Please Login to view full dashboard.

தாக்கவீதம்

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 09:13am

ஓர்  அலகு நேரத்தில்  தாக்கிகள் / விளைவுகளின் செறிவில் ஏற்படும் மாற்றம்  ‘ தாக்கவீதம் ‘ எனப்படும்.

அலகு –  moldm-3s-1

 இரசாயன தாக்கமொன்றின் தாக்கவீதத்தை பாதிக்கும் காரணிகள்

  • செறிவு
  • அமுக்கம்
  • ஊக்கி
  • ஒளி
  • வெப்பநிலை
  • திண்மபொருட்களின் மேற்பரப்பு
  • செலுத்தப்பட்ட ஏற்றம்
  • கலக்குதல், குலுக்குதல்
  • கதிர் தொழிற்பாடு
தாக்க வீதவிதி
  • இரசாயன தாக்கமொன்றில் தாக்கவீதமானது தாக்கிகளின் செறிவுகள் சார்பாக குறிப்பிடப்படும் தொடர்பு அத்தாக்கத்தின் தாக்கவீதவிதி எனப்படும்.

kinetic 01

உதாரணம் :  x – தாக்கி  A சார்பான தாக்கவரிசை
y – தாக்கி  B சார்பான தாக்கவரிசை
தாக்கத்தின் மொத்த தாக்கவரிசை = x+y
k – தாக்கவீத மாறிலி

தாக்கவரிசை
  • தாக்கமொன்றின் தாக்க வரிசையை பரிசோதனை ரீதியாக மட்டுமே துணிய முடியும்.
  • தாக்கமொன்றில் குறித்த தாக்கி சார்பான தாக்க வரிசைக்கும் அத்தாக்கியின் பீசமான குணகத்திற்கும் பொதுத் தொடர்பு ஏதும் கிடையாது.
  • தாக்கமொன்றில் தாக்கவரிசையானது முழு எண்ணாகவோ /பூச்சியமாகவோ / பின்னமாகவோ இருக்கமுடியும். சில சிக்கலான தாக்கங்களில் தாக்கவரிசை மறைப்பெறுமானமாக இருக்கும்.
தாக்கவீத மாறிலி
  • தாக்கவீத மாறிலியின் அலகு தாக்கத்தின் மொத்த தாக்கவரிசையில் தங்கியிருக்கும்.

மொத்த தாக்க வரிசை                  தாக்கவீதமாறிலியின் அலகு         

0                                                                moldm-3s-1

1                                                                 s-1

2                                                                mol-1dm3s-1

3                                                                mol-2dm6s-1

தாக்கவீத மாறிலிகள் தங்கியுள்ள காரணிகள்  

வெப்பநிலை   

  • தாக்கமொன்றில் தாக்கிகளின் செறிவுகளை மாறாது பேணிக்கொண்டு வெப்பநிலையை அதிகரிக்கும் போது தாக்வீதம் அதிகரிக்கும்.
  • தாக்கவரிசை வெப்பநிலையில் தங்காது. ஆகவே, வெப்பநிலையுடன் தாக்கவீதம் அதிகரிக்க தாக்கவீதமாறிலி (k) அதிகரிக்க வேண்டும்.

01 ஏவற்சக்தி 

  • தாக்கமொன்றில் ஊக்கியானது ஏவற்சக்தியை குறித்து தாக்கவீதத்தை அதிகரிக்கச் செய்யும்.
  • ஏவற்சக்தி குறையும் போது தாக்கத்தின் வீதமாறிலி அதிகரிக்க வேண்டும்.

ஓரலகு நேரத்தில் இடம்பெறும் தாக்கமூலக்கூறுகளுக்கிடையேயான மோதுகை  

  • ஓரலகு நேரத்தில் இடம்பெறும் தாக்கமூலக்கூறுகளுக்கிடையெயான மோதுகை அதிகரிக்கும் போது  தாக்கவீதமும் அதிகரிக்கும்.                          
  • ஓரலகு நேரத்தில் இடம்பெறும்  தாக்க மூலக்கூறுகளின் மோதுகை அதிகரிக்கும் போது வீதமாறிலியும் அதிகரிக்கும். 

 சராசரி தாக்கவீதம் 

இரசாயன தாக்கமொன்று ஆரம்பித்து சிறிய நேர இடைவெளியின் பின் துணியப்படுவது  சராசரி தாக்கவீதம் ஆகும்.

ஆய்வுகூடத்தில் இரசாயன தாக்கமொன்றில் தாக்கிகள் சார்பான தாக்கவரிசையை துணிதல்

தாக்கம்  1:  Mg க்கும் HCl இற்கும் இடையிலான தாக்கத்தில் HCl சார்பான தாக்கவரிசையை துணிதல் 

Mg(s) + HCl (ag)  → MgCl2(aq) + H2(g)

செய்முறை :

  • குறித்த செறிவுடைய HCl கரைசலில் வெவ்வேறு கனவளவுகள் சோதனைக் குழாயில் பெறப்படும். தாக்கத்தில் மொத்த கனவளவு மாறாதிருக்கும் பொருட்டு நீர் சேர்த்தல் வேண்டும்.
  • ஒவ்வொரு சோதனைக் குழாயிலும் சமனான நீளம் கொண்ட (2cm) Mg நாடாவை பயன்படுத்த வேண்டும்.
  • ஒவ்வொரு சோதனையின் போதும் Mg நாடாவை தக்கையுடன் இணைத்து, சோதனைக் குழாயை மூட வேண்டும்.
  • தக்கையால் சோதனைக் குழாயை மூடி விரைவாக நீர்கொண்ட தாழியினுள் தாழ்த்தல் வேண்டும். இதன்போது நிறுத்தற் கடிகாரத்தை ஆரம்பிக்க வேண்டும்.
  • இறப்பர் வளையம் வரை ஐதரசன் வாயு பெறப்பட்டதும் நிறுத்தற் கடிகாரம் நிறுத்தி நேரம் அளக்கப்படும்.

02

 

 VHCl / cm3  2  4  6  8  10
 VH2O / cm3  18  16  14 12 10
 குறித்த கனவளவு H2(g) தோன்ற எடுக்கும் நேரம் / s  t1  t2  t3  t4  t5

கணித்தல் :    
kinetic 2

 

 

 

 

kinetic3

 

 

 

t = மாறிலியாயின்;  a = 0 ஆகும்.

kinetic 4

 

03

kinetic 5எதிர் t வரைபு உற்பத்திக் கூடாக செல்லும் நேர்கோடாயின்      a = 1 ஆகும்.

தாக்கம் 2:   Na2S2O3  இற்கு  HCl க்கும் இடையிலான தாக்கத்தில்   Na2S2O3 சார்பான தாக்கவரிசையை துணிதல்

Na2S2O3(aq) + 2HCl(aq) →  2NaCl(aq) + SO2(g) + S(s) + H2O(l)

  • Na2S2O3 சார்பான தாக்கவரிசையை துணிய குறித்த செறிவான   Na2S2O3 / HCl ஆகிய கரைசல்களை தயாரித்தல் வேண்டும்.
  • வெள்ளைத் தாளில் கறுப்பு நிற ‘x’ அடையாளம் இட்டு அதற்கு மேல் தெளிவான முகவையை வைத்து விரைவாக கலத்தல் வேண்டும்.
  • இதன்போது நிறுத்தற் கடிகாரத்தை ஆரம்பித்து ‘x’ அடையாளம் மறையும் போது நிறுத்தற் கடிகாரத்தை நிறுத்தி வாசிப்பை பெறல் வேண்டும்.
  • தாக்கு பொருட்களை ஒருமிக்க கலக்க இரு முகவையை பயன்படுத்த முடியும். ஒரு முகவையில்   Na2S2O3, H2O உம் இன்னொரு முகவையில் HCl உம் எடுக்கப்படும்.
     பரிசோதனை இல 0.5M V(Na2S2O3(aq)) 0.5M V(H2O(l)) V(H2O(l))  தர அடையாளம் மறைய எடுக்கும் நேரம்
     1  5  10  20  t1
     2 10  10  15  t2
     3  15  10  10  t3
     4  20  10  5  t4
     5  25  10  –  t5

kinetic 6

 

 

t = மாறிலியாயின்;  x = 0

V Na2S2O3 ∝ t =  மாறிலியாயின்;  x = 1

V[Na2S2O3 (aq)]² ∝ t =  மாறிலியாயின்;  x = 2

 

தாக்கம் 3 : I ஒட்சியேற்றுங்கருவி ஒன்றினால் (Fe3+) Iஆக ஒட்சியேற்றும் தாக்கத்தில் தாக்கி சார்பான தாக்கவரிசையை துணிதல் 


2Fe3+(aq) + 2I(aq) → I2(aq) + 2Fe2+(aq)
I2(aq) + 2Na2S2O3(aq) → Na2S4O6(aq) + 2NaI(aq)  

  • தாக்கத்தின் போது உருவாகும் I2 குறித்த அளவு செறிவு தோன்றியவுடன் மாப்பொருளுடன் நீலநிறத்தைக் கொடுக்கும்.
  • இதற்கு தேவைப்படும் நேரம் சிறியது. எனவே பரிசோதனை வழு  உயர்வானது.
  • இதற்காக ஆரம்பத்தில் தோன்றும் குறித்த அளவு அயடீன்(I2) Na2S2O இனால்  I  ஆக தாழ்த்தப்படும்.
  • இதற்காக ஒவ்வொரு பரிசோதனையிலும் சமஅளவு  Na2S2O3  ஐ சேர்க்க வேண்டும்.
  • பாத்திரத்தில் உள்ள  Na2S2O3  முழுவதும் முடிந்த பின்னர் சுயாதீன அயடீன் உருவாகும்.
  • I உருவாகும் தாக்கம் மெதுவாயும்  I2 ,  Na2S2O3  இனால்  I  ஆக தாழ்த்தப்படும் தாக்கம் விரைவாகவும் இருக்க வேண்டும்.
  • தாக்குபொருட்களை இரு வெவ்வேறு முகவைகளில் எடுத்து இருமுகவையிலும்  உள்ள தாக்குபொருட்களை ஒருமிக்க விரைவாக கலந்து நிறுத்தற் கடிகாரத்தை ஆரம்பிக்க வேண்டும்.
  • நீலநிறம் தோன்றும்போது நிறுத்தற் கடிகாரத்தை நிறுத்தி நேரம் அளக்கப்படும்.
  •  Na2S2O3   முழுவதும் முடிந்த பின்னரே சுயாதீன அயடீன் தோன்றும். இது மாப்பொருடன் நீலநிறத்தைக் கொடுக்கும்.
     பரிசோதனை இல  0.1moldm-3 VFeCl3(aq)  0.1moldm-3 VKI(aq) 0.05moldm-3 VNa2S2O3(aq)  VH2O(aq) 0.1moldm-3   VdillH2SO4(aq) மாப்பொருள் துளி நீலநிறம் தோன்ற எடுக்கும் நேரம்
     1  5  10  15  20  5  2  t1
     2  10   10  15  15  5  2  t2
     3  15   10  15  10  5  2  t3
     4  20   10  15  5  5  2  t4
     5  25   10  15  –  5  2  t5


04

kinetic 7

 

 

 

t = மாறிலியாயின்;  x = 0
V[FeCl3(aq)] × t = மாறிலியாயின்;  x = 1 ஆகும்
V[FeCl3(aq)]² × t = மாறிலியாயின்;  x = 2 ஆகும்

அரைவாழ்வுக் காலம் (t½)

இரசாயன தாக்கமொன்றில் குறித்த தாக்கி ஒன்றின் செறிவு அரை மடங்காக குறைய எடுக்கும் காலம் ஆகும்.

பூச்சியவரிசைத் தாக்கம்   

A → R 

R = [ A ]º

05

 

 

 

 

பூச்சியவரிசைத் தாக்கத்தில் அரைவாழ்வுக்காலம் தாக்கியின் ஆரம்ப செறிவில் தங்கிருக்கும்.

இரசாயன தாக்கமொன்றின் தாக்கவீத கொள்கைகள்
  • இரசாயன தாக்கமொன்றின் தாக்கவீதம் 2 பெரும் கொள்கைகள் மூலம் விளக்கப்படும்.                                                                       மோதுகைக் கொள்கை
    தாண்டல் நிலைக் கொள்கை

மோதுகைக் கொள்கை   

  • தாக்கமொன்று நிகழ்வதற்கு தாக்க மூலக்கூறுகள் பொருத்தமான திசைமுகத்தில் மோத வேண்டும்.
  • பொருத்தமான திசைமுகத்தில் மோதும் மூலக்கூறுகள் தாக்கத்திற்கு தேவையான ஏவற்சக்தியை கொண்டிருக்கும்.

ஏவற்சக்தி   

  • தாக்கமொன்று நிகழும்போது பொருத்தமான திசை முகத்தில் மோதிய மூலக்கூறுகள் விளைவை ஏற்படுத்த தேவையான ஆகக் குறைந்த சக்தி ஆகும்.
  • பொருத்தமான திசைமுகத்தில் மோதும் மூலக்கூறுகள் ஏவற்படுத்தப்பட்டு சிக்கலை உருவாக்கும். பின்னர் அச்சக்தியை இழந்து விளைவு உருவாகும்.

புறவெப்பத்தாக்கம்

06 அகவெப்பத்தாக்கம் 07

  • அகவெப்பத்தாக்கத்தில் எப்பொழுதும் தாக்க வெப்பஉள்ளுறையிலும் பார்க்க ஏவற்சக்தி உயர்வாகக் காணப்படும்.       Untitled-1

தாண்டல்நிலைக் கொள்கை  

  • பொருத்தமான திசைமுகத்துடன் தாக்கமூலக்கூறுகள் மோதும்போது ஒன்றின் இலத்திரன் முகிலை மற்றையதன் இலத்திரன் முகில் ஊடறுத்துச் சென்று மோதுவதற்கு தேவையான இயக்கச்சக்தியை கொண்டிருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் மோதும் மூலக்கூறுகள் மீளும்.
  • இரசாயனத் தாக்கமொன்று நிகழ்வதற்கு திசைமுகத்தில் மோதும் மூலக்கூறுகள் தேவையான அளவு இயக்கச்சக்தியை கொண்டிருக்கும்.
  • இதனால் இலத்திரன் முகிலை மற்றையதன் இலத்திரன் முகில் ஊடறுத்துச் சென்று மோதி புதியபிணைப்புக்கள் உருவாகி விளைவு பெறப்படும்.
தாக்கவீதத்தை பாதிக்கும் காரணிகளை மோதுகைக் கொள்கையால் விளக்கல்

வெப்பநிலை  

  • வெப்பநிலை அதிகரிக்கும்போது மூலக்கூறுகளின் கதி அதிகரிக்கும்.  இதனால் ஓரலகு நேரத்தில் இடம்பெறும் மோதுகைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் தாக்கவீதம் அதிகரிக்கும்.
  • மேலும் வெப்பநிலை அதிகரிக்கும்போது மூலக்கூறுகளின் இயக்கச்சக்தி அதிகரிப்பதால் ஏவற்சக்தியை தாண்டும் மூலக் கூறுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் தாக்கவீதமும் அதிகரிக்கும்.

செறிவு 

  • தாக்கிகளின் செறிவு அதிகரிக்கும்போது  ஓரலகு நேரத்தில் இடம்பெறும் மோதுகையும் அதிகரிக்கும். இதனால் தாக்கவீதமும் அதிகரிக்கும்.

ஊக்கி 

  • இரசாயன தாக்கம் ஒன்றிற்கு ஊக்கி இடும்போது அது ஏவற்சக்தியை குறைப்பதன் மூலம் தாக்க வீதத்தை அதிகரிக்கச் செய்யும்.
RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank