Please Login to view full dashboard.

கலச்சுவர்

Author : Admin

3  
Topic updated on 02/14/2019 11:52am
  • இயூக்கரியோற்றா தாவர கலங்களில் முதலுரு மென்சவ்விற்கு வெளிப்புறமாகக் காணப்படும் கட்டமைப்பு கலச்சுவர் எனப்படும்.
  • இது உயிருள்ள கலங்களினால் சுரக்கப்படும் சுரப்புப் பதார்த்தம் ஆகும்.
  • முதலுரு மென்சவ்விலும் தடித்தது.
  • இக்கலச்சுவர் இரு வகைப்படும்.
  1. முதற்சுவர்
  2. துணைச்சுவர்
  • முதற்சுவர் கலப்பிரிவின் போது சுரக்கப்படுகின்றது. சகல தாவரக் கலங்களிலும் காணப்படுகின்றது. ஒப்பீட்டளவில் மெல்லியது. நெகிழும் தன்மை கொண்டது. இது பிரதானம் செலிலோசாலானது மேலும் அரைச்செலிலோசு, பெக்ரின் ஆகியவற்றையும் கொண்டது.
  • துணைச்சுவர் சில கலங்களில் விருத்தியின் போது சுரக்கப்படுகின்றது. முதலுரு மென்சவ்விற்கும் முதற்சுவருக்கும் இடையில் காணப்படுகின்றது. பிரதான இரசாயனப் பதார்த்தமாக இலிக்னினைக் கொண்டது. சில சுபரினைக் கொண்டது.
  • முதற்சுவரை மட்டும் கொண்ட கலங்களாவன
  1. புடைக்கல் விழையம்
  2. ஒட்டுக்கலவிழையம்
  • முதற்சுவருடன் துணைச் சுவரையும் கொண்ட கலங்களாவன
  1. வல்லுருக்கலவிழையம்
  2. காழ்கலன்கள்
  3. குழற்போலி
  • துணைச்சுவரைக் கொண்ட கலங்கள் இறந்த கலங்களாக மாற்றப்படும்
  • அடுத்துள்ள இரு தாவரக் கலங்களின் முதற்சுவருக்கிடையில் நடுமென்தட்டு காணப்படும். இது கல்சியம் பெக்ரேற்று, மக்னீசியம் பெக்ரேற்றைக் கொண்டது. இது அடுத்துள்ள இரு கலங்களை இணைத்து வைத்துள்ளது.
  • கலச்சுவர் நீரேற்றப்பட்டது. 60 – 70% நீர் காணலாம். கலச்சுவரின். நீர் சுயாதீனமாக அசையக்கூடியது.
  • தக்கைக் கலத்தின் கலச்சுவர் சுபரினால் ஆனது.
  • அடுத்துள்ள இரு தாவரக் கலங்களின் கலச்சுவருக்கூடாகக் காணப்படும் முதலுருத் தொடர்பு முதலுரு இணைப்பு எனப்படும்.
  • முதலுரு இணைப்பு கலமென்சவ்வினால் படலிடப்பட்டது.
  • முதலுரு இணைப்பு தாவரக் கலத்தில் காணப்படும் கலச்சந்தி வகையாகும்.
  • கலச்சுவரின் தொழில்கள்
  1. கலத்திற்குப் பாதுகாப்பு வழங்கல்.
  2. கலத்தின் வடிவத்தைப் பேணுதல்.
  3. Apoplast பாதை வழங்கல்.
  4. தாவரக் கலத்தினுள் மேலதிகமாக நீர் உள்ளெடுக்கப்படுவதைத் தடுத்தல்.
  5. பதார்த்தங்கள் பரிமாற்றம் முதலுரு இணைப்பு

கலப்புறத் தாயம்

  • இது கிளைக்கோ புரதத்தினால் ஆக்கப்பட்டது.
  • இதில் காணப்படும் பிரதான புரத நார்கள் Collagen ஆகும்.
  • இக் Collagen நார்கள் காபோவைதரேற்றில் அமிழ்ந்து காணப்படும்.
  • தொழில்
  1. கலத்திற்கு விறைப்பு தன்மை வழங்கி கலத்தின் வடிவத்தைப் பேணுதல்
  2. கலத்திற்குப் பாதுகாப்பு வழங்குதல்
RATE CONTENT 0, 0
QBANK (3 QUESTIONS)

பின்வருவனவற்றுள் எதன் காரணமாக குழிகள் தோன்றுகின்றன?

Review Topic
QID: 2217
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கல வகைகளுள் எதனில் கலச்சுவர் மிக மெல் லியதாகக் காணப்படும்?

Review Topic
QID: 3162
Hide Comments(0)

Leave a Reply

கலச் சுவர்களுடன் சம்பந்தப்படாத பதார்த்தம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3090
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எதன் காரணமாக குழிகள் தோன்றுகின்றன?

Review Topic
QID: 2217

பின்வரும் கல வகைகளுள் எதனில் கலச்சுவர் மிக மெல் லியதாகக் காணப்படும்?

Review Topic
QID: 3162

கலச் சுவர்களுடன் சம்பந்தப்படாத பதார்த்தம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3090
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank