Please Login to view full dashboard.

அரசியல் விஞ்ஞானத்தின் பாடப்பரப்பு

Author : Admin

35  
Topic updated on 02/14/2019 11:59am

அரசியல் விஞ்ஞானத்தின் பாடப்பரப்பு Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • அரசியல் ஒரு சமூகவிஞ்ஞான பாடமாக இருப்பதனால் அதன் பாடப்பரப்பு தொடர்பாக ஒரு திட்டவட்டமான வரையறையை கூறமுடியாது.
  • இருப்பினும் “அரசை மையமாகக் கொண்டு அதனுடன் தொடர்புடைய ஏனைய விடயங்களை கற்பதே அரசியல் பாடப்பரப்பு” எனலாம்.
  • ஆரம்பகாலத்தில் அரசறிவியலானது வரலாற்று கல்வியுடன் இணைந்ததாகவே போதிக்கப்பட்டு வந்தது. ஒரு தனிப்பாடமாக ஆய்வு செய்யப்படவில்லை. 1903ம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் அரசியல் விஞ்ஞான சங்கம் அமைக்கப்பட்டவுடன் இந்நிலையானது மாற்றப்பட்டு அரசியலில் நடைமுறை விடயங்களுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கினர்.
  • அந்தவகையில் அரசறிவியலானது இயங்கு தன்மை கொண்ட பாடமாகையால் அதன் பாடப்பரப்பானது வளர்ச்சியடைந்த வண்ணம் உள்ளது. எனவே அரசறிவியலின் பாடப்பரப்பை இரண்டு கட்டங்களாக பாகுபடுத்திப் பார்ப்பது தெளிவானதாக அமையும்.
  • முதலாவது கிரேக்க காலம் முதல் இரண்டாம் உலக மகாயுத்த காலப்பகுதி வரை அரசியலில் பின்வரும் விடயங்கள் பாடப்பரப்புக்களாக கற்பிக்கப்பட்டு வந்தன.
  • அரசியல் விஞ்ஞானத்தினுடைய பாடப்பரப்பிலே முதன்மை பெறுகின்ற விடயமாக அமைந்தது. அரசு மற்றும் சமூக சிந்தனைகள் ஆகும். அரசு பற்றி சமூக சிந்தனையாளர்கள் முன்வைத்த கருத்துகளை நுணுக்கமாக பரிசீலனை செய்து அது பற்றிய விளக்கங்களினை முன்வைக்கின்ற பாடமாக அரசியல் அமைந்தது.
  • அரசியல் அரசுகளின் தோற்றம் பற்றிய கோட்பாடுகள் பற்றியும் அரசாங்கத்தின் அமைப்பு பற்றிய கோட்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்து விபரிக்கின்ற பாடமாக விளங்கியமையால் அரசியற் கோட்பாடுகள் மற்றும் சமூக சிந்தனைகள் அரசியலின் பாடப்பரப்பிலே முக்கியம் பெறுவனவாக அமைகின்றன.
  • அரசாங்க நிறுவனங்களுடைய கட்டமைப்புக்கள் அவற்றின் பணிகள் அவற்றுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்புகள் என்பவற்றைப் பற்றி ஆராய்ந்து விபரிக்கும் பாடமாக அரசியல் விளங்குகின்றது. அதன் பாடப்பரப்பிலே அரசாங்க நிறுவனங்களான சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகிய நிறுவனங்களைப் பற்றிய ஆய்வு முதன்மை பெறுகின்றது.
  • அடுத்து முதன்மை பெறும் விடயமாக அமைவது சட்டமாகும். அதாவது அரசு, அரசாங்கம் போன்ற அமைப்புக்கள் சட்டத்தின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பாகும். அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்புகளும் சட்டத்தின் அடிப்படையிலேயே ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தவகையில் சட்டம் பற்றிய ஆய்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
  • அரசியல் பாடநெறி உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள், மக்களுக்கும் அந்த நிறுவனங்களுக்குமிடையிலான தொடர்பினை நுணுக்கமாக பரிசீலனை செய்து விபரிக்கின்ற பாடமாக விளங்குகின்றது. இந்த அடிப்படையிலே அதன் பாடப்பரப்பினுள் உள்ளூராட்சி அரசாங்கம் பற்றிய ஆய்வு முக்கியம் பெறுகிறது.
  • அரசியல் ஆய்விலே உலகம் முழுவதிலும் பின்பற்றப்படுகின்ற வேறுபட்ட அரசாங்க முறைமைகள் ஆய்வு செய்யப்படுகிறது. அந்த அரசாங்க முறைமைகளின் பலம், பலவீனம் பற்றியும் அரசியல் கல்வி கவனத்தில் கொள்கிறது. இதனால் வேறுபட்ட அரசாங்க முறைமைகள் பற்றிய ஆய்வு அரசியல் பாடப்பரப்பிலே முதன்மையான விடயங்களாக அமைகின்றது.
  • அரசியல் பாடநெறி உலக நாடுகள் பலவற்றிலும் பரந்து காணப்படுகின்ற வேறுபட்ட அரசாங்க மாதிரிகளை ஒன்றோடொன்று ஒப்பீடு செய்து விளக்குகின்றது. இதனடிப்படையில் ஒப்பீட்டு அரசியல் என்ற விடயம் முதன்மை பெறுகின்றது.
  • அரசியல் ஆய்விலே முதன்மை பெறுகின்ற மற்றொரு விடயம் பொதுநிர்வாகம் என்பதாகும். அதாவது பொதுநிர்வாக கோட்பாடு, ஒழுங்குமுறைகள், பொது நிர்வாகத்திற்கான ஆளுமைகள் போன்ற விடயங்களை அரசியல் ஆய்வு செய்கிறது. எனவே பொதுநிர்வாகம் என்ற விடயம் அரசியல் பாடப்பரப்பிலே முதன்மை பெறுகிறது.
  • அதுமட்டுமல்லாமல் உலக அரசாங்கங்களின் கீழ் செயற்படுகின்ற பொது நிர்வாகம் பற்றிய விடயங்களை ஒப்பீடு செய்து ஆய்வு செய்தலாகும். இதனால் அரசியலின் பாடப்பரப்பிலே ஒப்பீட்டு பொது நிர்வாகம் என்பது முக்கியம் பெறும் விடயமாக அமைந்துள்ளது.
  • அரசியல் கற்கை நெறியானது 19ம் 20ம் நூற்றாண்டுகளிலே அரசுகள் நலன்புரி அரசாக எழுச்சி பெற்றபோது அந்த அரசுகளுடைய பொதுக்கொள்கைகளை வகுத்தல், அவற்றை நடைமுறைப்படுத்தல் விடயத்தில் கவனம் செலுத்தி அவை தொடர்பான ஆய்வை முன்னெடுக்கத் தொடங்கின.
  • 20ம் நூற்றாண்டின் மத்திய பகுதியிலே ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து பல அரசுகள் சுதந்திரம் பெற்று தனிஅரசாக மாறின. இவ்வரசுகள் நவீனஅரசுகள் எனப்பட்டன. சமூகப் பல்வகைமை, குறைவிருத்திப் பொருளாதாரம், அரசியல் அபிவிருத்தியின்மை போன்ற காரணங்களினால் இவ்வரசுகள் சமூகப்பொருளாதார முரண்பாடுகளுக்கு முகம் கொடுக்கின்ற சூழ்நிலை காணப்பட்டது. இதனால் அரசியலின் பாடப்பரப்பிலே மோதல் முகாமைத்துவம், மோதல் தீர்த்தல் என்பது முக்கிய பகுதியாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.
  • 2ஆம் உலக மகாயுத்தத்தின் பின்னர்அரசியலின் பாடப்பரப்பிலே மேலும் புதிய விடயங்கள் சேர்க்கப்பட்டன. அவையாவன
  • அரசாங்க முறைமைகளிலே காணப்படுகின்ற நிறுவன கட்டமைப்புக்களையும் அந்தக் கட்டமைப்புக்களினால் முன்னெடுக்கப்படும் பணியையும் ஆய்வு செய்வதற்காக முறைமைப்பகுப்பாய்வு எனும் நவீன விஞ்ஞான ஆய்வு நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதனால் முறைமைப்பகுப்பாய்வு எனும் அம்சம் அரசியல் பாடப்பரப்போடு சேர்க்கப்பட்டது.
  • 20ஆம், 21ஆம் நூற்றாண்டிலே உலகளாவிய ரீதியில் அரசியல், பொருளாதார ரீதியில் மிகப்பலமான நிலையில் இருக்கின்ற நாடுகள் தமது அரசியல் பொருளாதார ஆதிக்கத்தை ஏனைய அரசுகளின் மீது படியச் செய்கின்ற தேசிய அதிகாரம் எனும் விடயம் காணப்பட்ட போது அரசியல் கல்வியின் பாடப்பரப்பிலே தேசிய அதிகாரம் எனும் விடயம் முக்கியம் பெற்றது.
  • அரசியல் சமுதாயங்களிலே மக்களுக்கு அரசியல் ரீதியாக தலைமைத்துவத்தை வழங்குகின்ற மக்களின் குழுவே அரசியல் உயர்குழாம் எனப்படும். இவ்வரசியல் உயர்குழாம் எவ்வாறு தோற்றம் பெற்றது? அவற்றின் செயற்பாடுகள் எவை? என்பன பற்றி அரசியல் கல்வி ஆய்வினை மேற்கொண்டமையால் அரசியல் உயர்குழாம் எனும் விடயம் பாடப்பரப்பில் சேர்க்கப்பட்டன.
  • ஒழுங்குபடுத்தப்பட்ட அரசியல் சமுதாயத்திலே இடம்பெறுகின்ற அரசியல் அபிவிருத்தியின் போக்கினைப் பற்றி அரசியல்கல்வி ஆராயத் தொடங்கியது. இதனால் 21ஆம் நூற்றாண்டிலே அரசியல் அபிவிருத்தி என்ற விடயம் அரசியல் பாடப்பரப்பின் முதன்மையான விடயமாக சேர்க்கப்பட்டது.
  • 20ஆம் நூற்றாண்டின் பின் மக்கள் தம்முடைய அரசியல் இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகளில் ஒன்றாக வன்முறை சார் வழிமுறையை தெரிவு செய்தனர். பரந்தளவிலே இவ்வன்முறைச் செயற்பாடு அரசியல் சமுதாயத்திலே இடம்பெறுவதால் அரசியல் அவற்றைப் பற்றியும் ஆராயத் தொடங்கியது. இதனால் பாடப்பரப்பிலே அரசியல் வன்முறை என்ற அம்சம் சேர்க்கப்பட்டது.
  • மேற்குறித்த அடிப்படையிலே அரசியலுடைய பாடப்பரப்பில் புதிய விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்ற போக்கு காணப்படுகின்றது. எதிர்காலத்தில் மேலும் பல புதிய விடயங்கள் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது.
  • ஏனெனில் எதிர்காலத்தில் சமுதாயத்தில் எழுச்சி பெறுகின்ற அரசியல் பற்றிய புதிய சிந்தனை நடைமுறை வடிவத்திலே பெற்றுக் கொள்ளும் போது அரசியல் அதனை ஆய்வு செய்து பாடப்பரப்பாக இணைத்துக் கொள்ளும்.

RATE CONTENT 0, 0
QBANK (35 QUESTIONS)

அரசியல் விஞ்ஞானம் கவனம் செலுத்தும் கற்கைகளாவன – பிழையான கூற்று

Review Topic
QID: 15876
Hide Comments(0)

Leave a Reply

அரசியலைக் கற்பதற்கான இன்றியமையாத பகுதிகளுள் ஒன்றல்லாதது எது?

Review Topic
QID: 16317
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் விஞ்ஞானத்தை விபரிப்பதற்கு மிகக் குறைவான தொடர்புடைய கூற்றினை இனங்காண்க.

Review Topic
QID: 16318
Hide Comments(0)

Leave a Reply

அரசறிவியலில் ஆராயப்படும் தலைப்புகளை உள்ளடக்கிய சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – மனிதர்களுக்கிடையிலான சமூக உறவுகளை ஆராய்கிறது.
B – மனிதர்களின் அரசியல் நடத்தையை ஆராய்கிறது.
C – அரசியல் முறைமையில் கட்டமைப்புகளையும் பணிகளையும் ஆராய்கிறது.
D -அரசியல் முறைமையின் செயன் முறையினை ஆராய்கிறது.

Review Topic
QID: 16319
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் விஞ்ஞானத்தின் பாடப்பரப்புக்கு மிகப் பொருந்தும் சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அரசுப் பாலனக் கலை.
B – தேசங்களுக்கிடையிலான அரசியல்.
C – மக்களுக்கிடையிலான சமூகத் தொடர்புகள்.
D – சர்வதேச நிறுவனங்களின் பங்கு.

Review Topic
QID: 16325
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் விஞ்ஞானத்தின் கீழ்க் கற்கப்படும் எண்ணக் கருக்களுக்குப் பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அரசும் அரசாங்கமும்
B – அரசியல் ரீதியாக ஒழுங்கமைந்த சமூகங்கள்
C – ஒழுங்கமைந்ததும் ஒழுங்கமையாததுமான சகல வகையான சமூகங்கள்
D – ஒரு அரசியல் பிராணி என்ற வகையில்

Review Topic
QID: 16326
Hide Comments(0)

Leave a Reply

அரசறிவியலில் கற்கப்படும் விடயப் பரப்புகளாவன- பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 16327
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் விஞ்ஞானத்தின் பிரதான பிரவாகங்களாவன பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 16328
Hide Comments(0)

Leave a Reply

அரசறிவியல் கவனத்தில் கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளாவன – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 16329
Hide Comments(0)

Leave a Reply

அரசியலைக் கற்கும் பாடம் அழைக்கப்படுவதாவது – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 16330
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் விஞ்ஞான பாடத்தின் அத்தியாவசிய அங்கங்களாவன – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 16331
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் விஞ்ஞானம் என்பது
A – அரசியலின் கோட்பாட்டுப் பகுதியைக் கற்கும் பாடத்தைக் குறிக்கும் விஞ்ஞான நாமமாகும்.
B – பிரதானமாக இன்றைய மற்றும் நாளைய தினத்தின் பயன்பாட்டுக்காக இறந்தகால அரசியல் பிரச்சினைகளைக் கற்பதில் கவனம் செலுத்துகின்றது.
C – சமூக விஞ்ஞானங்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாடமாகும்.
D – மனிதர்களைப் பூவுலக வாழ்க்கையிலிருந்து மீட்டெடுக்க முயல்கின்றது.
E – சமூக விஞ்ஞானங்களுள் தலையாய விஞ்ஞானமாகக் கருதப்படுகிறது

Review Topic
QID: 16332

QID: 16333
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் விஞ்ஞானக் கற்கையின்போது கவனத்திற் கொள்ளப்படுவது:
A – அரசியல் சமூகங்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகளையாகும்.
B – அவ்வரசியல் பிரச்சினைகளை முகாமைப்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய கருவிகளையாகும்.
C – மனிதர்கள் அரசியலில் ஈடுபடுவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளையும்.
D – சமயச் சார்பற்ற வாழ்விலிருந்து மனிதர் விடுபடுவதற்கு உதவும் மிகச் சிறந்த அரசாட்சி முறையையாகும்.
E – மேற்குறித்த A, B, C ஆகியன தொடர்பான அரசாட்சி முறையையாகும்.

Review Topic
QID: 16335
Hide Comments(0)

Leave a Reply

அரசியல் விஞ்ஞானம் கவனம் செலுத்தும் கற்கைகளாவன :
A – அரசு மற்றும் அரசாங்கம் பற்றிய கற்கை
B – அரசியல் அதிகாரம் பற்றிய கற்கை
C – மக்களின் அரசியல் நடத்தை பற்றிய கற்கை
D – மக்கள், அரசாங்கம் மற்றும் அரசுக்கிடையிலான தொடர்பு பற்றிய கற்கை
E – உலகியல் வாழ்க்கையிலிருந்து மக்களை மீட்டெடுத்தல் பற்றிய கற்கை

Review Topic
QID: 16336

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank