Please Login to view full dashboard.

புரோகரியோற்றா அங்கிகள்

Author : Admin

5  
Topic updated on 02/14/2019 11:07am

Domain Archaea

  • Prokaryota கல ஒழுங்கமைப்பு உடையது
  • கலக்கூறாக பெப்ரிடோகிளைக்கன் காணப்படும்.
  • கலமென்சவ்விலுள்ள இலிப்பிட் கிளைக்கொண்ட சங்கிலி அமைப்புடையது.
  • Streptomycin, Chloroamphinicol போன்ற நுண்ணியிற் கொல்லிகளுக்கு உணர்திறன் அற்றது.
  • பலவகையான RNA Polymerase நொதியங்கள் உண்டு.
  • புரதத்தொகுப்பு மெதியோனைனுடன் ஆரம்பிக்கப்படும்.
  • மிகக் கடுமையான சூழல் நிபந்தனைகளில் வாழும். – எரிமலைக்குழிகள், வெந்நீர் ஊற்றுக்கள், உப்புச்சேற்றுநிலம், ஆழ்கடல்
  • பரம்பரையலகில் கருத்தற்ற பகுதிகள் (Intron – non coding) காணப்படும்.
  • Methanococus, Thermococus, Methanobacterium, Halobacterium

 

Domain Bacteria

  • Prokaryota கல ஒழுங்கமைப்புடையது
  • கலச்சுவர் கூறாக பெப்ரிடோகிளைக்கன் உண்டு.
  • கலச்சுவரிலுள்ள இலிப்பிட் கிளையற்றது.
  • நுண்ணியிர்க் கொல்லிக்கு உணர்திறனுடையது.
  • ஒருவகைக்குரிய RNA Polymerase காணப்படும்.
  • புரதத்தொகுப்பு Formyl methionine உடன் ஆரம்பிக்கும்.
  • பல வாழிடங்களில் வாழும் இயல்புண்டு.
Kingdom Bacteria
  • புவியில் அதிகளவில் காணப்படும் அங்கிகள் பக்றீரியாக்களாகும்.
  • உயிர்ப் புவி இரசாயன வட்டத்தில் முக்கிய பங்காற்றுகின்றன.
  • Prokaryota கல ஒழுங்கமைப்புடையது.
  • ஒளிதற்போசனை, இரசாயன தற்போசனை, பிறபோசனை வகைக்குரியவை.
  • அசையக்கூடியவை அசையாதவை
  • தனிக்கலம் அல்லது சமுதாயமாக வாழும்.
  • குறுக்கான இருகூற்று பிளவின் மூலம் கலபிரிவு நடைபெறும்.
  • கலச்சுவர் பெப்ரிடோகிளைக்கனினால் ஆனது.
  • கலமென்சவ்வு பாயசித்திர மாதிரியானது.
  • இவற்றின் இறைபோசோமிற்குரிய புரதம் மற்றும் RNA பொலிமரேசு நொதியங்கள் Eukaryota விலிருந்து வேறுபட்டதாகும்.
  • பரம்பரையலகுகள் Intron களால் இடைமறிக்கப்பட்டிராது.
  • eg. Coccus, Bacillus

 

Kingdom Cyanobacteria
  • புரோகரியோட்டாவிற்குரிய அங்கிகள்
  • யாவும் ஒளித்தொகுப்புக்குரியவை.
  • அநேகமானவை தனிக்கலம். சில இணைக்கப்பட்டு சளியத்தால் சூழப்பட்ட இழையைத் தோற்றுவிக்கும்.
  • ஒளித்தொகுப்பு நிறப்பொருட்களாக குளோரோபில் a, பைக்கோசயனின் காணப்படும். குளோரோபில் b இல்லை
  • சிலவகைகள் நைதரசன் பதிக்கும் ஆற்றலுடையவை. – Anabaena, Nostoc
  • இழையுருவானவை வழுக்கும் அசைவுகளைக் காட்டும். ஏனையவை அசைவை காட்டுவதில்லை
  • 3 வகையான கலங்களைக் கொண்டது.
  • பதியக்கலம் – ஒளித்தொகுப்பு
  • பல்லிகச்சிறைப்பை – நைதரசன் பதிக்கும். Nitrogenase கொண்டது.
  • அசைவிலி – தகாத காலத்தைக் கழிக்கும்.
  • கட்டுபட்ட காற்றுவாழிகள்
  • உணவு சேமிப்பு – Cyanophycean மாப்பொருள் மணிகள்
  • ஈரலிப்பான மேற்பரப்புக்களில் விசேடமாக மலசலக்கூடங்களின் சாந்து பூசப்பட்ட சுவர்களில், சீமெந்து தரைகளில், மண்ணில் காணப்படும்.
  • eg. Lyngbya, Oscillatoria
இயல்பு Bacteria Cyanobacteria
பருமன் 0.25μm – 5μm 1μm
கல அமைப்பு தனிக்கலம் or சமுதாய வாழ்க்கை அநேகமானவை தனிக்கலம். சில இழையுருவானவை
போசனை ஒளித்தற்போசனை ஒளிப்பிறபோசனை இரசாயனதற்போசனை இரசாயனபிறபோசனை யாவும் ஒளிதற்போசனை
ஒளித்தொகுப்பு நிறப்பொருள் ஒளித்தொகுப்பு பக்றீரியாக்களில் மட்டும் பக்றீரிகுளோரோபில் காணப்படும். யாவற்றிலும் தைலகொய்ட்டுகளில் குளோரோபில் a யும் பைக்கோசோம்களில் பைக்கோசயனினும் காணப்படும்
ஒளித்தொகுப்பில் ஐதரசன் வழங்கி எப்போதும் H2S எப்போதும் H2O
சவுக்குமுளை Flagellin கொண்டவை சிலவற்றிலுண்டு ஒருபோதும் காணப்படுவதில்லை.
விசேட அமைப்பு mesosome, கச்சம், Plasmid பல்லினசிறைப்பை காணப்படலாம்
கலச்சுவருக்கு வெளிபகுதி வில்லையம் சளியமடல்
அகவித்தி காணப்படலாம் காணப்படுவதில்லை
இலிங்கமில் இனப்பெருக்கம் பொதுவாக இருகூற்று பிளவு தனிக்கலம் – இருகூற்றுபிளவு இழையுருவானவை – துண்டாதல்
இலிங்கமுறை சிலவற்றில் உண்டு (E-coli) இல்லை
உணவொதுக்கு Glycogen, Volutin cyanophycean
RATE CONTENT 0, 0
QBANK (5 QUESTIONS)

பற்றீரியா தொடர்பான தவறான கூற்று பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3163
Hide Comments(0)

Leave a Reply

பற்றீரியாக்கள், பங்கசுக்கள், வைரசுகள் ஆகிய எல்லாவற்றுக்கும் பொதுவான இயல்பு பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3192
Hide Comments(0)

Leave a Reply

சயனோபற்றீரியா தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?

Review Topic
QID: 3205
Hide Comments(0)

Leave a Reply

பேரிராச்சியம் ஆக்கியாவின் உறுப்பினர்கள்?

Review Topic
QID: 3227
Hide Comments(0)

Leave a Reply

அங்கிகளின் ஐந்து இராச்சியங்களும் இவ்விராச்சியங்களுக்குள் அங்கிகளைக் கூட்டங்களாகப் பிரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சிறப்பியல்புகளும் கீழே
தரப்பட்டுள்ளன. பின்வரும் இணைப்புகளில் எதுதவறானது?

Review Topic
QID: 3210
Hide Comments(0)

Leave a Reply

பற்றீரியா தொடர்பான தவறான கூற்று பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3163

பற்றீரியாக்கள், பங்கசுக்கள், வைரசுகள் ஆகிய எல்லாவற்றுக்கும் பொதுவான இயல்பு பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3192

சயனோபற்றீரியா தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?

Review Topic
QID: 3205

பேரிராச்சியம் ஆக்கியாவின் உறுப்பினர்கள்?

Review Topic
QID: 3227

அங்கிகளின் ஐந்து இராச்சியங்களும் இவ்விராச்சியங்களுக்குள் அங்கிகளைக் கூட்டங்களாகப் பிரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சிறப்பியல்புகளும் கீழே
தரப்பட்டுள்ளன. பின்வரும் இணைப்புகளில் எதுதவறானது?

Review Topic
QID: 3210
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank