Please Login to view full dashboard.

விலங்குகளின் வன்கூட்டுத்தொகுதி

Author : Admin

12  
Topic updated on 02/14/2019 06:24am

விலங்குகளின் அகத்தே அல்லது புறத்தே காணப்படுவதும் அவற்றின் அசைவு, ஆதாரம், பாதுகாப்பில் உதவுவதுமான உறுதியான உயிருள்ள / உயிரற்ற கட்டமைப்பு வன்கூடு எனப்படும்.

வன்கூட்டில் 3 பிரதான வகைகளுண்டு. Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question     

  1. நீர்நிலையியல் வன்கூடு (Hydrostatic skeleton)
  2. புறவன்கூடு (Exoskeleton)
  3. அகவன்கூடு (Endoskeleton)

நீர்நிலையியல் வன்கூடு  Image Tiphydroskelton-tm

எதிர் இயக்கத்தை காண்பிக்கும் நீள்பக்கத்தசை, வட்டத்தசை என இரு தசைப்படைகளாலான உடற்சுவரினால் உடலினுள் சுரக்கப்பட்ட பாயி அடைக்கப்பட்டிருக்கும். தசைகளின் சுரக்கத்தினதும் பாயியின் அமுக்கத்தினதும் இணைந்த விளைவு இடப்பெயர்ச்சியிலும் உடலின் வடிவமும் தோற்றமும் பேணப்படுவதிலும் உதவும்.

  • அனலிடாக்களின் உடற்குழி பாயி
  • Nematoda – நீள்பக்கத்தசை மட்டும் உண்டு – எனவே நீர்நிலையியல் வன்கூடு சிறப்பானதாக இல்லை.

புறவன்கூடு Please Login to view the QuestionPlease Login to view the Question    

ஆத்திரபோடாக்களில் காணப்படும். இது கைற்றினை கொண்டது. (N கொண்ட பல்சக்கரைட்டு). கல ஒழுங்கற்ற பதார்த்தங்களினாலானது. இப்புறவன்கூடு பூச்சிகளில் புரதத்தாலும் Crustacea களில் CaCO3 இனாலும் வன்மையாக்கப்பட்டுள்ளது. இயக்கத்தின் பொருட்டு நெகிழ்தகவுடைய மூட்டு மென்சவ்வுகள் காணப்படும். உலர்தலை தடுப்பதற்காக வெளிப்புறமாக மெழுகுப்படை காணப்படும். வளர்ச்சி ஏற்பட வேண்டிய போது கவசம் கழற்றல் நடைபெறும். தசைகள் பொருந்துவதற்கான முளைகளை கொண்டிருக்கும். சிறிய விலங்குகளின் ஆதாரம், இடப்பெயர்ச்சி என்பவற்றில் வினைத்திறனாக அமையும்.

  • Arthropoda க்கள் புறவன்கூட்டை கொண்டுள்ள பிரதான விலங்குக்கூட்டமாகும்.
  • CaCO3 இனாலான புறவன்கூடு – Mollusca
  • என்புத்தட்டுக்களாலான புறவன்கூடு – Reptilia
  • Radiolaria Image Tiplamprocyclas_maritalis_150 – தனிக்கலவிலங்கு

அகவன்கூடு Please Login to view the QuestionPlease Login to view the Question    

அகவன்கூடுகள் விறைப்பானவை உடலின் உட்புறமாக காணப்படுபவை. இவற்றுக்கு  தசைகள் இணைக்கப்படும். என்பு, கசியிழையம் போன்ற உயிருள்ள  இழையங்களால் ஆனவை. விலங்கின் வளர்ச்சியுடன் சேர்ந்து விலங்கினுள்  தொடர்ந்து வளர்ந்து செல்பவை.

இணையங்களால் ஒன்றுடனொன்று தொடுக்கப்பட்ட என்புகள் தம்மிடையே  மூட்டுக்களை உருவாக்குகின்றன. பல விலங்குகளின் ஆதாரத்தொகுதியாக  அகவன்கூடு காணப்படுகின்றது.

  • முள்ளந்தண்டுளிகள் – அகவன்கூடு என்பு, கசியிழையத்தாலானது
  • சில மொலஸ்காக்கள் – கணவாய்
  • சில தனிக்கல Protista க்கள் – Radiolaria – Si இனாலானது
  • கடற்பஞ்சுகள்
  • Echinodermata – CaCO3 தட்டுக்களாலானது.

வன்கூட்டுத் தொகுதியின் தொழில்கள்

அசைவு :

வன்கூடு விறைப்பான பதார்த்தங்களினாலானது. உடலில் தசை பொருந்தும் தானங்களை வழங்குகின்றது. வன்கூட்டின் பாகங்கள் நெம்புகளாக தொழிற்படுவதன் மூலம் தசைகள் இழுபடக் கூடியவையாக இருக்கின்றன. இதன் மூலம் அசைவு நடைபெறும்.

ஆதாரம் :

சகல வன்கூடுகளும் உடலுக்கு விறைப்பான கட்டமைப்பை வழங்குகின்றன. நெருக்கங்கள்,இழுவை விசைகள், தகைப்புக்கள் போன்றவற்றை எதிர்க்கின்றன. உடலின் வடிவத்தை பேணுவதில் உதவுகின்றன.

பாதுகாப்பு :

உடலின் உள்ளேயுள்ள மென்மையான அங்கங்களை பாதுகாக்கின்றன.

சேமிப்பு :

  • சில ஓமோன்கள் Ca2+ அயன்களின் சேமிப்பையும் விடுவிப்பையும் சீராக்குகின்றன.
    • Calcitonin – என்பில் Ca சேமித்தலை ஊக்குவிக்கும்.
    • Parathormone – என்பிலிருந்து Ca விடுவித்தலை ஊக்குவிக்கும்.
  • கொழுப்பு சேமிக்க உதவும் – செவ்வென்புமச்சை
  • PO43- அயன்களின் சேமிப்பு

குருதிக்கலங்களின் ஆக்கம் :

என்பு மச்சையில் நடைபெறும்.

RATE CONTENT 0, 0
QBANK (12 QUESTIONS)

கீழ்க்காணும் இயல்புகளில் தனியே மனிதனில் காணப்படும் இயல்பு எது?

Review Topic
QID: 6568
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுக்களில் எது என்பு இழையம்பற்றிப் பிழையானது?

Review Topic
QID: 6573
Hide Comments(0)

Leave a Reply

மனிதனை மற்றைய எல்லா முளையூட்டிகளிலிருந்தும் வேறுபடுத்தி இனங்காண உதவும் அம்சம்,

Review Topic
QID: 6580
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் பின்வரும் அம்சங்களில் எது ஓர் உயர்விலங்கு அம்சமாகும்?

Review Topic
QID: 6584
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காணும் இயல்புகளில் தனியே மனிதனில் காணப்படும் இயல்பு எது?

Review Topic
QID: 6568

பின்வரும் கூற்றுக்களில் எது என்பு இழையம்பற்றிப் பிழையானது?

Review Topic
QID: 6573

மனிதனை மற்றைய எல்லா முளையூட்டிகளிலிருந்தும் வேறுபடுத்தி இனங்காண உதவும் அம்சம்,

Review Topic
QID: 6580

மனிதனின் பின்வரும் அம்சங்களில் எது ஓர் உயர்விலங்கு அம்சமாகும்?

Review Topic
QID: 6584
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank