Please Login to view full dashboard.

நீர்

Author : Admin

6  
Topic updated on 02/14/2019 09:08am

அசேதன சேர்வை

நீர்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • நீர் H,O மூலகங்கள் காணப்படுகின்றன.
  • அவை H : O = 2 : 1 எனும் விகிதத்தில் காணப்படுகின்றது. எனவே, நீரின் மூலக்கூற்று சூத்திரம் H2O அதன் மூலக்கூற்று வடிவம்

water-2d-flat

  • இம் மூலக்கூற்று வடிவம் காரணமாக அதாவது ஒட்சிசனின் மின்னொதிரியல்பு காரணமாக நீர் மூலக்கூறில் இரு முனைவுத் தன்மை காணப்படுகின்றது.

  • ஒரு மூலக்கூறின் மூலகங்களுக்கிடையில் / அணுக்களுக்கிடையில் நேர், எதிர் ஏற்றங்கள் காணப்படின் முனைவாக்கத் தன்மை காணப்படும். நீரில் இரு H அணுக்களும் நேர்ஏற்றம் பெறுவதால் இது  இரு முனைவாக்கத் தன்மை எனப்படும்.
  • நீர் மூலக்கூறின் இரு முனைவாக்கற் தன்மையால் அடுத்துள்ள நீர் மூலக்கூறுக்கிடையில் கவர்ச்சி விசை ஏற்படுத்தப்படும். இக்கவர்ச்சி விசை பிணைவு விசை எனப்படும்.
  • இப்பிணைவு விசை காரணமாக அடுத்துள்ள நீர் கூலக்கூறுகளுக்கிடையில் ஏற்படுத்தப்படும் பிணைப்பு ஐதரசன் பிணைப்பு எனப்படும்.

நீரின் உயிரியல் முக்கியத்துவங்கள்

  • நீரில் காணப்படும் இரசாயன, பௌதீக இயல்பு காரணமாக உயிர் அங்கிகளில் நீர் பல பிரதான தொழில்களை ஆற்றுகின்றது
நீரின் இயல்பு உயிரிகளில் நீரின் பங்களிப்பு உதாரணம்
முனைவாக்கற் தன்மை சிறந்த கரைப்பானாக தொழிற்படுதல்
  • கலத்தின் முதலுருவிலும், கலச்சாறிலும் அனேக பதார்த்தங்கள் கரைந்து காணப்படல்
அறைவெப்பநிலையில் நீர் திரவமாக காணப்படல் முதலுருவின் ஊடகம்
  • முதலுருவின் 65 – 90% நீர் காணப்படுகின்றது
இரசாயன இயல்பு (H+,OH-ஆக பிரிகையடையும் தன்மை) அயனாக்கமடையும் தன்மை சில உயிர் இரசாயன செயன் முறைகளில் தாக்கியாக தொழிற்படுகின்றது (உயர் அனுசேப தாக்கங்களில் தாக்கியாக தொழிற்படல்)
  •  ஒளித்தொகுப்பு செயன்முறை

உயர் ஒட்டற்பண்பு, பிணைவு விசை கொண்டிருத்தல் கலங்களில் வீக்கத்தை பேணல் 

 

அங்கிகளில் பதார்த்தங்கள் கொண்டுசெல்லலும், தாவரங்களில் அகத்துறிஞ்சலும் கொண்டுசெல்லலும்

  1. கலவிரிவு
  2. பூண்டு தாவரங்களில் ஆதாரம் அளித்தல்
  3. வீக்க அசைவுகள் (தொட்டாற்சுருங்கி)
  4. காவற்கலத்தின் அசைவு
  5. பூக்கள் மலர்தல்
  • தாவரங்களில் நீரின் அகத்துறிஞ்சலும் சாற்றேற்றமும்.
  • தாவரங்களில் உணவு கொண்டு செல்லல்
  • மண் கரைசலிலிருந்து கனியுப்பு அகத்துறிஞ்சப்படல்
  • விலங்குகளில் குருதியூடாக பதார்த்தங்கள் கொண்டு செல்லல்
 உயர் தன்வெப்ப கொள்ளளவு (ஓர் அலகு திணிவுடைய நீரின் வெப்பநிலையை உயர்த்துவதற்கு அதிகளவு வெப்பம் வழங்கப்பட வேண்டும்) ஒரு குறித்தளவு வெப்பம் நீர் சூழலுக்கு வழங்கப்பட்டாலோ / இழக் கப்பட்டாலோ நீரில் வெப்பநிலை மாற்றம் ஏற்படாது
  • சகல விலங்குகளினதும் உடல் வெப்பநிலையை ஒரு சிறிய வெப்பநிலை வீச்சத்தினுள் பேணப்படுகின்றது
 உயர் ஆவியாதலின் மறை வெப்பம் 

(குறித்தளவு நீர் திரவத்திலிருந்து நீராவியாக மாறுவதற்கு கணிசமான வெப்பம் வழங்கப்பட வேண்டும்)

உடல் மேற்பரப்பில் குளிர்ச்சியை ஏற்படுத்தல்
  •  விலங்குகளில் வியர்த்தலின் போதும்
  • தாவரங்களில் ஆவியுயிர்ப்பின் போதும் குளிர்ச்சியை ஏற்படுத்தல்.
 உயர் மேற்பரப்பு இழுவிசை சில நீர்வாழ் பூச்சிகளுக்கு வாழிடம் வழங்கல்
  •  நீர்ச்சறுக்கி பூச்சி (நீர்படகோட்டி)
 உயர் உருகலின் மறைவெப்பம் உறையும் போது அதிகளவு வெப்பம் விரயமாக்கப்படுகின்றது,எனவே, நீர் உறைதல் தடுக்கப்படுகின்றது
  • நீர் சூழலிலும், கலங்களிலும் நீர் உறையாது திரவமாக காணப்படுகின்றது
உறையும்போது ஏற்படும் கனவளவு அதிகரிப்பு நீர் நிலைகள் உறையும் போது உருவாகும் பனிக் கட்டிகள் நீர் சூழலின் மேற்புரத்திலும் திரவ நிலையில் காணப்படும் நீர் அடியிலும் காணப்படும்
  • பனிக்காலங்களிலும் நீர்வாழ் அங்கிகள் தப்பி பிழைக்க கூடியதாக காணப்படல்
 ஒளி ஊடுபுகவிடும் தன்மை நீர் சூழலில் ஒளி செல்ல கூடியதாக இருத்தல்
  • நீர் தாவரங்களும், அல்காக்களும் குறித்த ஆழம் வரை வாழக்கூடியதாக இருத்தல்

அங்கிகளில் நீரின் பிரதான தொழில்களாவன :

  1. முதலுருவின் உள்ளடக்கம்
  2. கரைப்பான்
  3. தாக்கி
  4. விறைப்புத் தன்மை / வீக்கம் வழங்கல்

 

RATE CONTENT 5, 1
QBANK (6 QUESTIONS)

உயிர் தொகுதிகளை பொறுத்தவரையில் கீழ்க்காணும் கூற்றுக்களில் நீரைப் பற்றிய எது பிழையானது?

Review Topic
QID: 2901
Hide Comments(0)

Leave a Reply

தாவரங்களிலுள்ள நீரின் தொழில் அல்லாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 2938
Hide Comments(0)

Leave a Reply

இளஞ்சூட்டுக்குருதி நிலையான விலங்குகளில் உடல்வெப்ப நிலையைப் பேணுவதற்கு மிக நேரடியாக பொறுப்புடையது பின்வரும் நீரின் இயல்புகளில் எது?

Review Topic
QID: 3621

M

Hide Comments(0)

Leave a Reply

உயிர் தொகுதிகளை பொறுத்தவரையில் கீழ்க்காணும் கூற்றுக்களில் நீரைப் பற்றிய எது பிழையானது?

Review Topic
QID: 2901

தாவரங்களிலுள்ள நீரின் தொழில் அல்லாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 2938

இளஞ்சூட்டுக்குருதி நிலையான விலங்குகளில் உடல்வெப்ப நிலையைப் பேணுவதற்கு மிக நேரடியாக பொறுப்புடையது பின்வரும் நீரின் இயல்புகளில் எது?

Review Topic
QID: 3621

M

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank