Please Login to view full dashboard.

விகாரம்

Author : Admin

13  
Topic updated on 02/15/2019 06:18am

விகாரம்  Image Tipad

  • DNA  இன் கட்டமைப்பில் அல்லது அளவுகளில் ஏற்படுகின்ற தலைமுறை உரிமைப்படுத்தப்படக் கூடிய மாற்றங்கள் விகாரங்கள் எனப்படும்.
  • இயற்கையால் ஏற்படும் விகாரங்கள் தன்னிச்சையான விகாரங்கள் எனப்படும்.
  • புறக்காரணிகளின் தூண்டலால் ஏற்படும் விகாரங்கள் தூண்டப்பட்ட விகாரம் எனப்படும்.
  • விகாரத்தைத் தூண்டக் கூடிய காரணிகள் : UV கதிர், X கதிர்
  • விகாரங்கள் பல பின்னடைவான இயல்புகளையே உருவாக்குகின்றன.
  • பின்னடைவான எதிருருக்களை உருவாக்கிய விகாரங்கள் ஓரினநுக நிலையில் மட்டுமே வெளிக்காட்டப்படும்.
  • ஆட்சியான விகாரங்கள் ஓரினநுக நிலையிலும், பல்லின நுக நிலையிலும் வெளிக்காட்டப்படக் கூடியன.
  • விகாரங்கள் DNA இன் இரட்டித்தலின் போது, இழையுருப் பிரிவின் போது, ஒடுக்கற் பிரிவின் போது ஏற்படலாம்.
  • விகாரங்கள் இரு வகைப்படும். அவையாவன,
  1. பரம்பரை அலகு விகாரம்
  2. நிற மூர்த்த விகாரம்

பரம்பரை அலகு விகாரம்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

பரம்பரை அலகு ஒன்றின் நியுக்கிளியோதைடொன்றின் தொடர் ஒழுங்கில் ஏற்படும் மாற்றம் பரம்பரை அலகு விகாரம் எனப்படும்.
உதாரணம் : வெளிறல் இயல்பு
Huntingdon’s நோய்
குருதி உறையா நோய்
தலசீமியா
Cystic Fibrosis

cystic-fibrosis-lung

 நிறமூர்த்த விகாரம்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • நிறமூர்த்தங்களின் கட்டமைப்பு, எண்ணிக்கை என்பவற்றில் ஏற்படும் மாற்றம் நிறமூர்த்த விகாரம் எனப்படும்.
  • நிறமூர்த்த எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் கிரமமில்மடியமாகவோ, அல்லது பன்மடியமாகவோ இருக்கலாம்.
  • கிரமமில்மடியம் : இயல்பு நிலைக்குரிய நிற மூர்த்த எண்ணிக்கையிலும் பார்க்க நிறமூர்த்தமொன்றின் எண்ணிக்கை மேலதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருத்தல்.
    உதாரணம் : டவுனின் சகசம், கிளின்பெல்டரின் சகசம், Turner இன் சகசம்
  • பன்மடியம் : அங்கியொன்றின் இரண்டிற்கு மேற்பட்ட முழுமையான நிறமூர்த்தங்களின் தொகுதிகள் உள்ள நிலை ஆகும்.
  • விகாரத்தினால் உருவாகும் சில எதிருருக்கள் ஓரின நுக நிலையில் இறப்பை ஏற்படுத்துமாயின் அது கொல்லும் விகாரம் எனப்படும்.
    உதாரணம் : மனிதனில் குருதி உறையா நோய்
  • உடற் கலங்களில் ஏற்படும் விகாரங்கள் உடல் மூர்த்தத்திற்கு உரிய விகாரம் எனப்படும்.
    உதாரணம் : புற்றுநோய்க் கலங்கள்

down-syndrome1b1

குடித்தொகையில் பாரம்பரியப் பல்வகைமை ஏற்படக் காரணங்கள்

  1. ஒடுக்கற் பிரிவின் போது, நிறமூர்த்தங்களின் சுயாதீனத் தனிப்படுத்துகை காரணமாக நிறமூர்த்தங்களின் தன்வயத்த தொகுப்பு இடம்பெறல்.
  2. குறுக்குப்பரிமாற்றம் காரணமாக மீளசேர்தல்கள் உருவாகும்
  3. விகாரங்கள் ஏற்படுவதால் புதிய பரம்பரை அலகுகள் அல்லது எதிருருக்கள் தோன்றுதல்.
  4. இலிங்கமுறை இனப்பெருக்கத்தின் போது, புணரிகளின் சேர்க்கை எழுமாறாக நிகழ்தல்.
  5. சில பாரம்பரிய இயல்புகள் பல பரம்பரை அலகுகளால் தீர்மானிக்கப்படல்.

பரம்பரையலகுத் தடாகம்

குடித்தொகை ஒன்றிலுள்ள எல்லா அங்கத்தவர்களிலும் காணப்படுகின்ற எல்லா எதிருருக்களின் கூட்டு மொத்தம் பரம்பரையலகுத் தடாகம் எனப்படும்.

பரம்பரையலகு எதிருரு மீடிறன்

குடித்தொகை ஒன்றில் பரம்பரை அலகு ஒன்றில் எதிருரு அதன் ஒத்த தானத்தில் காணப்படக்கூடிய மற்றைய எதிருருவுடன் கொண்டுள்ள விகிதம் பரம்பரை அலகு எதிருரு மீடிறன் எனப்படும்.
p + q = 1
p – ஆட்சியான எதிருரு மீடிறன்
q – பின்னடைவான எதிருரு மீடிறன்

RATE CONTENT 1, 1
QBANK (13 QUESTIONS)

விகாரங்கள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

Review Topic
QID: 6379
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 6404
Hide Comments(0)

Leave a Reply

விகாரங்கள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது / எவை தவறானது / தவறானவை?

Review Topic
QID: 6373
Hide Comments(0)

Leave a Reply

விகாரங்கள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?

Review Topic
QID: 6433
Hide Comments(0)

Leave a Reply

சேதம் விளைவிக்காத விகாரம், பின்வரும் எக்கலத்தினுள் நடைபெறின் அவ்விகாரம் பரம்பரை பரம்பரையாகத் தோன்றுவதற்கான வாய்ப்பு கூடுதலாகக் காணப்படும்?

 

 

 

Review Topic
QID: 4705
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் விகாரங்கள் தொடர்பான சரியான கூற்று எது?

 

 

Review Topic
QID: 4714
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க் காணும் கண்டுபிடிப்புகளில் எதன் அடிப்படையில் அதிமிக்க முன்னேற்றங்கள் உயிரியல் துறையில் ஏற்பட்டுள்ளன?

Review Topic
QID: 4827
Hide Comments(0)

Leave a Reply

விகாரங்கள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

Review Topic
QID: 6379

பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 6404

விகாரங்கள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது / எவை தவறானது / தவறானவை?

Review Topic
QID: 6373

விகாரங்கள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?

Review Topic
QID: 6433

சேதம் விளைவிக்காத விகாரம், பின்வரும் எக்கலத்தினுள் நடைபெறின் அவ்விகாரம் பரம்பரை பரம்பரையாகத் தோன்றுவதற்கான வாய்ப்பு கூடுதலாகக் காணப்படும்?

 

 

 

Review Topic
QID: 4705

பின்வருவனவற்றுள் விகாரங்கள் தொடர்பான சரியான கூற்று எது?

 

 

Review Topic
QID: 4714

கீழ்க் காணும் கண்டுபிடிப்புகளில் எதன் அடிப்படையில் அதிமிக்க முன்னேற்றங்கள் உயிரியல் துறையில் ஏற்பட்டுள்ளன?

Review Topic
QID: 4827
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank