Please Login to view full dashboard.

நேரடி ஜனநாயக முறை ஏற்பாடுகள்

Author : Admin

24  
Topic updated on 02/15/2019 09:30am
  • சட்டவாக்கத்தில் நேரடியாகப் பங்குபற்றுதலே நேரடி ஜனநாயகத்தின் கருவாகும்.
  • அதாவது மக்களே தமக்குரிய சட்டங்களை இயற்றுவதுடன் அதற்கு சகல மக்களும் அங்கீகாரம் வழங்கும் முறையாகும்.
  • கிரேக்க காலத்தில் நடைமுறையிலிருந்த நேரடி ஜனநாயக முறையானது காலப்போக்கில் ஏற்பட்ட சனத்தொகை அதிகரிப்பு, நிலப்பரப்பின் பெருக்கம் என்பவற்றால் சாத்தியமற்றதாகியது.
  • இருப்பினும் ஆட்சி செயன்முறையில் மக்களின் பங்குபற்றுதலை அதிகரிப்பதற்காக சில நாடுகளில் நேரடி ஜனநாயக ஏற்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. அவையாவன:
  1. ஆரம்ப மக்கள் மன்றம்
  2. ஒப்பங்கோடல் அல்லது குடியொப்பம் அல்லது மக்கள் தீர்ப்பு
  3. மக்கள் துவக்கம் அல்லது தொடக்கி வைத்தல்.
  4. மக்கள் ஆணை அல்லது பிளொபிசைட்
  5. மீளழைத்தல் அல்லது திருப்பியழைத்தல்.

ஆரம்ப மக்கள் மன்றம்
  •  அதிகாரப் பிரதேசங்களில் வாழும் பிரஜைகள் அனைவரும் ஓரிடத்தில் கூடி மக்கள் சபைக்கான பிரதிநிதிகளை தெரிவுசெய்தலைக் குறிக்கும்.
  • வரவு செலவுத்திட்டங்களையும் சிலவகையான சட்டங்களையும் அங்கீகரிப்பதிலும் நேரடியாக மக்கள் பங்குபற்றுகின்றனர்.
  • இம்முறை சுவிஸ்லாந்தில் உள்ள சில கன்ரங்களில் உள்ளது.

ஒப்பங்கோடல்

 Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • அரசாங்கம் நிறைவேற்றும் ஒரு யாப்பை,ஒரு சாதாரண சட்டத்தை அல்லது பொதுக்கொள்கையை மக்களிடம் சமர்பித்து மக்களின் கருத்தை அல்லது தளத்தை துலங்களை அளவிட்டறியலே ஒப்பங்கோடல் என்பதன் கருத்தாகும்.
  • ஓர் ஒப்பங்கோடலில் சம்பந்தப்பட்ட விடயத்தை மக்களிடம் சமர்பித்து அவர்கள் அதற்கு உடன்படுகின்றார்களா? இல்லையா? என்று கேள்வி முறையில் கருத்துக் கோரப்படும்.
  • மக்கள் உடன்படுவார்களாயின் “ஆம்” என்றும் உடன்படவில்லையாயின் “இல்லை” என்றும் வாக்காளர்கள் தமது கருத்தை தெரிவிப்பர்.
  • இலங்கையில இம்முறை 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • தற்கால அரசுகளில் பயன்படுத்தப்படும் ஒப்பங்கோடல் முறைகள் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
  1. அரசியல் சார் ஒப்பங்கோடல் :அரசியல் யாப்பு திருத்தம் அல்லது மாற்றத்திற்காக மக்கள் அங்கீகாரத்தை பெறும் முறை அரசியல் சார் ஒப்பங்கோடல் எனப்படும்.
  2. தெரிவுக்குரிய ஒப்பங்கோடல்: இம்முறையில் அரசாங்க தெரிவின் அடிப்படையில் சட்ட மசோதாக்களும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களும் மக்கள் அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்படும்
  3. மனு ஒப்பங்கோடல்: ஒரு குறிப்பிட்ட சட்டம் தொடர்பாக ஒப்பங்கோடலை நடத்துமாறு அரசாங்கத்திடம் மக்கள் விடுக்கும் கோரிக்கையின் அடிப்படையில் நடாத்தும் ஒப்பங்கோடலே மனு ஒப்பங்கோடல் எனப்படும்.

ஒப்பங்கோடலின் நன்மைகள்:-

  •  சட்டவாக்க நடவடிக்கையில் மக்கள் பங்குபற்றுவதற்கான வாய்ப்பினை இம்முறை வழங்குகின்றது.
  • சமூகமானது முரண்பட்ட குழுக்களாக பிளவுபடுவதைத் தவிர்க்கலாம்.
  • மக்களின் அரசியல் அறிவு மற்றும் தெளிவு முன்னேறுவதில் இது பங்கேற்கின்றன.
  • அரசாங்கத்தின் முடிவெடுத்தல் சம்பந்தமான விடயங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகாது.
  • பாராளுமன்றில் அரசியல்கட்சி முறையின் அடிப்படையில் பக்கச்சார்பான முறையில் சட்டங்கள் நிறைவேற்றுவதைத் தடுக்கலாம்.

ஒப்பங்கோடலின் குறைபாடுகள்:-

  • சட்டவாக்கம் செய்யும் இறுதி அதிகாரம் மக்களிடம் சமர்ப்பிக்கப்படுவதால் சட்டத்துறையின் கௌரவம் பாதிக்கப்படுகிறது.
  • கட்சி அரசியலை பலவீனப்படுத்துகின்றது.
  • அதிக செலவீனத்தையும் கால தாமதத்தினையும் ஏற்படுத்தக்கூடியது.
  • பல்லின சமூகத்தில் சிறுபான்மையினரின் நலன்பாதிக்கப்படும்.

மக்கள் துவக்கம்

 Please Login to view the QuestionPlease Login to view the Question

  • சட்டத்துறை சட்டங்களை ஆரம்பிப்பதற்கு மக்களுக்குள்ள அதிகாரமே மக்கள் துவக்கம் எனப்படும்.
  • இது இரு முறைகளில் நடாத்தப்படும்:-
  1.  நடைமுறையில் உள்ள சட்டங்களை திருத்துவதற்கு.
  2. புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு.
  • இவ்விரு விடயங்கள் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் தமது கையொப்பங்களை இட்டு நடைமுறையில் உள்ள ஒரு சட்டத்தை திருத்துமாறு / ஒரு குறிப்பிட்ட புதிய சட்டத்தை உருவாக்குமாறு அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தால் அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளது.

இம்முறையின் நன்மைகள்:-

  • சட்டத்துறையினர் மிகவும் பொறுப்பான சட்டங்கள் உருவாக்குவதற்கு அழுத்தம் கொடுத்தல்.
  • சட்டமன்றத்தினுள் பெரும்பான்மை பலத்தை கொண்டிருக்கின்ற கட்சி / குழு அனுபவிக்கும் இறைமை அதிகாரத்தை அடக்குதல்.
  • மக்கள் இறைமையை உறுதிப்படுத்தல்.

இம்முறையின் குறைகள்:-

  • சட்டத்துறையின் அதிகாரம் அதன் கௌரவம் கீழ்மட்டத்திற்கு கொண்டுவரப்படல்.
  • பொதுமக்கள் சட்டவாக்க அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வாய்ப்பு இம்முறையில் ஏற்படுகின்றது.

மக்கள் ஆணை
  • ஒரு முக்கிய விடயம் பற்றிய தீர்மானம் கருத்து முரண்பாட்டிற்கு உட்பட்டிருப்பின் அதனை மக்களின் அபிப்பிராய கோரலுக்கு விடலாம்.
  • இவ்விடயம் நாட்டின் அரசியல்,பொருளாதார,சமூக அல்லது சர்வதேச விவகாரம் ஒன்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
  • உலகில் இத்தகைய மக்கள் ஆணை என்பது ஒரு குறிப்பிட்ட பூமி பிரதேசத்திற்கு இரண்டு நாடுகள் உரிமை கோரிய போது அங்குள்ள மக்கள் தாம் எந்த நாட்டுடன் இணைய விரும்புகின்றனர் என்பதை அறிய பயன்படுத்தப்பட்டது.
    உதாரணம் : 1935 இல் சார் பிரதேசத்தை ஜேர்மனிக்கு திருப்பி ஒப்படைக்க வேண்டுமா? இல்லையா? என்பதை தீர்மானித்தல்.

மீளழைத்தல்

 Please Login to view the QuestionPlease Login to view the Question

  • மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளோ அதிகாரிகளோ தமது பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றாத போது அவர்களை திருப்பி அழைப்பதற்கு மக்களுக்குள்ள அதிகாரமே மீளழைத்தல் என்றழைப்பர்.
  • ஒரு குறிப்பிட்ட பிரதிநிதி அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையினரான மக்கள் கையொப்பமிட்டு ஒரு மனுவின் மூலம் அரசாங்கத்திடம் சமர்பிக்க வேண்டும்.
  • இது தொடர்பாக நடாத்தப்படும் வாக்கெடுப்பில் அது பெரும்பான்மையினரால் அங்கீகரிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர் பதவியிலிருந்து விலக வேண்டும்.

மீளழைத்தலின் நிறைகள்:-

  • ஆட்சியாளர்களின் தன்னிச்சையான செயற்பாட்டை தடுக்கின்றது.
  • லஞ்சம்,ஊழல்,அதிகார துஷ்பிரயோகம்,தொழிலில் அக்கறையின்மை போன்றன குறைவடைய இம்முறை வாய்ப்பளிக்கின்றது.
  • அரசாங்க செயற்பாடுகளில் மக்களின் ஈடுபாட்டை அதிகரிக்கின்றது.

மீளழைத்தலின் குறைகள்:-

  • நிர்வாகிகளின் சுதந்திரம் இம்முறையின் மூலம் பெருமளவிற்கு பாதிக்கப்படுகின்றது.
  • இம்முறை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் போது நிர்வாகம் பாதிப்படையும்.
  • அரசியல் கட்சிகள் தங்களது சுயநலனுக்காக இம்முறையை பயன்படுத்தலாம்.

RATE CONTENT 0, 0
QBANK (24 QUESTIONS)

குடிமுனைப்புக்கு (Intiative) பொருத்தமான சேர்மானத்தை அடையாளம் காண்க.
A – சட்டங்களை இயற்றுவதில் மக்களுக்கு வாய்ப்பளிப்பதில் அது வழிகாட்டுகின்றது.
B – சட்டசபைகளின் அதிகாரத்தைக் குறைக்கிறது.
C – மக்களின் அதிகாரத்தின் வெளிக்காட்டுவதாகும்.
D – அது முறைப்பாடு செய்வது போன்றது.

Review Topic
QID: 17541
Hide Comments(0)

Leave a Reply

தேர்தல்களோடு தொடர்பான சேர்மானத்தை இனங்காண்க.
A – அரசியலில் பங்குபற்றுவதற்கு மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் வழிமுறை.
B – தேர்தல்களில் மக்களின் தெரிவை கட்சிகள் எளிதாக்கியுள்ளது.
C – அரசியல் முறைமைகளில் எதிர்க்கருத்துகளை இணைப்பதற்குத் தேர்தல்கள் வழிவகுக்கின்றன.
D – சோவியத் யூனியனில் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.

Review Topic
QID: 17542
Hide Comments(0)

Leave a Reply

திருப்பியழைத்தல் பற்றிய பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.

A – அது மக்களின் நம்பிக்கையை இழந்த அரச அலுவலர்களை பதவியிலிருந்து அகற்றும் வாய்ப்பை மக்களுக்கு பெற்றுத் தருகிறது.
B – அது அரச அலுவலர்களின் செயற்றிறனைக் குன்றச் செய்து அவர்களைப் பொறுப்பற்றவர்களாக்குகின்றது.
C – அது அரச அலுவலர்கள் தமது கடமையில் அதிகம் கரிசனையுடன் இருப்பதற்கு நிர்ப்பந்திக்கின்றது.
D – அது அரச அலுவலர்களின் சுதந்திரத்தைப் பலவீனப்படுத்துகிறது.

Review Topic
QID: 17571
Hide Comments(0)

Leave a Reply

ஒப்பங்கோடலுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – யாப்புசார் ஒப்பங்கோடல் மக்கள் அங்கீகாரம் பெறுதலைக் கட்டாயப்படுத்துகிறது.
B – அது தேர்தலுக்குப் பொருத்தமான பிரதியீடாகும்.
C – அது சட்டத்துறையின் அதிகாரத்துக்குச் சவாலாகும்.
D – அது நடைமுறைசார்ந்த அல்லது செயற்றிறன் மிக்க முறையன்று.

Review Topic
QID: 17878
Hide Comments(0)

Leave a Reply

தொடக்கி வைத்தலுக்குப் பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – அது சட்ட உருவாக்க நடைமுறையில் பங்கேற்பதற்கான வாய்ப்பை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கிறது.
B – அது மக்கள் இறைமையை வலியுறுத்துகிறது.
C – அது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு முறையன்று.
D – அது சட்டத்துறையின் அதிகாரத்தைப் பலப்படுத்துகிறது.

Review Topic
QID: 17880
Hide Comments(0)

Leave a Reply

‘மீளழைப்புக்குப்” பொருத்தமான சேர்மானத்தைத் தெரிவு செய்க.

A – அது அரசாங்க அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்யும் நடைமுறை ரீதியானதும் செயற்றிறன் மிக்கதுமான ஒரு முறையாகும்.
B – அம்முறை பின்பற்றப்படும் நாடுகளில் அதன் பிரயோகம் பிரதேச அல்லது மாகாண மட்டங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
C – அது அரசாங்க அதிகாரிகளை நீக்குவதற்கு வாக்காளர்களுக்கு அதிகாரத்தை வழங்கும் ஒரு முறையாகும்.
D – அது அதிகாரிகள் அதிக பொறுப்புடன் செயற்படுவதற்கு உதவுகிறது.

Review Topic
QID: 17882
Hide Comments(0)

Leave a Reply

தேர்தல்கள் என்பது
A – மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் ஒரு முறையாகும்.
B – பிரதிநிதித்துவத் தாபனங்களை அமைக்கும் ஓர் உபாயமாகும்.
C – அரசியல் முறைமைக்குச் சட்டமுறைத் தன்மையை வழங்கும் ஒரு மூலாதாரமாகும்.
D – வாக்காளர்களை ஒருவருக்கொருவர் பகையாளியாக்கும் ஒரு ஊடகமாகும்.

Review Topic
QID: 17995
Hide Comments(0)

Leave a Reply

மனிதர் அரசியலில் பங்கேற்கும் முறைகளாவன
A – தேர்தல்கள்
B – ஒப்பங்கோடல்
C – அமுக்கக் குழுக்களும் பொதுசன அபிப்பிராயமும்
D – அரசியல் எதிரிகளைத் தாக்குதல்

Review Topic
QID: 17997
Hide Comments(0)

Leave a Reply

வாக்காளர் நடத்தையில் செல்வாக்குச் செலுத்தும் சில காரணிகளாவன :
A – கட்சி அடையாளம்
B – குடும்பத்தின் மூலம் ஏற்படும் அரசியல் சமுதாயப்படுத்தல்
C – வெப்ப தட்ப நிலை மற்றும் காலநிலை
D – வர்க்க அடையாளம்

Review Topic
QID: 17998
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I –  தேர்தல்களும் ஒப்பங்கோடலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக கருதப்படுகின்றன.
கூற்று II – ஒப்பங்கோடல் மக்கள் தம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.

Review Topic
QID: 18004
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – ஒப்பங்கோடல் என்பது மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பிறிதொரு முறையாகும்.
கூற்று II – ஒப்பங்கோடல் சட்டவாக்கத்தில் சட்டத்துறையின் முக்கியத்துவத்தை மேம்படுத்துகிறது.

Review Topic
QID: 18012
Hide Comments(0)

Leave a Reply

ஒப்பங்கோடலுக்குப் பொருந்தும் கூற்றுகளின் சேர்மானத்தை இனங்காண்க.
A – அது மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்குள்ள பிறிதொரு கருவி என்று கருதப்படுகிறது
B – அது சட்டவாக்கத்தில் மக்களை நேரடியாகப் பங்கேற்க வைக்கின்றது
C – அது சட்டவாக்கத்தில் மக்களுக்கு இரத்து அதிகாரத்தை வழங்குகிறது
D – அது ஜனநாயகத்தின் கேடயம் என்று கருதப்படுகிறது.

Review Topic
QID: 18040
Hide Comments(0)

Leave a Reply

பொது மக்களை அரசாங்கத்துடன் தொடர்புபடுத்தும் வழிமுறைகளாவன
A – தேர்தல்கள்
B – ஒப்பங்கோடல்
C – அரசியல் கட்சிகள்
D – அரச சார்பற்ற நிறுவனங்கள்
E – அமுக்கக் குழுக்கள் மற்றும் பொதுசன அபிப்பிராயம்

Review Topic
QID: 18041
Hide Comments(0)

Leave a Reply

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களின் பிரதான பண்புகளாவன – பிழையான கூற்று

Review Topic
QID: 18042

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank