Please Login to view full dashboard.

அரசியல் விஞ்ஞானத்திற்கான வரைவிலக்கணங்கள்

Author : Admin

1  
Topic updated on 02/15/2019 10:33am
  • அரசியல் ஒரு சமூக விஞ்ஞானம் என்பதாலும் இயங்குதன்மை பொருந்திய பாடம் என்பதாலும் அதற்கு பொதுவான வரைவிலக்கணம் ஒன்றை முன்வைப்பது கடினமாகும்.
  • அதனால் அரசறிவியல் தோற்றம் பெற்றதாக கருதப்படுகின்ற கிரேக்க காலப்பகுதியில் இருந்து இன்று வரை அரசியலுக்கு அறிஞர்களால் முன்வைக்கப்பட்ட வரைவிலக்கணங்களை விளங்கிக் கொள்வதன் மூலம் அரசியலுக்கான பொது வரைவிலக்கணம் ஒன்றை முன்வைக்கலாம்.
  • கிரேக்க தத்துவ மேதைகளான அரிஸ்டோட்டில், பிளேட்டோ, சோக்கிரட்டீஸ் ஆகியோர் அரசியலை “அரசு பற்றிய அறிவு” என்றும் “ஆட்சி பற்றிய கல்வி” என்றும் வரைவிலக்கணப்படுத்தினர்.
  • சிலி, கார்ணர், பிராங்குட்நொவ், கெட்டல், போலேக், ஸ்ரோங் போன்றவர்கள் அரசு, அதன் தன்மை, பல்வேறு அரசுமுறைகள் ,அரசாங்கம், அரசாங்கத்திற்கும் மக்களுக்குமிடையிலான தொடர்பு,அரசுகளுக்கிடையிலான தொடர்பு என்பன பற்றி ஆராயும் இயலே அரசறிவியல் என்று வரைவிலக்கணப்படுத்தினர்.
  • 15ம் நூற்றாண்டு காலப்பகுதியில் பகுத்தறிவு வாதமானது வளர்ச்சியடைந்தபோது அதனை மையப்படுத்தி மாக்கியவல்லி எனும் அறிஞர் “அதிகாரம் பற்றிய கல்வியே அரசியல்” என வரைவிலக்கணப்படுத்தினர்.
  • இக்கருத்தினை வலியுறுத்தியவர்களுள் லாஸ்வெல், மெறியம், மெக்ஸ்வெபர், பேட்டன்ரசல், வட்கின்ஸ், மோகன்நோ, றோபின் போன்றோர் முக்கியமானவர்கள்.
  • இதனைத்தவிர சட்டரீதியான அரசாங்கமொன்றினுடைய நிறுவனங்களின் அமைப்பு, அவற்றின் தீர்மானமெடுப்பு செயன்முறை, அங்கு மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கைகள், அவற்றின் அமுலாக்கம் என்பவற்றுடன் தொடர்புபட்ட மனிதநடத்தை பற்றிய ஆய்வே அரசறிவியல் எனப்படுகிறது.
  • 18ம் 19ம் நூற்றாண்டில் “பொதுக்கொள்கைகளை வகுத்தலும் அதனை நடைமுறைப்படுத்தலும் “ பற்றியதுமான ஒரு பாடநெறியே அரசியல் என வரைவிலக்கணப்பட்டது.
  • 20ம் நூற்றாண்டில் அரசியலை ஆய்வு செய்த அறிஞர்கள் “மோதல் முகாமைத்துவம் மோதல் தீர்வு பற்றிய பாடமே” அரசியலென வரைவிலக்கணப்படுத்தினர்.
  • இவ்வாறு அரசியலின் ஆய்வு விடயங்கள் மாற்றமடைய அவ்வரைவிலக்கணங்களும் மாற்றமடைந்தன. இதனால் பேராசிரியர் கார்ணர் என்பவர் “அரசிலே தோன்றி அரசிலே வளர்ந்து அரசோடு முடிகின்ற பாடமே அரசியல்” என விளக்கினார்.
  • இவருடைய விளக்கமே அரசியலுக்கான பொது வரைவிலக்கணமாக கருதப்படுகிறது.
RATE CONTENT 3, 1
QBANK (1 QUESTIONS)

அரசியல் விஞ்ஞானத்தின் இயல்பினை வரைவிலக்கணப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான சேர்மானமான
கூற்றுக்களைத் தெரிவு செய்க.
A – அது மனிதர்களின் அரசியல் நடத்தையினைக் கற்கிறது.
B – அரசுக்கும் பிரசைகளுக்குமிடையிலான தொடர்புகளை அது கற்கிறது.
C – அது அதிகாரம் பற்றிய கற்கையாகும்.
D – அது அரசியல் தலைவர்களின் வாழ்க்கை மாதிரிகளைக் கற்கிறது.

Review Topic
QID: 15666
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் விஞ்ஞானத்தின் இயல்பினை வரைவிலக்கணப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான சேர்மானமான
கூற்றுக்களைத் தெரிவு செய்க.
A – அது மனிதர்களின் அரசியல் நடத்தையினைக் கற்கிறது.
B – அரசுக்கும் பிரசைகளுக்குமிடையிலான தொடர்புகளை அது கற்கிறது.
C – அது அதிகாரம் பற்றிய கற்கையாகும்.
D – அது அரசியல் தலைவர்களின் வாழ்க்கை மாதிரிகளைக் கற்கிறது.

Review Topic
QID: 15666
Comments Hide Comments(1)
Karish Kanth
Karish Kanth commented at 15:30 pm on 12/04/2019
Varalaru patam add Panna matdingkala
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank