Please Login to view full dashboard.

இழையுருப்பிரிவு

Author : Admin

6  
Topic updated on 02/16/2019 06:24am

இழையுருப்பிரிவு (Mitosis) என்பது மெய்க்கருவுயிரிகளின் கலங்களில் கலப்பிரிவு நடைபெறும்போது, ஒன்றையொன்று ஒத்த, ஒரே மாதிரியான இரு கலங்கள் உருவாவதுடன், ஒவ்வொரு உயிரணுவிலும் காணப்படும்நிறப்புரிகளும்,மரபியல் உள்ளடக்கமும் தாய் உயிரணுவை ஒத்ததாகக் இருக்குமாறும் நிகழும் செயல்முறையாகும். Youtube Video

முன்னவத்தை Image Tipmitosis-1 Please Login to view the Question 

  • இழையுருப்பிரிவில் நீண்ட அவத்தையாகும்.
  • நிறமூர்த்தங்கள் ஒடுக்கமடைவதால் குறுகித் தடிப்படையும். எனவே, இரட்டிப்பு அமைந்த நிலைமை நுணுக்குக்காட்டியின் ஊடாகத் தென்படும்.
  • இரட்டிப்பு அடைந்த நிறமூர்த்தத்தின் இரு அரைநிறவுருக்களும் மையப்பாத்தில் இணைந்து இருக்கும். அவ் அரை நிறவுருக்களுக்கிடையில் Cohesin புரதம் காணப்படும்.
  • புன்மையத்திகள் உடுவுருவைத் தோற்றுவிக்கும். அத்துடன் எதிர் முனைவுகள் நோக்கி அசையத் தொடங்கும். அவற்றுக்கிடையில் நுண்புன்குழாய் இழைகள் கதிர் வடிவில் தோற்றுவிக்கப்படும்.
  • கருவுறை சிறிய புடகங்களாக உடைந்து அழிவடையும்.
  • புன்கரு மறைவடையும்.
  • மையப்பாத்தின் இருபுறமும் கைனடோகோர் புரதம் உருவாக்கப்படும்.
  • இரட்டிப்படைய நிறமூர்த்தங்கள் கலத்தின் மத்திய கோட்டுப் பகுதி நோக்கி அசையும்.

அனுவவத்தை Image Tipmitosis-2 Please Login to view the Question

  • இரட்டிப்படைந்த நிறமூர்த்தங்கள் கலத்தின் மத்திய கோட்டுத் தளத்தில் நேராக அடுக்கப்படும்.
  • மையப்பாத்தின் இருபுறமும் கைனடோகோர் கதிர்நார்கள் இணைந்து இருக்கும்.
  • முனைக்கு முனை கதிர்நார்களும் காணப்படும்.
  • ஒரு கலத்தில் உள்ள நிறமூர்த்தத்தின் எண்ணிக்கையை அறிவதற்கு இவ் அவத்தை ஏற்றதாகும்.

மேன்முக அவத்தை Image Tipmitosis-3

  • நுண்புன்குழாய் நாரில் இருந்து ரிபியூலின் உபஅலகுகள் கழறுவதால் கதிர்நார் நீளத்தில் குறைவடையும்.
  • Cohesin புரதம் அழிவடையும்.
  • கதிர்நாரின் இருபக்க இழுவையால் மையப்பாத்து பிரிவடைந்து இரு அரை நிறவுருக்களும் வேறாக்கப்படும்.
  • தொடர்ந்து கதிர்நார் / நுண்புன்குழாய் குறுகுவதால் அரைநிறவுருக்கள் / நிறமூர்த்தங்கள் கலத்தின் முனைவு நோக்கி அசையும்.
  • இழையுருப்பிரிவில் இதுவே மிகவும் குறுகிய அவத்தையாகும்.

ஈற்றவத்தை Image Tipmitosis-4

  • கலத்தின் எதிர் முனைவுகளை அடைந்த நிறுமூர்த்தங்கள் மீண்டும் நீளத்தில் அதிகரித்து குரோமற்றின் வலையமைப்பாகத் தோன்றும்.
  • ஒவ்வொரு முனைவிலும் உள்ள நிறமூர்த்தத்தைச் சூழ கருவுறை உருவாக்கப்படும்.
  • புன்கரு மீண்டும் தோன்றும்.
  • கைனடோகோர் கதிர்நார்கள் மறைவடையும்.
  • பிறப்புரிமை ரீதியில் ஒத்த இரு மகட்கருக்கள் உருவாக்கப்படும்.
  • ஈற்றவத்தை முன்னவத்தைக்கு எதிரான நிகழ்வுகளை கொண்ட அவத்தையாகும்.
  • ஒரு தாய்க் கருவிலிருந்து பிறப்புரிமை ரீதியில் ஒத்த இரு மகட்கருக்கள் உருவாக்கப்படும் செயன்முறை இழையுருப்பிரிவு எனப்படும்.

குழியவுருப் பிரிவு Image Tipmitosis-5

  • இதில் குழியவுரு பௌதீக ரீதியாக பிரிக்கப்படுகின்றது.
  • கலப்புன்னங்கங்கள், குழியவுரு இரு சம பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது.
  • விலங்குக் கலத்தில் பிளவுசால் வழியே முதலுரு ஒடுக்கம் ஏற்படுகின்றது. இது அக்றின் இழைகளின் சுருக்கத்தால் நிகழ்கின்றது.
  • இறுதியில் பிறப்புரிமை ரீதியில் ஒத்த இரு மகட்கலங்கள் உருவாக்கப்படுகின்றது.

விலங்குக்கல தாவரக்கல இழையுருப்பிரிவு / கலவட்டம் இடையிலான வேறுபாடுகள்

தாவரக்கலம் விலங்குக்கலம்
புன்மையத்தி பங்கு கொள்வதில்லை புன்மையத்தி பங்கு கொள்ளும்
உடுவுரு தோற்றுவிக்கப்படுவதில்லை உடுவுரு தோற்றுவிக்கப்படும்
கலத்தட்டு உருவாக்கப்படும் கலத்தட்டு உருவாக்கப்படுவதில்லை
பிளவுசால் வழி குழியவுரு ஒடுக்கம் ஏற்படுவதில்லை பிளவுசால் வழி குழியவுரு ஒடுக்கம் ஏற்படும்
பிரியிழையப் பிரதேசங்களில் மட்டும் நடைபெறும் உடல் முழுவதும் நடைபெறும்

இழையுருப் பிரிவின் முக்கியத்துவங்கள் Please Login to view the QuestionPlease Login to view the Question 

  1. பிறப்புரிமை உறுதிப்பாடு பேணல் – இழையுருப்பிரிவு மூலம் பிறப்புரிமை ரீதியில் ஒத்த இரு மகட்கலங்கள் உருவாக்கப்படுகின்றன. எனவே, சந்ததிக்கு சந்ததி அதே இயல்புகள் பேணப்படுகின்றன. இது பிறப்புரிமை உறுதிபாடு / ஸ்திரத் தன்மை எனப்படும்.
  2. வளர்ச்சி – இழையுருப்பிரிவு மூலம் கலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதால் வளர்ச்சியில் பங்கு கொள்கின்றது.
  3. இலிங்கமில்முறை இனப்பெருக்கம் – இலிங்கமில்முறை இனப்பெருக்கத்தில் இழையுருப்பிரிவு பங்கு கொள்வதால் இதே இயல்புடைய சந்ததித் தனியன்கள் பெறப்படும்.
  4. கலப்பிரதீயீடு – தேய்வுற்ற / காயப்பட்ட வயதான கலப்புன்னங்கங்கள் இழையுருப்பிரிவின் மூலம் பெறப்படும் கலங்களால் பிரதியீடு செய்யப்படுகின்றது.
  5. அங்கங்களின் புத்துயிர்ப்பு – சில அங்கிகளில் இழக்கப்பட்ட உடல் பகுதிகள் இழையுருப்பிரிவு மூலம் மீண்டும் உருவாக்கப்படுகின்றன.Eg –  Star fish புயம்
RATE CONTENT 0, 0
QBANK (6 QUESTIONS)

இழையுருப்பிரிவில் நிறமூர்த்தங்கள் மத்தியகோட்டுத் தளத்திலிருந்து முனைவுகளுக்கு அசைவது,

Review Topic
QID: 3519
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் நிகழ்வுகளில் எது இழையுருப் பிரிவில் அனுவவத்தையில் நடைபெறுகின்றது?

Review Topic
QID: 3537
Hide Comments(0)

Leave a Reply

இழையுருப்பிரிவில் நிறமூர்த்தங்கள் மத்தியகோட்டுத் தளத்திலிருந்து முனைவுகளுக்கு அசைவது,

Review Topic
QID: 3519

பின்வரும் நிகழ்வுகளில் எது இழையுருப் பிரிவில் அனுவவத்தையில் நடைபெறுகின்றது?

Review Topic
QID: 3537
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank