Please Login to view full dashboard.

நுண்ணுடல்களும்,குழியவன்கூடும்

Author : Admin

5  
Topic updated on 02/14/2019 09:37am
  • இயூகரியோற்றா தாவர, விலங்குக் கலங்களில் காணப்படும்.
  • அமைப்பு : தனி மென்சவ்வால் சூழப்பட்ட ஒட்சியேற்றும் நொதியங்களை கொண்ட கோளப்புடகங்கள் ஆகும்.
  • இதில் உள்ள ஒட்சியேற்றும் நொதியங்கள் H அணுவிலுள்ள en ஐ அகற்றுகின்றன.
  • 02 வகையான நுண்ணுடல்கள் காணப்படுகின்றன.
  1. Glyoxysome  Image Tip : தாவரங்களில் மட்டும் காணப்படுகின்றது. பொதுவாக இலிப்பிட்டை சேமிப்பாக கொண்டுள்ள வித்துகளில் காணப்படுகின்றது.
    தொழில் : இதில் உள்ள நொதியம் இலிப்பிட்டை காபோவைதரேற்றாக மாற்றமடையச் செய்யும்.
  2. Peroxysome Image Tip: தாவர, விலங்குக் கலங்களில் காணப்படும். இதனுள் Catalase எனும் ஒட்சியேற்றும் நொதியம் உண்டு. இவ்நொதியம் அனுசேபத்தில் உருவாகும் H2O2 ஐ H2O,O2 வாக உடைத்து நஞ்சு நீக்குகின்றது.இது அதிகளவில் ஈரல் கலம், சிறுநீரகக் கலங்களில் காணப்படுகின்றது. அத்துடன் அற்ககோல் மருந்துகளையும் நஞ்சு நீக்குகின்றது.

தொழில் :    H2O2 இன் நச்சு நீக்கல்

தாவரக் கலங்களில் ஒளிச்சுவாசம்

 

புன்வெற்றிடம்

  • இது இயூகரியோற்றிக் தாவர, விலங்குக் கலங்களில் காணப்படும்.
  • விலங்குக்கலங்களில் ஒப்பீட்டளவில் மிகச் சிறிய புன்வெற்றிடம் காணப்படும். உணவுப் புன்வெற்றிடம், சுரத்தல் புன்வெற்றிடம், சுருங்கத்தக்க புன்வெற்றிடம் ஆகியன காணப்படுகின்றன.
  • தாவரங்களில் இழுவிசை இரசணையினால் சூழப்பட்ட திரவத்தால் நிரப்பப்பட்ட பெரிய கட்டமைப்பாகக் காணப்படுகின்றன.
  • இதன் கலச்சாறில் வெல்லம் (சுக்குரோசு), அயன்கள், நீர், நொதியங்கள், கனியுப்புக்கள், சாற்று நிறப்பொருட்கள் (அந்தோசயனின்), கழிவுப் பதார்த்தங்கள் (தனின்), வாயுக்கள் (O2,CO2)இ கல்சியம் ஒக்சலேற்று, இனூலின் காணப்படுகின்றன.
  • தொழில்கள்
  1. கலத்தின் நீர் சமனிலை பேணல்.
  2. கலத்திற்கு விறைப்பு தன்மையும், உறுதியும் கொடுக்கும்
  3. சாற்று நிறப்பொருட்கள் சில தாவரங்களுக்கு நிறத்தைக் கொடுக்கும். உ – ம் – பீற்றூட்
  4. கலத்தொழிற்பாட்டிற்கு வேண்டிய கரையக் கூடிய பதார்த்தங்களை சேமிக்கும்
குழியவன்கூடு [qpop id=2583][qpop id=2596]
  •  structure-of-centrioleஇயூகரியோற்றா குழியவுருவில் நுண்புன்குழாய், நுண்இழை, இடைநிலை இழை என்பவற்றினால் ஆக்கப்பட்ட தேவை ஏற்படும்போது உடைக்கப்பட்டு மீண்டும்  தோற்றுவிக்கக் கூடிய முப்பரிமாண சாலகக் கட்டமைப்பு ஆகும்.
  • தொழில் –
  1. குழியவுருவிற்கு உறுதியை வழங்கல்
  2. கலப்புன்னங்கங்களுக்கு ஆதாரம் வழங்கல்
  3. தேவை ஏற்படும்போது நிறமூர்த்தங்கள், கலப்புன்னங்கங்களை இடம்பெயரச் செய்தல் / அசைதல்
  4. குழியவுரு ஒட்டம்

நுண்புன்குழாய்

  • 25nm விட்டமுடைய குழாயுருவான நீண்ட உருளையான கிளைவிடாத ரிபியூலின் புரதத்தால் ஆன இழை.
  • தொழில் –
  1. குழியவன்கூடு ஆக்கத்தில் பங்கு கொள்ளல்
  2. புன்மையத்தி, பிசிர், சவுக்குமுளை, அடிச்சிறுமணி ஆகிய புன்னங்கங்களை ஆக்கல்
  3. கலப்பிரிவின் போது நிறமூர்த்தங்களை அசைத்தல்
  4. கல அசைவிற்கு உதவுதல்
  5. கலத்தினுள் பதார்த்தத்தின் அசைவு

நுண்இழை

  • 7nm விட்டமுடைய திண்மமான அக்ரின் புரதத்தால் ஆன நீண்ட உருளைக் கிளைவிடாத அமைப்பு
  • தொழில் –
  1. குழியவன்கூட்டின் கூறு
  2. முதலுரு ஒட்டம் / குழியவுரு ஒட்டம்
  3. கலப்பிரிவின் போது பிளவுசால் தோன்ற
  4. போலிப்பாதம் உருவாக்குவதில் பங்குகொள்ளல்
    (அமீபா, WBC)

நடுத்தர இழை

  • கரட்டீன், Vimetin புரதங்களால் ஆன குழாயுருவான 8 – 10 nm விட்டமுடைய புரத இழையாகும்.
  • தொழில் –
  1. குழியவன் கூடு
  2. கலவடிவம் பேணல்
புன்மையத்தி

  • இயூகரியோற்றா விலங்குகளின் குழியவுருவில் கருவிற்கு அண்மையாகக் காணப்படும் கலப்புன்னங்கம்.
  • தாவரக் கலத்தில் காணப்படுவதில்லை.
  • இது எப்போதும் சோடியாக அவை இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்தாகக் காணப்படும்.
  • இவ்விரு சோடிளும் ஒருமித்து மையமூர்த்தம் எனப்படும்.
  • ஒவ்வோர் புன்மையத்தியும் சிறிய குழாயுருவான உருளை அமைப்புடையது
  • இதன் சுவர் நுண்புன்குழாய்களால் ஆனது.
  • மென்சவ்வால் சூழப்படாத ஒரு புன்னங்கம்
  • நுண்புன்குழாய்கள் 9 கட்டுக்களில் ஒவ்வொரு கட்டிலும் மூன்றாக நீளப்பாட்டிற்கு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்.
  • நுண்புன்குழாய்களின் ஒழுங்கமைப்பு 9+0 எனக் குறிப்பிடப்படும்.
  • தொழில் : விலங்குக்கலத்தில் கலப்பிரிவின் போது உடுவுரு, கதிர்நார்களை தோற்றுவித்து நிறமூர்த்தத்தை அசைக்கும்.
அடிச்சிறுமணி, பிசிர், சவுக்குமுளை [qpop id=919]

  • அடிச்சிறுமணி புன்மையத்தியின் அதே அமைப்பை ஒத்தது. ஆனால் குழியவுருவில் தனியாக காணப்பட்டு பிசிர், சவுக்கு முளையை உருவாக்குவது.
  • எனவே, எப்போதும் இயூகரியோற்றிக் பிசிர், சவுக்குமுளை அடிச்சிறுமணியுடன் இணைக்கப்பட்டது.
  • அடிச்சிறுமணியிலிருந்து நுண்புன்குழாய்களின் 9(2)+2 அமைப்பால் உருவாக்கப்படுவதும் முதலுரு மென்சவ்வால் சூழப்பட்ட கலப்புன்னங்கங்கள் பிசிர்ச,வுக்குமுளையாகும்.
  • இவை நுண்புன்குழாய்களால் ஆக்கப்பட்டவை. நுண்புன்குழாய்கள் ஒழுங்கமைப்பில் ஒத்தவை. ஆனால், சவுக்குமுளை ஒப்பீட்டளவில் நீண்டவை.
  • இவை கலத்தின் வெளி நீட்டங்களாக காணப்படுகின்ற இடப்பெயர்ச்சி கட்டமைப்புகளாகும்.
  • தொழில்கள் :
  1. இடப்பெயர்ச்சிக்கு உதவுதல் – பிசிர், சவுக்குமுளை
  2. சுவட்டுகளின் ஊடாக சீதத்தை அசைத்து பதார்த்தங்களை அசைக்க உதவும். – பிசிர்
  3. சில நீர்வாழ் விலங்குகளில் வடித்துண்ணல் – பிசிர்
RATE CONTENT 0, 0
QBANK (5 QUESTIONS)

பிசிர்களைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுக்களில் பிழையானது எது?

Review Topic
QID: 2627
Hide Comments(0)

Leave a Reply

விலங்குக் கலம் ஒன்றில் உள்ள நுண்சிறுகுழாய்கள் பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது திருத்தமானதன்று?

Review Topic
QID: 3268
Hide Comments(0)

Leave a Reply

பிசிர்களைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுக்களில் பிழையானது எது?

Review Topic
QID: 2627

விலங்குக் கலம் ஒன்றில் உள்ள நுண்சிறுகுழாய்கள் பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது திருத்தமானதன்று?

Review Topic
QID: 3268
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank