Please Login to view full dashboard.

மனித சிறுநீர்த்தொகுதி

Author : Admin

29  
Topic updated on 02/15/2019 09:56am

மனிதனில் பிரதான கழிவகற்றும் தொகுதி சிறுநீர்த்தொகுதி ஆகும்.

இது பின்வரும் பகுதிகளை உடையது.

  •  இரு சிறுநீரகங்கள்
  • இரு சிறுநீர்க்குழாய்கள்
  •  சிறுநீர்ப்பை
  • சிறுநீர் வழி

pic-2

சிறுநீரகங்களின் அமைவிடம் Please Login to view the Question

வயிற்றறைக் குழியுள், பிரிமென்றகட்டுக்குக் கீழாக, முள்ளந்தண்டின் இரு பக்கங்களிலுமாக, நெஞ்சறை நாரிய முள்ளந்தண்டு மட்டங்களுக்கிடையே, சுற்றுவிரிக்கு வெளிப்புறமாக, வயிற்றுக் குழியின் பிற்பக்க சுவருக்கு அண்மையில், வலது சிறுநீரகத்திலும் பார்க்க இடது சிறுநீரகம் சற்று மேற்புறமாக அமைந்துள்ளது.

சிறுநீரகத்தின் மொத்தக் கட்டமைப்பு Please Login to view the QuestionPlease Login to view the Question    

  • அவரை வித்து வடிவானது.
  • சிறுநீரக உறையினால் சூழப்பட்டது.
  • இதன் நடுவான மேற்பரப்பில் மணிப்புள்ளி உண்டு.
  • மணிப்புள்ளி வழியாக குருதிக் குழாய்கள், நரம்புகள், நிணநீர்க்குழாய்கள் செல்கின்றன.
  • சுற்றுப் புறம் மேற்பட்டையாகும்.
  • இது சிறுமணி உருவானது.
  • உள்ளான பகுதி மையவிழையம்.
  • இதில் கூம்பு வடிவான சிறுநீரகக் கூம்பகங்கள் காணப்படும்.
  • இவை வரித்தோற்றம் உடையவை.
  • கூம்பகங்களுக்கு இடையில் மேற்பட்டையிலிருந்து வருவிக்கப்பட்ட சிறுநீரக நிரல்கள் காணப்படுகின்றன.
  • சிறுநீரக கூம்பிகள் சிம்பிகளில் திறக்கும்.
  • சிம்பிகள் சிறுநீரக இடுப்பை நோக்கி இருக்கும்.
  • சிறுநீரக இடுப்பு புனல் உருவானது.
  • இது சிறுநீர்க் குழாய் வழியாகத் திறக்கிறது.
  • இது பக்கப்பாடாக குவிவானது.
  • நடுக்கோட்டுப் பகுதியில் குழிவானது.

சிறுநீரகத்தியின் நுண்கட்டமைப்பு Please Login to view the QuestionPlease Login to view the Question    

urinary-system-pic1

  • ஒரு முனை மூடப்பட்ட, மற்றைய முனை திறந்துமான குழாயுருவான கட்டமைப்பு
  • மூடிய முனை கிண்ண வடிவிலான போமனின் உறையை அமைக்கும்.
  • இதன் வெளியான படை தனிச் செதில் மேலணியால் ஆனது.
  • உள்ளான படையில் தனிச் செதில் மேலணிக்கலங்களுடன் பாதக் குழியங்கள் எனும் விசேட கலங்களும் காணப்படும்.
  • தொடர்ந்து அண்மையான மடிப்படைந்த குழலுரு உண்டு. இது எளிய செவ்வகத் திண்ம மேலணியால் ஆனது.
  • இதில் பல நுண்சடைமுளைகள் காணப்படும்.
  • தொடர்ந்து என்லேயின் இறங்கு புயம் உண்டு.
  • இதன் மேல்பகுதி தடித்த, செவ்வகத் திண்ம மேலணியால் ஆனது.
  • கீழ்ப்பகுதி மெல்லியது. எளிய செதில் மேலணியால் ஆனது.
  • இதன் மேல்பகுதி தடித்தது. கீழ்ப்பகுதி மெல்லியது.
  • தொடர்ந்து சேய்மையான மடிந்த குடிலுருவாகத் தொடர்ந்து சேகரிக்கும் கானில் திறக்கும்.

சிறுநீராக்கம் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question            

pic3

சிறுநீராக்கம் சிறுநீரகத்திகளில் இடம்பெறும்.
சிறுநீராக்கப் படிகளாவன,
1. அதிமேல் வடிகட்டல்
2. தேர்வுக்குரிய மீளகத்துறிஞ்சல்
3. சுரத்தல்

1. அதிமேல் வடிகட்டல்

  • குருதியின் உயரமுக்கம் காரணமாக கலன்கோளத்தில் நிகழும்.
  • இதன்போது, குருதி முதலுருவிலுள்ள புரதங்கள், குருதிக் கலங்கள் தவிர்ந்த ஏனையவை வடிகட்டப்படும்.
  • குருதி மயிர்த்துளைக் குழாய்களின் சுவரினூடாகவும், போமனின் உறையின் உள்ளான சுவரினூடாகவும் வடிதிரவம் சேகரிக்கப்படும்.
  • இது கலன்கோள வடிதிரவம் எனப்படும்.

2. தேர்வுக்குரிய மீளகத்துறிஞ்சல்

மீளகத்துறிஞ்சப்படும் இடம் மீளகத்துறிஞ்சப்படுபவை மீள அகத்துறிஞ்சப்படும் முறை
அண்மையான மடிப்படைந்த குழலுரு
  • 80% நீர்
  • Na+
  • குளுக்கோஸ்
  • Ca2+
  • அமினோ அமிலம்
  • விற்றமின்
  • யூரியாவின் ஒரு பகுதி HCO3- , Cl-
  • பிரசாரணம்
  • உயிர்ப்பான அகத்துறிஞ்சல்
  • பரவல் (மந்தமான முறை)
என்லேயின் இறங்கு புயம்
  • நீர்
  •  பிரசாரணம்
என்லேயின் ஏறு புயம்
  • Na+
  • Cl-
  • உயிர்ப்பான அகத்துறிஞ்சல்
  • பரவல் (மந்தமான முறை)
சேய்மையான மடிப்படைந்த குழலுரு
  • Na+
  • Cl-,HCO3-
  • ADH உள்ள போது நீர்
  • உயிர்ப்பான அகத்துறிஞ்சல்
  • பரவல் (மந்தமான முறை)
  • பிரசாரணம்
சேகரிக்கும் கான்
  • ADH உள்ள போது நீர்
  •  பிரசாரணம்

3. சுரத்தல்

  • சிறுநீரகத்திக ளை சூழ்ந்துள்ள மயிர்க்குழாய்த் தொகுதிகளில் உள்ள குருதியிலிருந்து சில பதார்த்தங்கள் சிறு குழாய்க் கலங்கள் ஊடாக கலன்கோள வடிதிரவத்தினுள் விடப்படுதல்.
  • இது உயிரப்பான செய்முறை
  • H+, K+, NH4+,Creatinine, சில மருந்துகள், விற்றமின் B என்பன சுரக்கப்படும்.

♦ நாளொன்றில் சராசரியாக 1 – 1.5 l வரையிலான சிறுநீர் உருவாக்கப்படும்.

கலன்கோள வடிகட்டல் வீதம்

  • இரு சிறுநீரகங்களினாலும் நிமிடமொன்றில் உருவாக்கப் படும் கலன்கோள வடிதிரவத்தின் கனவளவு கலன்கோள வடிகட்டல் வீதம் எனப்படும்.
  •  இதன் பெறுமானம் 125ml/நிமிடம் ஆகும்.

சிறுநீரின் அமைப்பு

  • 96% நீர்
  •  2% யூரியா
  • மிகுதி 2% இல் யூரிக்கமிலம்,கிரியற்றினைன்,அமோனியா,ஒட்சலேற்றுகள், Na+,Cl-,K+,PO43-,SO42-போன்ற அயன்கள் உள்ளன.

சிறுநீரங்களின் தொழில்கள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question        

  • சிறுநீராக்கம் செய்தல்.
  • நைதரசன் கழிவுகளை அகற்றுதல்.
  • குருதியில் நீரினளவை சீராக்குதல்.
  • குருதியில் குளுக்கோஸ் மட்டத்தைச் சீராக்குதல்.
  •  குருதியின் இரசாயன கூறுகளைச் சீராக்குதல்.
  • குருதியின் pH இனை சீராக்கல்.
  • குருதியமுக்கத்தைப் பேணல்.
  • குருதியின் கனவளவை சீராக்குதல்.
  • குருதியமுக்க சீராக்கலுடன் தொடர்புடைய றெனினை சுரத்தல்.
  • அகஞ்சுரக்கும் சுரப்பியாகத் தொழிற்பட்டு Erythropoitin ஓமோனை சுரத்தல்.

சிறு நீரகங்களின் தொழிற்பாட்டில் ஓமோன்களின் விளைவுகள் Please Login to view the Question  

சிறுநீரகங்களில் நிகழும் தேர்வுக்குரிய மீளகத்துறிஞ்சலில் தாக்கங்களை ஏற்படுத்தும் பிரதான ஓமோன்கள்

1. ADH –

  • குருதியில் பிரசாரண அமுக்கம் அதிகரிக்கும் போது சுரக்கப்படும்.
  • இது சிறுநீரகத்திகளின் சேய்மையான மடிப்படைந்த குழலுரு பகுதியிலும், சேகரிக்கும் கானிலும் நீரின் அமையத்திற்கேற்ற மீளகத்துறிஞ்சலைத் தூண்டும்.

2. Aldesterone –

  • சிறுநீரகத்திகளின் சேய்மையான மடிப்படைந்த குழலுரு பகுதியில் Na+ நீரினதும் மீளகத்துறிஞ்சலைத் தூண்டும்.

3. பராதையிரொயிட் –

  •  சிறுநீரகத்திகளில் Ca2+ அகத்து றிஞ் சலை அதிகரிக்கும்.

4. கல்சிரோனின் –

  • சிறுநீரகத்திகளில் Ca2+ மீளகத்துறிஞ்சலை நிரோதிக்கும்.

சிறுநீரகக் கற்கள் (Renal Calculi)

  • சிறுநீரகங்களிலும் சிறுநீர்ப்பையிலும் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன.
  • சிறுநீரில் கரைந்துள்ள கனிப்பொருட்களிலிருந்து சிறுநீரகங்களில் தோற்றுவிக்கப்பட்ட திண்மக் கலவைகள் சிறுநீரகக் கற்களாகும்.
  • இவை கல்சியம் ஒட்சலேற்று பளிங்குகளாக, யூரிக்கமிலக் கற்களாக இருக்கலாம்.
  • இவை சிறுநீர்க் குழாயை அடைப்பதன் மூலம் சிறுநீரின் வெளியேற்றத்தைத் தடுத்து பாதிப்பை ஏற்படுத்தும்.

 காரணங்கள்

  • பரம்பரை
  • புரதச் சத்து கூடிய உணவுகள்
  • போதியளவு நீர் பருகாமை

சிறுநீர் சோதிப்புகள்

நோய் நிலைமைகளைக் கண்டறிவதற்கான கருவியாக சிறுநீர் சோதிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

1. சிறுநீர் முழு அறிக்கை
இதில் பரிசோதிக்கப்படும் இயல்புகள் :

  • நிறம்
  • மணம்
  • தெளிவுத் தன்மை
  • PH

அதில் காணப்படும் இரசாயனக் கூறுகளான குளுக்கோஸ், புரதங்கள், Bilirubin

2. சிறுநீர் வளர்ப்பு அறிக்கை

சிறுநீரகத் தொற்றுகள் இருப்பதை அறிவதற்காக செய்யப் படும்.

RATE CONTENT 0, 0
QBANK (29 QUESTIONS)

மனித சிறுநீரகத்தி பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது பொய்யானது?

Review Topic
QID: 1408
Hide Comments(0)

Leave a Reply

உடனலமுள்ள சாதாரண மனிதனின் சிறுநீரகத்தியில்,

Review Topic
QID: 1410
Hide Comments(0)

Leave a Reply

மனிதச் சிறுநீரகத்தி தொடர்பான பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?

Review Topic
QID: 1413
Hide Comments(0)

Leave a Reply

மனிதச் சிறுநீரகம் தொடர்பான பின்வரும் கூற்றுக்களுள்
உண்மையானது / உண்மையானவை எது / எவை?

Review Topic
QID: 1415
Hide Comments(0)

Leave a Reply

மனிதச் சிறுநீரகத்தி தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?

Review Topic
QID: 1416
Hide Comments(0)

Leave a Reply

கீழே கொடுக்கப்பட்ட மனிதச் சிறுநீரகத்தியின் எப்பகுதிக்கு ஏற்படும் சேதம் பெரும்பாலும் குளுக்கோசு கொண்ட சிறுநீர்மாதிரியைத் தோற்றுவிக்கின்றது?

Review Topic
QID: 1417
Hide Comments(0)

Leave a Reply

மனிதச் சிறுநீரகத்தியின் அண்மையான மடிந்த சிறுகுழாய் தொடர்பான தவறான கூற்றைத் தெரிந்தெடுக்க

Review Topic
QID: 1420
Hide Comments(0)

Leave a Reply

சாதாரண சுகதேகியான வயதுவந்த (adult) ஒரு நபரின் கலன்கோள வடிந்த திரவத்தில் பின்வருவனவற்றுள் எது / எவை இருக்க முடியாது?

Review Topic
QID: 1430
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் மனித ஓமோன்களுள் எது /எவை சிறுநீரகத்தில் செய்யப்படும்?

A) ADH        (B) அல்டெஸ்ரறோன்              (C) அதிரனலீன்           (D) வளர்ச்சி ஓமோன்     (E)எரித்திரோபொயிற்றின்

Review Topic
QID: 1431
Hide Comments(0)

Leave a Reply

மனித சிறுநீரகம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது / தவறானவை எது / எவை?

Review Topic
QID: 1433
Hide Comments(0)

Leave a Reply

ஓரு நபரின் சிறுநீரில் புரதங்கள் காணப்படின் பின்வரும் கட்டமைப்புகளுள் எது சேதமடைந்திருக்கலாம்?

Review Topic
QID: 1437
Hide Comments(0)

Leave a Reply

மனித சிறுநீரகத்தி தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது / தவறானவை எது / எவை?

Review Topic
QID: 1443
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அயன்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது
(a) Na+  (b) Cl   (c) HCO3-  (d) K+    (e) H+

மனித சிறுநீரகத்தியின் சேய்மை மடிந்த குழாயுருவில் மீள அகத்துறிஞ்சப்படும் அயன்கள் மேற்குறித்தவற்றுள் எவை?

Review Topic
QID: 1447
Hide Comments(0)

Leave a Reply

மனித சிறுநீரகத்தி பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது பொய்யானது?

Review Topic
QID: 1408

உடனலமுள்ள சாதாரண மனிதனின் சிறுநீரகத்தியில்,

Review Topic
QID: 1410

மனிதச் சிறுநீரகத்தி தொடர்பான பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எது / எவை?

Review Topic
QID: 1413

மனிதச் சிறுநீரகம் தொடர்பான பின்வரும் கூற்றுக்களுள்
உண்மையானது / உண்மையானவை எது / எவை?

Review Topic
QID: 1415

மனிதச் சிறுநீரகத்தி தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?

Review Topic
QID: 1416

கீழே கொடுக்கப்பட்ட மனிதச் சிறுநீரகத்தியின் எப்பகுதிக்கு ஏற்படும் சேதம் பெரும்பாலும் குளுக்கோசு கொண்ட சிறுநீர்மாதிரியைத் தோற்றுவிக்கின்றது?

Review Topic
QID: 1417

மனிதச் சிறுநீரகத்தியின் அண்மையான மடிந்த சிறுகுழாய் தொடர்பான தவறான கூற்றைத் தெரிந்தெடுக்க

Review Topic
QID: 1420

சாதாரண சுகதேகியான வயதுவந்த (adult) ஒரு நபரின் கலன்கோள வடிந்த திரவத்தில் பின்வருவனவற்றுள் எது / எவை இருக்க முடியாது?

Review Topic
QID: 1430

பின்வரும் மனித ஓமோன்களுள் எது /எவை சிறுநீரகத்தில் செய்யப்படும்?

A) ADH        (B) அல்டெஸ்ரறோன்              (C) அதிரனலீன்           (D) வளர்ச்சி ஓமோன்     (E)எரித்திரோபொயிற்றின்

Review Topic
QID: 1431

மனித சிறுநீரகம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது / தவறானவை எது / எவை?

Review Topic
QID: 1433

ஓரு நபரின் சிறுநீரில் புரதங்கள் காணப்படின் பின்வரும் கட்டமைப்புகளுள் எது சேதமடைந்திருக்கலாம்?

Review Topic
QID: 1437

மனித சிறுநீரகத்தி தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது / தவறானவை எது / எவை?

Review Topic
QID: 1443

பின்வரும் அயன்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது
(a) Na+  (b) Cl   (c) HCO3-  (d) K+    (e) H+

மனித சிறுநீரகத்தியின் சேய்மை மடிந்த குழாயுருவில் மீள அகத்துறிஞ்சப்படும் அயன்கள் மேற்குறித்தவற்றுள் எவை?

Review Topic
QID: 1447
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank