஒழுங்கமைப்புகளாகும்.

Review Topic
QID: 17884
Hide Comments(0)

Leave a Reply

அமுக்கக் குழுக்களுக்குப் பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அவை தனிப்பட்ட நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
B – அவை தமது நலன்களுக்காக அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
C – அவை அதிகார அரசியலில் ஈடுபடுகின்றன.
D – அவை பொதுக்கொள்கை உருவாக்கத்துக்கான தகவல்களை அரசாங்கத்துக்கு வழங்குகின்றன.

Review Topic
QID: 17926
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – பொது நோக்கத்திற்காக மக்களால் தாபிக்கப்பட்ட அமைப்புக்களே அமுக்கக் குழுக்களாகும்.
கூற்று II – அமுக்கக் குழுக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயல்கின்றன.

Review Topic
QID: 17990
Hide Comments(0)

Leave a Reply

அமுக்கக் குழுக்கள்
A – தனிப்பட்ட நலன்களை மேம்படுத்துவதனை இலக்காகக் கொள்கின்றன.
B – அதிகாரப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
C – பொதுப் பிரச்சினைகள் மீது மக்களின் இதயத் துடிப்பு பற்றி விழிப்புடன் இருக்கின்றன.
D – அரசக் கொள்கை உருவாக்கத்துக்கான தகவல்களை வழங்குகின்றன.

Review Topic
QID: 18019
Hide Comments(0)

Leave a Reply

பொதுசன அபிப்பிராயத்துக்குப் பொருந்தும் சேர்மானத்தை இனங்காண்க.
A – அதற்கு இறந்த காலமும் எதிர்காலமும் இல்லை
B – அனைத்தாண்மை அரசாங்கங்களின் கீழ் அவை முழுமையாகச் சுருங்கி விடுகின்றன.
C – அது பொதுமக்கள் மனதினைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பயன்படுத்தும் ஒரு கருவியாகும்.
D – ஒரு பொதுப் பிரச்சினை பற்றிய மக்களின் மனப்பாங்கினைச் சுட்டிக் காட்டுகிறது.

Review Topic
QID: 18026
Hide Comments(0)

Leave a Reply

அமுக்கக் குழுக்கள் – பிழையான கூற்று

Review Topic
QID: 18044
Hide Comments(0)

Leave a Reply

சிவில் சமூகம் என்பது- பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 18049
Hide Comments(0)

Leave a Reply

சிவில் சமூகம் என்பது :
A – அரசின் ஆணையதிகாரத்திலிருந்து மக்களின் சிவில் அதிகாரத்தை வேறுபடுத்திக் காட்டப் பயன்படுத்தப்படும் ஓர் எண்ணக்கருவாகும்.
B – சமூகத்தின் சுயாதீன குழுக்களையும் தனியார் சங்கங்களையும் கொண்டு ஒழுங்கமைந்துள்ளது.
C – அனைத்தாண்மை ஆட்சி முறைகளில் கூட பூரண செயற்பாட்டுச் சுதந்திரத்தை அனுபவிக்கின்றது.
D – சமூகத்தின் ‘சிறிய படையணிகளின்” திரட்சி என அழைக்கப்படுகின்றது.
E – தாராள ஜனநாயகத்தின் ஓர் அத்தியாவசியப் பண்பாகக் கருதப்படுகின்றது

Review Topic
QID: 18053
Hide Comments(0)

Leave a Reply

அமுக்கக் குழுக்கள் என்பவை :- பிழையான கூற்று

Review Topic
QID: 18057

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank