Please Login to view full dashboard.

அரசின் தோற்றம் பற்றிய கோட்பாடுகள்

Author : Admin

60  
Topic updated on 02/15/2019 11:36am

தெய்வீக உரிமைக்கோட்பாடு: Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • “அரசு என்ற தாபனம் கடவுளால் உருவாக்கப்பட்டது” என்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்டே இக்கோட்பாடு முன்வைக்கப்பட்டது.
  • சமூகத்தில் மதம் முக்கியம் பெற்றிருந்த காலத்தில் மதத்துடன் அரசியலை இணைத்து அரசின் தோற்றம், அதன்இயல்பு என்பன குறித்து விளக்கம் அளித்த கோட்பாடாக தெய்வீக வழியுரிமை கோட்பாடு விளங்குகின்றது.
  • கி.பி 5ம் நூற்றாண்டு முதல் கி.பி 15ம் நூற்றாண்டு வரை பெரும்பாலும் செல்வாக்குச் செலுத்திய ஒரு கோட்பாடாகும்.
  • அரசர்கள் அல்லது ஆட்சியாளர்கள் இறைவனின் பிரதிநிதிகளென்றும் இறைவனிடமிருந்து அதிகாரங்களைப் பெற்றே ஆட்சியாளர்கள் சட்டங்களை உருவாக்குகின்றார்கள் என்றும் கூறுகின்றது.
  • விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்கள் அவருக்கு கீழ்படிய வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது.
  • இக்கோட்பாட்டை வலியுறுத்தியோர் :
  1. ஸ்வருட் மன்னன்
  2. 14ம் லூயி
  3. 1ம் ஜேம்ஸ் மன்னன்
  4. சேர் றொபேட் பில்மர்
  5.  றிச்சர்ட் மொண்டேகு
  6.  ஜோ கொவேல்
  7. றொகர் மன்வறிங்

வீழ்ச்சி

  • மதத்தின் தலையீட்டினை அரசியலில் கண்டிக்கும் மாக்கியவல்லியின் சிந்தனைகள் வலுப்பெறத் தொடங்கியதை தொடர்ந்து தனது செல்வாக்கினை இழக்கலாயிற்று.
  • சமுதாய ஒப்பந்தத்தின் கோட்பாடு, மக்களாட்சியை வலியுறுத்தும் பிரான்ஸியப் புரட்சி என்பன இக்கோட்பாட்டை வலுவிழக்கச் செய்தன.

நன்மைகள்

  • ஆட்சியினை ஒழுங்காக நடாத்துவதற்கு மக்களின் கீழ்ப்படிவு அவசியமானதொன்றாகும். இக்கோட்பாடு நம்பிக்கையின் அடிப்படையிலான மக்களின் கீழ்ப்படிவினை பெறுவதற்கு உதவியது.
  • சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு உதவியது.
  • கோட்பாடு தொடங்கிய காலகட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவியது.
  • சமுதாயத்தில் ஐக்கியத்தை வலியுறுத்த உதவியிருந்தது.

குறைபாடுகள்

  • மக்களின் சம்மதத்தின் அடிப்படையிலேயே அரசு தோற்றம் பெற்றது என்ற மக்களாட்சி கோட்பாட்டிற்கு இக்கோட்பாடு தடையாக உள்ளது.
  • இக்கோட்பாடு மக்களின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலுவதாக அமைகின்றது.
  • இக்கோட்பாட்டிற்கு வரலாற்று ரீதியான ஆதாரங்கள் எதுவும் கிடையாது.

 தாய்வழிக்கோட்பாடு

  • ஆதிகால சமுதாய அமைப்பில் பெண்கள் பெற்றிருந்த மேலாண்மையும் அதிகாரத்தினாலேயேயும் அரசு என்ற அமைப்பு தோற்றம் பெற்றது.
  • அக்கோட்பாட்டை முன்வைத்தவர்கள்:
  1. மக்லெக் (பூர்வீக சமுதாயம் என்ற நூல் மூலம்)
  2. மேர்கன் (புராதன வரலாற்று கல்வி என்ற நூல்மூலம் )
  3. ஜெங்ஸ் ( அரசியல் வரலாறு என்ற நூல் மூலம்)
  • இக்கோட்பாடானது அவுஸ்திரேலியாவில் மட்டுமின்றி வடஅமெரிக்கா, சுமாத்ரா போன்ற நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது.
  • இக்கோட்பாட்டிற்கு தக்க வரலாற்று ஆதாரங்கள் இல்லை.

தந்தைவழிக் கோட்பாடு

  • இக்கோட்பாட்டு ஆரம்பகால சமுதாய அமைப்பில் ஆண்கள் பெற்றிருந்த மேலாண்மையின் அடிப்படையில் தோற்றம் பெற்ற அமைப்பு அரசு என்பதை வலியுறுத்துகின்றது.
  • இக்கோட்பாடு தொடர்பாக சேர் ஹென்றி மெயின் தான் எழுதிய புராதன சட்டம், ஆரம்பகால வரலாற்று நிறுவனங்கள் போன்ற நூல்களில் கருத்துக்களை முன்வைக்கிறார்.
  • புராதன ஜேர்மனி, இந்துகலாசார சட்டங்கள், வாழ்க்கைமுறை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தமது கோட்பாட்டை முன்வைத்தார்.
  • இதனடிப்படையில் ஆரம்பகால சமுதாய அமைப்பில் தலைமைத்துவம், அதிகாரம் என்பன ஆண்களிடமே இருந்ததாகக் கூறப்படுகிறது.
  • இக்கோட்பாட்டிற்கு தக்க வரலாற்று ஆதாரங்கள் இல்லை.

சமூக ஒப்பந்தக் கோட்பாடு  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • மக்கள் சம்மதத்தின் அடிப்படையில் அரசு தோற்றுவிக்கப்பட்டது என்பதை விளக்க முற்படும் கோட்பாடே சமூக ஒப்பந்தக் கோட்பாடாகும்.
  • மன்னனுக்காகவே மக்கள் என்ற தெய்வீக உரிமை கோட்பாட்டின் குறைபாடுகள் காரணமாகவே இக்கோட்பாடு தோற்றம் பெற்றது.
  • அரசு அற்றிருந்த ஓர் காலத்தில் மக்களினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஒப்பந்தத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்டது என இக்கோட்பாடு வலியுறுத்துகின்றது.
  • பிளேட்டோ தான் எழுதிய ‘கிரிட்டோ’ ‘குடியரசு’ ஆகிய நூல்களில் இவ்வொப்பந்தம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
  • கௌடில்யர் அர்த்தசாஸ்திரம் எனும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்.
  • இக்கோட்பாட்டை அபிவிருத்தி செய்தவர்கள்:
  1. அல்தூசியஸ்
  2. குறோசியஸ்
  3. சாமுவல் புவண்டோவ்
  • முழுமையான பரிணாமத்தை கொடுத்தவர்கள்
  1.  ஜோன்லொக்
  2. தோமஸ் ஹொப்ஸ்
  3. ஜீன் ஜக்கியூஸ் ரூஸோ
  4. தோமஸ் ஹொப்ஸ்
  • இவர் இங்கிலாந்தில் உள்நாட்டு போர் ஏற்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். போரினால் ஏற்பட்ட குழப்பங்களிலிருந்து விடுதலை கிடைப்பதற்கு ஒரு அதிகாரம் வாய்ந்த மன்னன் இருத்தல் வேண்டும் என்ற வகையில் தன்னுடைய கருத்துக்களைக் குறிப்பிட்டிருந்தார்.
  • 1651 ல் தான் எழுதிய லெவியதான் என்ற நூலினூடாக தன்னுடைய கருத்தை முன்வைத்தார்.

ஹொப்ஸின் இயற்கை நிலை சமுதாயம் எவ்வாறிருந்தது?

  • இயற்கை நிலையில் வாழ்ந்த மக்கள் வெறும் உணர்ச்சிகளால் உந்தப்பட்டவர்களாக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
  • இக்காலத்தில் மனிதர் காட்டுமிரண்டிகளாகவும், தன்னலவாதிகளாகவும், நல்லது கெட்டது என்பதை ஆராய தகைமை அற்றவர்களாகவும் வாழ்ந்தனர்.
  • இதனால் அவனது வாழ்க்கை குறுகியதாகவும் மரணபயம் நிறைந்ததாகவும் தனிமையானதாகவும் மொத்தத்தில் அபாயகரமானதாகவும் காணப்பட்டது.

ஒப்பந்தம் எவருக்கிடையில் நடைபெற்றது?

  • ஒப்பந்தம் மக்களுக்கிடையே தான் நடைபெறுகிறது மக்கள் தங்களுக்கிடையே ஒப்பந்தம் செய்து தங்கள் உரிமைகள் அனைத்தினையும் தனி மனிதனிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த தனிமனிதனே அரசனாவான்.

ஒப்பந்த உள்ளடக்கம் கட்டுப்பாடு

  • ஒப்பந்த கட்டுப்பாடுகள் எதுவும் தனிமனிதனுக்கு கிடையாது. இந்த தனிமனிதனே இறைமையாளன் ஆவான். அவனுடைய ஆணைகளே சட்டங்களாகும். மக்கள் மன்னனுக்கெதிராக கிளர்ச்சி செய்யவும் கூடாது. அவ்வாறு கிளர்ச்சி செய்தால் ஒப்பந்தம் முறிந்துவிடும். ஒப்பந்தம் முறிந்தால் மக்கள் மீண்டும் கொடூரமான இயற்கை நிலைக்கு செல்ல வேண்டி ஏற்படும்.
  • இது வரம்பற்ற முடியாட்சியை சிபாரிசு செய்கிறது.

ஜோன்லொக்

  • மன்னனிடம் உள்ள அதிகாரங்களை கட்டுப்படுத்தப்பட்டு அதன் ஒரு பகுதி பிரதிநிதிகளிடம் கையளிக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கை எழுச்சியடைந்த காலத்தில் வாழ்ந்தவராவார்.
  • 1960ல் தான் எழுதிய “சிவில் அரசாங்கத்தினுடைய இரண்டு உடன்படிக்கைகள்” என்ற நூலினூடாகத் தனது கருத்தினை முன்வைத்தார்.
  • மன்னன் மக்களுக்குத்தான் எனவே மக்களுக்குரிய விருப்பத்துக்கு எதிராக அவனது அதிகாரம் இருக்கக்கூடாது என்பதே இவரது கருத்தாகும்.

ஜோன்லொக்கின் இயற்கை நிலை சமுதாயம் எவ்வாறிருந்தது?

  • மனிதன் அமைதியும் நல்லொழுக்கமும் உடையவனாகவும் பொதுநலனை நோக்கமாகக் கொண்டவனாகவும் வாழ்ந்தான்.

ஒப்பந்தம் எவருக்கிடையில் நடைபெற்றது?

  • லொக்கின் கருத்துப்படி இரு ஒப்பந்தங்கள் நடைபெற்றது.
  1. சமூக ஒப்பந்தம் – மக்களுக்கிடையே செய்து கொண்ட ஒப்பந்தம்
  2. அரசாங்க ஒப்பந்தம் – அரசனுடன் மக்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் மக்கள் தங்களது உயிர், உடைமை, உரிமைகளைப் பாதுகாக்க ஓர் தலைவனைத் தெரிந்தெடுத்து அவனுடன் மேற்கொண்ட ஒப்பந்தமே அரசாங்க ஒப்பந்தம்.

ஒப்பந்த உள்ளடக்கமும் கட்டுபாடும்?

  • மக்கள் தங்களது எல்லா உரிமைகளையும் இழக்கவில்லை. அரசன் தவறான ஆட்சி செய்வானாயின் அவனை நீக்கி இன்னோர் அரசினைத் தெரிவு செய்கின்ற உரிமை மக்களுண்டு.
  • இறைமையின் ஒரு பகுதி மக்களிடமும் இன்னோர் பகுதி அரசனிடமும் வழங்கப்பட்டிருந்தது.
  • இது வரம்புடைய முடியாட்சியை சிபாரிசு செய்கிறது.

ரூஸோ

  • 1762ல் தான் எழுதிய ‘சமூக ஒப்பந்தம்’ என்ற நூலினூடாக தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.
  • ஐரோப்பாவில் எழுச்சியடைந்த முற்போக்கு சிந்தனைகளை உள்வாங்கி சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம் என்ற மக்களாட்சி பண்புகளின் அடிப்படையில் தனது கருத்துக்களை ரூஸோ முன்வைக்கிறார்.

ரூஸோவின் இயற்கைநிலை சமுதாயம் எவ்வாறிருந்தது?

  • இயற்கை நிலையில் வாழ்ந்த மக்கள் முழுத்தனி உரிமையில் வாழ்ந்தார்கள் என்றும் எல்லா உரிமைகளையும் அனுபவித்தார்கள். இதனால் அங்கு சமத்துவம் அதன் வழி சமாதானமும் நிலவியது.
  • பிற்பட்ட காலத்தில் சமுதாயத்தின் வளர்ச்சியினால் பொருளியல் ரீதியாக பொருட்கள், சேவைகள் என்பவற்றின் சேமிப்பு தோன்றிய போது அமைதிக்குப் பாதிப்பான நிலை தோற்றம் பெற்றது.
  • இவ்வமைதியின்மை பாதிப்பிலிருந்து தம்மைப் பாதுகாத்து கொள்ள மக்கள் தமக்கிடையே ஒப்பந்தம் செய்து அரசைத் தோற்றுவித்தனர்.

ஒப்பந்தம் எவருக்கிடையில் நடைபெற்றது?

  • ஒப்பந்தம் மக்களுக்கிடையிலேயே நடைபெற்றுள்ளது. இவ்வொப்பந்தத்தின் மூலம் மக்கள் தமது உரிமைகள், உடைமைகள், சுதந்திரம் அனைத்தினையும் பொது விருப்பு என்கின்ற அரசியற் சமூகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

ஒப்பந்த உள்ளடக்கமும் கட்டுப்பாடும்

  • தமது சொந்த விருப்பு வெறுப்பு எதுவாக இருப்பினும் அனைவரும் பொது விருப்புக்கு கட்டுப்பட வேண்டும்.
  • மக்கள் எல்லோரும் அதிகாரத்தில் பங்குபற்றி தங்களுக்கான தீர்மானங்களைத் தாங்களே எடுத்துக் கொள்கின்றனர். தீர்மானங்களை எடுக்கும் போது பெரும்பாண்மை முடிவுக்கு கட்டுப்படுவது அவர்களது கடமையாகும்.
  • இதன்மூலம் மக்காளாட்சி நிலைநிறுத்தப்படுகிறது.

சமூக ஒப்பந்தக் கொள்கையின் நன்மைகள்

  • மக்களின் சம்மதத்தின் பேரில் அரசு உருவாக்கப்பட்டது என்ற சிந்தனையை முதன்முதலாக முன்வைத்த கோட்பாடாக இது விளங்கியது.
  • மூவரும் முன்வைத்த வெவ்வேறு கருத்துக்களினால் அவர்கள் சந்தித்த வெவ்வேறு காலச் சூழ்நிலையை அறியக் கூடியதாக உள்ளது.
  • வரம்பற்றமுடியாட்சி, வரம்புடைய முடியாட்சி, மக்களாட்சி என்பவற்றின் வேறுபாடுகளை அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
  • அரசுக்கு கீழ்படிதல் என்ற உணர்வையும் இக்கொள்கை வளர்க்கின்றது.
  • மக்களின் சம்மதத்தின் அடிப்படையில் அரசு உருவாக்கப்பட்டது என்பதை மூவரும் ஏற்றுக் கொண்டமை கோட்பாட்டின் மையக்கருத்துக்கு வலிமை சேர்ப்பதாக உள்ளது.

சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் குறைபாடுகள்

  • மூவரும் காலச்சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே தமது கருத்துக்களை கூறியிருந்தனர். இதனால் அவர்கள் கூறிய காலத்துக்கு இது பொருந்துமே தவிர எக்காலத்துக்கும் பொருந்தும் எனக் கூறமுடியாது.
  • இவர்கள் கூறிய இயற்கை நிலைச் சமுதாயம் பற்றிய கருத்துக்களுக்கு சான்றாதாரங்கள் போதியளவு முன்வைக்கப்படவில்லை.
  • மூவரும் முதன்மைப்படுத்திய விடயங்களிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. உதாரணம் ஹொப்ஸ் அரசை முதன்மைப்படுத்தினார், லொக் அரசின் அதிகாரங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என முதன்மைப்படுத்தினார், ரூஸோ மக்களின் பொதுவிருப்பை முதன்மைப்படுத்தினார்.
  • பொதுவிருப்பம் என்பது எப்போதும் நியாயமானதாக இருக்கும் என கூறமுடியாது. பெரும்பான்மையோரின் விருப்பம் சிறுபான்மை குழுக்களை பாதிப்பதாகவும் அமையலாம்.

பரிணாமவளர்ச்சிக் கோட்பாடு  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • அரசு என்பது பரிணாம வளர்ச்சியின் மூலம் வரலாற்றினூடாகத் தோற்றம் பெற்ற ஒன்று எனக் கூறுகின்ற கோட்பாடே பரிணாம வளர்ச்சிக் கோட்பாடாகும்.
  • இக்கோட்பாடானது படிமுறை வளர்ச்சிக் கோட்பாடு
    மலர்ச்சிக்கோட்பாடு
    வளர்ச்சிக் கோட்பாடு
    கூர்ப்புக் கோட்பாடு
    எழுச்சிக் கோட்பாடு என பலவாறு அழைக்கப்படுகின்றது.

இக்கோட்பாட்டை முன்வைத்தவர்கள்

  1. பேராசிரியர் கார்ணர்
  2. ஜோன் மொலிக்
  • மனித சமூகம் ஒருவகை அரைகுறையான ஆரம்பகால அமைப்பாகத் தொடங்கி படிப்படியாக வளர்ந்து முழுமையான நிறுவனமாக மாறும் போது அரசு தோற்றம் என இக்கோட்பாடு கூறுகின்றது

மனிதன் →  குடும்பம் → குலஅரசு → குலமரபு →  கிராமிய அரசு → பிராந்திய அரசு → தேசிய அரசு

  • அரசின் தோற்றத்தில் இரத்த உறவு, சமயம், மொழி, சாதி, போர், பொருளாதாரம், இடப்பெயர்ச்சி, அரசியல் உணர்வு என்பன பங்குகொள்ளும் காரணிகளாகும்.

படிமுறை வளர்ச்சிக் கோட்பாடானது அரசு பற்றிய பின்வரும் விடயங்களைக் குறிப்பிடுகின்றது
• அரசு சர்வவல்லமை பொருந்திய இயல்புடையது.
• அரசு ஒரு பொதுநல ஸ்தாபனம்.
• அரசு தனது ஆள்புலத்தில் வாழுகின்ற அனைத்து மக்களின் நலனுக்காக செயற்படும் ஸ்தாபனம்.
• அரசின் பணிகள் சமூக தேவைக்கேற்ப மாற்றமுற்று செல்லும் இயல்பினை கொண்டிருக்கும்.
• அரசு நிரந்தமானது.
• சமூகம் நிலைத்திருக்கும் வரை அதற்கு சேவை செய்ய அரசும் நிலைத்திருக்கும்.

பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் நன்மைகள்

  • பகுத்தறிவு பூர்வமான கோட்பாடாகும்.
  • யதார்த்தத்தோடு இயைபுபடுகின்ற கோட்பாடாக இது உள்ளது.
  • நவீன சமூக சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடாக இது அமைந்திருக்கின்றமை.
  • கற்பனைகளுக்கு இடமளிப்பதில்லை
  • அரசின் வளர்ச்சியை அறிவதற்கு உதவுகின்றது.
  • வரலாற்று சான்றுகள், தொல்பொருட் சான்றுகள் மூலம் நிரூபிக்கப்படக்கூடிய கோட்பாடாக இது உள்ளது.

பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் குறைபாடுகள்

  • இக்கோட்பாடு தனது முடிவுகளுக்கு வரலாற்றுச் சான்றுகளில் மட்டும் தங்கியிருக்கின்றது. ஒரு ஆய்வு முடிவிற்கு வரலாற்றுச் சான்றுகள் மட்டும் போதுமெனக் கூறமுடியாது.
  • வரலாற்று தகவல்களைத் தொகுக்கும் போது வரலாற்று அணுகுமுறையில் ஏற்படும் குறைபாடுகள் இங்கு தோற்றம் பெறலாம்.
  • மக்களின் சம்மதத்தின் அடிப்படையில் அரசு தோற்றுவிக்கப்பட்டது என்ற முக்கியமான கருத்தினை இக்கோட்பாடு நிராகரிக்கின்றது.

தாராண்மைக் கோட்பாடு  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • அரசு என்பது மக்களினுடைய நலன்களை பேணுவதற்காக மக்களால் உருவாக்கப்பட்ட நிறுவனம் என்பதே அரசு பற்றிய தாராண்மைக் கோட்பாடு எனப்படும்.
  • இக்கொள்கையில் மக்களின் நலன்களைப் பேணுதல், மக்களினால் உருவாக்கப்படுதல், எனும் இரண்டு விடயங்கள் உள்ளன.
  • இக்கொள்கையினை முன்வைத்தவர்கள்
  1. ஜொன்லொக்
  2. அடம் சிமித்
  3. டேவிட் ரிக்காடோ
  4. ஜே. எஸ் மில்
  5. ஜோன் மார்சல்
  • சமுதாயத்தின் தேவை கருதி சமுதாயத்தவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய அமைப்பே அரசு என்று இக்கோட்பாடு கூறுகிறது.
  • தாராண்மைவாதக் கோட்பாடு சமுதாயத்தின் தேவைக்காகவும் சமுதாயத்தின் தேவைக்காகவும்,  சமுதாயத்தின் நன்மைக்காகவும் அரசு பணியாற்றுவதால் அதன் பணியானது காலத்திற்கு காலம் மாறுபட்டு செல்லும் போக்கினை கொண்டதாக காணப்படுகின்றது.
  1.  தலையிடா அரசு : அரசு பொருளாதார நடவடிக்கையிலிருந்து முற்றிலும் விலகியிருத்தல்.
  2. நலன்புரி அரசு : பொருளாதார விருத்தியிலும் பொருளாதார விருத்தியின் பயன்களை சமூகத்தில் மீளப்பகிர்ந்தளிப்பதலும் அரசு நேரடியாக தலையிடுதல்.
  3. குறைந்தபட்ச அரசு : சமூக விவகாரங்களில் குறைந்த முகாமைப்படுத்தலை அரசும், பொருளாதார விடயங்களை முகாமைப்படுத்தலை தனியார் துறையும் மேற்கொள்ள வேண்டும்.

தாரண்மைவாத ஜனநாயக அரசின் பிரதான இயல்புகள்

  • சமூக ஸ்தாபனங்களில் உயர்ஸ்தாபனமாக இருத்தல்.
  • சகலருக்கும் சமத்துவத்துடன் செயற்பட்டு மனித உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாத்தல்.
  • சமூகத்தின் பொது நலனை பூர்த்தி செய்தல்.
  • சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டல்.
  • பொருளாதார வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் மேற்கொள்ளுதல்.
  • தாராண்மை ஜனநாயக அரசுகள் சிறப்பாக செயற்பட அவசியமான நிபந்தனைகள்:
  • அரச நிறுவனங்களில் அமைப்பு, அதிகாரம், செயற்பாடு, என்பவை உள்ளடக்கப்பட்ட ஓர் அரசியல் யாப்பு நடைமுறையிலிருத்தல்.
  • கட்சிமுறையின் ஊடாக செயற்படும் போட்டித்தன்மை வாய்ந்த அரசியல் நடைமுறையிலிருத்தல்.
  • காலத்துக்கு காலம் தேர்தல்கள் நடைபெறுதல்.
  • சர்வஜனவாக்குரிமை நடைமுறையிலிருத்தல்.
  • சட்டவாட்சி நடைமுறையிலிருத்தல்.
  • சுதந்திரமான நீதித்துறையை நடைமுறைப்படுத்தல்.
  • சுதந்திரமான தொடர்பாடல் சாதனங்கள் நடைமுறையிலிருத்தல்.

இக்கோட்பாட்டின் நன்மைகள்:

  • தாராண்மை ஜனநாயக அரசுகள் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசுகளாக உள்ளன.
  • மக்களினது உரிமைகள், சுதந்திரங்கள் சட்டரீதியாக பாதுகாக்கப்படுகின்றன.
  • சர்வஜன வாக்குரிமை அமுலில் இருப்பதனால் சாதாரண மக்கள் அரசியல் அறிவினைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.
  • ஒழுங்கமைக்கப்பட்ட கட்சிகள் உருவாகுவதோடு அதன் செயற்பாடுகளும் தரம் வாய்ந்தவையாக விளங்க வாய்ப்பு ஏற்படுகின்றன.
  • விழிப்புணர்வு மிக்க ஊடகத்துறையை உருவாக்கமுடியும்.
  • தனிநபர்கள் சுதந்திரமான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடமுடிகிறது.

இக்கோட்பாட்டின் குறைபாடுகள்.

  • பல இனங்கள் வாழுகின்ற நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரானதாக காணப்படுகின்றது.
  • பலகட்சி அமுலில் உள்ள நாடுகளுக்கு பொருத்தமற்ற கோட்பாடு
  • அரசியல் அதிகாரம் தொடர்ந்து பொருளாதார ரீதியாக பலம் பெற்றவர்களின் கைகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புள்ளது.

மாக்ஸிஸக் கோட்பாடுPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • ஜேர்மனியைச் சேர்ந்த கார்ள்மாக்ஸ் என்பவரால் முன்வைக்கப்பட்ட கோட்பாடே அரசு பற்றிய மாக்ஸிஸக் கோட்பாடு எனப்படும்.
  • கார்ள்மாக்ஸ் அரசு என்பது மக்களிடையே ஒரு பகுதியாக இருக்கும் ஒரு வர்க்கத்தின் நலன்பேணும் அமைப்பு என்கிறார்.
  • வர்க்கங்கள் இருந்த காலமெல்லாம் அரசு இருந்தது. வர்க்கங்கள் இல்லாத காலங்களில் அரசு இருக்கவில்லை என்பதை வலியுறுத்தி அரசு என்பது வர்க்கநலன் பேணும் அமைப்பு என்ற தம் கருத்தினை நிலைத்திறுத்த முனைந்தார்.
  • கார்ள் மாக்ஸ் தான் எழுதிய “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”, “மூலதனம்” எனும் நூல்களினூடாக தனது கருத்தை முன்வைத்தார்.
  • இக்கோட்பாட்டை முன்வைத்தவர்கள்:
  1. கார்ள்மாக்ஸ்
  2. ஏங்கல்ஸ்
  3. மா – ஓ சேதுங்
  4. லெனின்
  • மாக்ஸிஸ கோட்பாடானது ‘இயற்கை பொருள்முதல் வாதம்’ , ‘வரலாற்று பொருள்முதல் வாதம்’ எனும் இரு வாதங்களை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்டது.

மாக்ஸிஸக் கோட்பாடு வலியுறுத்தும் விடயங்கள்:

  • அரசு என்பது வர்க்கக் கருவி
  • அரசு ஒரு அடக்குமுறை கருவி
  • அரசு சமூகம், பொருளாதார அடிப்படையில் வர்க்கமாக பிளவுபட்ட போது தோற்றம் பெற்றது.
  • அரசு நிரந்தரமான அமைப்பு அல்ல
  • அரசு எல்லோருடைய நலன்களுக்காகவும் சேவையாற்றும் அமைப்பு அல்ல.
  • அரசு பொருளாதார பலம் பொருந்திய வர்க்கத்தின் நலன்களுக்காக வக்காளத்து வாங்கும் கருவி

கார்ள்மாக்ஸ் சமுதாயத்தின் வரலாற்று வளர்ச்சியினைப் பின்வரும் ஆறு காலகட்டங்களாக பிரித்துள்ளார்.

  1. புராதன கம்யூனிஸ சமுதாயம்
  2. அடிமைமுறை சமுதாயம்
  3. நிலப்பிரபுத்துவ சமுதாயம்
  4. முதலாளித்துவ சமுதாயம்
  5. சோசலிஸ சமுதாயம்
  6. நவீன கம்யூனிஸ சமுதாயம்

மாக்ஸிஸ கோட்பாட்டின் நன்மைகள்

  • அரசு என்பது ஒரு வர்க்கத்தை பேணும் அமைப்பு எனக் கூறுவதன் மூலம் ஒரு மாற்றுக் கருத்தை முன்வைத்து புதிய சிந்தனைகளுக்கு வழிகோலியுள்ளது
  • முதன்முதலாக சமுதாயத்தில் உள்ள அடித்தள மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கொள்கையாக திகழ்கின்றது.
    உதாரணம் சீனா,சோவியத் யூனியன்
  • சமூகக் குடியாட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது.

மாக்ஸிஸ கோட்பாட்டின் குறைபாடுகள்

  • காலச்சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே கார்ள்மாக்ஸ் இக்கொள்கையினை முன்வைத்தார்.
  • இக்கொள்கை பொருளாதாரக் காரணிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. வரலாற்றில் செல்வாக்கு செலுத்தும் மனிதர்கள், சமூகம், மதம், புவியியல் போன்ற காரணிகளை கவனத்தில் எடுக்கவில்லை.
  • இன்றைய முதலாளித்துவம் நலன்புரி முதலாளித்துவமாக மாற்றம் அடைந்துள்ளது. இந்நிலையில் முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் புரட்சி செய்ய முன்வருவார்கள் என்பது சந்தேகமாகும்.
  • மக்கள் இருக்கின்ற வரை மக்களுக்காக பொதுத்தேவைகளுமிருக்கும். இப்பொதுத் தேவைகளை நிறைவேற்ற அரசு என்ற நிறுவனமும் எப்போதும் அவசியமாக இருக்கும். இந்நிலையில் அரசற்ற கம்யூனிஸ சமூகம் உருவாகும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
  • சோசலிஸ அரசியல் அதிகாரம் ஓரிடத்தில் குவிகின்ற நிலைமை ஏற்படுகின்றது.
  • அரசின் பணிகள் அதிகரிப்பதால் ஊழல் போன்ற தீமைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

பாஸிஸக் கோட்பாடு : Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பாஸிஸ் என்ற இலத்தீன் சொல்லானது உறுதியான குழு அல்லது கூட்டம் அல்லது கட்டு எனப் பொருள்படும்.
  • பாஸிஸம் என்பது உறுதியான கூட்டத்தினரால் முன்னெடுக்கப்படும் ஒரு ஆட்சி முறைமையாகும்.
  • அரசானது சமுதாயத்தில் காணப்படும் எல்லாஅமைப்புக்களிலும் பார்க்க உயர்ந்த அமைப்பெனக் கூறுவதே அரசு பற்றிய பாஸிஸக் கோட்பாடாகும்.
  • 20ம் நூற்றாண்டில் 1ம் உலகயுத்தத்திற்கு 2ம் உலகயுத்தத்திற்கு இடையில் ஆட்சிசெய்த இத்தாலிய சர்வதிகாரி முசோலினியினாலும் ஜேர்மனிய சர்வதிகாரி ஹிட்லரினாலும் அறிமுகப்படுத்தப்பட்ட கோட்பாடாகும்.
  • முதலாம் உலக யுத்தத்தில் வெற்றிபெற்ற நேசநாடுகளுக்கும் தோல்வியுற்ற இத்தாலி, ஜேர்மனி என்பவற்றுக்கும் இடையே கைச்சாத்திட்ட “வேர்சேல்ஸ் உடன்படிக்கை” பாரிஸ் சமாதான உடன்படிக்கை என்பவையே பாஸிஸக் கோட்பாட்டின் தோற்றத்திற்கு காரணமாக உள்ளது.
  •  இக்கோட்பாட்டை முன்வைத்தவர்கள்
  1. றொக்கோ (பாசிஸ அரசியல் கோட்பாடுகள் எனும் நூல் மூலம்)
  2. ஜென்ரில் (பாசிஸத்தின் தத்துவ அடிப்படைகள் எனும் நூல் மூலம்)
  3. முசோலினி (என்சைக்கிளோபீடியா எனும் நூல் மூலம்)
  4. கோரிங்
  5. ரோசன் பேர்க்
  6. ஹிட்லர் (எனது போராட்டம் எனும் நூல் மூலம்)

பாஸிஸத்தின் பண்புகள்

  • அரசை மேம்படுத்தல்
  • ஜனநாயத்தை எதிர்த்தல்
  • கடுமையான நாட்டுணர்ச்சி
  • நாட்டின் இனவாதத்தினை பின்பற்றுதல்
  • யுத்தத்தில் நாட்டங் கொள்ளல்
  • நாடுகளை ஆக்கிரமிக்கும் தன்மையைக் கொண்டிருக்கும்
  • சந்தர்ப்பவாதம்

பாஸிஸத்தின் நன்மைகள்

  • நாட்டில் பலமான ஆட்சியினை உருவாக்குவதற்கு பாஸிஸம் வழிகோலியது.
  • ஒரு கட்டுக்கோப்பான அரசியல் சமுதாயத்தை உருவாக்குவதற்கு பாஸிஸ ஆட்சி வழிகோலியது.
  • இத்தாலியும் ஜேர்மனியும் மீண்டும் பொருளாதார வளமிக்க தேசமாக மாறுவதற்கு பாஸிஸ ஆட்சி வழிகோலியது.
  • மக்கள் அனைவரையும் நாட்டுப் பற்றாளர்களாக்க முடிந்தது.
  • இவ்விரு நாடுகளும் இராவணுவ ரீதியிலே பலமிக்க தேசமாக எழுச்சி பெறுவதற்கு இம்முறை வழிகோலியது.

பாஸிஸத்தின் குறைபாடுகள்

  • பாஸிஸம் மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட எச்செயலையும் தனது நலனுக்காக மேற்கொள்வதற்கு தூண்டுகின்ற கொள்கையாக விளங்குகிறது.
  • இக்கொள்கை தேசிய வாதத்தினை நாடுகளை ஆக்கிரமிக்கும் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் நிலையை தோற்றுவிக்கிறது.
  • பாஸிஸம் யுத்தத்தை முழுமையாக ஆதரித்து நிற்பதனால் அமைதி, சமாதானம் என்ற மனித வாழ்வின் மேன்மையான அம்சங்களை புறக்கணிக்கின்றன.
  • மக்கள் மாற்று அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கப்படட்டிருக்கவில்லை.
  • அரசிற்காக மக்கள் தியாகிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
  • போட்டி அரசியல் கட்சி செயற்பாடுகளுக்கு வாய்ப்பளிப்பதில்லை
RATE CONTENT 2.66666666667, 3
QBANK (60 QUESTIONS)

சோசலிஸத்துக்குப் பொருத்தமான சேர்மானத்தை இனங்காண்க.
A – சோசலிஸம் தனிப்பட்டவர்களை விட சமூகத்தை முக்கியத்துவப்படுத்துகிறது.
B – சோசலிஸ அரசு பொருளாதாரத்தில் தலையிடுவதில்லை.
C – சோசலிஸத்தின் கீழ் தனியார் முயற்சி அதைரியப்படுத்தப்படுகிறது.
D – சோசலிஸம் சமத்துவத்திற்கு முன்னுரிமை வழங்குகிறது.

Review Topic
QID: 16573
Hide Comments(0)

Leave a Reply

அரசு பற்றிய சோசலிசக் கோட்பாட்டுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அரசு இல்லாமலும் சமூகங்கள் இருக்கலாம்.
B – அரசு நித்தியமாக நிலைத்திருக்கும்.
C – அரசு உற்பத்திக் காரணிகளின் சொந்தக்காரர்களின் கருவியாகும்.
D – அரசு வர்க்க முரண்பாடுகள் இருக்கும் வரை நிலவும்.

Review Topic
QID: 16608
Hide Comments(0)

Leave a Reply

அரசு பற்றிய தாராண்மைக் கோட்பாட்டுக்குப் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 16624
Hide Comments(0)

Leave a Reply

அரசு பற்றிய தாராளக் கருத்துக்குப் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 16649
Hide Comments(0)

Leave a Reply

அரசு பற்றிய பாசிசக் கோட்பாட்டுக்குப் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 16654
Hide Comments(0)

Leave a Reply

தாராளக் கோட்பாட்டின்படி அரசு என்பது
A – ஓர் சமூகத் தாபனமாகும்.
B – கூட்டு விருப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
C – ஏனைய சமூகத் தாபனங்களை விடச் சிறப்புரிமைகளை அனுபவிப்பதில்லை.
C – சகலருக்கும் சமமான கவனிப்பை உறுதிப்படுத்துகிறது.

Review Topic
QID: 16663
Hide Comments(0)

Leave a Reply

பாசிசக் கோட்பாட்டின் படி அரசு என்பது
A – ஏனைய மனிதத் தாபனங்கள் அனைத்தையும் விட மேம்பட்டதாகும்.
B – தனிப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தின் மீது தனி முதன்மை அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
C – சுய விருப்பையும் நோக்கங்களின் ஒரு தொகுதியையும் கொண்டுள்ளது.
D – பொதுமக்களின் விருப்பின் படி பணியாற்றுகிறது.

Review Topic
QID: 16666
Hide Comments(0)

Leave a Reply

ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் படி
A – மனிதர் சிவில் சமூகத்துக்கு நுழைவதற்கு முன்னர் இயற்கை நிலையில் வாழ்ந்தனர்.
B – இயற்கை நிலை வாழ்க்கையானது மகிழ்ச்சியாகவும் திருப்திகரமாகவுமிருந்தது.
C – தனியார் சொத்துரிமையின் வருகையோடு இயற்கை நிலை குழப்பத்துக்குள்ளாகியது.
D – மரண அச்சத்தின் காரணமாக மனிதர் சிவில் சமூகத்தினுள் நுழையத் தீர்மானித்தனர்.

Review Topic
QID: 16669
Hide Comments(0)

Leave a Reply

அரசு பற்றி தெய்வீக உரிமைக் கோட்பாட்டின் படி
A – அரசு கடவுளின் நிர்மாணமாகும்.
B – ஆட்சியாளன் கடவுளால் நியமிக்கப்படுபவனாவான்.
C – ஆட்சியாளன் கடவுளுக்குப் பொறுப்புக் கூறத் தேவையில்லை.
D – ஆட்சியாளன் கடவுளின் பிரதிநிதியாவான்.

Review Topic
QID: 16685
Hide Comments(0)

Leave a Reply

அரசின் தோற்றம் பற்றிய பலவந்தக் கோட்பாடு வலியுறுத்துவது
A – அரசின் தளம் அதிகாரமாகும் என்று
B – மெலியவன் வலியவனுக்குக் கீழ்ப்படிந்தமையால் அரசு உருவாகியது என்று
C – மெலியவர்களையும் வலியவர்களையும் பாதுகாப்பதற்கு அரசு கடமைப்பட்டுள்ளது என்று
D – வலிமையே சரியானது என்று

Review Topic
QID: 16687
Hide Comments(0)

Leave a Reply

சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் படி
A – இயற்கை நிலையே மனிதனின் ஆரம்பச் சந்தர்ப்பமாகும்.
B – இயற்கை நிலை முறையாகத் தாபிக்கப்பட்ட சட்ட முறையால் ஆளப்பட்டது.
C – மனிதர்களின் சமூக ஒப்பந்தத்தினூடாக சிவில் சமூகத்தில் நுழைந்து அரசைத் தாபித்தனர்.
D – மக்கள் சம்மதமே அரசின் அடித்தளமாகும்.

Review Topic
QID: 16688
Hide Comments(0)

Leave a Reply

அரசு பற்றிய பாசிசக் கோட்பாடு
A – அரசின் அடித்தளம் பொது விருப்பமாகும் என்று ஏற்றுக்கொள்கிறது.
B – சமூகப் பன்மைத் தன்மையை நிராகரிக்கின்றது.
C – போட்டிக் கட்சி முறைமையை அனுமதிப்பதில்லை.
D – அரசு மனிதனுக்கும் சமூகத்துக்கும் மேம்பட்டது என்று வலியுறுத்துகிறது.

Review Topic
QID: 16693
Hide Comments(0)

Leave a Reply

அரசு பற்றி தெய்வீக உரிமைக் கோட்பாட்டின் படி – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – கடவுள் அரசைப் படைத்துள்ளார்.
B – கடவுள் மக்கள் விருப்புடன் ஆட்சியாளனை நியமித்துள்ளார்.
C – கடவுள் அநீதியான ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் உரிமையை வழங்கியுள்ளார்.
D – கடவுள் நல்லாட்சி தொடர்பாக மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

Review Topic
QID: 16706
Hide Comments(0)

Leave a Reply

அரசு பற்றிய சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் படி – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – அரசு முற்பட்ட – சிவில் சமூகத்தில் கூட நிலவியது.
B – அரசு சமூக ஒப்பந்தத்தின் இறுதி விளைவாகும்.
C – அரசு சிவில் சமூகத்துக்கு இரண்டாம் பட்சமானதாகும்.
D – அரசு சிவில் சமூகத்தில் இல்லாதொழியும்.

Review Topic
QID: 16707
Hide Comments(0)

Leave a Reply

அரசு பற்றிய படிமுறை வளர்ச்சிக் கோட்பாட்டின் படி – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – அரசு போராட்டத்தின் விளைவினதாகும்.
B – அரசு உள்ளோர் – இல்லாதோர் என்ற வர்க்கங்களுக்கிடையிலான மோதலின் விளைவினதாகும்.
C – அரசு கடவுள் சித்தத்தின் விளைவினதாகும்.
D – அரசு சமூகப் படிமுறை வளர்ச்சிச் செயன்முறையின் விளைவினதாகும்.

Review Topic
QID: 16708
Hide Comments(0)

Leave a Reply

அரசு பற்றிய தாராளவாதக் கோட்பாட்டின் படி – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – அரசு உலக ஆன்மாவின் உருவாக்கமாகும்.
B – அரசு சமூகத்தின் சொத்துடைய வர்க்கத்தின் உருவாக்கமாகும்.
C – அரசு மனிதரின் சமூக நடத்தையின் இயற்கையான விளைவினதாகும்.
D – அரசு மக்களால் செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட ஒழுங்கமைப்பாகும்.

Review Topic
QID: 16709
Hide Comments(0)

Leave a Reply

அரசு பற்றிய சோசலிசக் கோட்பாட்டின் படி – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – அரசு வர்க்கப் பகைமையின் விளைவினதாகும்.
B – அரசு சமூகத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதற்கு அவசியமானதாகும்.
C – அரசு பாட்டாளி வர்க்கத்தின் நல்வாழ்வுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
D – அரசு பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் பட்டொழியும்.

Review Topic
QID: 16710
Hide Comments(1)
Mohammadu Muneer
Mohammadu Muneer
17க்கு சரியான விடை எது

Leave a Reply

அரசு பற்றிய பாசிசக் கோட்பாட்டின் படி – பொருத்தமற்ற கூற்றுகளின் தொகுதி
A – அரசு மனிதர்களுக்கும் சமூகத்துக்கும் மேம்பட்டதாகும்.
B – அரசு தனிமனிதர்களுக்கு மேம்பட்டதாயினும் சமூகத்துக்குக் கீழ்ப்பட்டதாகும்.
C – அரசு தனிமனிதர்களுக்கும் சமூகத்துக்கும் கீழ்ப்பட்டதாகும்.
D – அரசு தனிமனிதர்களுக்கும் சமூகத்துக்கும் மேம்பட்டதாயினும் கோயிலுக்குக் கீழ்ப்பட்டதாகும்.

Review Topic
QID: 16711
Hide Comments(0)

Leave a Reply

அரசு பற்றி தெய்வீக உரிமைக் கோட்பாட்டின் படி
A – ஆட்சியாளர் கடவுளுக்கு மட்டுமே பொறுப்புக் கூறுவர்.
B – ஒரு துஷ்ட மன்னன் கடவுளால் மட்டுமே தண்டிக்கப்படுவான்
C – ஆணையதிகாரம் கடவுளின் உருவாக்கமாகும்.
D – அரச இயற்கை நிலையில் தோன்றியதாகும்.

Review Topic
QID: 16717
Hide Comments(0)

Leave a Reply

அரசு பற்றிய சமூக ஒப்பந்தக் கோட்பாட்டின் படி
A – இயற்கை நிலையே மனித இனத்தின் ஆரம்பக் கட்டமாகும்.
B – இயற்கை நிலையானது கடவுளால் ஆளப்பட்டது.
C – இயற்கை நிலையானது மக்களுக்கிடையிலான ஒரு பொருத்தனையின் மூலம் முடிவு கட்டப்பட்டது.
D – அரசியல் ஆணையதிகாரமானது மக்கள் சம்மதத்தின் அடிப்படையிலமைந்ததாகும்.

Review Topic
QID: 16718
Hide Comments(0)

Leave a Reply

அரசு பற்றிய படிமுறை வளர்ச்சிக் கோட்பாடு
A – வரலாற்றுக் கோட்பாடு என்றும் நாமமிடப்படுகிறது.
B – மானிடவியலையும் வரலாற்றியலையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.
C – அரசு உருவாக்கப்பட்டதன்றி வளர்ச்சியடைந்ததாகும் என வலியுறுத்துகிறது.
D – அரசு பிதாவழிக் குடும்ப முறையின் விரிவாக்கமே என இனங்காண்கின்றது.

Review Topic
QID: 16719
Hide Comments(0)

Leave a Reply

அரசு பற்றிய பாசிசக் கோட்பாடு
A -சட்டவாட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
B – தேசங்களின் இன மேன்மையை ஆதரிக்கின்றது.
C – தலைவருக்கு மேன்மை ஸ்தானத்தை வழங்குகின்றது.
D – தனியார் சொத்துரிமையை ஏற்றுக்கொள்கிறது.

Review Topic
QID: 16721
Hide Comments(0)

Leave a Reply

கால்மாக்ஸ் கருதிய கொமிய10னிச சமூகம்:
A – புரட்சிகர பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழான மாற்றமுறும் சோஷலிசக் கட்டத்துக்குப் பின்னர் தாபிக்கப்படும்.
B – சந்தைகளை இலக்காகக் கொண்டு பொருளுற்பத்தியை மேற்கொள்ளும்.
C – பொது உரித்தினை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
D – வர்க்கமற்ற ஒரு சமூகமாக இருக்கும்.
E – அரசற்ற ஒரு சமூகமாக இருக்கும்.

Review Topic
QID: 16812

Comments Hide Comments(2)
levitra 20 mg commented at 09:26 am on 02/05/2020
buy levitra vaigra - how often can you take 20 mg of levitra - levitra 10mg users browsing this forum
sudha anura
sudha anura commented at 07:04 am on 19/07/2017
can i get the notes in English? I am doing my political science exam in English medium and i don't have any teachers. You have very good and helpful resources. Please let me know if you have any notes in English. I tried to use google translate, but it it is not letting me translate access all the pages.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank