Please Login to view full dashboard.

பண்பறிரீதியான பகுப்பாய்வு – கற்றயன்கள்

Author : Admin

0  
Topic updated on 02/16/2019 07:29am

வீழ்ப்படிவாக்கல் மூலம் இனம் காணப்படும் கற்றயன்கள்

d7 , d8 ,d9 , d10 இலத்திரன் கட்டமைப்புடைய கற்றயன்களின் வீழ்படிவு மேலதிக அமோனியாவில் கரைந்து அவற்றின் உறுதியான சிக்கலயன்களை முறையே உருவாக்குகின்றன.
M2+(aq) + X2- (aq) → MX(s)
(d7) [Co(NH3)6]2+– மஞ்சள் கபிலம்                        (d10) [Zn(NH3)4]2+ – நிறமற்றது
(d8) [Ni(NH3)6]2+ – கருநீலம்                                     (d10) [Ag(NH3)2]+ – நிறமற்றது
(d9) [Cu(NH3)4]2+ – கருநீலம்                                    (d10) [Cd(NH3)4]2+ – நிறமற்றது

NH4+ இனங்காணல்

அமோனியம் உப்புக்கள் காரக் கரைசலுடன் (NaOH, KOH , Ca(OH)2 ) அமோனியா வாயுவை வெளிவிடுகின்றன.
உதாரணம் :- NH4Cl (s) + NaOH (aq) → NH3 (g) + Na+ (aq) + Cl (aq) + H2O (l)

NH3 + நெஸ்லரின் சோதனைப்பொருள் → கபிலநிற வீழ்படிவு / நிறம்

கற்றயன்களின் கலவையை பிரிப்பதற்கான படிமுறை

பண்பறி ரீதியான பகுப்பாய்வு வீழ்படிவு முறை மூலம் கற்றயன்களின் கலவையை பகுப்பாய்ந்து ஐந்து கட்டங்களாக பிரிக்கப்படுகின்றது. இப்பகுப்பாய்வு முறையானது தேர்வு வீழ்படிவாக்கல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

கூட்டம் 1

கற்றயன்களைக் கொண்ட கலவைக் கரைசலினுள் குளிர்ந்த ஐதான HCl கரைசலை மேலதிகமாக சேர்க்க.Ag+ , Pb2+, Hg22+ அயன்கள் மட்டும் கரைதிறன் அற்ற குளோரைட்டுக்களாக வீழ்படிவாக்கப்படுகின்றது.(AgCl , PbCl2 , Hg2Cl2)

கூட்டம் 2

கூட்டம் 1 இல் கரைதிறனற்ற குளோரைட்டுக்களை அகற்றிய பின் பெறப்படும் வடிதிரவம் தொடர்ந்தும் அமிலத் தன்மையுடையதாக இருக்கும். இவ்வடிதிரவத்தினூடாக H2S செலுத்தும் போது பின்வரும் சல்பைட்டுக்கள் மாத்திரம் வீழ்படிவாக்கப்படுகின்றன.
Pb2+ (aq) → PbS(s) (கறுப்பு)                              Sn2+ (aq) →  SnS(s) (கபிலம்)
Cu2+ (aq)→  CuS(s) (கறுப்பு)                              Sn4+ (aq) →  SnS2(s) (மஞ்சள்)
Hg2+ (aq) →  HgS(s) (கறுப்பு)                            Sb3+ (aq) →  Sb2S3(s) (செம்மஞ்சள்)
Bi3+ (aq)  → Bi2S3(s) (கறுப்பு)                           As3+ (aq) →  As2S3(s) (மஞ்சள்)
Cd2+ (aq) →  CdS(s) (மஞ்சள்)

வடிதிரவம் அமிலத் தன்மையானதாக இருப்பதால் ஐதரசன் அயன் செறிவு உயர்வாக உள்ளது. எனவே H+ பொது அயன் விளைவினால் H2S இன் கூட்டற் பிரிகை குறைக்கப்படுகின்றது. இதனால் கரைசலில் S2- செறிவு குறைக்கப்படுகின்றது. எனவே உயர் Ksp பெறுமானமுடைய Mn2+ , Zn2+ , Co2+ , Ni2+ அயன்கள் வீழ்படிவாதல் தடுக்கப்படுகின்றது.

கூட்டம் 3

கூட்டம் 2 இல் பெறப்படும் வடிதிரவத்தை கொதிக்க வைப்பதன் மூலம் கரைந்துள்ள H2S அகற்றப்படும். பின்னர் வடிதிரவம் சில நிமிடங்களுக்கு செறிந்த HNO3 உடன் கொதிக்கச் செய்யும் போது Fe2+ , Fe3+ ஆக ஒட்சியேற்றப்படுகின்றது. கரைசலுக்கு பின்னர் NH4Cl , NH4OH சேர்க்கப்படுகின்றது.
Fe3+ (aq) → Fe(OH)3 (s) (செங்கபிலம்)
Al3+ (aq) → Al(OH)3 (s) (வெண்ணிற வீழ்படிவு)
Cr3+ (aq) → Cr(OH)3 (s) (பச்சை)

கூட்டம் 4

கூட்டம் 3 இல் பெறப்படும் வடிதிரவம் OH ஐ கொண்டுள்ளது. மூல தன்மையுடையது. இக் கரைசலினூடாக OH முன்னிலையில் H2S ஐ செலுத்துக.H2S இலிருந்து பெறப்படும் H+ (aq) , OH (aq) இனால் நடுநிலையாக்கப்படும்.எனவே கரைசலில் S2- செறிவு அதிகரிக்கும்.
Zn2+ (aq) → ZnS (s)வெள்ளை
Mn2+ (aq) → MnS (s)இளம்சிவப்பு
Co2+ (aq) → CoS(s)கறுப்பு
Ni2+ (aq) → NiS (s)கறுப்பு

கூட்டம் 5

கூட்டம் 4 இல் பெறப்படும் வடிதிரவத்தை கொதிக்கச் செய்து H2S ஐ அகற்றிய பின் சிறிதளவு NH4Cl ஐயும் மேலதிக NH4OH ஐயும் சேர்க்கவும்.கரைசலை வெப்பமேற்றிய பின்னர் (NH4)2CO3 கரைசலைச் சேர்க்கவும். Ca2+, Sr2+ , Ba2+ அயன்கள் காபனேற்றுக்களாக வீழ்படிவுறும்.
Ca2+(aq) →  CaCO3 (s)(வெள்ளை)
Sr2+(aq) →  SrCO3 (s)(வெள்ளை)
Ba2+(aq) →  BaCO3 (s) (வெள்ளை)

RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank