Please Login to view full dashboard.

பல்பகுதியம் (Polymer)

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 04:10am
  • பல மூலக்கூறுகள் ஒன்றாக இணக்கமடைவதால் பல்பகுதியம் உருவாகும். இவ்வாறு இணக்கமடையும் போது குறித்த ஒரு அலகு மீண்டும் மீண்டும் வரும். இது மீளவரும் அலகு எனப்படும்.
  • இங்கு பல்பகுதியத்தில் இணையும் சிறிய மூலக்கூறு ஒரு பகுதியம் எனப்படும்.

NOTE: ஒரு மூலக்கூறுகள் ஒன்றாக இணைவது இருபகுதியம் எனப்படும்.

பல்பகுதியங்களின் பாகுபாடு:-
பல்பகுதியங்கள் வெவ்வேறு விதங்களாக பாகுபடுத்த முடியும்.
(1)
1. இயற்கை பல்பகுதியம்
2. தொகுப்பிற்குரிய பல்பகுதியம்

(2)
1. கூட்டல் பல்பகுதியம்
2. ஒடுங்கல் பல்பகுதியம்

(3)
1. நேர் சங்கிலிப் பல்பகுதியம்
2. குறுக்கிணைப்பு பல்பகுதியம்

(4)
1. வெப்பம் இழக்கும் பல்பகுதியம்
2. வெப்பம் இறுக்கும் பல்பகுதியம்

இயற்கை பல்பகுதியம்
இயற்கையாகவே உயிர்தொகுதிகளில் தொகுக்கப்படும் பல்பகுதியங்கள் இயற்கை பல்பகுதியம் எனப்படும்.

Eg:-

  1. இயற்கை இறப்பர்
  2. புரதங்கள்

தொகுப்பிற்குரிய பல்பகுதியம்
மனிதனால் செயற்கையாக தொகுக்கப்படும் பல்பகுதியம் தொகுப்பிற்குரிய பல்பகுதியம் எனப்படும்.

Eg :-

  1. Polythene
  2. PVC
  3. Nilon
  4. Polyester

வெப்பம் இழக்கும் பல்பகுதியம்
∗பல்பகுதியமொன்றை வெப்படுத்தும்போது இழகி குளிரவிடும்போது மீண்டும் வெப்பப்படுத்தும்போது,இழக்கக்கூடியதாக இருப்பின் அது வெப்பம் இழக்கும் பல்பகுதியம் எனப்படும்.

∗பொதுவாக நேர்ச்சங்கிலி பல்பகுதியங்கள் வெப்பம் இழக்கும் பல்பகுதியங்களாகக் காணப்படும்.
Eg :

  1. Polythene
  2. Polystyrene
  3. PVC
  4. Nylon

விதிவிலக்காக Tephlon வெப்பம் இழக்கும் பல்பகுதியம் அல்ல.

வெப்பம் இறுக்கும் பல்பகுதியம்
∗பல்பகுதியமொன்றை வெப்பப்படுத்தும் போது இழகி,அமைப்பு மாறி இறுகிய பின்னர் மீண்டும் வெப்படுத்தும் போது இழகாவிடின் அப்பல்பகுதியம் வெப்பம் இறுக்கும் பல்பகுதியமாகும்.

∗பொதுவாக குறுக்கிணைப்பு பல்பகுதியங்ள் வெப்பம் இறுக்கும் பல்பகுதியம் ஆகும்.

உ – ம் :

  1. Phenol formaldehyde பல்பகுதியம்
  2.  Urea formaldehyde பல்பகுதியம்
  3. Tephlon

 

இயற்கைப் பல்பகுதியங்கள்

இயற்கை இறப்பர்

  • Isoprene (C5H8) பல மூலக்கூறுகள் இணைந்து இயற்கை இறப்பர் உருவாகும். இது ஒரு நீட்டல் சங்கிலி,கூட்டல் பல்பகுதியம் ஆகும்.
  • screenshot-1Isoprene பல மூலக்கூறுகள் இணைந்து உருவாகும் பல்பகுதியம் cis trans கேத்திரகணித சமபகுதியத்தைக் காட்டும். இதில் இயற்கை இறப்பர் cis வடிவத்தை உடையது.
  • Trans சமபகுதியத்தை உடைய பல்பகுதியத்தை தொடுக்கலாம். இது தொகுப்பிற்குரிய பல்பகுதியம் மீள்தன்மை உயர்ந்தது.
  • இறப்பர் மூலக்கூறுகளுக்கிடையே நலிந்த  london force காரணமாக அவை எழுந்தமானமாக முறுக்கலடைந்து காணப்படும்.
  • இதனால் இறப்பரின் இரு அந்தங்களையும் எதிர் எதிர் திசையில் இழுத்து விடும்போது அது நீட்சி அடைந்து காணப்படும். எனவே இதனை மீள்தன்மை மிக்க பொருளாக மாற்ற வல்கனைசுபடுத்தப்படும்.

வல்கனைசுப்படுத்தல்

  • இயற்கை இறப்பரை கந்தகத்துடன் சேர்த்து வெப்பப்படுத்துவதன் மூலம் கந்தக அணுக்கள் இறப்பர் மூலக்கூறுகளுக்கிடையே குறுக்கு சங்கிலிகளை உருவாக்கும். இதன் போது இருபரிமாணத்தில் இருந்த Rubber மூலக்கூறுகளின் கட்டமைப்பு முப்பரிமாண கட்டமைப்பாகமாறும்.
  • இதனால் இதன் கடினத்தன்மை,மீள் தன்மை என்பன அதிகரித்து மேலும் வல்கனைசுப்படுத்தப்பட்ட Rubber சேதன கரைப்பான்களில் கரையும் தகவு குறைவடையும். வெப்பத்தினால் ஏற்படும் தாக்கம் குறையும். அத்துடன் இவை இழுக்கப்பட்டு விடப்படும் போது பழைய நிலையை அடையும்.
  • பொதுவாக கந்தகம் 1 – 3% திணிவு ரீதியில் சேர்க்கப்படும். மேலும் 25 – 35% திணிவு ரீதியில் ‘S’ இறப்பர் பாலுடன் சேர்க்கப்பட்டு வெப்பப்படுத்தும் போது ஏபனைற்று உருவாகும்.
  • இயற்கையில் இறப்பர் மரங்களில் இருந்து இறப்பர்பால் சேகரிக்கப்படும். இது திரளும் தன்மையுடையது. அத்துடன் இதில் காணப்படும். வெல்லம்,புரதம் போன்றவை நொதித்தல் காரணமாக புளிக்கக் கூடியதாக இருக்கும். இவற்றை தவிர்க்கும் பொருட்டு இறப்பர் பால் சேகரிக்கும் சிரட்டையில் சிறிதளவு NH3(aq) சேர்க்கப்படும். இது ஓர் திரளல் எதிரி ஆகும். அத்துடன் நொதித்தல் செயற்பாட்டை நிரோதரிக்கும். தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்படும். இறப்பர் பாலை திரள செய்யும் பொருட்டு மென்னமிலம் சேர்க்கப்படும். இதற்காக formic acid / acetic acid பயன்படும்.

இயற்கை இறப்பரின் பயன்பாடு:-
(1) வாகன tyre tube தயாரிப்பு
(2) பாதணி தயாரிப்பு
(3) கையுறை தயாரிப்பு

புரதங்கள்

  • α – aminoacid ல் ஒடுங்கல் பல்பகுதியம் புரதம் ஆகும். இது ஓர் இயற்கை பல்பகுதியமாகும். ஒரு பகுதியங்கள் இணக்கமடையும் போது சிறிய மூலக்கூறுகள் Eg: (H2O / HCl / NH3) வெளியேறுமாயின் உருவாகும் பல்பகுதியம் ஒடுக்கல் பல்பகுதியம் ஆகும்.
  • புரத மூலக்கூறின் பல Peptide காணப்படுவதால் இவை polypeptides எனப்படும்.

protin-2

  • புரத மூலக்கூறுகளின் அந்தங்களின் மென்னமில – COOH மென்மூல – NH2 பகுதிகள் காணப்படுவதால் இவை தாங்கற் செயற்பாட்டைக் காட்டும்.

 

தொகுப்பிற்குரிய பல்பகுதியம்

(1)Polyalkenes

Polythene

  • Ethene இனின் பல மூலக்கூறுகள் இணைந்து Polythene உருவாகும்.
    Repeat   [- CH2 – CH2-]

Polythene 2 வகைப்படும்.

(1) Low Densitty Polythene (LDPE)
200ºC யிலும் 1000atm  இலும் உயர்ந்த அமுக்கத்தில் ethene ன் பல மூலக்கூறுகள் இணைந்து தாழ் அடர்த்தி Polythene உருவாகும்.

(2)High Density Polythene (HDPE)
100ºC யிலும் தாழ்வெப்பநிலையிலும்,1000 atm அமுக்கத்திலும் தாழ்வான அமுக்கத்திலும் ethene பல மூலக்கூறுகள் இணைந்து உயர் அடர்த்தி Polythene ஐ உருவாக்கும்.

Polythene ன் இயல்புகள்:-
நிறமற்றவை,மணமற்றவை,சுவையற்றவை,நச்சுத்தன்மை அற்றவை,பாரம் குறைந்தவை,ஒப்பீட்டளவில் விலை குறைந்தது.

பயன்பாடு
(1) பதார்த்தங்களை பொதி செய்தல்.
(2) ஆசன மேலுறை
(3) குப்பைபோடும் பை
(4) போத்தல்கள்
(5) விளையாட்டு பொருட்கள்

Polypropene

n CH3– CH = CH2

பயன்பாடு
(1) மென்பான போத்தல்கள் தயாரிப்பு
(2) ஆய்வுகூட உபகரணம் தயாரிப்பு

Polystyreneபயன்பாடு:-
(1) இது ஒரு காவலியாகப் பயன்படுகிறது.
(2) பொதிசெய்யப்பயன்படுகிறது.
(3) இதுவொரு ஒளி ஊடுபுகவிடக்கூடிய பதார்த்தமாகும். இதன் தயாரிப்பின்போது திரவநிலையில் நுரை ஆக்கப்பட்டு திண்மமாக விடும்போது ரெஜிபோம் உருவாகும்.

(2)Poly vinyl chloride
screenshot-6

  • Poly vinyl chloride இல் chlorine காணப்படுவதால் எளிதிற் தீப்பற்றி எரியாது.
  • இதன் சங்கிலிகளுக்கிடையில் Polyalkene கள் போலல்லாது. வலிமைகூடிய இருமுனைவு,இருமுனைவு கவர்ச்சிவிசை காணப்படுவதால் இது வலிமை கூடியதாகும்.
  •  நிலைத்து நிற்கும் கருவி,நிரப்பும் கருவி ஆகியவற்றை உபயோகித்து பதனிடுவதன் மூலம் வேறு இயல்புகளைக் கொண்ட பதார்த்தங்களாக மாற்றமுடியும்.

பயன்பாடு:-
(1) PVC மின்காவலிக் குழாய்கள் தயாரிப்பு
(2) PVC நீரில் கரையும் தன்மையற்றதால் நீர்க்குழாய்கள் தயாரிக்க பயன்படும்.

Teflon – [polytetra fluro ethene]screenshot-7

இயல்புகள்:-
(1) Teflon ஈரநிலை திறனற்றது.
(2) சடத்துவமானது.
(3) எளிதில் தீப்பற்றி எரியாது.
(4) ஒட்டும் திறனற்றது.
(5) அரிப்புக்குள்ளாகாது.
(6) உயர் வெப்பநிலையைத் தாங்கக்கூடியது.

பயன்பாடு:-
(1) ஒட்டாத பாத்திரங்கள் தயாரிப்பு
(2) தீப்பிடிக்காத துணி செய்வதற்குப் பயன்படும்

PVA – Poly Vinyl Acrylatepva

இது பாரம் குறைந்த தெளிவான ஒளி ஊடுபுகவிடும் திண்மம்.

பயன்பாடு:-
(1) விமானங்களின் ஜன்னல்கள்
(2) வாகனங்களின் விளக்குகள்
(3) பார்வைக் கண்ணாடி வில்லைகள் தயாரிப்பு

Phenol – Formaldehyde Polymer

Phenol ஐயும் Formaldehyde ஐயும் con H2SO4 முன்னிலையில் வெப்பப்படுத்தப்படும்போது நீர்மூலக்கூறுகளை இழந்து குறுக்கிணைப்பு ஒடுங்கல் பல்பகுதியமான (Bakelite) உருவாகும். இதுவோர் முப்பரிமான வலைப்பின்னல் பல்பகுதியமாகும்.bakeliteபயன்பாடு:-
மின் ஆளிகள்,மின்காவலிகள்,தொலைபேசி,Radio cover போன்றவை தயாரிக்கப் பயன்படும்.

Urea – Formaldehyde Polymer

Formaldehyde  இல் urea வை கரைத்து con H2SO4 இடும்போது முப்பரிமான குறுக்கிணைப்பு பல்பகுதியமாக Urea – Formaldehyde  உருவாகும்.ufpபயன்பாடு:-
(1) Tray
(2) Stensil

Siliconஇயல்புகள்:-
பொதுவாக Silicon கள் இரசாயன ரீதியில்,

  1. நீர் வெறுக்கும் இயல்புடையவை
  2. வெப்பத்தடை உயர்வானது
  3.  மின்காவலியாகச் செயற்படும்.

Nylon

  • dicarboxylic acid  உம் di ammine களும் இணைந்து Nylon ஐக் கொடுக்கும். இதுவோர் நேர்ச்சங்கிலி ஒடுங்கற் பல்பகுதியமாகும். இப்பல்பகுதியம் உருவாகும் போது இடம்பெறும் ஒடுங்கலில் நீர் மூலக்கூறுகள் வெளியேறும்.

  • Nylon இல் பல amide கூட்டங்கள் காணப்படுவதால் இவை Polyamide கள் என அழைக்கப்படும். Nylon களை பெயரிடும் போது முதலில் diamide இல் காணப்படும். Carbon எண்ணிக்கையை குறிப்பிடல் வேண்டும்.
  • மேலே Nylon தயாரிப்பின் போது dicarbolic acid க்கு பதிலாக di acid chloride ஐ பயன்படுத்தலாம். இதன் போது உருவாகும் Nylon வலிமை கூடியதாக இருக்கும். அத்துடன் இவ் ஒடுங்கலின் போது HCl மூலக்கூறு வெளியேறும்.

பயன்பாடுகள்:-
(1) Nylon கயிறு,நூல்,மீன்பிடி வலைகள் தயாரிக்க பயன்படும்.
(2) காதணிகள்,இறுக்கமான ஆடைகள் தயாரிக்கப்படும்.

Polyester

di ol உம்,di carboxylic acid உம் செறிந்த H2SO4 முன்னிலையில் வெப்பப்படுத்தப்படும் போது பலமூலக்கூறுகள் இணைந்து Polyester ஐக் கொடுக்கும்.polyester

 

RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank