Please Login to view full dashboard.

கலச்சுவாசம்

Author : Admin

37  
Topic updated on 02/15/2019 03:31am
  • கலச்சுவாசம் எனப்படுவது கலங்களில் சுவாசக் கீழ்ப்படை / சேதன மூலக்கூறு நொதியக் கட்டுப்பாட்டுக்குரிய பல தொடரான தாக்கப்படிகளுக்கூடாக ஒட்சியேற்றப்பட்டு / உடைக்கப்பட்டு வெளியேற்றப்படும் சக்தியின் ஒரு பகுதி ATP யாக மாற்றப்படும் அவசேபச் செயன்முறையாகும். Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
  • கலச்சுவாசம் இரு வகைப்படும்
    1. காற்றின்றிய சுவாசம் → O2 பங்குகொள்ளுவதில்லை.
    2. காற்றிற் சுவாசம் → O2 பயன்படுத்தப்படும்

காற்றிற் சுவாசம் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • கலங்களில் கீழ்ப்படை / சேதன மூலக்கூறு நொதியக் கட்டுப்பாட்டுக்குரிய பல தொடரான தாக்கப்படிகள் ஊடாக ஒட்சிசனின் பங்கு கொள்ளளோடு ஒட்சியேற்றப்பட்டு / உடைக்கப்பட்டு வெளிவிடப்படும் சக்தியின் ஒரு பகுதி ATP ஆக மாற்றப்படும் அவசேபச் செயன்முறை காற்றிற் சுவாசம் எனப்படும்.
  • காற்றிற் சுவாசம் 4 படிகள் / அவத்தைகள் ஊடாக நிகழும்
    1. கிளைக்கோ பகுப்பு ⇒ Cytosole இல் நிகழும்
    2. Pyruvate ஆனது Acetyl co A ஆக மாறுதல் ⇒ இழைமணித் தாயத்தில் நிகழும்.
    3. கிரெப்ஸின் வட்டம் (Krebs வட்டம்) ⇒ இழைமணித் தாயத்தில் நிகழும்
    4. en இடம் மாற்றும் சங்கிலி ⇒ இழைமணியின் உள்மென்சவ்வான உச்சி / முகடு

கிளைக்கோபகுப்பு Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

glycolisis

  • கிளைக்கோ பகுப்பு குழியவுரு / குழியவுருத் தாயத்தில் நிகழும்.
  • இது நொதிய ஊக்குவிப்புக்குரிய பல தொடரான தாக்கப்படிகளுக்கூடாக நடைபெறுகின்றது.
  • இத்தொடரான தாக்கத்தில் ஒட்சிசன் பங்கு கொள்வதில்லை.
  • இது 03 பிரதான செயற்பாடுகளினூடாக நடைபெறுகின்றது.
    1. பெஸ்பரலேற்றம்
    2. பகுப்பு / உடைப்பு
    3. ஐதரசன் அகற்றல் / ஒட்சியேற்றம்
  • பொஸ்பரலேற்றத்தின் போது 2 ATP பயன்படுத்தப்பட்டு குளுக்கோசு உயிர்ப்பாக்கப்பட்டு பொஸ்பரலேற்றம் செய்யப்படுவதன் மூலம் 6C வெல்ல / Glucose இருபொஸ்பேற்றாக மாற்றப்படுகின்றது.
  • பகுப்பின் போது இம்மூலக்கூறு உடைக்கப்பட்டு 3C வெல்ல பொஸ்பேற்று 2 மூலக்கூறுகள் பெறப்படுகின்றன.
  • ஒட்சியேற்றத்தின் போது இவ் ஒவ்வொரு மூலக்கூறும் Pyruvate ஆக ஒட்சியேற்றப்படுகின்றது. இதன்போது இம்மூலக்கூறிலிருந்து ஐதரசனும் பொஸ்பேற்றும் அகற்றப்படுகின்றன.
  • NAD+ ஐதரசன் வாங்கியாக தொழிற்பட்டுNADH + H+ ஆக மாறுகின்றது.
  • அகற்றப்படும் பொஸ்பேற்று ADP க்கு இடம்மாற்றப்பட்டு ATP தொகுக்கப்படுகின்றது.
மொத்த உள்ளீடு மொத்த வெளியீடு
1 மூலக்கூறு குளுக்கோசு 2 மூலக்கூறு Pyruvate
2 ATP 2 ATP
2 NAD+ 2 (NADH + H+)
  • எனவே கிளைக்கோ பகுப்பின் தேறிய விளைவானது 2 Pyruvate, 2 ATP, 2(NADH + H+)
  • இவற்றுள் சக்தி தொடர்பான விளைப்பொருட்கள் ATP, NADH + H+
  • கிளைக்கோபகுப்பில் ATP கீழ்ப்படை பொஸ்பரலேற்றத்தால் உருவாக்கப்படுகின்றது.
  • கீழ்ப்படை பொஸ்பரலேற்றம் எனப்படுவது ஒரு கீழ்ப்படையிலிருந்து அசேதன பொஸ்பேற்று ADP இற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டு ATP உருவாக்கப்படுதல் ஆகும்.
  • எனவே குளுக்கோசு 2 Pyruvate ஆக ஒட்சியேற்றப்படுவது கிளைக்கோ பகுப்பு எனப்படும்.
  • கிளைக்கோ பகுப்பில் பின்வரும் இடைநிலைச் சேர்வைகள்
    1. PGA ⇒ பொஸ்போ கிளிசரிக்கமிலம்
    2. PGAL ⇒ பொஸ்போ கிளிசரல்டிகைட்
    3. PEP ⇒ பொஸ்போ ஈனோல் Pyruvate

Pyruvate ஆனது Acetyl Co A ஆக மாற்றமடைதல்

acetyl-co-a

  • இத்தாக்கம் இழைமணி தாயத்தில் நிகழ்கின்றது.
  • குழியவுருத் தாயத்தில் விளைவாக்கப்பட்ட Pyruvate இழைமணியினுள் ஒட்சிசன் காணப்படுமிடத்து குழியவுருவிலிருந்து இழைமணித் தாயத்தினுள் செல்லும்.
  • இழைமணித் தாயத்தில் CO2 அகற்றலுக்கும் ஐதரசன் அகற்றலுக்கும் உட்பட்டு 2 C சேர்வையான Acetyl ஆக மாற்றப்படும்.
  • இதன் போது ஐதரசன் வாங்கியாக NAD+ பங்குகொள்ளும்.
  • பின்பு 2 C Acetyl ஒவ்வொன்றும் துணைநொதியம் A (Co – A) உடன் இணைந்து Acetyl துணைநொதியம் A ஆக மாற்றப்படும்.
  • இதன் விளைவாக 2 CO2 + 2(NADH + H+) + 2 Acetyl Co A உருவாக்கப்படும்.

கிரெப்சின் வட்டம் Please Login to view the QuestionPlease Login to view the Question

citric_acid_cycle_with_aconitate_2-svg

  • கிரெப்சின் வட்டம் இழைமணித் தாயத்தில் நிகழும்
  • விஞ்ஞானி கென்ஸ்கிரெப்ஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் இது சிற்றிக் வட்டம் / TCA வட்டம் (மூன்று காபொட்சிக் அமிலம்) எனவும் அழைக்கப்படும்.
  • இதன் ஆரம்பப் பொருள் Acetyl Co A ஆகும்.
  • Acetyl Co A  இல் உள்ள 2C சேர்வையான Acetyl இழைமணித் தாயத்திலுள்ள 4C சேர்வையான Oxaloacetate உடன் இணைந்து 6C சேர்வையான Citrate ஐ உருவாக்கும்.
    இதன் போது Acetyl Co A  இலிருந்து விலகிச் செல்லும்.
  • Citrate பல தொடரான CO2 அகற்றல், ஒட்சியேற்ற தாக்கங்களினூடாக மீண்டும் Oxaloacetate ஐ உருவாக்கும்.
  • விளைவாக 6(NADH + H+), 2FADH2, 2ATP, 4CO2 விளைவாக பெறப்படும். ATP கீழ்ப்படை பொஸ்பரலேற்ற முறையினால் உருவாக்கப்படும்.

இலத்திரன் இடம்மாற்றும் சங்கிலி Please Login to view the Question

electron-tranport

  • en இடம்மாற்றும் செயற்பாடு இழைமணியின் உள்மென்சவ்வு / உச்சி முகட்டுப் பகுதியில் நிகழும்.
  • இதன்போது காற்றிற் சுவாசத்தின் ஏனைய நிலைகளில் பெறப்பட்ட தாழ்த்தப்பட்ட துணைக்காரணிகள் / துணை நொதியங்கள் (NADH + H+, FADH2) ஒட்சியேற்றப்பட்டு அகற்றப்படும்
  • சக்தி கொண்ட en இனால் தாயத்திலுள்ள H+ புரதக் கால்வாயினூடாகப் பம்பப்பட்டு அதிலுள்ள சக்தி ADP இற்கு இடம்மாற்றப்பட்டு ATP தொகுக்கப்படுகின்றது.
  • NADH + H+ லிருந்து வெளியேறும் en காவிகளினூடாக பயணம் செய்து மூன்று நிலைகளில் அதன் சக்தியின் ஒரு பகுதி வழங்கப்பட்டு ATP தொகுக்கப்படுகின்றது.
  • அதே போல் ஒரு FADH2 இலிருந்து வெளியேறும் en, en வாங்கிகளுக்கூடாகச் சென்று இரு நிலைகளில் ATP உருவாக்கப்படுகின்றது.
  • இதன்போது ATP தொகுப்பிற்கு ATP சிந்தேசு (ATPase) நொதியம் அவசியமானது. அத்துடன் ATP உருவாக்கப்படும் முறை ஒட்சியேற்ற பொஸ்பரலேற்றம் எனப்படும்.
  • இங்கு en காவிகளாக Ubiquinone,Cytochrome தொழிற்படுகின்றது.
  • Cytochrome இல் A,C,Cytochrome Oxydase எனும் வகைகள் காணப்படுகின்றது.
  • இறுதி en வாங்கியாக வளிமண்டல O2 தொழிற்பட்டு நீர் உருவாக்கப்படுகின்றது.
  • ஒட்சியேற்ற பொஸ்பரலேற்றம் எனப்படுவது இழைமணியின் உள்மென்சவ்வில் தாழ்த்தப்பட்ட துணைக்காரணிகள் ஒட்சியேற்றப்பட்டு Proton Pump மூலம் சக்தி ADP க்கு இடம்மாற்றம் செய்யப்பட்டு ATP Synthase ஊக்குவிப்பதால் ATP உற்பத்தி செய்வதாகும்.
  • en இடம்மாற்றும் சங்கிலியில் ஒரு NADH + H+ உள் நுழைந்தால் 3 ATP உற்பத்தி செய்யப்படுவதுடன் 1 மூலக்கூறு நீர் விளைவாக்கப்பட்டு 1/2 O2பயன்படுத்தப்படும். எனவே, 10 (NADH + H+) இற்கு  30 ATP + 10 H2O + 5 O2 பயன்படுத்தப்படும்.
  • ஒரு FADH2 உட்சென்றால் 2ATP உற்பத்தி செய்யப்படுவதுடன் ஒரு நீர் விளைவாக்கப்பட்டு 1/2 O2 பயன்படுத்தப்படும். எனவே, 2FADH2 → 4ATP தொகுக்கப்பட்டு 2H2O விளைவாக்கப்பட்டு ஒரு O2 பயன்படுத்தப்படும்.
  • காற்றிற் சுவாசத்தில் ஒவ்வொரு CO2 அகற்றலுக்கும் ஒரு நீர் பயன்படுத்தப்படும்.
    எனவே en கடத்தல் சங்கிலியில் 34 ATP விளைவாக்கப்படும். 6O2 பயன்படுத்தப்படும். 6 நீர் தேறிய விளைவாகப் பெறப்படும். (12H2O – 6H2O)
  • எனவே காற்றிற் சுவாச சமன்பாடு
    C6H12O6 + 6O2 → 6CO2+ 6 H2O + 38/ 36 ATP
  • ஈரல் கலங்களிலும் இதயத் தசைகளிலும் 38 ATP விளைவாக்கப்படும். ஏனைய கலங்களில் 36 ATP யே விளைவாக்கப்படும். காரணம் இவற்றில் கிளைக்கோ பகுப்பின் 2 NADH, 2 ATP பயன்படுத்தப்பட்டு இழைமணித் தாயத்தினுள் கொண்டு செல்லப்படுகின்றது.குப்பு

காபோவைதரேற்று தவிர்ந்த ஏனைய சுவாசக் கீழ்ப்படைகள் Please Login to view the QuestionPlease Login to view the Question

  • காபோவைதரேற்று அல்லது புரதம் சுவாசக் கீழ்ப்படையாகத் தொழிற்படின் முதலில் அது நீர்ப்பகுப்பு அடைந்து எளிய நிலையான அமினோ அமிலமாக மாற்றப்படுகின்றது. பின் இது அமைனகற்றலுக்கு உட்பட்டு அமோனியா ஆகவும் காபொட்சிலிக்கமிலமாகவும் மாற்றப்படுகின்றது.
  • காபொட்சிலிக்கமிலம் கிரெப்சின் வட்டத்தினூடாக சுவாசச் செயன்முறையில் ஈடுபடுகின்றது.
  • சேமிப்பு இலிப்பு சுவாசக் கீழ்ப்படையாகத் தொழிற்படின் முதலில் அது நீர்ப்பகுப்பு அடைந்து எளிய கூறுகளான கிளிசரோல், கொழுப்பமிலமாக மாற்றப்படும்.
  • கிளிசரோல் PGAL ஆக மாற்றப்பட்டு கிளைக்கோ பகுப்பினூடாக சுவாசச் செயன்முறையில் ஈடுபடும். கொழுப்பமிலம் Acetyl Co A ஆக மாற்றப்பட்டு கிரெப்சின் வட்டத்தினூடாக சுவாசச் செயன்முறையில் ஈடுபடும்.

காற்றின்றிய சுவாசம் Please Login to view the QuestionPlease Login to view the Question

  • காற்றின்றிய சுவாசத்திலும் முதலாவது படி கிளைக்கோ பகுப்பு ஆகும்.
  • இதன் விளைவாக 2 ATP, 2(NADH + H+), 2 Pyruvate பெறப்படும்.
  • Pyruvate ஒட்சிசன் இன்றிய நிலைமையில் குழியவுருத் திரவத்திலேயே இரு வெவ்வேறான பாதைகளில் உட்செல்லலாம்.
    1. இலக்டேற்று நொதித்தல்
    2. அற்ககோல் நொதித்தல்
  • இலக்றேற்று நொதித்தல் விலங்குக் கலங்களிலும் சில பக்றீரியாக் கலங்களிலும் நிகழ்கின்றது. இதன்போது Pyruvate NADH + H+ ஐதரசன் வழங்கியாகத் தொழிற்பட தாழ்த்தப்பட்டு இலக்றேற்றாக மாற்றப்படும். எனவே, இலக்டேற்று நொதித்தல் காற்றின்றிய சுவாசத்திற்குரிய மொத்த சமன்பாடு.

lactate

  • அற்ககோல் நொதித்தல் தாவரக் கலங்களிலும் பங்கசுக் கலங்களிலும் சில பற்றீரியாக் கலங்களிலும் நிகழ்கின்றது. இதன்போது Pyruvate CO2 அகற்றலுக்கு உட்பட்டு எதனல்  / அசற்றல்டிகைட் ஆக   மாற்றப்படும். பின் இவ் எதனல் NADH + H+ ஐதரசன் வழங்கியாகத் தொழிற்பட தாழ்த்தப்பட்டு எதனோல் ஆக மாற்றப்படும். எனவே, அற்ககோல் நொதித்தல் காற்றின்றிய சுவாசத்துக்குரிய மொத்த சமன்பாடு.

ethanol

  • காற்றின்றிய சுவாசம் கலத்தின் குழியவுருத் திரவத்தில் நிகழ்கின்றது

 

RATE CONTENT 0, 0
QBANK (37 QUESTIONS)
  • 95 முதல் 98 வரையான வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள படத்தை அடிப்படையாகக் கொண்டவை. இப்படம் சுவாசத்தின் பிரதான படிகளைக் காட்டுகின்றது.

படி X ஆனது, எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

Review Topic
QID: 3746
Hide Comments(0)

Leave a Reply

இழைமணியில் பின்வரும் எப்படிகள் இடம்பெறும்?

Review Topic
QID: 1670

 

 

Hide Comments(0)

Leave a Reply

படி X இல் தோன்றும் ஒரு பொசுபோகிளிசரல்டிகைட்டு மூலக்கூறு கொண்டிருப்பது,

Review Topic
QID: 1671
Hide Comments(0)

Leave a Reply

படி X இன் போது ஒரு மூலக்கூறு குளுக்கோசு சுவாசிக்கப்பட்டதும் வெளிவிடப்படும் தேறிய ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை

Review Topic
QID: 1810
Hide Comments(0)

Leave a Reply

எதனோல் நொதித்தலில் இறுதி இலத்திரன் வாங்கியாகத் தொழிற்படுவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3633
Hide Comments(0)

Leave a Reply

குளுக்கோசின் கலக் காற்றுச் சுவாசத்தில் இலத்திரன் இடமாற்றத் தொகுதியினால் தோற்றுவிக்கப்படும் ATP இன் அண்ணளவான சதவீதம் யாது?

Review Topic
QID: 3641
Hide Comments(0)

Leave a Reply

கிளைக்கோப்பகுப்பு தொடர்பாக தவறானது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3642
Hide Comments(0)

Leave a Reply

மதுவத்தில் குளுக்கோசின் காற்றின்றிய சுவாசத்தின்போது தோன்றுவது பின்வரும் இறுதி விளைபொருள்களுள் எது?

Review Topic
QID: 3651
Hide Comments(0)

Leave a Reply

விலங்குச் சுவாசத்தின் இலத்திரன் இடமாற்றும் சங்கிலியின் இறுதி இலத்திரன் வாங்கி பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3652
Hide Comments(0)

Leave a Reply

ஒட்சிசன் அற்ற நிலையில் குளுக்கோஸிலிருந்து ATP யைத்  தோற்றுவிக்கும் கலச்செயன்முறை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3656
Hide Comments(0)

Leave a Reply

இழைமணிகளில் உள்மென்சவ்வில் நடைபெறும் செயன் முறை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3662
Hide Comments(0)

Leave a Reply

கிளைக்கோப்பகுப்பு தொடர்பில் பின்வரும் கூற்றுகளுள் எது சரியானது?

Review Topic
QID: 2379
Hide Comments(0)

Leave a Reply

எதையில் அற்ககோல் உருவாகுதலுக்கு இட்டுச்செல்லும் காற்றின்றிய சுவாசத்தின் இறுதி இலத்திரன் ஏற்றுக்கொள்ளி

Review Topic
QID: 3586
Hide Comments(0)

Leave a Reply

தாவரச் சுவாசத்தின் போது உள்ளெடுக்கப்படும் ஒட்சிசனானது பின்வருவனவற்றில் எதனுடன் ஒன்றாக்கப் படுகின்றது?

Review Topic
QID: 2942
Hide Comments(0)

Leave a Reply

கிளைக்கோப்பகுப்பு தொடர்பாகப் பின்வரும் கூற்று களுள் தவறானது எது?

Review Topic
QID: 3105
Hide Comments(0)

Leave a Reply

  • 95 முதல் 98 வரையான வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள படத்தை அடிப்படையாகக் கொண்டவை. இப்படம் சுவாசத்தின் பிரதான படிகளைக் காட்டுகின்றது.

படி X ஆனது, எவ்வாறு அழைக்கப்படுகின்றது?

Review Topic
QID: 3746

இழைமணியில் பின்வரும் எப்படிகள் இடம்பெறும்?

Review Topic
QID: 1670

 

 

படி X இல் தோன்றும் ஒரு பொசுபோகிளிசரல்டிகைட்டு மூலக்கூறு கொண்டிருப்பது,

Review Topic
QID: 1671

படி X இன் போது ஒரு மூலக்கூறு குளுக்கோசு சுவாசிக்கப்பட்டதும் வெளிவிடப்படும் தேறிய ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை

Review Topic
QID: 1810

எதனோல் நொதித்தலில் இறுதி இலத்திரன் வாங்கியாகத் தொழிற்படுவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3633

குளுக்கோசின் கலக் காற்றுச் சுவாசத்தில் இலத்திரன் இடமாற்றத் தொகுதியினால் தோற்றுவிக்கப்படும் ATP இன் அண்ணளவான சதவீதம் யாது?

Review Topic
QID: 3641

கிளைக்கோப்பகுப்பு தொடர்பாக தவறானது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3642

மதுவத்தில் குளுக்கோசின் காற்றின்றிய சுவாசத்தின்போது தோன்றுவது பின்வரும் இறுதி விளைபொருள்களுள் எது?

Review Topic
QID: 3651

விலங்குச் சுவாசத்தின் இலத்திரன் இடமாற்றும் சங்கிலியின் இறுதி இலத்திரன் வாங்கி பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3652

ஒட்சிசன் அற்ற நிலையில் குளுக்கோஸிலிருந்து ATP யைத்  தோற்றுவிக்கும் கலச்செயன்முறை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3656

இழைமணிகளில் உள்மென்சவ்வில் நடைபெறும் செயன் முறை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3662

கிளைக்கோப்பகுப்பு தொடர்பில் பின்வரும் கூற்றுகளுள் எது சரியானது?

Review Topic
QID: 2379

எதையில் அற்ககோல் உருவாகுதலுக்கு இட்டுச்செல்லும் காற்றின்றிய சுவாசத்தின் இறுதி இலத்திரன் ஏற்றுக்கொள்ளி

Review Topic
QID: 3586

தாவரச் சுவாசத்தின் போது உள்ளெடுக்கப்படும் ஒட்சிசனானது பின்வருவனவற்றில் எதனுடன் ஒன்றாக்கப் படுகின்றது?

Review Topic
QID: 2942

கிளைக்கோப்பகுப்பு தொடர்பாகப் பின்வரும் கூற்று களுள் தவறானது எது?

Review Topic
QID: 3105
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank