Please Login to view full dashboard.

உயிர்ப்பல்வகைமைக்காப்பு

Author : Admin

33  
Topic updated on 02/14/2019 06:14am

உயிர்ப்பல்வகைமை Please Login to view the QuestionPlease Login to view the Question

அங்கிகளை தமது பகுதிகளாக உள்ளடக்கிய நீர், தரை, கடல் சார்ந்த சூழற்தொகுதிகளிலும் அவற்றிற்கிடையிலான சூழற்தொகுதிகளிலும் சூழற்தொகுதி சிக்கல்களிலும் உயிர் வாழும் அங்கிகளுக்கிடையிலான வேறுபாடுகளின் ஒட்டு மொத்தம் ” உயிர்ப் பல்வகைமை ” எனப்படும்.

உயிர்ப் பல்வகைமையில் 3 பிரிவுகளுண்டு.

  1. பிறப்புரிமை பல்வகைமை
  2. இனப் பல்வகைமை
  3. சூழற்தொகுதி பல்வகைமை
  • பிறப்புரிமையியற் பல்வகைமை
    • அங்கிகளின் ஒரு தனி இனத்துக்குள்ளான பாரம்பரிய வேறுபாடு, பிறப்புரிமையியற் பல்வகைமை எனப்படும்.
    • இப்பல்வகைமை சூழலில் ஏற்படும் மாற்றங்ளுக்கேற்ற இசைவாக்கங்களை அங்கிகள் பெற்றுக் கொள்ள உதவும்.
  • இனப்பல்வகைமை
    • ஒரு சூழலியற் சாகியத்தினுள் காணப்படுகின்ற இனங்களின் எண்ணிக்கையையும் அவ்வினங்களின் ஒப்பீட்டு ரீதியிலான நிலவுகையையும் உள்ளடக்கும் பல்வகைமையின் அளவீடு, இனப்பல்வகைமை எனப்படும்.
    • பிறப்புரிமையிய் பல்வகைமைக்கு மூலாதாரமாக இனப்பல்வகைமை அமையும்.

♦  இனம் : ஒரு இனத்தைச் சார்ந்த அங்கிகள் பல பொது இயல்புகளை கொண்டிருக்கும். ஒன்று / ஒன்றிற்கு மேற்பட்ட இயல்புகளில் மற்றைய அங்கியிலிருந்து வேறுபடும். தம்முள் இயற்கையாக இனங்கலப்பதன் மூலம் வளமான எச்சங்களை தோற்றவிக்கும்.
தற்போது அனைத்து பிரதான பாகுபாட்டு பிரிவுகளையும் சார்ந்த உயிர் வாழுகின்ற தாவர, விலங்கு இனங்களின் எண்ணிக்கை 30 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

  • சூழற்தொகுதி பல்வகைமை
    • உயிர் உலகு, வேறுபட்ட வாழிடங்கள், உயிர் வாழும் சாகியங்கள், சுற்றாடல் செயன்முறைகள் என்பவற்றை உள்ளடக்கியது சூழற்தொகுதி பல்வகைமை எனப்படும்.
    • பிறப்புரிமைப் பல்வகைமை ஏனைய பல்வகைமைகளிலும் பார்க்க கூடிய எண்ணிக்கையில் காணப்படும்.

காப்பிற்கான அவசியம் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • இயன்றவரை இனங்களினது நீண்டகால நிலவுகையை உறுதிப்படுத்துவது காப்பு நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும். அழிவடைவதற்கான ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இனங்களுக்குத் தொடர்ச்சியான நிலைபெறுகையையும் இனப்பெருக்கத்தையும் உறுதிப்படுத்தத்தக்கவகையில் காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல்வேண்டும்.
  • காப்பு இரு அடிப்படைமுறைகளில் மேற்கொள்ளப்படலாம்.

உள்நிலைக்காப்பு -In-Situ Conservation

  • இனம் அதனுடைய இயற்கையான வாழிடத்திலேயே காக்கப்படுவதுடன் அதன் இனப்பெருக்கத்திற்கான வசதிகளுமளிக்கப்படும். அடிப்படையில் போதிய குடித்தொகையும் அவற்றிற்குரிய போதுமான பொருத்தமான வாழிடப்பரப்பளவும் உறுதிப்படுத்தப்படும்
  • உதாரணம் : பாதுகாக்கப்பட்ட பிரதேசங்கள், சரணாலயங்கள், பாரம்பரிய வீட்டுத்தோட்டங்கள், தேசியப் பூங்காக்கள்
    இயற்கையான வாழிடங்களில் இனங்களை மீளப்புகுத்தல்

வெளிநிலைக்காப்பு – Ex-Situ Conservation

  • காப்புச் செய்ய வேண்டிய அங்கிகளின் நிலைபெறுகையையும், இனப்பெருக்கத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் அவற்றினுடைய இயற்கையான வாழிடங்களுக்கு வெளியே சமமான நிலைமைகளை சிறப்பாக உருவாக்கிய நிலையில் காப்புச் செய்தல்.
  • உதாரணம் : தாவரவியற் பூங்கா, விலங்கியற் பூங்கா, பரம்பரை அலகு களவங்கிகள், பற்றப்பட்ட நிலையில் விருத்தி செய்தல்
    (Captive breeding, பிறப்புரிமை மூலவள நிலையங்கள்)

உயிர்ப்பல்வகைமைக்காப்பின் பொருட்டான சமவாயங்கள், சட்டங்கள் என்பவற்றின் பிரதான பண்புகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

CITES ( Convention on International Trade in Endangered species of wild fauna and flora)

  • 1975முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இச்சமவாயத்தின் நோக்கம் இயற்கையான தாவரங்கள் விலங்குகளினது சர்வதேச வர்த்தகம், அவற்றின் நிலவுகைக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். இதன்படி சில இனங்களினது ஏற்றுமதி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டதாகவும், ஏற்றுமதி அனுமதிச்சான்றிதழைச் சமர்ப்பிப்பதாகவும் இருத்தல் வேண்டும். இச்சான்றிதழ் பெறப்படல் அவ்வினத்தின் நிலைபெறுகையின்பால் அதன் ஏற்றுமதித் தாக்கத்தை ஏற்படுத்தாத பட்சத்தில் மட்டுமே சாத்தியமானதாகும்.
  • இலங்கையிலிருந்தான சில உதாரணங்கள்.
    Loris tardigradis (Slender Loris) – தேவாங்கு
    Otter – நீர் நாய்
    Leopard – சிறுத்தைப் புலி

உயிர்ப்பல்வகைமை சமவாயம். (1992)

  • இதன் குறிக்கோள்களாவன :
    -உயிர்ப் பல்வகைமையை காப்புச் செய்தல்.
    – அதன் கூறுகளின் நீடித்து நிலைபெறும் பயன்பாடு.
    – பாரம்பரியவளங்களிலிருந்து கிடைக்கும் பயன்களை நியாயமான சமமான முறையில் பகிர்ந்து கொள்ளல்.

RAMSAR சமவாயம் (1971)

  • சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களைக் காப்புச் செய்வதுடன் தொடர்பான இச்சமவாயம் குறிப்பாக, ஈரமான வாழிடங்களைக் காப்பதுடன் சம்பந்தப்பட்டது. இலங்கையில் ஐந்து RAMSAR இடங்கள் காணப்படுகின்றன. புந்தல தேசிய பூங்கா, மாதுகங்கை சரணாலயம், ஆனைவிழுந்தான் குளச்சரணாலயம், வங்காலை சரணாலயம், குமண ஈரநிலம்.

விலங்குகள் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டம்

  • இச்சட்டவாக்கம் இலங்கையில் விலங்குகள், தாவரங்கள் என்பவற்றைப் பாதுகாப்பதற்காக 1937இல் உருவாக்கப்பட்டது. 1993இல் தாவர விலங்கு பாதுகாப்புச் சட்டமாகத் திருத்தப்பட்டது, சரணாலயங்களையும், தேசிய ஒதுக்குகளையும் அவை தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்கு இடமளிப்பதையும் கொண்ட சட்டமாகும்.

பேசல் சமவாயம் (Basel Convention)

  • இச்சமவாயம் நாடுகளின் எல்லைகளுக்கு குறுக்கான ஆபத்தான கழிவுகளினது கட்டுப்படுத்தலுடன் தொடர்பானது.
  • இதன் நோக்கம் மனித சுகாதாரத்தையும் சூழலையும் ஆபத்தான கழிவின் உருவாக்கத்தில் இருந்து பாதுகாப்பதும், நச்சுத் தன்மை மிக்க வெடிக்கும் இயல்புடைய அரிப்பை ஏற்படுத்தக் கூடிய தொற்றுதல் அடையக் கூடிய ஆபத்தான கழிவுகளின் உற்பத்தியை முகாமை செய்தல்.

மாபோல் சமவாயம் (Marpol Convention)

  • கப்பல்களினால் ஏற்படும் மாசாக்கலைத் தடுப்பதற்கான சமவாயம்.

மொன்றியல் வரைவேடு (Montreal Protocol) (1987)

  • ஓசோன் படையைத் வறிதாக்கம் செய்யும் பதார்த்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சமவாயம்.

கெயோட்டோ வரைவேடு (Kyoto Protocol)

  • காலநிலை மாறுபாடு தொடர்பான ஐக்கிய நாடுகள் சட்டக வரைபுடன் தொடர்புடைய சர்வதேச ஒப்பந்தம்.
  • 37 கைத்தொழில்மயமாகிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன பச்சைவீட்டு வாயுக்களினது (GHS) விடுவிப்பைக் கட்டுப்படுத்திக் கொள்வதுடன் தொடர்பானது. இந்த அளவு 1990களில் வெளிவிடப்பட்ட அளவின் 5% மாகக் குறைவடையச் செய்வதுடன் தொடர்பானது. இது 2008 முதல் 2012 இற்கு இடைப்பட்ட 5 வருடகாலப் பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை.

தேசிய சுற்றாடல் சட்ட வரைபு

  • இந்த சட்ட வரைபு ஏற்பாடுகளின் கீழ், 1980இல் மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) ஸ்தாபிக்கப்பட்டது.
  • இது சுற்றாடல் அனுமதிகளை வழங்குவதன் மூலமும் அபிவிருத்திச் செயற்றிட்டங்களில் சுற்றாடல் பாதிப்பு தொடர்பான கணிப்பீட்டுத்திட்டங்களை மதிப்பீடுசெய்து அனுமதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலமும் மாசடைதலைக் கட்டுப்படுத்துவதற்கான பரந்துபட்ட அதிகாரங்களைக் கொண்டது.

இயற்கை வளங்கள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • சுற்றாடல் வளங்களினது நீடித்து நிலைபெறும் பயன்பாட்டின் தேவை அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுவதும் பொருளாதார அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்வதுமான இயற்கையாகக் காணப்படும் பதார்த்தங்களும் சக்தியும் இயற்கை வளங்களாகும்.
  • உயிருள்ளவை அல்லது உயிரற்றவை
  • மீளப் புதுப்பிக்கக் கூடியவை அல்லது மீளப்புதுப்பிக்க முடியாதவை.
  • மீள் சுழற்சி செய்யக் கூடியவை அல்லது மீள்சுழற்சி செய்ய முடியாதவை
  • நிரந்த வளங்கள் அல்லது தீர்ந்துபோகக் கூடிய வளங்கள்

 

RATE CONTENT 0, 0
QBANK (33 QUESTIONS)

பின்வரும் காப்பு முறைகளுள் உள்நிலை  (in – situ)  முறை எது?

Review Topic
QID: 8579
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் பின்வரும் சூழற்றொகுதிகளிடையே உயிர்ப் பல்வகைமை குறித்துச் சட்டத்தினால் பாதுகாக்கப்படு வது எது / எவை?

Review Topic
QID: 8601
Hide Comments(0)

Leave a Reply

வெப்பநிலை (ex – situ  ) காப்பு முறையாகக் கருதப்படாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8605
Hide Comments(0)

Leave a Reply

நீடித்து நிலைபெறும் அபிவிருத்தியை மிக நன்றாக வரைவிலக்கணப்படுத்துவது

Review Topic
QID: 8634
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் உயிரற்ற புதுப்பிக்கப்படத்தக்க வளம் எது?

Review Topic
QID: 8639
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையினால் கைச்சாத்திடப்பட்ட சில சர்வதேச சமவாயங்களும் வரைவேடுகளும் பின்வரும் அட்டவணையின் நிரல் I  இல் தரப்பட்டுள்ளன. இச்சமவாயங்களினாலும்
வரைவேடுகளினாலும் குறிப்பிடப்படும் சூழற் பிரச்சினைகள் அட்டவணையின் II    இல் தரப்பட்டுள்ளன?

 

A,B,C,D என்னும் சமவாயங்களினால் / வரைவேடுகளினால் குறிப்பிடப்படும் சூழற்பிரச்சினைகளின் சரியான ஒழுங்கு
 

 

Review Topic
QID: 8660
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

Review Topic
QID: 8669
Hide Comments(0)

Leave a Reply

பிறப்புரிமைப் பல்வகைமைக்கு மிகச் சிறந்த உதாரணமாக அமைவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8677
Hide Comments(0)

Leave a Reply

உயிரினமண்டலத்தின் சக்திப் பாய்ச்சல் தொடர்பாகச் சரியானது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8685
Hide Comments(0)

Leave a Reply

மண் ஆனது

Review Topic
QID: 8725
Hide Comments(0)

Leave a Reply

உலகளாவிய காலநிலை மாற்றத்துடன் சம்பந்தப்பட்ட  சர்வதேச சமவாயங்கள் /வரைவேடுகள் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8743
Hide Comments(0)

Leave a Reply

இவ்வினா இயற்கை வளங்கள் தொடர்பான பின்வரும்  கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

(A) தீர்ந்து போகாத வளங்கள் யாவும் உயிரற்றவை.

(B)மீள்சுழற்சி அடையக்கூடிய வளங்கள் யாவும்  உயிரற்றவை.

(C)புதுப்பிக்கப்படக்கூடிய வளங்கள் யாவும்  உயிருள்ளவை.

(D)உயிருள்ள வளங்கள் யாவும்  புதுப்பிக்கப்படக்கூடியவை.

(E) உயிரற்ற வளங்கள் யாவும் மீள்சுழற்சி  அடையக்கூடியவை.

மேற்குறிப்பிட்ட கூற்றுகளில் சரியானவை எவை?

Review Topic
QID: 8751

 

 

 

 

 

Hide Comments(0)

Leave a Reply

இலங்கையின் சுற்றாடலைப் பாதுகாப்பதற்குப்  பெருமளவில் உதவிய சட்டங்களும் சமவாயங்களும் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8783
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் காப்பு முறைகளுள் உள்நிலை  (in – situ)  முறை எது?

Review Topic
QID: 8579

இலங்கையில் பின்வரும் சூழற்றொகுதிகளிடையே உயிர்ப் பல்வகைமை குறித்துச் சட்டத்தினால் பாதுகாக்கப்படு வது எது / எவை?

Review Topic
QID: 8601

வெப்பநிலை (ex – situ  ) காப்பு முறையாகக் கருதப்படாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8605

நீடித்து நிலைபெறும் அபிவிருத்தியை மிக நன்றாக வரைவிலக்கணப்படுத்துவது

Review Topic
QID: 8634

பின்வருவனவற்றில் உயிரற்ற புதுப்பிக்கப்படத்தக்க வளம் எது?

Review Topic
QID: 8639

இலங்கையினால் கைச்சாத்திடப்பட்ட சில சர்வதேச சமவாயங்களும் வரைவேடுகளும் பின்வரும் அட்டவணையின் நிரல் I  இல் தரப்பட்டுள்ளன. இச்சமவாயங்களினாலும்
வரைவேடுகளினாலும் குறிப்பிடப்படும் சூழற் பிரச்சினைகள் அட்டவணையின் II    இல் தரப்பட்டுள்ளன?

 

A,B,C,D என்னும் சமவாயங்களினால் / வரைவேடுகளினால் குறிப்பிடப்படும் சூழற்பிரச்சினைகளின் சரியான ஒழுங்கு
 

 

Review Topic
QID: 8660

பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

Review Topic
QID: 8669

பிறப்புரிமைப் பல்வகைமைக்கு மிகச் சிறந்த உதாரணமாக அமைவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8677

உயிரினமண்டலத்தின் சக்திப் பாய்ச்சல் தொடர்பாகச் சரியானது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8685

மண் ஆனது

Review Topic
QID: 8725

உலகளாவிய காலநிலை மாற்றத்துடன் சம்பந்தப்பட்ட  சர்வதேச சமவாயங்கள் /வரைவேடுகள் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8743

இவ்வினா இயற்கை வளங்கள் தொடர்பான பின்வரும்  கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

(A) தீர்ந்து போகாத வளங்கள் யாவும் உயிரற்றவை.

(B)மீள்சுழற்சி அடையக்கூடிய வளங்கள் யாவும்  உயிரற்றவை.

(C)புதுப்பிக்கப்படக்கூடிய வளங்கள் யாவும்  உயிருள்ளவை.

(D)உயிருள்ள வளங்கள் யாவும்  புதுப்பிக்கப்படக்கூடியவை.

(E) உயிரற்ற வளங்கள் யாவும் மீள்சுழற்சி  அடையக்கூடியவை.

மேற்குறிப்பிட்ட கூற்றுகளில் சரியானவை எவை?

Review Topic
QID: 8751

 

 

 

 

 

இலங்கையின் சுற்றாடலைப் பாதுகாப்பதற்குப்  பெருமளவில் உதவிய சட்டங்களும் சமவாயங்களும் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8783
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank