Please Login to view full dashboard.

மனித உணவுக்கால்வாய்த் தொகுதி

Author : Admin

27  
Topic updated on 02/14/2019 09:23am
  • விலங்குமுறை போசணையை மேற்கொள்ளும் அங்கிகளில் அதாவது விலங்குகளில் உணவுக் கால்வாய் விருத்தியடைந்து காணப்படும்.Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
  • உணவுக் கால்வாய் என்பது உணவு உள்ளெடுக்கப்பட்டு கடத்தப்பட்டு சமிபாடு, அகத்துறிஞ்சல் நிகழ்கின்ற குழாய் கட்டமைப்பு ஆகும்.
  • இவ்வுணவுக் கால்வாய் இருவகைப்படும்.
  • பூரணமற்ற உணவுக் கால்வாய்
    பூரணமற்ற உணவுக் கால்வாய் ஒரு துவாரத்தை மட்டும் கொண்டிருக்கும். அத்துவாரம் வாயாகவும் குதமாகவும் தொழிற்படும். அதாவது உணவு உள்ளெடுக்கப்பட்டு மீதி உணவு மலம் அதனூடாகவே வெளியேறும்.
    (உ+ம்): Phylum – Platyhelmenthes, Phylum – Echinodermata இல் வகுப்பு Ophiuroideo
  • பூரணமான உணவுக் கால்வாய்
    பூரணமான உணவுக் கால்வாய் வாய், குதம் எனும் இரு துவாரங்களை கொண்டிருக்கும். அதில் ஒன்று வாயாகவும் மற்றையது குதமாகவும் தொழிற்படும்.
    (உ+ம்): அனேக கணங்கள் ( Nemotoda – Chordata )

Pic - 1

வாய்க்குழி
  • உணவுக் கால்வாயின் முதலாவது பகுதியாகும். அத்துடன் வெளிச் சூழலுடன் தொடர்புகொள்ளும் பகுதியாகும்.
  • இது தசைகளாலும் தாடை என்புகளாலும் எல்லைப்படுத்தப்பட்டு காணப்படும்.
  • அத்துடன் படை கொண்ட செதின் மேலணியினால் படலிடப்பட்டிருக்கும். இம் மேலணியில் சீதம் சுரக்கும் கென்டிக் கலங்களும் காணப்படும். எனவே இம் மேலணி சீத மேலணி எனவும் அழைக்கப்படும்.
  • படை கொண்ட மேலணியின் மூலம் உணவுத் துகள்களின் பொறிமுறை உராய்விலிருந்து உணவுக் கால்வாய் பாதுகாக்கப்படுகிறது.
  • வாய்க்குழியும் மூக்குக்குழியும் அண்ணத்தினால் பிரிக்கப்படுகிறது. இவ் அண்ணத்தின் முற்பகுதி என்பினால் ஆக்கப்பட்ட வன் அண்ணம் எனப்படும்.  பிற்பகுதி கசியிழையம், தசைகளை கொண்ட மென் அண்ணம் (மென்மையான) எனப்படும்.
  • வாய்க்குழியில் 3 பிரதான கட்டமைப்புகள் உள்ளன.
    • பற்கள்
    • நாக்கு
    • உமிழ் நீர் சுரப்பிகள்

பற்கள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • மேல், கீழ் தாடைகளில் (சிற்றறை) பற்குழிகளுள் பற்கள் அமைந்து காணப்படுகின்றன.
  • மனிதப் பற்கள் இருமுறை தோன்றும் / முளைக்கும் பற்களாகும். அதாவது இருவகையான பற்கள் வெவ்வேறு காலங்களில் / வயதுகளில் காணப்படுகின்றன.
  • குழந்தை பிறக்கும் போது இரு பற்தொகுதிகளும் மேல், கீழ் தாடைகளுள் அமிழ்ந்து காணப்படுகின்றன.
  • அவ் இரு வகையான பற்களாவன;
    • உதிரும் பற்கள் / பாற் பற்கள் / நிரந்தரமற்ற பற்கள்
    • நிரந்தரப் பற்கள்
  • பாற்பற்கள் எண்ணிக்கையில் 20 ஆகும். 6 மாதத்தில் வெளித்தள்ளுப்படும் அண்ணளவாக 6 வயது வரை காணப்படும்.
  • நிரந்தரப் பற்கள் 32 ஆகும். இவை 6 வயதிலிருந்து முதிர் வயது வரை காணப்படும்.
  • மனிதனில் பல்லினப் பற்கள் காணப்படுகின்றன. அதாவது 4 வகையான பற்கள்.
    1. வெட்டும் பற்கள் – உணவுத் துணிக்கைகளை வெட்டுதல்
    2. வேட்டைப் பற்கள் – உணவை துளைத்து கிழித்தல்
    3. முன் கடவாய்ப்பல் – உணவுத் துணிக்கைகளை அரைத்தல்
    4. கடவாய்ப்பல் –  உணவுத் துணிக்கைகளை அரைத்தல்
  • பற்சூத்திரம் எனப்படுவது வலது / இடது புறமான மேல், கீழ் தாடைகளிலுள்ள பற்களின் எண்ணிக்கையாகும்.
  • பாற்பற்சூத்திரம்
 வெட்டும் பற்கள்  வேட்டைப்பல்  முன்கடவாய்ப்பற்கள்   கடவாய்ப்பற்கள்
 2/2 1/1  0/0  2/2
 8  4  0  8
  • பாற்பற்களில் முன்கடவாய்பற்கள் காணப்படுவதில்லை.
  • நிரந்தரபற்சூத்திரம்
 வெட்டும் பற்கள்  வேட்டைப்பல்  முன்கடவாய்ப்பற்கள்  கடவாய்ப்பற்கள்
 2/2 1/1  2/2 3/3
 8  4  8  12
  • பல்லின் அமைப்பு  
    வெட்டும் பல்லின் தலை மண்வெட்டி அலகு போன்றது.
    வேட்டைப் பல்லின் தலை உளி போன்றது.
    முன்கடவாய் பல், கடவாய்ப்பற்களின் தலை அகன்ற கூர்களுடன் கூடிய பரப்பை கொண்டது.

முன்கடவாய்ப் பல்லின் நெடுக்கு வெட்டு முகத்தோற்றம்

Pic - 3

  • பல்லானது பிரதானமாக 3 பகுதிகளை கொண்டது.
    • பற்தலை – பல்லில் வெளித்தெரியும் பகுதி
    • பல்வேர் – தாடைகளின் குழிகளுள் அமைந்து காணப்படும் பகுதி
    • பற்கழுத்து – பற்தலைக்கும் பல்வேருக்கும் இடையில் காணப்படும் ஒடுங்கிய பகுதி முரசு மட்டத்தில் காணப்படும் பகுதி.
  • பற்தலையின் வெளிப்புறமாக மிளிரி (Enamel) காணப்படுகிறது. இது மிகவும் வன்மையான அமைப்பு. என்பிழையத்தின் அமைப்பை ஒத்தது. இது பற்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது.
  • பல்வேரின் வெளிப்புறமான பகுதி பற்சீமேந்து, இதுவும் என்பிழையத்தின் அமைப்பை ஒத்தது. இது பற்களை குழிகளினுள் இணைத்து வைத்திருக்கும்.
  • இப்பற்சீமேந்தில் அதிகளவு வெண் நார்கள் குறுக்காக அமைந்து காணப்படும். இவை தாங்கிணையம் எனப்படும். இவை பற்களை மேலும் உறுதியாக குழிகளினுள் இணைக்க உதவுகின்றன.
  • பற்தலை, பல்வேரின் முழுப்பகுதியிலும் மிளிரி, பற்சீமெந்து உட்புறமாக பன்முதல் அமைந்து காணப்படுகிறது. இதுவும் ஓரளவு வன்மையான என்பிழையத்தின் அமைப்பை ஒத்த இழையமாகும்.
    இதனுள் காணப்படும் குழி மச்சைக்குழி எனப்படும். இதனுள் குருதிக் கலன்கள், நிணநீர் கலன்கள், நரம்புகள் என்பன பயணம் செய்கின்றன.
  • மனித உடலிலேயே மிகவும் வன்மையான பகுதி மிளிரி ஆகும். (என்பை விட)
  • பற்களின் தொழில்கள் :
    1. உணவை வெட்டி, கிழித்து, அரைத்து பௌதிக / பொறிமுறை சமிபாடை மேற்கொள்வதன் மூலம் உணவின் மேற்பரப்பை அதிகரித்து வினைத்திறனான நொதியத் தாக்கத்திற்கு உதவி செய்யும்.
    2. முகத்திற்கு அழகு வழங்குதல்.

பல் தொடர்பான நோய்களை தவிர்த்தல் / பற்சுகாதாரம் பேணும் முறைகள் 

  • அடிக்கடி உணவு உண்ணலை தடுத்தல்.
    உணவு உண்ணும் வேளைகளில் பல் மேற்பரப்பில் pH 7 இலிருந்து 5 ஆக குறைவடைந்து, அமிலத் தன்மையானதாக மாறுகின்றது. சில பற்றீரியாக்கள் இவ் அமில ஊடகத்தில் வினைத்திறனாக தொழிற்பட்டு பெருக்கமடைகின்றன. இவை முரசு இழையத்தை தாக்க தொற்றுகைக்கு உள்ளாக்கி குருதிக் கசிவை ஏற்படுத்தகின்றது. அத்துடன் முரசு வெண்ணிறமாக மாறுகின்றது. முரசு இறந்த இழையமாக மாற்றப்படும். இதனால் பற்கள் உறுதியான இணைப்பு இன்றி தளர்வாக காணப்படும்.
  • இனிப்புத் தன்மையான உணவுகளை தவிர்த்தல் வேண்டும்.
    சில பற்றீரியாக்கள் வெல்லத்தை சுவாசக் கீழ்படையாக பயன்படுத்தி அவற்றை அமிலமாக மாற்றுகின்றன. இவ் அமிலம் பல் மிளிரியை பாதிக்கின்றது அல்லது அரிப்பிற்குள்ளாக்கி பல்சூத்தையை உண்டாக்கும்.
  • நன்கு சமைக்கப்படாத நார் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளல் வேண்டும். பற்களினால் இவை பொறிமுறை சமிபாட்டுக்கு உட்படும் போது பற்களும் முரசும் உறுதி பெறும்.
  • ஒழுங்கான முறையில் ஒவ்வொரு உணவு வேளைகளின் பின்பும் தூரிகை கொண்டு பல் துலக்கல்.  இதனால் பற்களின் இடைவெளிகளில் காணப்படும் உணவுத் துணிக்கைகள் அகற்றப்படுவதுடன் உமிழ் நீரின் ஓட்டம் தூண்டப்படும். உமிழ் நீரினால் நுண்ணங்கிக்கு எதிரான தொழிற்பாடு காட்டப்படும்.
  • சரியான விகிதத்தில் Flouride கொண்ட பற்பசையை பயன்படுத்துவதுடன் ஒழுங்காக பற்களை பரிசோதித்தல். அத்துடன் அதிகளவு அடிக்கடி நீர் அருந்துதல்.

நாக்கு      

Pic - 4                                                 

  • மனித நாக்கு வாய்க்குழியின் கீழ் தளத்தில் உவையுரு என்புடன் இணைக்கப்பட்டு காணப்படும்.
  • இச்சைவழி இயங்கு தசையான வன்கூட்டுத் தசையினால் ஆக்கப்பட்ட கட்டமைப்பு.
  • நாக்கின் மேற்பரப்பானது கெண்டிக் கலங்களை கொண்ட படைகொண்ட செதின் மேலணியால் படலிடப்பட்டிருக்கும். (சீத மென்சவ்வு)
  • நாக்கின் மேற்பரப்பில் சிறிய வெளிநீட்டங்களாக சிம்பிகள் காணப்படும்.
  • இது 3 வகைப்படும்.
    • வலேட் (Vallate) சிம்பி – பருமனில் பெரியது.நாக்கின் அடிப்பரப்பில் காணப்படும்.
    • பங்கசுருவான சிம்பி – நாக்கின் நுனிப்பகுதியில் காணப்படும். பருமனில் இடைப்பட்டது.
    • இழையுருவான சிம்பி – பருமனில் மிகச் சிறியது. நாக்கின் விளிம்பு / ஓரப்பகுதியில் காணப்படும்.
  • மனித நாக்கு 4 அடிப்படை சுவைகளை உணரக் கூடியது.
    இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு
  • இவ் வகையான சுவைகளை உணரக்கூடிய / வாங்கக் கூடிய சுவை வாங்கிகள் சிம்பிகளினுள் அமைந்து காணப்படும்.எனவே ஒவ்வொரு சிம்பியும் ஏராளமான சுவை வாங்கிகளையும் நரம்புகளையும் குருதிக் கலன்களையும் கொண்டது.
  • இனிப்பு, உவர்ப்பை உணரக்கூடிய சுவை வாங்கிகள் நாக்கின் நுனிப்பகுதியிலுள்ள பங்கசுருவான சிம்பிகளினுள் அமைந்துள்ளன.
  • புளிப்பை உணரக்கூடிய சுவை வாங்கிகள் நாக்கின் ஓரங்கள் / விளிம்புகளில் அமைந்துள்ள இழையுருவான சிம்பிகளினுள் அமைந்துள்ளன.
  • கசப்பை உணரக்கூடிய சுவை வாங்கிகள் நாக்கின் அடியிலுள்ள வலேட் (Vallate) சிம்பிகளினுள் உள்ளது.
  • நாக்கின் தொழில்கள் :
    1. சுவை வாங்கியாக தொழிற்படல்.
    2. பொறிமுறை சமிபாட்டில் உதவுதல்.
    3. உமிழ்நீரை உணவுகளுடன் கலத்தலும் உணவை வாய்க்குழியினுள் அசைத்தல்.
    4. உணவு விழுங்கலில் பங்குகொள்ளும்.
    5. பேசுவதற்கு உதவுதல்.

உமிழ் நீர்சுரப்பிகள் Please Login to view the QuestionPlease Login to view the Question

Pic - 5

  • உமிழ் நீர்சுரப்பிகள் சுரப்பை கடத்தும் கான்களை கொண்ட புறம் சுரக்கும் சுரப்பிகளாகும்.
  • ஏராளமான உமிழ் நீர்ச்சுரப்பிகள் வாய்க் குழியின் மேலணியில் காணப்படுகின்றன.
  • மனிதனில் 3  பிரதான  சோடி  உமிழ் நீர்ச்சுரப்பிகள் உள்ளன.
    • ஒரு சோடி கன்ன உமிழ்நீர் சுரப்பி – பருமனில் பெரியது
    • ஒரு சோடி அனுக்கீழ் உமிழ்நீர் சுரப்பி – பருமனில் இடைத்தரம்
    • ஒரு சோடி நாவின் கீழ் சுரப்பி – பருமனில் சிறியது.
சுரப்பி அமைவிடம் சுரக்கப்படும் இடம்
கன்ன உமிழ்நீர்ச்சுரப்பி முகத்தின் இருபுறமும் வெளிக்காது துவாரத்திற்கு சற்று கீழ் மேற்தாடையினூடான கடவாய் பற்களுக்கு ஊடாக
அனுக்கீழ் உமிழ்நீர்சுரப்பி முகத்தின் இருபுறமும் தாடையின் கோணப் பகுதியில் வாய்க்குழியின் கீழ்தளம்
நாவின் கீழ் உமிழ்நீர்ச்சுரப்பி நாக்குக் கீழாக வாய்க்குழியின் கீழ் தளத்தில் வாய்க்குழியின் கீழ்தளம்
  • ஒவ்வொரு சுரப்பியும் வெண்ணார்களாளான (Collage) நாருரையினால் போர்வையிடப்பட்டிருக்கும்.
  • அத்துடன் ஒவ்வொரு சுரப்பியும் அனேக சிறு சோணைகளால் ஆக்கப்பட்டது.
  • ஒவ்வொரு சிறு சோணையும் அனேக Acini / சிற்றறைகளை கொண்டது.
  • ஒவ்வொரு சிற்றறையின் சுவரும் சுரக்கும் தன்மையுடைய கனவடிவ மேலணியால் ஆனது.
  • ஒவ்வொரு சிற்றறையிலுமுள்ள சுரக்கும் தன்மையுள்ள கலங்களின் சுரப்பு சிறிய கானினூடாக கடத்தப்பட்டு, பின்பு அவை பெரிய கானினூடாக கடத்தப்பட்டு வாய்க்குழியினுள் வெளியேற்றப்படும்.
  • இப்பிரதான சுரப்பிகளுக்கு மேலதிகமாக மேலும் சிறிய சுரப்பிகள் உள்ளன. அவை வாய்க்குழியில் சிதறி காணப்படுகிறன / வாய்க்குழி மேலணியில் சிதறியுள்ளன.
  • உமிழ் நீர்ச்சுரப்பியின் சுரப்பு தன்னாட்சி நரம்பினால் கட்டுப்படுத்தப்படுகிறது. பரிவு நரம்பு சுரப்பை நிரோதிப்பதுடன் பராப்பரிவு நரம்பு சுரப்பை தூண்டுகிறது.
  • பின்வரும் காரணிகள் உமிழ் நீர்ச்சுரப்பை தூண்டுகின்றன.
    ♦ உணவின் மணம்
    ♦ உணவின் சுவை
    ♦ உணவை பார்த்தல், நினைத்தல்
    ♦ வாய்க்குழியில் உணவின் தொடுகை

உமிழ்நீர்

  • உமிழ் நீர்சுரப்பிகளினால் சுரக்கப்படும் சுரப்பும் வாய்க்குழி மேலணியினால் சுரக்கப்படும் சீதமும் சேர்ந்த கலவை உமிழ்நீர் எனப்படும்.
  • ஒரு நாளில் உமிழ்நீர் சுரப்பியினால் சுரக்கப்படும் உமிழ்நீர் 1.5 l ஆகும்.
  • உமிழ் நீரிலுள்ள கூறுகள்
    • நீர்
    • சீதம்
    • கனியுப்புக்கள் – Cl, K+, Mg2+, Ca2+
    • நொதியம் – உமிழ்நீருக்குரிய அமைலேசு / தயலின், இலைசோசைம் (Lysozym)
    • இமியுனோகுளோபியுலின் (Immunuglobulin)
    • குருதியுறைதல் காரணி
    • நைதரசன் கழிவுப் பொருட்கள் – யூரியா, யூரிக்கமிலம்

கூறுகளும் அவற்றின் தொழில்களும்

  • நீர்
    • நொதியம் தொழிற்படுவதற்கான திரவ ஊடகம் வழங்கல்.
    • உணவை ஈரலிப்பாக்கல்.
  • சீதம்
    • உணவை மசகிட்டு விழுங்கலை சுலபமாக்கல் (உராய்வு நீக்கி)
  • கனியுப்புக்கள்
    • Cl நொதிய ஏவி / அசேதன அயனாக தொழிற்பட்டு உமிழ்நீருக்குரிய அமைலேசின் தொழிற்பாட்டை விரைவுபடுத்துகின்றது.
  • நொதியங்கள்
    •  உமிழ்நீருக்குரிய அமைலேசு – சமைத்த உணவிலுள்ள மாப்பொருளை மோல்ற்றோசாக மாற்றி இரசாயன சமிபாட்டை ஊக்குவிக்கின்றது.
    •  இலைசோசைம் – பற்றீரியாக்களின் கலச்சுவரை நீர்ப்பகுப்படையச் செய்து பற்றீரியாக்களை அழித்தல்
  • இமியுனோகுளோபியுலின் (Immunuglobulin)
    • நுண்ணங்கிக்கு எதிரான தொழிற்பாட்டை மேற்கொள்ளல்.
  • குருதியுறைதல் காரணி
    • குருதி உறைதலில் பங்குகொண்டு காயங்களினூடாக நுண்ணங்கி தொற்றலை தடுக்கின்றது.
  • உமிழ்நீருக்குரிய அமைலேசு 6.8 pH ( 5.5 – 7.4 pH ) இல் சிறப்பாக தொழிற்படக்கூடியது. எனவே உமிழ்நீர் நடுநிலை ஊடகத்தில் தொழிற்படும்.

உமிழ்நீரின் தொழில்கள்

1. சமைத்த உணவிலுள்ள மாப்பொருளை மோல்ற்றோசாக மாற்றும். அதாவது மாப்பொருளின் இரசாயன சமிபாட்டை மேற்கொள்ளல்.
2. உணவு மசகிடல்.
3. வாயைச் சுத்தப்படுத்துதல்.
4. காயமடைதலையும் நுண்ணங்கி தொற்றலையும் தடுத்தல்.
5. சுவை வாங்கிகளை தூண்டி சுவை உணர்த்தலில் பங்கு கொள்ளல்.
6. உணவை ஈரலிப்பாக்கல்.
7. உணவை விழுங்கலில் பங்குகொள்ளல்.
8. பேசுவதற்கு உதவுதல்.

தொண்டை
  • Pic - 712 – 14 cm நீளமான பிரமிட் வடிவமான குழாய் கட்டமைப்பு (மேற்புரம் அகன்றும் கீழ்ப்புறம் ஒடுங்கியும் காணப்படும்)
  • தொண்டை  3  பகுதிகளை கொண்டது.
    • மூக்குத் தொண்டை – மூக்குக்குழிக்கு பின்னால் அமைந்தது.
    • வாய்க்குழி தொண்டை – வாய்க்குழிக்கு பின்னால் அமைந்தது.
    • குரல்வளை தொண்டை – குரல்வளைக்கு பின்னால் அமைந்தது.
      இதன் தொடர்ச்சியாக களமுள்ளது.
  • இவற்றுள் வாய்க்குழி தொண்டையும் குரல்வளை தொண்டையும் உணவு செல்லும் பாதையுடன் தொடர்புபட்டது.
  • தொண்டையுடன் தொடர்புபட்ட சுவர் 3 படை இழையங்களாலானது.
  • வெளிப்புறப்படை –  இச்சையின்றி இயங்கும் மழமழப்பான தசையிழையத்தாலானது. இத்தசை விழுங்கலுடன் தொடர்பானது.
  • நடுப்படை –  இது வெண்ணாரை அதிகளவில் கொண்ட நார் இழையத்தினாலானது. குருதிக் கலன்கள், நரம்புகள் காணப்படும். இப்படை சுவருக்கு ஆதாரம் அளிப்பதுடன் பதார்த்த பரிமாற்றத்திலும் பாங்குகொள்ளும்.
  • அகவணி / உட்புறப்படை –  இது படைகொண்ட செதின் மேலணியாலானது. ஆனால் கென்டிக்கலங்களில்லை. எனவே தொண்டை சீதம் சுரக்காது.

தொண்டையின் தொழில்கள்

  • வாய்க்குழியிலிருந்து களத்திற்கு உணவை கடத்தல்.
  • மூக்குக்குழியிலிருந்து குரல்வளைக்கு வளியை கடத்தல்.
  • உணவு விழுங்கல் செயற்பாட்டில் பங்குகொள்ளல்.
  • யூத்தேக்கியாவின் குழாய் இணைய இடமளித்து வழிமண்டல அமுக்கம் நடுக்காதில் பேணப்பட்டு சரியான கேட்டலுக்கு உதவுதல்.
  • தொண்டை சுவரின் நடுப்படையிலுள்ள நிணநீர் இழையங்களில் பிறபொருளெதிரி உற்பத்தி செய்யப்பட்டு நுண்ணங்கிக்கு எதிரான தொழிற்பாடு காட்டல்.
உணவுக் கால்வாய் சுவரின் அடிப்படை கட்டமைப்பு

Pic - 8

Pic - 9

  • உணவுக் கால்வாய் சுவரின் பொதுவான அமைப்பில் 4  பிரதான இழையப்படை உள்ளன.  அவை வெளியிருந்து உள்நோக்கி; Please Login to view the QuestionPlease Login to view the Question
    • நீர்ப்பாயப்படை / சிரோசா படை
    • வெளித்தசைப்படை
    • சீதமுளிக் கீழான படை
    • சீதமுளிப்படை
  • நீர்ப்பாயப்படை நார் தொடுப்பிழையத்தலானது. மிக அதிகளவு வெண்ணாரையும் குறைந்தளவு மஞ்சள் நாரையும் கொண்டது.
  • வெளித்தசைப்படை மழமழப்பான தசையிழையத்தலானது. இங்கு தசைநார்கள்  இரு முறைகளில் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன.
  • வெளிப்புறமாக  தசைநார்கள்  நீள்ப்பக்கமாக ஒழுங்குபடுத்தப்பட்டு நீளத்தசைப்படையை ஆக்குகின்றன. அதற்கு உட்புறமாக  தசைநார்கள் வட்ட ஒழுங்கில் ஒழுங்குபடுத்தப்பட்டு வட்டத் தசைப்படையை ஆக்குகின்றன.
  • நீளத்தசைப் படைக்கும் வட்டத்தசைப் படைக்குமிடையில் தன்னாட்சி நரம்புகளை  கொண்ட  ஆவுபாக்கின் நரம்புப் பின்னல் உள்ளது. இதில் பரிவு, பரப்பரிவு நரம்புகள் உள்ளன.
  • சீதமுளிக்கீழான படையில் (வட்டத்தசைப்படைக்கு கீழாக) தன்னாட்சி நரம்புகளை கொண்ட மிசுனரின் நரம்புப் பின்னல் உள்ளது. இதில் பரிவு, பரப்பரிவு  நரம்புகள் உள்ளன.
  • வெளித்தசைப்படைக்கு உட்புறமாக காணப்படும் சீதமுளிக்கீழான படை ஐதான தொடுப்பிழையத்தாலானது (சிற்றிடைவிழையம்) அத்துடன் கொலாஜின் நார், மஞ்சள் நார், குருதிக்கலன்கள், நரம்புக் கலங்கள், நிணநீர்க்கலன்களை கொண்டது.
  • சீதமுளிப்படை 3 படைகளை கொண்டது. வெளியிருந்து உள்நோக்கி;
    • சீதமென்றகட்டுத் தசைப்படை
    • தன்னகவத்தகட்டுப்படை
    • மேலணி இழையம்
  • சீதமென்றகட்டுத் தசைப்படை, வெளித்தசைப்படை போன்றது. மழமழப்பாதைசையிழையத்தாலானது. வெளிப்புறமாக மெல்லிய நீளத்தசையையும் உட்புறமாக மெல்லிய வட்டத்தசையையும் கொண்டது.
  • தன்னகவத்தகட்டுப்படை, சீதமுளிக் கீழான படையை போன்றது. தளர்வான தொடுப்பிழைத்தாலானது. குருதி, நரம்பு, நிணநீர் கலங்களை கொண்டது.
  • மேலணி, எளிய கம்ப மேலணி இழையத்தாலானது. இதில் கென்டிக் கலம் / சீதம் சுரக்கும் கலங்களுள்ளன. இங்கு சுரப்பிகள் காணப்படும். (பொதுவான கட்டமைப்பிலில்லை)
பகுதி தொழில்
 நீர்ப்பாயப்படை  உணவுக் கால்வாய் பகுதிகள் தொழிற்படும் போது பொறிமுறை உராய்விலிருந்து பாதுகாத்தல்
 வெளித்தசைப்படை  சுற்றுச் சுருங்கலை ஏற்படுத்தி உணவின் பொறிமுறை சமிபாடு, உணவை கடத்தல்
அவுபாக்கின் நரம்புப் பின்னல்  சுற்றுச் சுருக்கை கட்டுப்படுத்தல்
 மிசுனரின் நரம்புப் பின்னல் உணவுக் கால்வாய் சுவரிலுள்ள சுரப்பிகளின் சுரப்பு வெளியேறலை கட்டுப்படுத்தல்
 சீதமுளிக்கீழான படை பதார்த்த பரிமாற்றம்,  நுண்ணங்கிக்கு எதிரான பாதுகாப்பு
சீதமென்றகட்டுத் தசைப்படை  உணவுக் கால்வாய் சுவரிலுள்ள சுரப்பிகளின் சுரப்பை வெளியேற்றல்
தன்னகவத்தகட்டுப் படை பதார்த்த பரிமாற்றம்,  நுண்ணங்கிக்கு எதிரான பாதுகாப்பு
 மேலணி சுரப்பிகளை ஆக்கி பதார்த்தம் சுரத்தல், உணவு அகத்துறிஞ்சல்
உள்ளிடம் சமிபாடு நிகழும் இடம்.  பிரதான சமிபாடு கலப்புறச் சமிபாடாகும


சுற்றுச் சுருக்கு

உணவுக் கால்வாய் சுவரிலுள்ள நீள்பக்க, வட்டத்தசைகள் ஒன்றுவிட்ட ஒழுங்கில் சுருங்கித் தளர்வதால் உணவு கடத்தப்படும் சந்தம் பொருந்திய அசைவு ஆகும்.

இறுக்கி
உணவுக் கால்வாய் சுவரிலுள்ள வட்டத்தசை புடைப்படைந்து / தடிப்படைந்து ஆக்கும் கட்டமைப்பாகும்.
தொழில் :
உணவுக்கால்வாயில் உணவு மீண்டு / பின்னோக்கி பாய்தலை தடுத்து ஒருவழியில் உணவு செல்ல அனுமதித்தல்.

களம்
  • களமானது  தொண்டையையும் இரைப்பையையும் இணைத்து காணப்படும் குழாய் கட்டமைப்பு ஆகும்.
  • வாதனாளிக்கு பிற்புறமாக முள்ளந்தண்டுக் கம்பம், முள்ளந்தண்டு என்புக்கு முற்புறமாக பெரும்பகுதி  நெஞ்சறைக்குழியிலும் ஒரு சிறு பகுதி வயிற்றறைக்குழியிலும் அமைந்து காணப்படும்.
  • உணவுக் கால்வாய் பகுதிகளில் நெஞ்சறையிலும் வயிற்றையிலும் காணப்படும் கட்டமைப்பு இதுவாகும்.
  • இது தொண்டையுடன் தொடர்பு கொள்ளும் பகுதியில் காணப்படும் இறுக்கி தொண்டை –  கள இறுக்கி எனப்படும்.
  • களத்துக்கும் இரைப்பைக்குமிடையில் காணப்படும் இறுக்கி கள – இதய இறுக்கி எனப்படும்.
  • களமானது பிரிமென்றகட்டினூடாக சென்று வயிற்றுக்குழியில் / கூர்ங்கோணத்தினூடாக வளைந்து இரைப்பையுடன் தொடர்பு கொள்ளும். இதனால் இரைப்பையிலுள்ள உணவு மீண்டு பாய்தல் தடுக்கப்படும்.
  • களத்தின் சுவரின் இழைய அமைப்பு வகையானது போன்ற 4 படைகளை கொண்டது. இதில் வெளித்தசைப்படையிலும் அகவணியிலும் வேறுபாடு உள்ளது.
  • களத்தின் அண்மை அந்தத்தின் 1/3  பகுதிச் சுவர் வன்கூட்டுத் தசையை கொண்டது. சேய்மை அந்த 1/3  பகுதிச் சுவர் மழமழப்பான தசையை கொண்டது.  இவற்றிற்கிடையிலான  தசைப்பகுதி வன்கூட்டுத் தசை, மழமழப்பான தசையை கொண்டது.
  • அதேபோல மேலணி அண்மை அந்த 1/3 பகுதி படை கொண்ட செதின் மேலணியாலானது. சேய்மை அந்த 1/3 பகுதி எளிய கம்ப மேலணியால் ஆனது. இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதி படை கொண்ட செதின் மேலணி, எளிய கம்ப மேலணியை கொண்டது.

களத்தின் தொழில்கள்

  • சுற்றுச் சுருக்கின் மூலம் உணவை தொண்டையிலிருந்து இரைப்பைக்கு கடத்தல்.
  • உணவின் பௌதிக சமிபாடு.

இரைப்பையிலுள்ள உணவு மீண்டு பாய்தலை தடுக்கும் இரு கட்டமைப்பு சிறப்பம்சங்கள்

♦ களத்திற்கும் இரைப்பைக்குமிடையில் காணப்படும் கள – இதய இறுக்கி
♦ களம் இரைப்பையுடன் தொடர்பு கொள்ளும் பகுதியிலுள்ள கூர்ங்கோண வளைவு

இரைப்பை

Pic - 12

  • பிரிமென்றகட்டிற்கு உடன் கீழாக வயிற்றுக்குழியில் இடது புறமாக அமைந்து காணப்படும். Please Login to view the QuestionPlease Login to view the Question
  • ‘J ‘ வடிவமான நன்கு தசைசெறிவான பையுருவான கட்டமைப்பு மழமழப்பான தசையினால் ஆனது.
  • இது சிறிய வளைவு ஒன்றையும் பெரிய வளைவு ஒன்றையும் (இரு வளைவுகள்) கொண்டது. சிறிய வளைவு நடுக்கோட்டுப்புறமானது. பெரிய வளைவு பக்கப்புறமானது.
  • இதன் அண்மை அந்தத்தில் களத்துடன் தொடர்பு கொள்ளும் பகுதியில் கள – இதய இறுக்கி காணப்படும்.
  • முன்சிறுகுடலுடன் தொடர்புறும் சேய்மை அந்தத்தில் குடல் – வாய் இறுக்கி காணப்படும். இது முன்சிறுகுடலுக்கும் இரைப்பைக்கும் இடையிலான துவாரத்தை கட்டுப்படுத்தும்.
  • இரைப்பை 4 பகுதிகளை கொண்டது.
    • இதய இரைப்பை – களம் இரைப்பையுடன் தொடர்புகொள்ளும் வாயிலுக்கு பின்னாக காணப்படும்.
    • அடிக்குழிப்பகுதி – இரைப்பையின் நிலைக்குத்தான மேற்பகுதி
    • உடல் – இரைப்பையின் பிரதான பகுதி. அடிக்குழிக்கும் குடல்வாயிக்கும் இடையில் காணப்படும்.
    • குடல் வாய் இரைப்பை – இரைப்பையின் வளைந்த கீழ்ப்பகுதி
  • இரைப்பையின் வெளிப்புறம் அழுத்தமானது.   அதன் உட்புறம் நீள்பக்க மடிப்புகளை கொண்டது.
  • இம்மடிப்புகள் ரூகேயின் மடிப்பு எனப்படும். இவை தற்காலிகமானவையாகும். இரைப்பையினுள் உணவு உள்ளெடுக்கப்படும் போது இம் மடிப்பு நீக்கப்பட்டு இரைப்பை விரிவடைகின்றது.
  • இரைப்பையில் நிலைக்குத்தான அடிக்குழி காணப்படுவதால் வளி / வாயுக்கள் அதனுள் தேக்கமடைந்து வாயுக் கோளாறை ஏற்படுத்துகின்றது.

இரைப்பைச்  சுவரின் இழைய அமைப்பு

Pic - 13

 

  • இரைப்பைச் சுவர் வகையான அமைப்பு போன்று 4  இழையப் படைகளை கொண்டது. வெளிப்புறம் இருந்து உள்நோக்கி; சிரோசா, வெளித்தசைப்படை, சீதமுளிக்கீழான  படை, சீதமுளிப்படை என்பன ஆகும்.
  • சிரோசா வகையானதாகும்.
  • வெளித்தசைப்படை நன்கு விருத்தியடைந்தது. 3 படைகளில் காணப்படும். வெளிப்புறமாக நீள்பக்கத்தசை, நடுவில் வட்டத்தசை, உட்புறமாக சரிவுத்தசை என அமைந்து காணப்படும்.
  • சீதமுளிக்கீழான படை வகையானது.
  • சீதமுளிப்படையில் சீதமென்றகட்டுத் தசைப்படை வகையானது.
  • தன்னகவத்தகட்டுப்படை அதிக கிளைத்த, கிளைவிடாத குழாயுருவான மேலணியிலிருந்து உருவாக்கப்பட்ட உதரச் சுரப்பிகளை கொண்டிருக்கும்.
  • மேலணி வகையானது போன்று எளிய கம்ப மேலணியாலானது. ஆனால் கலங்கள் திரிபடைந்து வெவ்வேறு சுரப்புகளை சுரக்கின்றன 5 வகையான கலங்கள் காணப்படுகின்றன.
  • சீதகழுத்துக்கலம் / கென்டிக்கலம் – இவை உதரச் சுரப்பியின் கழுத்துப்பகுதி / மேற்பகுதியில் காணப்படும். சீதத்தை சுரக்கின்றது.
  • சுவர்க்கலம் – இவை உதரச்சுரப்பியின் நடுப்பகுதியில் காணப்படுகின்றன. இவை HCl, உள்ளீட்டுக் காரணி என்பவற்றை சுரக்கின்றன.
  • பிரதான கலம் (சைமோஜின் கலம்) – இது உதரச்சுரப்பியின் கீழ்ப்பகுதியிலுள்ளது.  இவை பெப்சினோஜன், முதல் ரெனின் என்பவற்றை சுரக்கின்றது.
  • உதரக் கலம் – இது எல்லாப் பகுதியிலும் பரந்து காணப்படும். நீர், கனியுப்பை சுரக்கும்.
  • அகஞ்சுரக்கும் கலம் – இது  உதரச்சுரப்பியின் அடிப்பகுதியில் காணப்படும். இது காசுத்திரின் ஓமோனைச் சுரக்கும்.
  • இக்கலங்களால் சுரக்கப்படும் கூறுகளுள் காசுத்திரின் (Gastrin) ஓமோன் மட்டும் குருதிக்கலன் மயிரினுள் வெளியேற்றப்படும். எனவே இது உதரச்சாறில் காணப்பட மாட்டாது. ஏனைய கூறுகள் உதரச்சுரப்பியின் கானினுள் வெளியேற்றப்பட்டு உதரச் சாறில் காணப்படும்.
  • இரைப்பை சீதமுளிப்படை / மேலணி அகஞ்சுரக்கும், புறஞ்சுரக்கும் கட்டமைப்பாக தொழிற்படும்.

உதரச் சுரப்பி

  • இரைப்பையின் சீதமுளிப்படையின் தன்னகவத்தகட்டுப்படையில் உதரச்சுரப்பி அமைந்துள்ளது.
  • கிளைத்த / கிளைவிடாத குழாயுருவான சுரப்பி ஆகும்.
  • புறஞ்சுரக்கும் சுரப்பி ஆகும். இதன் சுரப்பான உதரச்சாறு கானினூடாக கடத்தப்பட்டு சிறு துவாரங்களான இரைப்பை குழியினூடாக இரைப்பை உள்ளிடத்தில் வெளியேற்றப்படுகின்றது.
  • இதன் சுரத்தல் தன்னாட்சி நரம்பு தொகுதியால் கட்டப்படுத்தப்படும். அதாவது பரிவு நரம்புகள் இதன் சுரத்தலை நிரோதிக்கும். பரப்பரிவு நரம்பு இதன் சுரத்தலை அதிகரிக்கும்.
  • இதன் சுரத்தல் கட்டுப்பாட்டில் இரு ஓமோன்கள் பங்குபெறுகின்றன.
    • காசுத்திரின் ஓமோன் – இதன் சுரத்தலை அதிகரிக்கும்.
    • என்டரோ காசுத்திரோன் ஓமோன் – இதன் சுரத்தலை குறைக்கும்.
  • உதரச்சாறிலுள்ள கூறுகள் :
    • நீர்
    • சீதம்
    • கனியுப்பு
    • HCl
    • பெப்சினோஜன் (Pepsinogen)
    • முதல் ரெனின் (Pro renin)
    • சிறிய அளவிலான லிப்பேசு
    • உள்ளீட்டுக் காரணி
  • நீர்
    • உணவை ஈரலிப்பாக்குதல்.
    • நொதியங்கள் வினைத்திறனாக தொழிற்படுவதற்கான திரவ ஊடகம் வழங்கல்.
  • சீதம்
    • உணவை மசகிடல் / வழுவழுப்பாக்குதல்.
    • இரைப்பைச் சுவரின் மேலணிக் கலங்களின் தற்சமிபாட்டை தடுத்தல்.
  • HCl
    • உதரச்சாறு நொதியங்கள் தொழிற்படுவதற்கான அமில ஊடகம் வழங்கல்.
    • பெப்சினோஜனை பெப்சின் ஆகவும் முதல் ரெனினை ரெனின் ஆகவும் மாற்றல் / உயிர்ப்பூட்டல்.
    • நுண்ணங்கிகளை அமித்தல்.
    • உமிழ் நீருக்குரிய அமைலேசு நொதிய தொழிற்பாட்டை நிறுத்தல்.
    • புரத உணவை அமைப்பழிவுக்கு உட்படுத்துவதன் மூலம் உணவை மென்மையாக்கல்.
    • சிறுகுடலில் Fe2+ அகத்துறிஞ்சலை தூண்டல் / உதவுதல்.
      (Fe2+ HCl இல் கரைவதால்)
  • பெப்சினோஜன்
    • இது பெப்சின் நொதியத்தின் உயிர்ப்பற்ற நிலை. இந் நிலையில் சுரக்கப்படுவதால் இரைப்பைச் சுவரின் தற்சமிபாடு தடுக்கப்படுகிறது.
    • இது பெப்சினாக மாற்றப்பட்டு புரதத்தை சிறிய பொலிபெப்டைட்டு சங்கிலிகளாக மாற்றுவதன் மூலம் இரசாயன சமிபாட்டை மேற்கொள்ளும்.
  • முதல் ரெனின்
    • ரெனினின் உயிர்ப்பற்ற நிலை. இது பாலிலுள்ள கேசினோஜன் புரதத்தை கரையா நிலையிலுள்ள கேசினாக மாற்றுகிறது / பாலை திரளச் செய்யும். இது சிறு பிள்ளைகளின் உதரச்சாறில் காணப்படும்.
  • கனியுப்புகள்
    • நொதிய ஏவியாக தொழிற்படும்.
  • இலிப்பேசு
    • இலிப்பிட்டு உணவுகளில் தொழிற்பட்டு அவற்றை கொழுப்பமிலம், கிளிசரோலாக மாற்றி இரசாயன சமிபாட்டை மேற்கொள்ளும்.
  • உள்ளீட்டுக் காரணி
    • விற்றமின்  B12  சிறுகுடலில் அகத்துறிஞ்சப்பட உதவுகிறது.
  • உள்ளீட்டுக்காரணி குறைவாக சுரக்கப்படுவதால் விற்றமின் B12 குறைபாடு ஏற்படும். இதனால் குருதிச் சோகை ஏற்படும்.
    RBC உற்பத்திக்கு விற்றமின் B12 அவசியம்.

இரைப்பையின் தொழில்கள்

  • உணவை தற்காலிகமாக சேமித்தல்.
  • உதரச்சாறை சுரப்பதன் மூலம் உணவின் இரசாயன சமிபாட்டை மேற்கொள்ளல்.
  • கடைதல் அசைவின் மூலம் உணவின் பொறிமுறை சமிபாட்டை மேற்கொள்ளல்.
  • காசுத்திரின் ஓமோனைச் சுரத்தல். (அகஞ்சுரக்கும் கட்டமைப்பு)
  • குடல்வாய் இறுக்கியின் மூலம் இரைப்பையிலிருந்து உணவு சிறுகுடலுக்கு செல்வதை ஒழுங்காக்கல்.
  • உமிழ் நீருக்குரிய அமைலேசின் தொழிற்பாட்டை நிறுத்தல்.
  • சிறிய அளவிலான நீர், அற்ககோல், மருந்துகள் அகத்துறிஞ்சல்.
  • நுண்ணங்கிகளை அகற்றல்.
  • உணவு மசகிடல்.
  • இரைப்பைச் சுவரின் தற்சமிபாட்டை தடுத்தல்.
  • இரைப்பையில் நொதியம்  தொழிற்பட  அமில ஊடகம்  வழங்கல்.
  • விற்றமின் B12 அகத்துறிஞ்சலுக்கு உதவுதல்.
  • Fe அகத்துறிஞ்சலுக்கு உதவுதல்.
சிறுகுடல்
  • வயிற்றுக்குழியில் தொப்புள் பகுதியில் அமைந்து காணப்படும். பெருங்குடலால் சூழப்பட்டுள்ளது. Please Login to view the QuestionPlease Login to view the Question
  • இரப்பைக்கும் பெருங்குடலிற்கும் இடையில் காணப்படும் மிகவும் நீண்ட குழாய் கட்டமைப்பு ஆகும். ஆனால் நன்கு சுருளடைந்து காணப்படும். (5m நீளம்)
  • இரப்பையுடன் தொடர்பு கொள்ளும் அண்மை அந்தத்தில் குடல்வாய் இறுக்கி காணப்படும். பெருங்குடலுடன் தொடர்பு கொள்ளும் செய்மை அந்தத்தில் சிறுகுடல் – பெருங்குடல் இறுக்கி காணப்படும்.
  • சிறுகுடல் 3 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.
    • முன் சிறுகுடல்
    • இடைச் சிறுகுடல்
    • பின் சிறுகுடல்
  • முன்சிறுகுடல் ‘ C ‘ வடிவமான வளைந்த குழாய் கட்டமைப்பு ஆகும். (25 cm நீளம்)   இதன் நடுப்பகுதியில் பொதுவான    பித்த – சதய கான்களின் ஊடாக பித்தமும் சதயச்சாறும் வெளியேற்றப்படுகிறது.
    இப்பொது பித்த சதையக்கானின் துவாரம் / வாயில் ஓடியின் இறுக்கியினால் ஒழுங்காக்கப்படுகிறது.
  • இடைச்சிறுகுடல், அண்ணளவாக 2m நீளமான சிறுகுடலின் நடுப்பகுதியாகும்.
  • பின்சிறுகுடல் அண்ணளவாக 3m நீளமான சிறுகுடலின் இறுதிப் பகுதியாகும். பெருங்குடலுடன் தொடர்பு கொள்ளும் பகுதி.
  • சிறுகுடலின் வெளி மேற்பரப்பு அழுத்தமானது.
  • உள் மேற்பரப்பு நிரந்தரமான வட்ட மடிப்புகளை கொண்டது. இதனால் மேற்பரப்பு அதிகரிக்கப்படுகிறது.

சிறுகுடல் சுவரின் இழைய அமைப்பு 

Pic - 14

  • சிறுகுடல் சுவரின் இழைய அமைப்பு வகையானது போன்று வெளியிலிருந்து உள்நோக்கி 4  இழையப் படைகள் காணப்படுகின்றன.
    சிரோசா, வெளித்தசைப்படை,  சீதமுளிக்கீழான படை, சீதமுளிப்படை என்பன ஆகும்.
  • சிரோசா படை வகையான அமைப்புடையது.
  • வெளித்தசைப்படை வகையான அமைப்புடையது.
  • சீதமுளிக்கீழான படை வேறுபாட்டை காட்டுகின்றது.
    • புரூணரின் (Brunerin) சுரப்பிகளை கொண்டிருத்தல். புரூணரின் சுரப்பி காரத்தன்மையான சீதத்தை சுரக்கின்றது.  இதில் சமிபாட்டு நொதியங்கள் எதுவும் காணப்படுவதில்லை. புரூணரின் சுரப்பி முன்சிறுகுடல் பகுதியில் மட்டுமுள்ளது.
    • அங்குள்ள நிணநீர்க்கலன் ஒவ்வொரு சடைமுளைக்கும் கிளையை வழங்கும். இக்கிளை பாற்பலன் ஆகும்.
    • அங்குள்ள புன்னாடி, புன்னாளம் பாற்பலனை சூழ குருதி மயிர்ப்பின்னலை ஆக்கும்.
  • சீதமுளிப்படை அதிக வேறுபாட்டை காட்டும்.
    • மேலணிப்படை, உள்ளிடம் நோக்கி விரல் போன்ற நீட்டங்களான சடைமுறையை ஆக்கல். அதிலுள்ள மேலணிக்கலங்களின் சுயாதீன மேற்பரப்பு நுண்சடைமுளையை கொண்டிருக்கும்.
    • சடைமுளைகளுக்கிடையில் குழாயுருவான குடற்சுரப்பி / இலீபக்கின் மறைகுழி காணப்படல்.
    • குருதிமயிர்ப்பின்னல் காணப்படல்.
  • சிறுகுடலின் மேலணிப்படை  கலங்களில்  பிரதானமாக 3 வகையான கலங்கள் காணப்படுகின்றன.
  • அகக்குழிய கலங்கள் / Enderocytes – இவற்றின் சுயாதீன மேற்பரப்பு நுண்சடைமுளைகளை கொண்டிருக்கும். இக்கலங்களே சமிபாட்டு நொதியங்களை சுரக்கின்றன.இவற்றினூடாகவே அகத்துறிஞ்சல் நடைபெறும்.
  • சீதக்கலம் – சீதத்தை சுரந்து மசகிடல் தொழிலை மேற்கொள்ளும்.
  • அகஞ்சுரக்கும் கலம் – 3 ஓமோன்களைச் சுரக்கும்.
    1. கோலிசிஸ்ரோ கைனின் (Cholecystokinin)
    2. என்டரோ கஸ்ரரோன் (Enterogastrone)
    3. செக்ரிட்டின் (Secretin)
  • இரைப்பை மேலணியை போல சிறுகுடல் மேலணியும் அகஞ்சுரக்கும், புறஞ்சுரக்கும் கட்டமைப்பாக தொழிற்படுகிறது.
  • சிறுகுடல் சுவரின் சீதமுளிப்படையில் (தன்னகவத்தட்டுப்படை)  நிணநீர் இழையங்கள் கூட்டமாக காணப்படும். இவை நிணநீர் முடிச்சுகள் / பேயரின் பொட்டுக்கள் எனப்படும். இவை நுண்ணங்கியிடமிருந்து பாதுகாப்பை வழங்குகிறது.
  • சடைமுளையின் கூறுகளின் தொழில்கள்.
    • பாற்கலன் – கொழுப்பமிலம், கிளிசரோலை அகத்துறிஞ்சலும் கடத்தலும்.
    • குருதி மயிர்ப்பின்னல் – ஒருசக்கரைட்டுக்கள், அமினோவமிலங்களை
      அகத்துறிஞ்சலும் கடத்தலும்.

குடற்சாறு 

  • சிறுகுடல் சுவரின் குடற்சுரப்பியினால் சுரக்கப்படும் சுரப்பு குடற்சாறு எனப்படும்.
  • இதன் சுரத்தல் நரம்பு, ஓமோன்களால் கட்டுப்படுத்தப்படும்.
  • செக்ரிட்டின் ஓமோன் குடற்சாறு சுரத்தலை தூண்டும்.
  • நரம்புக் கட்டுப்பாட்டில் தன்னாட்சி நரம்பு கட்டுப்படுத்துகிறது.
    பரப்பரிவு நரம்பு சுரத்தலை கூட்டுகிறது. பரிவு நரம்பு நிரோதிக்கும்.
  • சிறுகுடல் சுவரை உணவு தொகையுறுதலும் குடற்சாறு சுரத்தலை தூண்டும்.
  • குடற்சாறிலுள்ள கூறுகள் :
    • நீர்
    • சீதம்
    • கனியுப்புகள் – ( HCO3– )
    • நொதியங்கள் – மோல்டேசு, சுக்குரேசு, இலக்டேசு – காபோவைதரேற்று பிரி நொதியங்கள்
    • அமினோ பெப்திடேசு (Amino pepthides) – புரத பிரி நொதியம்
    • நியூக்கிளியோடைட்டேசு (Nucleotidaes) – நியூக்கிளியோடைட்டு பிரி நொதியம்
    • என்டரோ கைனேசு  ( இது சமிபாட்டில் பங்கு கொள்ளாது)
  • நீர்
    • உணவை ஈரலிப்பாக்கல்.
    • நொதியம் தொழிற்பட திரவ ஊடகம் வழங்கல்.
  • சீதம்
    • உணவை மசகிடுதல்.
  • HCO3– 
    • கார ஊடகம் வழங்கல்.
  • சுக்குரேசு
    • சுக்குரோசை குளுக்கோசு + பிரக்ற்றோசாக  உடைத்தலை ஊக்குவித்தல்.
  • மோல்றேசு
    • மோல்ற்றோசை இரு குளுக்கோசாக உடைத்தலை ஊக்குவித்தல்.
  • இலக்றேசு
    • இலக்றோசை குளுக்கோசு + கலக்றோசாக உடைத்தலை ஊக்குவித்தல்.
  • அமினோ பெப்திடேசு
    • சிறிய பொலி பெப்டைட் (பெப்தோன்)  சங்கிலிகளை இரு பெப்டைட்டு + அமினோவமிலமாக உடைத்தலை ஊக்குவித்தல்.
  • நியூக்கிளியோடைடேசு
    • நியூக்கிளியோடைட்டை நைதரசன் மூலம், பொஸ்பேற் கூட்டம்,   5C  வெல்லமாக உடைத்தலை ஊக்குவித்தல்.
    • இருவகையான  நியூக்கிளியோடைடேசுகள்  காணப்படுகின்றன.
      1.  DNA நியூக்கிளியோடைடேசு
      2.  RNA நியூக்கிளியோடைடேசு
  • என்டரோ கைனேசு
    • சதயச்சாறிலுள்ள  திருச்சினோஜனை  திருச்சினாக  மாற்றும்.
    • சதயச்சாறிலுள்ள  ஹைமோ  திருச்சினோஜனை கைமோ திருச்சினாக மாற்றும்.

சிறுகுடலின் தொழில்கள் 

  • சிறுகுடலின் ஊடாக உணவை சுற்றுச்சுருக்கு மூலம் கடத்தல்.
  • இலக்டேசு, மோல்டேசு, சுக்குரேசு, அமைலேசு நொதியங்கள் மூலம் காபோவைதரேற்றுச் சமிபாட்டை மேற்கொள்ளல்.
  • அமைனோ பெப்திடேசு, திருச்சின், ஹைமோ திருச்சினோஜன், காபொக்சிப்பெப்திடேசு, இரு பெப்திடேசு ஆகிய நொதியங்களின் மூலம் புரதச் சமிபாட்டை மேற்கொள்ளல்.
  • இலிப்பேசு நொதியத்தின் மூலம் இலிப்பிட்டின் சமிபாட்டை மேற்கொள்ளல்.
  • இரைப்பையிலிருந்து வரும் உணவுப்பாகு பித்தம், சதயச்சாறு, குடற்சாறு, புரூணரின் சுரப்பியின் சுரப்பு என்பவற்றுடன் கலத்தல்.
  • சமிபாட்டின் விளைவின் எளிய கூறுகளான ஒருசக்கரைட்டு, அமினோவமிலம், கிளிசரோல், கொழுப்பமிலம் என்பவற்றை அகத்துறிஞ்சல். (எளிய பரவல், பிரசாரணம், உயிர்ப்பான கொண்டு செல்லல், காவிகள் பயன்படுத்திய பரவல் மூலம் அகத்துறிஞ்சப்படும்)
  • அகஞ்சுரக்கும் கட்டமைப்பாக தொழிற்படல்.
    செக்ரிட்டின், என்டரோ கஸ்ரோன், கோலி சிஸ்ரோகைனின் ஆகிய ஓமோன்களைச் சுரத்தல்.
  • நிணநீர் முடிச்சுகளின் மூலம் நுண்ணங்கிகளை அழித்தல்.
பெருங்குடல்
  • பெருங்குடலின்  நீளம்  அண்ணளவாக  1.5m  நீளமுடையது.  அதாவது சிறுகுடலிலும் நீளத்தில் குறைந்தது. ஆனால் இதன் உள்ளிடம் சிறுகுடலின் உள்ளடத்திலும் அகன்றது.Please Login to view the Question
  • சிறுகுடலை சூழ ஒரு வில் வடிவத்தில் வயிற்றுக்குழியினுள் பெருங்குடல் உள்ளது.
  • இது பின்வரும் பகுதிகளாக பிரிக்கப்படும்.
    • குடல் வளரியுடன் கூடிய குருட்டுக்குடல்
    • ஏறு குடற்குறை
    • குறுக்கு குடற்குறை
    • இறங்கு குடற்குறை
    • இடுப்புக்குரிய குடற்குறை
    • நேர்குடல், குதக் கால்வாய்
    • குதம்
  • நேர்குடல் விரிவடையக்கூடிய 13cm நீளமான கட்டமைப்பாகும்.
  • குதம் இரு இறுக்கிகளினால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவை உட்புற இறுக்கி, வெளிப்புற இறுக்கி என்பனவாகும்.
  • உட்புற இறுக்கி மழமழப்பான தசையினால் ஆனது. தன்னாட்சி நரம்பினால் ஆளப்படுகிறது. எனவே இவ் இறுக்கி ஏனைய இறுக்கிகளை போல இச்சையின்றி தொழிற்படக் கூடியது.
  • வெளிப்புற இறுக்கி வன்கூட்டுத் தசையினாலானது. இச்சைவழி நரம்பினால் ஆளப்படுகிறது. எனவே இது இச்சை வழி தொழிற்படக் கூடியது.
  • பெருங்குடலின் மேற்பரப்பு அழுத்தமானது.
  • உட்புற மேற்பரப்பில் மடிப்புகள் ஒன்றுடன் காணப்படுவதில்லை. நேர் குடலின் உட்புறத்தில் மட்டும் 6 – 10 நீள்பக்க மடிப்புகள் காணப்படுகின்றன. ( மலம் சேமிப்பதற்கான கட்டமைப்பு சிறப்பம்சம் ஆகும்)

பெருங்குடல்  சுவரின் இழைய அமைப்பு  

  • அடிப்படை அமைப்பை போன்ற 4 படைகளை கொண்டது.
    சிரோசா, வெளித்தசைப்படை, சீதமுளிக்கீழான படை, சீதமுளிப்படை என்பன ஆகும்.
  • வெளிப்புறமாக சிரோசா தொடர்ச்சியற்று காணப்படும்.
  • தசைப்படையில் வெளிப்புறமாக நீள்பக்க தசைப்படை 3 பட்டிகைக ளாக காணப்படும். இப் பட்டிகைகள் புழுவுரு (Taenia coli) போன்றது. எனவே இத்தசைப்படை தொடர்ச்சியற்றது.
  • இவ் நீள்பக்க தசையின் நீளம் பெருங்குடலின் நீளத்திலும் பார்க்க சற்று குறைவாக காணப்படும்.
  • வட்டத்தசை வகையானது.
  • சீத முளிக்கீழான படை ஏனைய பகுதிகளை விட அதிகமான நிணநீர் முடிச்சு / இழையங்களை கொண்டிருக்கும்.
  • சீதமுளிப்படையில் சீதமென்றகட்டுத்தசைப்படை, தன்னகவத்தகட்டுப் படை வகையானது. மேலணி எளிய கம்ப மேலணியை கொண்டது.
  • இம்மேலணி குழாயுருவான கென்டிக்கலங்களை கொண்ட சுரப்பியை ஆக்குகின்றது. இவை சீதச்சுரப்பி எனப்படும். இவை அதிகளவான சீதத்தை சுரக்கின்றது.
  • நேர்குடலில் மேலணி படை கொண்ட செதின் மேலணியால் ஆனது.

பெருங்குடலின் தொழில்கள் 

  • நீர், கனியுப்புகள், மருந்துகள், விற்றமின் என்பவற்றை அகத்துறிஞ்சல்.
  • விற்றமின் K, Folic Acid, Biotin, சில அமினோவமிலம் என்பவற்றை தொகுத்தல்.
  • மலம் உருவாக்கலும் சேமிப்பும்.
  • மலம் திணிவு சுற்றுச்சுருக்கல் மூலம் வெளியகற்றப்படல்.
  • சீதத்தின் மூலம் மலம் மசகிடப்படல்.
  • நுண்ணங்கிக்கு எதிரான தொழிற்பாட்டைக் காட்டல்.

♦  பெருங்குடலில் சமிபாட்டு நொதியங்கள் சுரக்கப்படுவதில்லை. சமிபாடு நிகழ்வதுமில்லை.
♦  மனிதனில் குருட்டுக்குடல், குடல்வளரி தொழிற்பாடு இல்லா பதாங்க கட்டமைப்பாக காணப்படுகிறது. ஆனால், தாவர உண்ணிகளில் குருட்டுக்குடல் செலுலோசு சமிபாடு நிகழும் இடமாகும்.

மலத்திலுள்ள கூறுகள்:

  • இறந்த, உயிருள்ள பற்றீரியாக்கள்
  • செலுலோசு – சமிபாடு அடைவதில்லை (எங்களில் செலுலேசு நொதியம் இல்லை)
  • இறந்த மேலணிக் கலங்கள்
  • சீதம்
  • பித்த நிறப்பொருள்கள்
  • நீர்
  • கொலஸ்திரோல் (மேலதிகமானது)
RATE CONTENT 0, 0
QBANK (27 QUESTIONS)

மனிதனது உணவுக் கால்வாயிலே கம்பமேலணி காணப்படுவது?

Review Topic
QID: 3810
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் பெருங் குடல்?

Review Topic
QID: 4113
Hide Comments(0)

Leave a Reply

மனித உமிழ்நீர் பற்றிய தவறான கூற்று பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 4123
Hide Comments(0)

Leave a Reply

மனித உணவுக் கால்வாய் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?

Review Topic
QID: 4128
Hide Comments(0)

Leave a Reply

மனிதப் பற்கள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

Review Topic
QID: 4129
Hide Comments(0)

Leave a Reply

மனிதக் குடற்குறை தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 4138
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் சுவைகளுள் எதனை மனித நாக்கினால் கண்டுபிடிக்க முடியாது?

Review Topic
QID: 4140
Hide Comments(0)

Leave a Reply

மனித உமிழ்நீர் தொடர்பான தவறான கூற்றினைத் தெரிந்தெடுக்க?

Review Topic
QID: 4143
Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் சமிபாட்டுத் தொகுதி தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?

Review Topic
QID: 4144

Answer: All Answers

Hide Comments(0)

Leave a Reply

மனிதனின் கடைவாய்ப்பல் ஒன்றில்?

Review Topic
QID: 4151
Hide Comments(0)

Leave a Reply

மனித இரைப்பை?

Review Topic
QID: 4153
Hide Comments(0)

Leave a Reply

மனிதனது உணவுக் கால்வாயிலே கம்பமேலணி காணப்படுவது?

Review Topic
QID: 3810

மனிதனின் பெருங் குடல்?

Review Topic
QID: 4113

மனித உமிழ்நீர் பற்றிய தவறான கூற்று பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 4123

மனித உணவுக் கால்வாய் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?

Review Topic
QID: 4128

மனிதப் பற்கள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

Review Topic
QID: 4129

மனிதக் குடற்குறை தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 4138

பின்வரும் சுவைகளுள் எதனை மனித நாக்கினால் கண்டுபிடிக்க முடியாது?

Review Topic
QID: 4140

மனித உமிழ்நீர் தொடர்பான தவறான கூற்றினைத் தெரிந்தெடுக்க?

Review Topic
QID: 4143

மனிதனின் சமிபாட்டுத் தொகுதி தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?

Review Topic
QID: 4144

Answer: All Answers

மனிதனின் கடைவாய்ப்பல் ஒன்றில்?

Review Topic
QID: 4151

மனித இரைப்பை?

Review Topic
QID: 4153
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank