Please Login to view full dashboard.

சுவாச கட்டமைப்பு விருத்தி

Author : Admin

8  
Topic updated on 02/14/2019 10:15am

விலங்கு இராச்சியத்தின் சுவாசக் கட்டமைப்புகளின் பல்வகைமை  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

புறச் சூழலுடன் சுவாச வாயுக்களான O2, CO2 என்பவற்றை பரிமாற்றம் அடையச் செய்யும் உடற்பரப்பு சுவாச மேற்பரப்பு எனப்படும்.சுவாச மேற்பரப்பினூடாக வாயுக்கள் பரவல் முறையில் பரிமாற்றம் அடைகின்றன.

வாயுப் பரிமாற்றம் வினைத்திறனாக நடைபெறுவதற்காக சுவாச மேற்பரப்பு கொண்டிருக்கும் சிறப்பியல்புகள்.

  1.  சுவாச வாயுக்களை ஊடுபுக விடக்கூடியதாகவும், ஈர லிப்பானதாகவும் இருத்தல்.
  2. மெல்லிய மேற்பரப்பைக் கொண்டிருத்தல்.
  3. அதிகளவு மேற்பரப்பைக் கொண்டிருத்தல்.
  4.  போதியளவு குருதி விநியோகத்தைப் பெற்றிருத்தல்.

சிறிய விலங்குகளில் உடற்பருமன் சிறிதாகவும் அவற்றின் சக்தித் தேவை குறைவாகவும் இருப்பதால் உடல் மேற்பரப்பினூடாக நிகழும் வாயுப் பரிமாற்றம் போதுமானது.

பெரிய விலங்குகளில் உடற்சிக்கல் தன்மை அதிகரிக் கின்றது. சக்தித் தேவை அதிகரிக்கின்றது. இதனால் உடல் மேற்பரப்பு / கனவளவு விகிதம் குறைகின்றது. எனவே போதியளவு வாயுப்பரிமாற்ற மேற்பரப்புடைய விசேட சுவாசக் கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன.

விலங்குகளில் காணப்படும் வெவ்வேறு வகையான சுவாசக் கட்டமைப்புக்கள்

விலங்குக் கூட்டம் சுவாசக் கட்டமைப்பு
புரோட்டோசோவன்கள் உடல் மேற்பரப்பு
Cnidaria  உடல் மேற்பரப்பு
Platyhelminthes உடல் மேற்பரப்பு
Nematoda உடல் மேற்பரப்பு
Annelida  உடல் மேற்பரப்பு, வெளிப்பூக்கள்
Mollusca வெளிப்பூக்கள், உட்பூக்கள், மென்மூடி, மென்மூடிக் குழியிலுள்ள சீப்புரு
Arthropoda உட்பூக்கள், ஏட்டு நுரையீரல், வாதனாளித் தொகுதி, உடல் மேற்பரப்பு
Echinodermata  குழாய்ப்பாதம், பூக்கள், சிம்பி,கழியறைக்குரிய சுவாச மரங்கள்
chordata வெளிப்பூக்கள் –  Amphibia  களின் வாற்பேய்

உட்பூக்கள் – Amphibia களின் வாற்பேய், மீன்கள்

வாய்க்குழி சீதமென்சவ்வு – Amphibia

தோல் – Amphibia

நுரையீரல் – Amphibia,Reptilia, Aves, Mammalia

விசேட சுவாச மேற்பரப்புகள்

வெளிப்பூக்கள்
உடல் மேற்பரப்பின் வெளி வளர்ச்சியாக வெளிப்பூக்கள் உருவாக்கப்படுகிறது.
இவற்றுக்கு  உடலில் இருந்து குருதி வழங்கல் மேற்கொள்ளப்படுகிறது.
உதாரணம் : Arenicola போன்ற Annelida களில் Crustacea களில்
உட்பூக்கள்
உடலின் வெளி வளர்ச்சியாக குருதி வழங்கலுடன் உருவாக்கப்பட்டு பின்பு உடல் மேற்றோலினால் மூடப்படும் கட்டமைப்பு உட்பூ எனப்படும்.
உதாரணம் : என்பு மீன், சிங்க இறால்

 வாதனாளித் தொகுதி
குருதி தரவற்ற வாதனாளி, புன்வாதனாளியைக் கொண்ட கட்டமைப்பு வாதனாளித் தொகுதி எனப்படும்.
வாதனாளிகள் சுவாசத் துவாரங்கள் வழியாகத் திறக்கின்றன.
வாதனாளிகள் கிளைத்த குழாயுருவான அமைப்புகள், வளைய வடிவமான கைற்றின் படிவுகளால் ஆதாரப்படுத்தப்பட்டுள்ளன.
வாதனாளிகள் கிளைத்து புன்வாதனாளியாகி இழையங்களை ஊடுருவிக் காணப்படுகின்றன. இதனூடாக வளி நேரடியாக உடற்கலங்களிற்கு வழங்கப்படுகிறது.
உதாரணம் : Insecta, Chilopoda களான மட்டத்தேள்,  Diplopoda களான அட்டைகள், சில Arachinida களில்

ஏட்டு நுரையீரல்
குருதிக் கலன்களுடன் 15 – 20 வரையான மெல்லிய தட் டுக்கள் போன்ற கட்டமைப்பு ஏட்டு நுரையீரல் எனப்படும்.
உதாரணம் : சிலந்திகள், தேள்கள் போன்ற Arachinida களில்

respi-ani2

RATE CONTENT 0, 0
QBANK (8 QUESTIONS)

கலனற்ற (Non-Vascularised) சுவாசக் கட்டமைப்புக் காணப்படுவது?

Review Topic
QID: 1338
Hide Comments(0)

Leave a Reply

விலங்குகளிடையே காணப்படும் சில சுவாசக் கட்டமைப்புக்களும் இக்கட்டமைப்புக்களையுடைய விலங்குகள் அடங்கும் கணங்களும் கீழே தரப்பட்டுள்ளன. பின்வரும் சுவாசக் கட்டமைப்பு – கணம் சேர்க்கைகளுள் தவறான சேர்க்கை எது?
சுவாசக் கட்டமைப்பு – கணம்

Review Topic
QID: 1341
Hide Comments(0)

Leave a Reply

விலங்கு இராச்சியத்தில் காணப்படும் சுவாசக் கட்டமைப்புகள் சில பின்வருவனவாகும்.
A  – நுரையீரல்கள்
B – ஏட்டுநுரையீரல்கள்
C  – வாதநாளி
D – உட்பூக்கள்
E – வெளிப்பூக்கள்
F– உடற்போர்வை
முள்ளந்தண்டு விலங்குகளினால் சுவாச வாயுபரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படுபவை மேற்குறிப்பிட்டவைகளுள் எது / எவை ?

Review Topic
QID: 1342
Hide Comments(0)

Leave a Reply

கலனற்ற (Non-Vascularised) சுவாசக் கட்டமைப்புக் காணப்படுவது?

Review Topic
QID: 1338

விலங்குகளிடையே காணப்படும் சில சுவாசக் கட்டமைப்புக்களும் இக்கட்டமைப்புக்களையுடைய விலங்குகள் அடங்கும் கணங்களும் கீழே தரப்பட்டுள்ளன. பின்வரும் சுவாசக் கட்டமைப்பு – கணம் சேர்க்கைகளுள் தவறான சேர்க்கை எது?
சுவாசக் கட்டமைப்பு – கணம்

Review Topic
QID: 1341

விலங்கு இராச்சியத்தில் காணப்படும் சுவாசக் கட்டமைப்புகள் சில பின்வருவனவாகும்.
A  – நுரையீரல்கள்
B – ஏட்டுநுரையீரல்கள்
C  – வாதநாளி
D – உட்பூக்கள்
E – வெளிப்பூக்கள்
F– உடற்போர்வை
முள்ளந்தண்டு விலங்குகளினால் சுவாச வாயுபரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படுபவை மேற்குறிப்பிட்டவைகளுள் எது / எவை ?

Review Topic
QID: 1342
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank