Please Login to view full dashboard.

அவத்தைச் சமநிலை

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 05:30am
  • பாத்திரமொன்றினுள்  தூயதிரவம் காணப்படும்போது திரவ அவத்தையில் அசைந்து திரியும் மூலக்கூறுகள்  திரவமேற்பரப்புக்கு வரும்போது  இயக்கச் சக்தியானது நிலைச்சக்தியான மூலக்கூற்றிடை கவர்ச்சி விசையை  விஞ்சக்கூடியதாக  இருப்பின்  திரவ மேற்பரப்பை விட்டு வெளியேறும்.  இது ‘ ஆவியாதல்’ எனப்படும்.
  • ஆரம்பத்தில் ஆவியாதல் வீதம் உயர்வாகக் இருக்கும். நேரத்துடன் அது குறைந்து செல்லும்.
  • ஆவிமூலக்கூறுகள்  பாத்திரத்தின் சுவருடனும் தமக்குள்ளும் மோதுவதால் சக்தியை இழக்கும். எனவே அவை மீண்டும் திரவ நிலைக்கு மீளும். இது ‘ ஒடுங்கல் ‘ எனப்படும்.
  • ஆரம்பத்தில் ஒழுங்கல் வீதம் தாழ்வாகக் இருக்கும். நேரத்துடன் இது அதிகரித்துச் செல்லும்
  • ஒரு நிலையில் ஆவியாதல் வீதமும் ஒடுங்கல் வீதமும் சமனாகக் காணப்படும். இதுவோர் இயக்கச் சமநிலையாகும். இச்சமநிலை குறித்தவொரு பதார்த்தத்தின் வெவ்வேறு பௌதீக அவத்தையில் இடம்பெறுவதால் அவத்தைச் சமநிலை எனப்படும்.
  • அவத்தைச் சமநிலையில் ஆவிமூலக்கூறுகளால் திரவமேற்பரப்பில் உஞற்றப்படும் அமுக்கம் அவ்வெப்பநிலையில் அத்திரவத்தின் ‘ நிரம்பலாவி அமுக்கம் ‘ எனப்படும்.
    நிரம்பலாவி அமுக்கம் வெளி அமுக்கத்திற்குச் சமனாகும் போது திரவம் கொதிக்கும்.
    வெளி அமுக்கத்தை அதிகரிக்கும்போது திரவத்தின் கொதிநிலை அதிகரிக்கும். வெளி அமுக்கத்தை குழைக்கும்போது திரவகொதிநிலை குறையும்.
துவிதக்கரைசல்
  • இரண்டு ஆவிப்பறப்புடைய திரவங்களின் துவிதக் கரைசலில் ஆவியில் இருகூறுகளினதும் ஆவி காணப்படும்.
  • இக்கூறுகளின் ஆவியினால் திரவ அவத்தையில் உஞற்றப்படும் அமுக்கம், அக்கூறுகளின் ‘ பகுதி ஆவி அமுக்கம் ‘ எனப்படும்.
  • பகுதி ஆவி அமுக்கம் நிரம்பலாவி அமுக்கத்திலும் பார்க்க குறைவாகக் காணப்படும்.
இரவோற்றின் விதி
  • குறித்த வெப்பநிலையில் துவித இலட்சிய கரைசல் ஒன்று அதன் ஆவியுடன் சமநிலையில் உள்ளபோது கூறு ஒன்றின் ஆவி அமுக்க சார்பிறக்கம் திரவ அவத்தையில் மற்றைய கூறின் மூல்பின்னத்திற்குச் சமனாகும்.

Untitled-13

  • துவித இலட்சிய கரைசல் ஒன்று ஆவியுடன் சமனிலையில் உள்ள போது கூறு ஒன்றின் பகுதி ஆவி அமுக்கம் திரவ அவத்தையில் அக்கூறின் மூல்பின்னத்திற்கு நேர்விகித சமனாகும்.
    PA α xA
இலட்சிய கரைசல்

துவித கரைசல் ஒன்று எந்தவொரு அமைப்பிலும் இரவோற்றின் விதிக்கு முற்றாக இசைந்து நடக்குமாயின்  இலட்சியகரைசல்  எனப்படும்.

இலட்சிய கரைசல்களின் இயல்புகள் 

  • தூயநிலையில் ஒவ்வொரு கூறுகளினதும் மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசை, கரைசலின் இரண்டு மூலக்கூறுகளுக்கிடையிலான கவர்ச்சி விசைக்கு சமனாகக் காணப்படும்.
    FA – A = FB – B = EA – B
  • இலட்சிய கரைசல் ஆக்கத்தின் போது வெப்ப உள்ளுறை மாற்றம் நிகழாது.
    ΔHmix = o
  • இலட்சிய கரைசல் ஆக்கத்தில் கனவளவு மாற்றம் நிகழாது.
    ΔVmix = o
  • இலட்சிய கரைசல்களின் பௌதீக, இரசாயன இயல்புகள் பெருமளவில் ஒத்ததாகக் காணப்படும்.
    உதாரணம் :
  • H2O & D2O
  • CH2CH2OH & CH3OH
  • n Hexane &  n Heptane

13

இலட்சிய கரைசல் ஒன்றின் ஆவிஅமுக்க வரைபு 

14

இலட்சிய கரைசல் ஒன்றின் கொதிநிலை வரைபு

  • 15 கொதிநிலை அமைப்பு வரைபில் எப்பொழுதும் திரவ அமைப்பு வரைபுக்கு மேலே ஆவி அவத்தை வரைபு காணப்படும்.
பகுதிப்படக் காய்ச்சி வடித்தல்
  • ஒன்றையொன்று கலக்கும் திரவங்களை தூய கூறுகளாக பிரிக்க பகுதிபடக் காய்ச்சி வடித்தல் பயன்படும்.

16

  • ஓர் இலட்சிய கரைசல் L எனும் அமைப்பை உடையது எனில் இதனை கொதிக்க வைக்கும்போது T வெப்பநிலையில் கொதிக்கும்.
  • T1 கொதிநிலையில், திரவத்துடன் சமநிலையில் இருக்கும்.
  • ஆவியை ஒடுக்கும்போது அது M அமைப்பை கொண்டிருக்கும்.
  • இதனை மீண்டும் கொதிக்க வைக்கும்போது T2 வெப்பநிலையில் கொதிக்கும். இங்கு ஆவியின் அமைப்பு  N ஆக இருக்கும்.
  • இச்செயற்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளும்போது இறுதியில் ஆவியின் தூய A பெறப்படும். இது  பகுதிபடக் காய்ச்சி வடித்தல் எனப்படும்.
  • இவ்வாறு A முழுவதையும் கலவையில் இருந்து முற்றாக பிரித்தெடுப்பதற்கு காய்ச்சி வடித்தலை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். இதற்கு பகுதிபடுத்தும் நிரல் பயன்படும்.
  • காய்ச்சி வடிப்பு தொடர்ந்து நிகழும்போது வெப்பமானி, A யின் கொதிநிலையைக் காட்டும்.
  • A முழுவதும் வேறாக்கியவுடன் வெப்பமானியின் வாசிப்பு உயரும். உடனே காய்ச்சி வடிப்பைநிறுத்த வேண்டும். குடுவையில் மீதியாக B விடப்படும்.

17

விலகல் கரைசல்கள்
  • இரவோற்றின் விதியிலிரந்து விலகிச் செல்லும் கரைசல்கள் விலகல் கரைசல் எனப்படும்.
  • விலகல் கரைசல் 2 வகைப்படும்.
    • எதிர் விலகல் கரைசல்
    • நேர் விலகல் கரைசல்

எதிர் விலகல் கரைசல்

  • துவித கரைசல் ஒன்றின் ஆவியமுக்கம் இரவோற்றின் விதியால் கணிக்கப்பட்ட ஆவி அமுக்கத்திலும் குறைவாக இருப்பின் அது எதிர் விலகல் கரைசல் எனப்படும்.
    எதிர் விலகல் கரைசலில் தூய கூறுகளின்
  • மூலக்கூற்றிடையேயான கவர்ச்சி விசையிலும் பார்க்க கரைசலில் இரு கூறுகளினது மூலக் கூறுகளுக்கிடையிலான கவர்ச்சி விசை அதிகம்.        A – A, B – B < A – B
  • எதிர் விலகல் கரைசலாக்கத்தின் போது நலிவான மூலக்கூற்றிடை கவர்ச்சிவிசை உடையும். அதே நேரம் வலிமையான மூலக்கூற்றிடை கவர்ச்சி விசை உருவாகும்.
    இதனால் வெப்பம் வெளிவிடப்படும். (புறவெப்பத்தாக்கம்)
  • எதிர்விலகல் கரைசலாக்கத்தின் போது மூலக்கூறுகளுக்கிடையிலான கவர்ச்சி விசை உயர்வானது. எனவே கனவளவு குறைவு ஏற்படும்.
  • உதாரணம் :
    • HNO3 / H2O
    • H2SO4 / H2O
    • HCl / H2O

எதிர்விலகல் கரைசலின் ஆவியமுக்க அமைப்பு வரைபு  

18

எதிர்விலகல் கரைசலின் கொதிநிலை அமைப்பு வரைபு  

  • 19L எனும் அமைப்புடைய உயர் எதிர்விலகலைக் காட்டும் கரைசல் ஒன்றை பதிகுபட காய்ச்சி வடிக்கும் போது வடிதிரவத்தில் தூய A  பெறப்படும்.
  • அதேநேரம் குடுவையில் B யின் அமைப்பு அதிகரித்துச் சென்று அமைப்பு N ஐ அடையும்.
  • இங்கு திரவ அமைப்பும், ஆவி அமைப்பும் ஒத்ததாக இருக்கும். எனவே காய்ச்சி வடிப்பை தொடரமுடியாது. இவ்வாறான அமைப்பை உடைய கலவை உயர் கொதிநிலையையுடைய மாறா கொதிநிலைக் கலவை எனப்படும்.
  • M எனும் அமைப்பை உடைய கலவையை பகுதிபட காய்ச்சி வடிக்கும் போது வடிதிரவத்தில் தூய B யும் மிகுதியாகக் குடுவையில், N அமைப்பை உடைய மாறா கொதிநிலைக் கலவையும் பெறப்படும்.

நேர்விலகல் கரைசல் 

  • துவித கரைசல் ஒன்றின் ஆவிஅமுக்கம் இரவோற்றின் விதியால் கணிக்கப்பட்ட ஆவி அமுக்கத்திலும் உயர்வாக இருப்பின் அது நேர்விலகல் கரைசல் எனப்படும்.
  • தூயகூறுகளின் மூலக்கூறுகளுக்கு இடையிலான கவர்ச்சி விசையிலும் பார்க்க கரைசலில் அவ்விரு கூறுகளின் மூலக் கூறுகளுக்கிடையில் கவர்ச்சி விசையானது தாழ்வாகக் காணப்படும்.  A – A,  B – B >  A – B
  • உதாரணம் :
    • CH3COCH3  &  CS2
    • CH3CH2OH  &  H2O
    • C2H5NH2  &  H2O
  • நேர்விலகல் கரைசலாக்கத்தின் போது வலிமையான தூய கூறுகளில் மூலக்கூற்றிடை கவர்ச்சிவிசை உடையும். அதேநேரம் வலிமை குறைந்த மூலக்கூறுகளுக்கு இடையேயான மூலக்கூற்றிடை கவர்ச்சிவிசை உருவாவதால் வெப்பம் உறிஞ்சப்படும். அதாவது நேர்விலகல் கரைசலாக்கம் அகவெப்பத்திற்குரியது.
  • நேர்விலகல் கரைசலாக்கத்தின் போது உருவாகும் மூலக்கூற்றிடை கவர்ச்சி விசை நலிவானது. இதனால் கரைசலின் கனவளவு அதிகரிக்கும்.

நேர்விலகல் கரைசலின் ஆவியமுக்க அமைப்பு வரைபு                     

20

நேர்விலகல் கரைசலின் கொதிநிலை அமைப்பு வரைபு

21

  • L எனும் அமைப்பை உடைய உயர் நேர்விலகல் கரைசல் ஒன்றை தொடர்ச்சியாக  பகுதிபட காய்ச்சி வடிக்கும்போது ஆவியில் (வடிதிரவத்தில்)  M எனும் அமைப்பை உடைய மாறாக் கொதிநிலைக் கலவை பெறப்படும்.
  • குடுவையில் A யின் அமைப்பு உயர்ந்து சென்று இறுதியாக தூய A மிகுதியாக விடப்படும்.
NERNEST இன் பங்கீட்டு விதி

குறித்த வெப்பநிலையில் ஒன்றுடன் ஒன்று கலவாத திரவ கரைப்பான்களில் கரையம் ஒன்று கரைந்து இயக்க சமநிலையில் உள்ளபோது இருபடைகளிலும் கரையம் ஒரே மூலக்கூற்று நிபந்தனையில் இருக்குமாயின், அவ்விருபடைகளிலும் இக்கரையத்தின் செறிவுகளின் விகிதம் மாறிலி ஆகும். இது பங்கீட்டுக் குணகம் / பரவல் குணகம் (KD) எனப்படும்.

பங்கீட்டுக் குணகம் – KD

  • பங்கீட்டுக் குணகம் என்பது கரையமொன்று ஒன்றுடனொன்று கலக்காத இரண்டு திரவங்களுக்கு இடையில் பரம்பியிருப்பதற்கான சமநிலை மாறிலியாகும்.
  • ஒன்று கலங்காத இரண்டு திரவங்களை குலுக்கும் போது தற்காலிகமாக கலக்கின்றதாயினும், இறுதியில் அடர்த்தி கூடிய திரவம் கீழேயும் அடர்த்தி குறைந்த திரவம் மேலேயும் அமையுமாறு பிரியும்.
  • மாறா வெப்பநிலையில் ஒன்றுடனொன்று கலக்காத இரண்டு கரைப்பான்களுக்கு இடையே கரையமொன்று பரம்பி சமநிலையை அடைந்துள்ள போது கரைப்பான்களிரண்டும் இடையே கரையத்தின் செறிவுகளின் விகிதம் ஒரு மாறிலி ஆகும்.

Untitled-14

பங்கீட்டு விதியின் கட்டுப்பாடுகள்

  • வெப்பநிலை மாறிலியாக பேணப்பட வேண்டும்.
  • கரைப்பான்கள் ஒன்றுடன் ஒன்று கலக்கும் தகவு அற்றதாகவும் தாக்கமுறாததாகவும் இருக்க வேண்டும்.
  • சமநிலை அடைந்த பின்னரே சமநிலைச் செறிவுகளை துணியவேண்டும்.
  • இருபடைகளிலும் கரையச் செறிவு தாழ்வாக இருத்தல் வேண்டும்.
  • எந்தவொரு படையிலும் கரைப்பான் நிரம்பலடைய கூடாது.
  • இருகரைப்பானிலும் கரைய மூலக்கூறு ஒத்த மூலக்கூற்று நிபந்தனையில் இருக்க வேண்டும்.
  • கரையம் இணைக்கமோ / கூட்டற்பிரிகையோ அடையக்கூடாது.
RATE CONTENT 2, 1
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்
Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank