Please Login to view full dashboard.

குடிநீர், கழிவுநீர் திண்மக்கழிவு முகாமைத்துவம்

Author : Admin

9  
Topic updated on 02/14/2019 04:59am

குடிநீர் பரிகரிப்பு Please Login to view the QuestionPlease Login to view the Question

பிரதான படிநிலைகள்

படியச் செய்தல்

  • நீரில் காணப்படும் மிதக்கும் பொருட்கள் அகற்றப்படுகின்றன.

வடித்தல்

  • இதன்போது, நீரில் இருந்து 99% Bacteria களும் அகற்றப்படும்

தொற்று நீக்கல் செய்தல்

  • நுண்ணங்கிகள் அழிக்கப்படுகின்றன.
  • இதற்காக நீர் O3 ஏற்றப்படுகிறது அல்லது குளோரினேற்றம் செய்யப்படுகிறது.

கழிவுநீர் பரிகரிப்பு

கழிவுநீர்

வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்பட்டு பரிகரிப்புகள் ஏதும் இன்றி வெளியேற்றப்படுகின்ற நீர் கழிவுநீர் எனப்படும்.

கழிவுநீரை இயற்கை நீர்நிலைகளுக்கு விடுவதால் எழும் பிரச்சினைகள்

  1. நீரில் சேதனப் பதார்த்தங்களின் அளவு அதிகரிக்கும். இதனால் நீரில் உயிர் இரசாயன ஒட்சிசன் தேவை அதிகரிக்கும்.
  2. காற்றின்றிய பிரிகையாக்கம் அதிகரிப்பதால் H23 போன்ற வாயுக்கள் தோன்றி வெறுப்பான மணம் தோன்றும்.
  3. நீர் வழியாக நோயாக்கிகளின் பரவல் அதிகரிக்கும்.
  4. காற்றுவாழ் அங்கிகள் இறக்கும்.

கழிவு நீர் பரிகரிப்பின் படிநிலைகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

முதலான பரிகரிப்பு

  • மிதக்கும் பெரிய பொருட்கள், மண், எண்ணெய்கள், கொழுப்புகள் என்பன கழிவுநீரிலிருந்து வடித்து அகற்றப்படும்.
  • நீரில் காணப்பட்ட திண்ம துணிக்கைகள் தாங்கியின் அடித்தளத்தில் படிவடையும்.
  • இங்கு எவ்வித நுண்ணங்கிச் செயற்பாடுகளும் பயன்படுத்தப்படுவதில்லை.

துணையான பரிகரிப்பு

  • துணையான பரிகரிப்பில் பிரிகையாக்கிகளாகத் தொழிற்படக் கூடிய காற்றுவாழ் Bacteria களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது.
  • இதனால் கழிவு நீர் நன்கு காற்றூட்டப்படுகிறது.
  • இங்கு நுண்ணங்கிகளின் ஒட்சியேற்றம் துரிதமாக நிகழ்த்தப்படுகிறது.
  • இது சிறுதாரை வடிமுறையாகவோ, ஏவப்பட்ட சேற்று முறையாகவோ அமையலாம்.
  • நுண்ணங்கிகளின் ஒட்சியேற்றத்தினால் கழிவு நீரிலுள்ள சேதனச் சேர்வைகளின் 75 – 95% அகற்றப்பட்டு விடும்.

துணையான பரிகரிப்பிற்கு பின்னர் நீர் தொற்று நீக்கம் செய்யப்பட்டு இயற்கை நீர் நிலைகளுக்கு விடப்படுகின்றது.

குடிநீரின் தரத்தைத் தீர்மானித்தல்

  • குடிநீரின் தரத்தைத் தீர்மானிப்பதற்கு Coliform Bacteria களுக்கான சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
  • நீர் மாதிரியில்  Coliform Bacteriaகள் இருப்பின் அந்த நீர், மனித மலத்தினால் மாசாக்கப்பட்டிருக்கிறது.
  • மல மாசாக்கம் அடைந்த நீர் வழியாக Typoid, வாந்திபேதி, வயிற்றோட்டம் போன்ற நோய்கள் பரவலைடையும்.

water-treatment-cycle

Coliform Bacteria களின் சிறப்பியல்புகள்

  1. காற்று வாழிகளாகவும், அமையத்திற்கு ஏற்ற காற்றின்றி வாழிகளாகவும் உள்ளது.
  2.  கோலுருவானவை
  3. அகவித்திகளை உருவாக்காதவை
  4. Lactose கரைசலை நொதிப்படையச் செய்து 48 மணித்தியாலங்களில் வாயு விளைவுகளை தோற்று விக்கக்கூடியன.

திண்மக் கழிவுகளை சூழலுக்கு விடுவதால் எழும் பிரச் சினைகள்

  1. நுளம்புகளினதும், பூச்சிகளினதும் பெருக்கத்திற்கான நிலையிடங்களாக அமைதல்
  2. காற்றின்றிய பிரிகையாக்கம் காரணமாக வெறுப்பான மணம் உண்டாதல்.
  3. இதனால் தோன்றும் மீதேன் வாயு சூழலுக்குத் தீங்கானதாக அமைதல்.
  4. நிலக்கீழ் நீர் மாசடைதல்.

திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் முறைகள்

  • கழிவுகளை வேறுபிரித்து மீள் சுழற்சி செய்தல்.
  • சேதனக் கழிவுப் பதார்த்தங்களைப் பிரிகையாக்கம் செய்து உயர்வாயு உற்பத்தி,கூட்டெரு உற்பத்தியில் பயன்படுத்தல்
  • ஆரோக்கியமான காணி நிரவுகை செய்தல்.

ஆரோக்கியமான காணி நிரவுகை

  • திண்மக் கழிவுகளை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு முறை
  • இதற்கென பக்க விலக்கடைந்த / உப பக்க விலக்கடைந்த நிலங்கள் தெரிவு செய்யப்படுகின்றன.
  • இவ்வாறான நிலங்களில் தரைக்கீழான நீர்மட்டம் உயர்வாக இருக்கக்கூடாது.
  • திண்மக் கழிவுகள் தெரிவு செய்யப்பட்ட நிலப்பரப்பில் பரப்பப்பட்டு, அழுத்தப்பட்டு கனவளவு குறைக்கப்பட்டு படைகளாக்கப்படுகின்றது.
  • இப்படையின் மேல் மணல் பரவப்படும்.
  • இவ்வாறு மீண்டும் பல தடவைகள் இந்த நிலத்தில் திண்மக் கழிவுகளை இடமுடியும்.
  • இங்கு திண்மக் கழிவுகள் உயிரியலுக்குரியதும், இரசாயன முறைக்குரியதுமான செய்முறைகளால் பிரிகையாக்கம் அடைந்து திண்ம,திரவ,வாயு விளைவுகளைத் தூற்றுவிக்கும்.
  • இது செலவு குறைவான முறையாகும்.
  • நகர்ப்புற திண்மக் கழிவுகளின் பரிகரிப்பில் இது பயன்படுகிறது.

 

RATE CONTENT 0, 0
QBANK (9 QUESTIONS)

தொழிற்சாலைக் கழிவுநீர் பரிகரிப்பு பொறியத்தில்  உயிர்ப்பாக்கப்பட்ட சக்தி முறைமை பயன்படுத்தப்படும்
பிரதான குறிக்கோள் பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 10406
Hide Comments(0)

Leave a Reply

கோலிவடிவ (coliform)   பற்றீரியாக்கள்  மலம் மாசடைதலின்  காட்டி அங்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றமைக்குக்
காரணம்?

Review Topic
QID: 10440
Hide Comments(0)

Leave a Reply

கழிவுப் பொருள்களினால் நீர்நிலைகள்  மாசடைகின்றமையால்,

Review Topic
QID: 10445
Hide Comments(0)

Leave a Reply

மாநகரசபை நீர் சுத்திகரிக்கும் பொறியம் ஒன்றில்பொதுவான நீர் சுத்திகரிப்பு முறைமையின் பிரதான
படிகள் சில கீழேதரப்பட்டுள்ளன. நோய் விளைவிக்கும்நுண்ணங்கிகளை அகற்றுவதில் பங்குகொள்ளும் படி
படிகள் பின்வருவனவற்றுள் எது /எவை?

Review Topic
QID: 10449
Hide Comments(0)

Leave a Reply

தொழிற்சாலைக் கழிவுநீர் பரிகரிப்பு பொறியத்தில்  உயிர்ப்பாக்கப்பட்ட சக்தி முறைமை பயன்படுத்தப்படும்
பிரதான குறிக்கோள் பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 10406

கோலிவடிவ (coliform)   பற்றீரியாக்கள்  மலம் மாசடைதலின்  காட்டி அங்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றமைக்குக்
காரணம்?

Review Topic
QID: 10440

கழிவுப் பொருள்களினால் நீர்நிலைகள்  மாசடைகின்றமையால்,

Review Topic
QID: 10445

மாநகரசபை நீர் சுத்திகரிக்கும் பொறியம் ஒன்றில்பொதுவான நீர் சுத்திகரிப்பு முறைமையின் பிரதான
படிகள் சில கீழேதரப்பட்டுள்ளன. நோய் விளைவிக்கும்நுண்ணங்கிகளை அகற்றுவதில் பங்குகொள்ளும் படி
படிகள் பின்வருவனவற்றுள் எது /எவை?

Review Topic
QID: 10449
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank