Please Login to view full dashboard.

உயிர்ப்பல்வகைமை இழப்பு

Author : Admin

42  
Topic updated on 02/14/2019 05:56am

உயிர்ப்பல்வகைமை இழப்பிற்கு இட்டுச் சென்ற பிரதான மனித நடவடிக்கைகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

வாழிடங்கள் இழக்கப்பட்டமையும் துண்டாடப்பட்டமையும்

  • வர்த்தகம், விவசாயம், கைத்தொழில், மனிதக்குடியிருப்பு போன்ற மனிதத் தேவைகளுக்காகக் காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டமையால் உயிர்ப்புவியிரசாயன வட்டங்கள் பாதிக்கப்பட்டு அதனால் இனங்கள் பாதிக்கப்பட்டன. இது உயிர்ப்பல்வகைமை இழப்புக்கு வழிவகுத்தது.

ஆக்கிரமிப்பு இனங்கள்.

  • அறிமுகப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருந்து மேலும் பரவிச் சென்று புதிய இடங்களில் ஸ்தாபிதம் அடைந்து, அவ்விடங்களில் உள்நாட்டுக்குரிய உயிர்ப்பல்வகைமையில் பாதிப்பை ஏற்படுத்தும் தேசிய இனங்கள் அல்லாத இனங்கள் ஆக்கிரமிப்பு இனங்கள் எனப்படும்.
  • தேசிய இனங்கள் அல்லாத ஆக்கிரமிப்பு இனங்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சூழற்றொகுதிகளில் ஏற்படுத்தி, சூழல் சமநிலைகளில் பாதிப்பையும் பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்த வல்லவையாகும். ஆக்கிரமிப்பு இனங்களின் அறிமுகமானது தற்செயலானதாகவோ, தேவை கருதியோ ஏற்பட்டதாக இருக்கலாம்.
  • இலங்கையின் ஆக்கிரமிப்பு இனங்களிற்கான உதாரணங்கள்.
    Lantana camara (நாயுண்ணி )
    Mimosa pigra (இராட்சத தொட்டாற்சுருங்கி)
    Eichornia crassipes (குளவாழை)
    Chitala chitala (clown knife fish )
    Parthenium hysterophorus ( காங்கிரஸ் களை)

தாவர விலங்கினங்களினது மிகை நுகர்வு

  • பிரதானமாக மனித உணவின் பொருட்டு பல தாவர விலங்கினங்கள் மிகையாக பயன்படுத்தப்படுகின்றன. முதலைகளும், மலைப்பாம்புகளும் அவற்றின் தோலுக்காக பயன்படுத்தப்படுகின்றன. யானைகள் தந்தத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மூலிகைகள் மருத்துவப் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகின்றன.

மாசடைதல்

  • நீர், மண், வளி மாசடைதல் காரணமாக, சூழற்றொகுதிகளினது தொழிற்பாடுகள் பாதிக்கப்பட்டு உணர்திறன் மிக்க இனங்கள் அகற்றப்படுகின்றன/ குறைக்கப்படுகின்றன.

உலகளாவிய காலநிலை மாற்றம்

  • மனித நடவடிக்கைகள் காரணமாக,வளிமண்டலத்தில் பச்சை வீட்டு வாயுக்கள் அதிகரித்துள்ளமையினால், உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இதனால் சூழற்றொகுதியில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சூழற்றொகுதிகளில் காலநிலை மாற்றங்களுக்கு விரைவாக இசைவாக்கமடைய முடியாத இனங்கள் அழிவடைய நேரிடும்.

விவசாயத்தினால் ஏற்படும் பாரம்பரிய இழப்புக்கள்

  • நவீன விவசாயத்தில் தாவரங்களினதும், விலங்குகளினதும் உயர் விளைச்சலைத் தரக்கூடிய ஒரு சில வர்க்கங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இது பாரம்பரியப் பல்வகைமை இழப்பிற்கு இட்டுச் செல்லும். வாழிடங்களை இழத்தல், பாரம்பரிய வர்க்கங்கள் செய்கையில் விலக்கப்பட்டமை என்பன பாரம்பரியவளங்களின் இழப்பிற்கு அல்லது பாரம்பரியப்பல்வகைமை இழப்பிற்கு வழிவகுத்தன.
உயிர்ப்பல்வகைமை செழிப்புமையங்கள்
  • Myers இனால் 1988 இல் உள்நாட்டுக்குரிய இனங்களைப் பெருமளவில் கொண்டிருக்கின்றதும், அசாதாரண மட்டத்தில் ஆபத்துக்களை எதிர்நோக்கி இருக்கின்றதுமான இடம் உயிர்ப்பல்வகைமை செழிப்பு மையங்கள் எனப்பெயரிடப்பட்டன.
  • இவற்றுள் இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் துண்டாடப்பட்ட மழைக் காடுகள் அடங்கும். இலங்கையை முழுவதுமாகக் கருதும்போது இலங்கையில் உள்நாட்டுக்குரியm இனங்களின் அளவு உயர்வானதாகும். இலங்கையும் இந்தியாவின் மேற்குமலைத்தொடரும் தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள பிரதான உயிர்ப்பல்வகைமை செழிப்புமையங்களுள் ஒன்றாக உள்ளன.
  • உலகம் முழுவதிலும் இவ்வாறான 25 உயிர்ப்பல்வகைமை செழிப்புமையங்கள் உள்ளன.

உள்நாட்டுக்குரிய இனங்கள்.

  • உள்நாட்டுக்குரிய இனம் என்பது ஒரு நாட்டில் அல்லது ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியில் மட்டும் காணப்படுகின்ற உலகில் வேறெங்கும் இயற்கையாகக் காணப்படாத இனமாகும். இலங்கையின் உள்நாட்டுக்குரிய இரண்டு தாவர இனங்களுக்கான உதாரணங்கள்,
    Dipterocarpus zeylanicus (எண்ணை)
    Garcinia quaesita (கொறக்காப்புளி)
  • இலங்கையின் உள்நாட்டுக்குரிய இரண்டு விலங்கினங்களுக்கான உதாரணங்கள்,
    Puntius nigrofasciatus -Black ruby barb (வெட்டியான்)
    Loris tardigradus (தேவாங்கு)

சுதேச இனங்க்கள்

  • வரலாற்று ரீதியாக அறியப்பட்ட இயற்கை வாழிடத்தில் காணப்படுகின்றதும் அவ்விடத்தின்
    இயற்கையான உயிரப்பல்வகைமையின் பகுதியை உருவாக்குகின்றதுமான ஒரு தாவர அல்லது விலங்கினம். இவை மனிதத் தலையீடில்லாது அவ்விடத்தில் இயற்கையாகவே குடியேறி ஸ்தாபித்து காணப்படுவதுடன் குறித்த புவியியல் பிரதேசத்தில் புராதனமாகக் காணப்படுவதாகவும் இருக்கும்.
  • இலங்கையின் சுதேச இனங்களுக்கான உதாரணம்,Ophicephalus striatus (விரால்)
    Caryota urens (திப்பிலிப்பனை)

புகுத்தப்பட்ட இனங்கள்

  • அவற்றினுடைய இயற்கையான ஆதிக்கப் பிரதேசத்தில் இல்லாத வேறொரு புவியியல் பிரதேசத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட இனம்.
  • இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புகுத்தப்பட்ட இனங்கள்
    Oreochromis mossambicus (யப்பான் மீன்)
    Hevea brasiliensis (இறப்பர்)

குடிபெயரும் இனங்கள்

  • பருவகாலங்களினால் தீர்மானிக்கப்பட்டதும் எதிர்வுகூறக் கூடியதுமான ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்தை நோக்கி அங்கிகள் செல்லுதல் குடிபெயர்வு எனப்படும்.குடிபெயர்வினால் அவற்றின் இனவிருத்திக்கு பொருத்தமற்ற சுற்றாடல் நிபந்தனைகள் தவிர்க்கப்பட முடியும்.
  • உதாரணம் :
    Indian fly catcher (இந்தியன் ஈபிடிப்பான்)
    Indian pitta (ஆறுமணிக்குருவி)
    Barn swallow (மாலைக்குருவி)

எச்ச இனங்கள் Please Login to view the Question

  • ஒரு காலத்தில் பெருமளவில் பரவிக் காணப்பட்டு தற்பொழுது மட்டுப்படுத்தப்பட்ட அல்லது தனிப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் காணப்படுகின்ற இனங்கள்.
  • உதாரணம், Tuatara நியூசிலாந்தில் ஒரு சில பரப்புக்களில் மட்டும் காணப்படுவது,
    Lingula (இலாம்புச்சிம்பி) திருகோணமலை தம்பலகாம குடாவில் காணப்படுவது.
    Ichthyophis glutinosus புராதனகாலத்திய அம்பிபியா. அவயவங்கற்ற புழுவுருவான உடலைக் கொண்டது.

கலாச்சார இனங்கள் (Flagship species)

  • சூழற்றொகுதியின் காப்புத்தேவை போன்ற சுற்றாடல் காரணி ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்த தெரிவு செய்யப்பட்ட இனமாகும். அவற்றினுடைய ஆபத்துக்கு இலக்காகக் கூடிய தன்மை, கவர்ச்சியான தன்மை அல்லது வேறுபடுத்திக் கொள்ளக்கூடிய தன்மை போன்றவற்றின் அடிப்படையில் மக்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துக் கொள்ளக் கூடிய
    இனங்களாகும்.கலாச்சார இனம் எனும் எண்ணக்கரு சில பிரதான மூலாதார இனங்களிற்கு
    பிரபல்யத்தை ஏற்படுத்திக் கொடுப்பதனால் அவற்றை உள்ளடக்கிய சூழற்றொகுதிகளினதும்
    அதிலுள்ள எல்லா இனங்களினதும் காப்புச் செயற்பாட்டுக்கும் உதவும்.
  • உதாரணம் : The Bengal tiger of India (இந்தியாவின் வங்காளப்புலி)
    The Giant panda of china (சீனாவின் இராட்சத பன்டா)
    Blue magpie of Sri Lanka (இலங்கையின் நீலவுடற் பெருங்குயில்)

மையக்கல் இனங்கள்

  • சூழற்றொகுதியொன்றின் தொழிற்பாட்டிலும் உறுதிப்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கும் இனம். அவ்வினம் அகற்றப்படுத்துமிடத்து அச்சூழற்றொகுதி தகவர்வடையும்.
  • உதாரணமாக : ஆபிரிக்க சவன்னாக்களில் பெரிய தாவரவுண்ணிகள் பிரதானமாக யானைகள் பெரிய மரங்களை அழித்தமையானது புற்கள் நிலைபெறுவதற்குக் காரணமாயின. மேற்படி விலங்குகள் இல்லாவிடின் பெரும்பலான சவன்னாக்கள் மரக்காடுகளாக மாற்றம் பெற்றிருக்கும்.
IUCN செந்தரவுப்புத்தகத்தின்படி வெவ்வேறு அளவுகளில் ஆபத்துக்கிலக்காகிய அங்கிகளின் வகைகள்

அழிந்துவிட்ட- Extinct (Ex) Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பாகுபாட்டுப் பிரிவின் இறுதித் தனியனும் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் இறந்துவிட்ட இனங்கள்
  • உதாரணம் : Dodo – மொரீசியஸ் இல் வாழ்ந்தது.
    கம்பளி யானை – வட அமெரிக்காவில் வாழ்ந்தது.
    தெற்கத்திய பற்றைத் தவளை – இலங்கையில் வாழ்ந்தது.

இயற்கையில் அழிந்துவிட்ட – Extinct in the wild (EW)

  • அதனுடைய கடந்தகால இயற்கையான வாழிடங்களுக்கு வெளியே அல்லது பயிர்ச்செய்கைகளில் அல்லது காப்பு நிலையங்களில் அல்லது இயற்கையாக்கம் செய்யப்பட்ட குடித்தொகையில் வாழும் பாகுபாட்டுப்பிரிவு.
  • உதாரணம் : சிசெல்ஸின் இராட்சத ஆமைகள்
    இலங்கையில் அனோனேசியே குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் : Alphonsea hortensis

பெருமளவு ஆபத்துக்கிலக்காகிய – Critically endangered (CR)

  • இயற்கையில் உச்சளவில் அழிந்து விடுவதற்கான ஆபத்தை எதிர்கொண்டுள்ள இனம் என்பதற்கான சிறந்த கிடைக்கக் கூடிய ஆதாரங்களைக் கொண்ட பாகுபாட்டுப்பிரிவு
  • உதாரணம் : Macrognathus aral – Lesser spiny eel (குறைமுள் விலாங்கு)
    Dermochelys coreacea – leather back turtle (வரி ஆமை)

ஆபத்துக்கிலக்காகிய – Endangered (EN)

  • இயற்கையில் மிக அதிகளவில் அழிந்து விடுவதற்கான ஆபத்தை எதிர்கொண்டுள்ள இனம் என்பதற்கான சிறந்த கிடைக்கக் கூடிய ஆதாரங்களைக் கொண்ட பாகுபாட்டுப்பிரிவு
  • உதாரணம் : Caretta caretta – Loggerhead turtle ( பெருந்தலை ஆமை)
    Melursus ursinus– Sloth bear (சோம்பல் கரடி)

கவனத்திற்குள்ளாக்கப்பட்ட – Vulnerable (VU)

  • இயற்கையில் அதிக ஆபத்துக்கு இலக்காகிய இனம் என்பதற்கான சிறந்த கிடைக்கக்கூடிய ஆதாரங்களைக் கொண்ட பாகுபாட்டுப் பிரிவு
  • உதாரணம் : Elephas maximus (ஆசிய யானை)

அச்சுறுத்தலை அண்மித்த – Near threatened (NT)

  • பெருமளவு ஆபத்துக்கிலக்காகிய அல்லது ஆபத்துக்கிலக்காகிய அல்லது கவனத்திற்குள்ளாக்கப்பட்ட பிரிவாக தற்பொழுது கருத முடியாதவையும் எதிர்காலத்தில் இத்தகைய நிலையை அடைவதற்கான தகுதிகளுக்கு மிக நெருக்கமானவையுமான பாகுபாட்டியல் பிரிவு.
  • உதாரணம் : Melanochelus trijuga – Rock terrapin (கல் ஆமை)

குறைந்தளவு கவனத்திற்கிலக்காகிய – Least concern (LC)

  • பெருமளவு ஆபத்துக்கிலக்காகிய அல்லது ஆபத்துக்கிலக்காகிய அல்லது கவனத்திற்குள்ளாக்கப்பட்ட அல்லது அச்சுறுத்தலை அண்மித்தவை போன்ற பிரிவுகள் எதனிலும் அடக்கப்படமுடியாத பெருமளவில் பரம்பியதும் பெருமளவு எண்ணிக்கையில் காணப்படுகின்றதுமான பாகுபாட்டுப்பிரிவு
  • உதாரணம் : Crocodylus palustris -Marsh crocodile (சேற்று முதலை)

தரவுகள் போதாத – Data Deficient (DD)

  • அழிந்துவிடும் அச்சுறுத்தலை மதிப்பீடு செய்வதற்கு, நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவற்றின் பரம்பல், குடித்தொகை நிலைமைகள் பற்றிய போதிய தகவல்களைக் கொண்டிராத பாகுபாட்டியல் பிரிவு. இத்தகைய பிரிவுகள் நன்கு கற்கப்பட்டு அவற்றின் உயிரியல் நன்கு தெரிந்த போதிலும், அவற்றின், தொகை பரம்பல் பற்றிய தரவுகள் குறைவானவை.
  • உதாரணம் : Mystus keletius – Yellow catfish (மஞ்சள் கெளிறு)

மதிப்பிடப்படாத – Not evaluated (NE)

  • ஆபத்துக்கிலக்காகிய இனங்களின் தொகுதியுள் அடக்கப்படுவதற்காக இன்னமும் மதிப்பீடுகள் செய்யப்படாத பாகுபாட்டியல் பிரிவு.
  • உதாரணம் : Oecophyla smaragdina – Tailor ant (முசுறு)
    Chloroxylon swietenia – Satin wood ( முதிரை)
RATE CONTENT 0, 0
QBANK (42 QUESTIONS)

உயிர்ப்பல்வகைமை பற்றிய கற்கையின்போது கருத்திற் கொள்ளப்படும் இனங்களின் சில வர்க்கங்கள் பின்வருமாறு:
A – வாழும் உயிர்ச் சுவட்டு (relict) இனம்
B  – மையக்கல் (Keystone) இனம்
C   _  உள்நாட்டுக்குரிய இனம்
D   _ Flagship  இனம்
A,B,C,D ஆகியவற்றில் உள்ள வர்க்கங்களுக்குரிய சரியான உதாரணங்களைப் பின்வரும் அங்கித் தொடரிகளில் எது தருகின்றது?

Review Topic
QID: 8591
Hide Comments(0)

Leave a Reply

உயிர்ப்பல்வகைமை தொடர்பாக உள்நாட்டுக்குரிய (endemic)  இனங்கள் என்பவை

Review Topic
QID: 8602
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

Review Topic
QID: 8620
Hide Comments(0)

Leave a Reply

A,B,C,D,E எனப் பெயரிடப்பட்ட ஐந்து விலங்கு இனங்களின் உட்பிரதேசத்திற்குரிய இயல்பு, ஏராளம் (abundance),ஊட்டற் பழக்கம் என்பன பற்றிய தகவல்கள் பின்வருமாறு:
A:உட்பிரதேசத்துக்குரியது, பெரும் எண்ணிக்கையில் காணப்படுகின்றது, மிக அண்மைக்    காலங்களில் எண்ணிக்கை குறைந்துள்ளது, அனைத்துமுண்ணி.
B:உட்பிரதேசத்துக்குரியதல்லாதது. பெரும் எண்ணிக்கையில் காணப்படுகிறது, ஊனுண்ணி, விசேட உணவுப் பழக்கம் உண்டு.
C:உட்பிரதேசத்துக்குரியது, சிறு எண்ணிக்கையில் காணப்படுகின்றது. அண்மைக் காலங்களில்  எண்ணிக்கை குறைந்துள்ளது, தாவரவுண்ணி, விசேட உணவுப் பழக்கம் உண்டு.
D:உட்பிரதேசத்துக்கு உரியதல்லாதது சிறு எண்ணிக்கையில் காணப்படுகின்றது, தாவரவுண்ணி, விசேடமற்ற உணவுப் பழக்கம் உண்டு.
E:உட்பிரதேசத்துக்குரியது, சிறு எண்ணிக்கையில் காணப்படுகின்றது, அனைத்துமுண்ணி

மேற்குறித்த இனங்களில் எது கிட்டிய எதிர்காலத்தில் பெரும்பாலும் அழியும் ஆபத்துக்குள்ளாவதாக இருக்கலாம்?

Review Topic
QID: 8622
Hide Comments(0)

Leave a Reply

இலங்கை போன்ற ஒரு தீவில் உட்பிரதேசத்துக்குரிய (உள்நாட்டுக்குரிய) இனங்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் சாத்தியம் உள்ள அங்கிக் கூட்டம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8646
Hide Comments(0)

Leave a Reply

இலங்கை யானைகள்

Review Topic
QID: 8666
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அங்கிகளின் கூட்டங்களில் முதலில் அழிவுக்குள்ளானது எது?

Review Topic
QID: 8667
Hide Comments(0)

Leave a Reply

உட்பிரதேசத்திற்குரிய இனங்கள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் உண்மையானது எது?

Review Topic
QID: 8680
Hide Comments(0)

Leave a Reply

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அளவையீடு ஒன்றில்   Alphonsea hortensies                           எனப்படும் மிக  அரிதான தாவர இனம் எந்தவொரு காட்டுச் சூழலிலும்    காணப்படவில்லை. இவ்வினம் தொடர்பாக பின்வரும்  கூற்றுகளுள் பெரும்பாலும் சரியாக இருக்கக்கூடியது  எது?                    

Review Topic
QID: 8717
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் விலங்குகளுள் உடவளவை தேசியப் பூங்காவில் பெரும்பாலும் Keystone இனமாக   இருக்கக்கூடியது எது?

Review Topic
QID: 8719
Hide Comments(0)

Leave a Reply

IUCN செந்தரவுப் புத்தகத்தில் தரப்பட்டுள்ள அச்சுறுத்தலுக்குள்ளான அங்கிகளின் சில வகைகள் உதாரணங்களுடன் கீழே தரப்பட்டுள்ளன. பின்வரும் IUCN வகை –உதாரணம்,சேர்க்கையில் சரியானது எது?

Review Topic
QID: 8742
Hide Comments(0)

Leave a Reply

உள்நாட்டுக்குரிய தன்மை, சுதேசத்தன்மை, கலாசாரத்தன்மை என்பவற்றைக் கருதும்போது ஓர் அங்கி ஏனைய இரு அங்கிகளிலுமிருந்து வேறுபடும் கூட்டத்தை / கூட்டங்களைப் பின்வருவனவற்றுள் இருந்து தெரிவு செய்க

Review Topic
QID: 8780
Hide Comments(0)

Leave a Reply

அண்மித்த எதிர்காலத்தில் மிக உயர்ந்த அளவில் அழிந்து  விடுவதற்கான ஆபத்தை எதிர்கொண்டுள்ளது பின்வரும் விலங்குகளுள் எது?

Review Topic
QID: 8781
Hide Comments(0)

Leave a Reply

இனங்களின் சில வகைகள், இவ் வகைக்குரிய உதாரணங்கள், இவ்வுதாரணங்களுக்குரிய வாழிடங்கள் ஆகியன பின்வரும் அட்டவணையின் நிரல்களில்    தரப்பட்டுள்ளன.

பின்வரும் சேர்க்கைகளுள் சரியானது எது / எவை?

Review Topic
QID: 8788
Hide Comments(0)

Leave a Reply

2012 மே மாதத்தில் சிறிய கடநீரேரி ஒன்றில் மாதிரி  எடுக்கப்பட்டபோது P எனும் இனம் மிக அதிகளவில் இருப்பது அவதானிக்கப்பட்டது. 2014 மே இல் இதே  நீரேரியில் மாதிரி எடுக்கப்பட்டபோது இவ்வினம் இல்லாது  இருந்ததுடன் 2012 மே இல் காணப்படாத Q எனும் இன்னோர் இனம் அதிகளவில் காணப்பட்டது. மேற்கூறிய  அவதானிப்புகளுக்கு மிகக் குறைந்தளவில் ஏற்றுக்கொள்ளத்தக்க காரணம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8791
Hide Comments(0)

Leave a Reply

IUCN செந்தரவுப் புத்தகத்தில் குறைந்தளவு கவனத்திற்கு  இலக்காகிய (LC)இ அச்சுறுத்தலை அண்மித்த (NT),தரவுகள் போதாத (DD) எனும் பாகுபாட்டுப் பிரிவுகளில்  உள்ளடக்கப்பட்ட விலங்குகளின் ஒழுங்கு வரிசையைச்  சரியாகக் குறித்து காட்டுவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8795
Hide Comments(0)

Leave a Reply

உயிர்ப் பல்வகைமை அம்சங்களைக் கருத்திற் கொள்ளும் போது மிக ஒத்த அங்கிகளின் சோடி பின்வருவனவற்றுள்  எது?

Review Topic
QID: 8804

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank