Please Login to view full dashboard.

துணை இடை ஈர்ப்புகள்

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 09:13am
  • மூலக்கூறுகளுக்கிடையிலான இடைத்தாக்கங்கள் அனைத்தும் பொதுவாக வன்தர்வாலிசு இடைத்தாக்கங்கள் என அழைக்கப்படும். இவ்விடைத்தாக்கங்கள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படும்.
    • அயன் – இருமுனைவு இடைத்தாக்கங்கள்
    • இருமுனைவு – இருமுனைவு இடைத்தாக்கங்களும் ஐதரசன் பிணைப்புக்களும்
    • அயன் – தூண்டிய இருமுனைவு இடைத்தாக்கங்கள்
    • இருமுனைவு – தூண்டிய இருமுனைவு இடைத்தாக்கங்கள்
    • கலைவு இடை ஈர்ப்புகள் (லண்டன் விசைகள்)

அயன்-இருமுனைவு இடைத்தாக்கங்கள்

  • கற்றயன் அல்லது அன்னயன் முனைவு மூலக்கூறுகளைக் கவரும்போது இவ்விடைத் தாக்கங்கள் ஏற்படும். அயன்களின் ஏற்றம் , பருமன் , இருமுனைவுகளின் அளவு என்பவற்றில் இவ்விடைத்தாக்கங்களின் வலிமை தங்கியுள்ளது.download

இரு முனைவு – இருமுனைவு இடைத்தாக்கங்கள்

  • இவ்வகையான விசைகள் நிலையான முனைவாக்கமுடைய முனைவு மூலக்கூறுகளுக்கிடையே காணப்படும்.
    download-1

ஐதரசன் பிணைப்பு

  • ஐதரசன் பிணைப்பு என்பது ஐதரசன் அணு ஒன்று மின்னெதிர்த்தன்மையுடைய மூலகம் ஒன்றுடன் பங்கீட்டுரீதியாகப் பிணைந்துள்ளபோது புளோரீன் , ஒட்சிசன் , நைதரசன் போன்ற ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தனிச்சோடி இலத்திரனைக் கொண்ட வேறு ஒரு மின்னெதிர் மூலகம்  உடன் பிணைந்திருக்கும் விசேட வகை நிலைமின்னியல் இடைத்தாக்கமாகும்.screenshot-32

• கூட்டங்கள் 15 , 16 , 17 என்பவற்றின் ஐதரைட்டுக்களின் கொதிநிலைகள் மாற்றமடையும் முறை ஐதரசன் பிணைப்பு இருப்பதை உறுதிப்படுத்துகின்றது.
boiling-point

அயன்-தூண்டிய இருமுனைவு இடைத்தாக்கங்கள்

ஏற்றமற்ற முனைவாக்கமற்ற ஒரு மூலக்கூறின் (உதாரணம் விழுமிய வாயுவின் ஒரு அணு) அண்மையில் ஏற்றமுடைய ஒரு துணிக்கையைப் புகுத்தும்போது அது அணு அல்லது மூலக்கூறின் முகிலை திரிபடையச் செய்யும்.
உதாரணம்:- KI நீர்க்கரைசலில் கரைக்கப்பட்ட I2 ஆனது I3 உருவாக்கல்.

இருமுனைவு-தூண்டிய இருமுனைவு இடைத்தாக்கங்கள்

  • இவ்வகையான கவர்ச்சி ஏற்றமற்ற முனைவாக்கமற்ற இனத்திற்கும் முனைவாக்கமுடைய இனத்திற்கும் இடையில் காணப்படும்.
    உதாரணம்:- O2 ,I2 , Xe போன்ற முனைவாக்கமற்ற இனங்களை நீரில் கரைத்தல்.

கலைவு இடை ஈர்ப்புகள் (லண்டன் விசைகள்)

  • முனைவாக்கமற்ற மூலக்கூறுகள் அல்லது அணுக்களுக்கிடையே உள்ள இடைத்தாக்கங்கள் கலைவு இடை ஈர்ப்புகள் எனப்படும்.
  • முனைவாக்கமற்ற ஏதாவது ஒரு மூலக்கூறு அதன் கணநிலை இலத்திரன் முகில் உருமாற்றத்தினால் தற்காலிகமாக முனைவாக்கப்படலாம். இவ்வாறான மூலக்கூறின் முனைவாக்கத்தினால் வேறொரு முனைவாக்கமற்ற மூலக்கூறு தற்காலிகமாக முனைவாக்கப்படலாம். இவ்வாறான மூலக்கூறுகளுக்கிடையே உள்ள இடைத் தாக்கங்கள் கலைவு இடை ஈர்ப்புகள் எனப்படும்.
  • இவ்வாறான ஈர்ப்பு விசைகள் எவ்வகையான இரு மூலக்கூறுகளுக்கிடையேயும் காணப்படும். எல்லா வகையான வன்தர்வாலிசு விசைகளிலும் பொதுவாக வலிமை குறைந்தது கலைவு இடை ஈர்ப்புகளாகும்.
  • எனினும் கலைவு இடை ஈர்ப்பு வலிமை இருமுனைவு-இருமுனைவு இடைத்தாக்கங்களை மீறும் சந்தர்ப்பங்களும் உள்ளன.
     சேர்வை  உருகுநிலை  துணையிடை ஈர்ப்பு வகை
     CH3F   -142 ºC  இருமுனைவு-இருமுனைவு இடைத்தாக்கங்கள் ,

    கலைவு இடை ஈர்ப்புகள்

     CCl4  -23 ºC  கலைவு இடை ஈர்ப்புகள்

     

RATE CONTENT 5, 1
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank