Please Login to view full dashboard.

சுவாச வீதம்

Author : Admin

7  
Topic updated on 02/14/2019 05:19am

சுவாசத்தில் சக்தி மாற்றுவினைத்திறன் / சக்தி மாற்று வீதம் கணித்தல்

காற்றிற் சுவாசத்திற்கு

  • C6H12O6 + 6O2 → 6CO2 + 6H2O + 38/36 ATP     ΔH = -2880kJmol-1
    ADP + P2 + 30.6kJmol-1 → ATP
    38 ATP தொகுக்க உள்ளெடுக்கப்பட்ட சக்தி = 38 × 30.6 kJmol-1
    = 1162 kJmol-1
    சக்தி மாற்றுவினைத்திறன்  = 1160/2880 × 100 = 40.2 %

 

இலக்டேற்று நொதித்தல் காற்றின்றிய சுவாசம்

  • C6H12O6 → 2 இலக்கேற்று + 36 ATP      ΔG = -150 kJmol-1
    2 ATP தொகுக்க உள்ளெடுக்கப்பட்ட சக்தி    = 2 × 30.6 kJmol-1
    38 ATP தொகுக்க உள்ளெடுக்கப்பட்ட சக்தி = 38 × 30.6 kJmol-1
    = 61.2 kJmol-1
    ஃ சக்திமாற்று வினைத்திறன்  = 61.2 / 150 × 100
    = 40.8 %

அற்ககோல் நொதித்தல் காற்றின்றிய சுவாசம்

  • C6H12O6 → 2 எதனோல் +  2CO2 +  2 ATP     ΔG = – 210 kJmol-1
    2 ATP தொகுக்க உள்ளெடுக்கப்பட்ட சக்தி = 2 × 30.6 kJmol-1
    = 61.2 kJmol-1
    சக்தி மாற்று வீதம்  = 61.2 / 210 × 100
    = 29.1 %
  • ATP உற்பத்தியைப் பெருத்தளவில் காற்றிற் சுவாசம் வினைத்திறனானது. ஆனால் சக்தி மாற்றுவீத வினைத்திறனில் இலற்றிக்கமில காற்றின்றிய சுவாசமே வினைத்திறனானது.

சுவாச வீதம் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • சுவாச வீதம் இருமுறைகளில் அளவிடப்படுகின்றது.
    1. உள்ளெடுக்கப்படும் O2 இன் கனவளவு
    2. வெளிவிடப்படும் CO2 இன் கனவளவு
  • சுவாச வீதத்திற்கான சமன்பாடுsuvasaveetam
  • ஓரலகு நேரத்தில் ஓரலகுத் திணிவு இழையத்தினால் உள்ளெடுக்கப்பட்ட O2 இன் கனவளவு / வெளிவிடப்பட்ட CO2 இன் கனவளவு
  • அலகு → cm3g-1h-1

ஆய்வு கூடத்தில் சுவாசமானியைப் பயன்படுத்தி சுவாச வீதம் துணிதல்

உள்ளெடுக்கப்படும் O2 இன் கனவளவு அடிப்படையில்

  • முளைக்கும் பயறு வித்துக்கள் எடுக்கப்பட்டு Xg சுவாசமானியினுள் இடப்பட்டது. (சாதாரண பயறு வித்துகள் 2/3 hours நீரினுள் ஊறவிட்டு பின்பு ஈரப்பஞ்சின் மேல் 24 hours வைக்பப்பட்டு பெறப்படும் வித்து முளைக்கும் வித்து ஆகும். இவற்றில் சுவாச வீதம் உயர்வாகக் காணப்படும்.
  • இதனுள் KOH கரைசல் கொண்ட குழாய் இதனுள் வைக்கப்படும்.
  • U குழாயினுள் நிறமூட்டப்பட்ட நீர் / இரசம் எடுக்கப்படும்.
  • கூம்புக் குடுவை தக்கையினால் வளி இறுக்கமாக மூடப்பட்டு திருகியின் மூலம் திரவ மட்டம் சமனாக்கப்படும்.
  • திரவ மட்டத்தின் ஆரம்ப நிலை குறிக்கப்படும்.
  • சுவாசம் நிகழ்வதற்கு 24 hours விடப்படும்.
  • கூம்புக் குடுவையுடன் தொடர்புபட்ட திரவமட்ட உயர்வு அளவிடப்படும் (h1 cm)
    சுவாசத்திற்குப் பயன்படுத்திய இழையத்தின் திணிவு Xg
    சுவாசத்திற்கு விடப்பட்ட நேரம் 24 hours
    சுவாசத்தின் போது உள்ளெடுக்கப்பட்ட ஒட்சிசன் கனவளவு (h1 × A)cm3
  • சுவாச வீதம்   =  உள்ளெடுக்கப்பட்ட O2 இன் கனவளவு / திணிவு × பயன்படுத்திய நேரம்
    =  h1 × A cm3 / Xg × 24 h

உள்ளெடுக்கப்படும் O2 இன் கனவளவு அடிப்படையில்

  • சுவாசத்திற்குப் பயன்படுத்திய இழையத்தின் திணிவு Xg
    சுவாசத்தின் போது வெளிவிடப்பட்ட CO2 இன் கனவளவு (h1 – (h2) × A)cm3
  • சுவாச வீதம் = வெளிவிடப்பட்ட CO2 இன் கனவளவு / பயன்படுத்திய இழையத்தின் திணிவு                                                                                                                                   × சுவாசத்திற்கு எடுத்த நேரம்

= (h1 – (h2) × A)cm3 / Xg × 24 h

சுவாச ஈய்வு

  • suvasa-eeyvu
    குறித்த திணிவுடைய இழையம் குறித்த நேரத்தில் சுவாசத்தில் வெளிவிடப்பட்ட CO2 இன் கனவளவிற்கும், உள்ளெடுக்கப்படும் O2 இன் கனவளவிற்கும் இடையிலான விகிதம்
  • சுவாசக் கீழ்ப்படையின் சேதனச் சேர்வை வகையைப் பொறுத்து சுவாச ஈய்வுப் பெறுமானம் வேறுபடும்.
    1. சுவாசக் கீழ்ப்படை காபோவைதரேற்று ஆயின் சுவாச ஈய்வு = 1
    எனவே வெளிவிடப்படும் CO2 இன் கனவளவு உள்ளெடுக்கப்படும் O2 இன் கனவளவிற்கு சமனாகும்.
    2. சுவாசக் கீழ்ப்படை புரதமாயின் சுவாச ஈய்வு = 0.9
    அதாவது ஒன்றிலும் குறைவு. எனவே வெளிவிடப்படும் CO2 இன் கனவளவிலும் பார்க்க உள்ளெடுக்கப்படும் O2 இன் கனவளவிற்கு அதிகமாகும்.
    3. சுவாசக் கீழ்ப்படை இலிப்பிட்டு ஆயின் சுவாச ஈய்வு = 0.7
    எனவே ஒன்றிலும் குறைவு.

 

last-equation-suvasam

RATE CONTENT 0, 0
QBANK (7 QUESTIONS)

முளைக்கும் வித்துக்களின் சுவாச ஈவுப் (RQ) பின்வருவனவற்றுள் எதன் மூலம் மிகச் சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது?

Review Topic
QID: 3760
Hide Comments(0)

Leave a Reply

வித்துக்களின் சுவாச ஆதாரப்படை கொழுப்புக்களாக இருப்பின் பின்வரும் எந்த நிலைமையை எதிர்பார்க்கலாம்?

Review Topic
QID: 2282
Hide Comments(0)

Leave a Reply

ஒரு குளுக்கோசு மூலக்கூறு காற்றினுதவியுடன் உடையும் போது விடுவிக்கப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை யாது?

Review Topic
QID: 2593
Hide Comments(0)

Leave a Reply

முளைக்கும் வித்துக்களின் சுவாச ஈவுப் (RQ) பின்வருவனவற்றுள் எதன் மூலம் மிகச் சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது?

Review Topic
QID: 3760

வித்துக்களின் சுவாச ஆதாரப்படை கொழுப்புக்களாக இருப்பின் பின்வரும் எந்த நிலைமையை எதிர்பார்க்கலாம்?

Review Topic
QID: 2282

ஒரு குளுக்கோசு மூலக்கூறு காற்றினுதவியுடன் உடையும் போது விடுவிக்கப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை யாது?

Review Topic
QID: 2593
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank