Please Login to view full dashboard.

மெண்டலற்ற இயல்புகள்

Author : Admin

18  
Topic updated on 02/14/2019 05:11am

மென்டலியன் சார்பற்ற பாரம்பரிய இயல்புகள்

  • பாரம்பரியமடையும் சில இயல்புகள் பொதுவான மென்டேலியன் விகிதங்களான 3 : 1 மற்றும் 9 : 3 : 3 : 1 ஆகிய விகிதங்களில் இருந்து விலகல் அடைகின்றன.
  • இவ்வாறான இயல்புகள் மென்டலின் விதிகளுக்கு அமையாது காணப்படுகின்றன.
  • இவை மென்டலியன் சார்பற்ற பாரம்பரியம் எனப்படும்.

நிறைவில் ஆட்சி   Image Tip

  • பரம்பரை அலகுகளில் ஆட்சியான எதிருருக்களின் ஆட்சி நிறைவற்றதாக காணப்படுகின்ற தன்மை
  • இவற்றின் ஓரின நுகங்கள் இயல்புகளில் வேறுபட்டிருக்கும்.
  • பல்லின நுகத்தின் தோற்ற அமைப்பு அவற்றின் ஓரின நுகங்களின் தோற்ற அமைப்புகளில் இருந்து வேறுபட்டு இடைநிலைக்குரிய தோற்றமைப்பைக் கொண்டிருக்கும்.
  • இவ்வாறான இயல்புகளின் கலப்பில் f2 சந்ததியில் தோற்ற அமைப்பு விகிதம் 1 : 2 : 1 என இருக்கும்.
    உதாரணம் : Mirabilis பூவின் நிறம்

இணையாட்சி

  • பரம்பரை அலகு ஒன்றின் இரண்டு எதிருருக்களும் சம ஆட்சியானவையாக இருக்கும் தன்மை.
  • இதனால் பல்லின நுக நிலையில் இரு எதிருருக்களினாலும் தீர்மானிக்கப்படுகின்ற இயல்புகள் ஒன்றாக சேர்ந்து தோற்ற அமைப்பை வெளிப்படுத்தும்.
  • இவ்வாறான இயல்புகளின் கலப்பில் f2 சந்ததியில் தோற்ற அமைப்பு விகிதம் 1 : 2 : 1 எனக் காணப்படும்.
    உதாரணம் : மனிதக் குருதிக் கூட்டத்தின் M, N எதிருருக்கள்

பல் எதிருருத் தன்மை

  • பரம்பரை அலகு ஒன்றிற்கு இரண்டிற்கு மேற்பட்ட எதிருருக்கள் காணப்படுகின்ற நிலை பல்எதிருருத் தன்மை எனப்படும்.
  • இங்கு எதிருருக்கள் ஆட்சி உடையனவாக அல்லது இணையாட்சி உடையனவாக இருக்கலாம்.
    உதாரணம் : மனிதக் குருதி வகையை தீர்மானிக்கும் பரம்பரை அலகிற்கு IA , IB ,i என 3 எதிருருக்கள் உள்ளன.
  • இவற்றுள் i ஏனைய எதிருருக்களுக்கு பின்னடை வானது.
  • IA,IB எதிருருக்கள் ஒன்றுக்கொன்று இணையாட்சி உடையன.

பல் பரம்பரை அலகு பாரம்பரியம்

  • பாரம்பரிய இயல்பொன்று பல பரம்பரை அலகுகளால் தீர்மானிக்கப்படும் தன்மை.
  • இப்பரம்பரை அலகுகள் ஒவ்வொன்றும் சுயாதீனமாக தனிப்படுத்துகை அடையக் கூடியன.
  • எல்லா எதிருருக்களும் ஆட்சியானவை.
  • தோற்ற அமைப்புகள் பரம்பரை அலகுகளின் எதிருருக்களின் கூட்டற் தகவினால் வெளிக்காட்டப்படும்.
  • இங்கு உருவாக்கப்படும் இயல்புகள் அளவறி முறையிலானவை.
  • குடித் தொகையில் இத்தகைய பாரம்பரிய இயல்புகளின் மீடிறன் பரவல் செவ்வெண் பரவல் வளையியாகக் காணப்படும்.
    உதாரணம் : மனிதனின் உயரம், மனிதனின் தோலின் நிறம், மனிதனின் நுண்ணறிவு

பரம்பரை அலகுகளின் இடைத் தாக்கங்கள்

மேலாட்சி

  • மேலாட்சி என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பரம்பரை அலகுகளால் தீர்மானிக்கப்படுகின்ற பாரம்பரிய இயல்புகளில் காணப்படுகின்றன.
  • இங்கு ஒரு பரம்பரை அலகினால் தோற்ற அமைப்பு வெளிப்படுத்தப்படுகின்ற தன்மையை வேறொரு பரம்பரை அலகுகளின் எதிருருக்கள் தடுக்கின்றன.

பின்னடைவான மேலாட்சி

  • இங்கு பரம்பரை அலகு ஒன்றின் பின்னடைவு எதிருருக்களினால் அவற்றின் ஓரின நுக நிலையில் பிறிதொரு பரம்பரை அலகுகளின் எதிருருக்கள் தோற்றமைப்பை வெளிப்படுத்துவது தடுக்கப்படுகிறது.
    உதாரணம் : சுண்டெலியின் உரோமத்தின் நிறம்

ஆட்சியான மேலாட்சிPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பரம்பரை அலகு ஒன்றின் ஆட்சியான எதிருரு பிறிதொரு பரம்பரை அலகின் எதிருருக்களின் விளைவை மறைப்பது ஆட்சியான மேலாட்சி எனப்படும்.
    உதாரணம் : கோழிகளில் இறகின் நிறம்

நிரப்புகின்ற பரம்பரை அலகுகளின் இடைத்தாக்கம்

  • தோற்ற அமைப்பு ஒன்றை உருவாக்க இரண்டு பரம்பரை அலகுகளின் ஆட்சியான எதிருருக்கள் தேவைப்படும் தன்மை.
    உதாரணம் : Lathyrus தாவரத்தின் பூவின் நிறம்.

பரம்பரை அலகு இணைப்பு

  • ஒரே நிறமூர்த்தத்தில் காணப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பரம்பரை அலகுகள் ஒன்றாக புணரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு தலைமுறை உரிமை செய்யப்படுதல் பரம்பரை அலகு இணைப்பு எனப்படும்.
  • குறுக்குப் பரிமாற்றம் நிகழ்ந்து மீளச்சேர்தல்களைத் தோற்றுவிக்கக் கூடிய இணைப்பு முற்றற்ற இணைப்பு எனப்படும்.
  • குறுக்குப் பரிமாற்றம் நிகழ்ந்து மீளச் சேர்தல்களைத் தோற்றுவிக்க முடியாத இணைப்பு முற்றான இணைப்பு எனப்படும்.
  • குறுக்குப் பரிமாற்ற வீதம் =  ½ கோப்பு வீதம்

 இலிங்க இணைப்பு

  • மனிதனில் X நிறமூர்த்தத்தில் இலிங்கமல்லாத இயல்புகளுக்கான பல பரம்பரை அலகுகள் உள்ளன. இப் பரம்பரை அலகுகள் X நிறமூர்த்தத்தினால் காவிச் செல்லப்படல் இலிங்க இணைப்பு எனப்படும்.
    உதாரணம் : மனிதனில் நிறக்குருட்டுத் தன்மை.
    மனிதனில் குருநியுறையா நோய்

இலிங்க நிர்ணயம்Please Login to view the QuestionPlease Login to view the Question

  • மனிதனில் 1 சோடி நிறமூர்த்தம் இலிங்க நிறமூர்த்தம் ஆகும்.
  • X நிறமூர்த்தம் பருமனில் பெரியது. Y நிறமூர்த்தம் பருமனில் சிறியது.
  • X  நிறமூர்த்தம் இலிங்கமல்லாத பல பரம்பரையலகுகளைக் கொண்டது.
  • Y நிறமூர்த்தமே இலிங்கத் தீர்மானத்திற்குரிய பரம்பரை அலகைக் கொண்டது.
  • எனவே, XY சாதாரண ஆண்
  • Y இல்லாத நிலையில் பெண் இலிங்க நிர்ணயம் ஏற்படும்.
  • எனவே, XX  சாதாரண பெண்
  • புணரியாக்கத்தின் போது, இவ் நிறமூர்த்தங்கள் வேறுபடுத்தப்படும்.
  • முட்டைக் கலம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு X நிறமூர்த்தத்தைக் கொண்டிருக்கும்.
  • விந்துகளில் X நிறமூர்த்தத்தைக் கொண்ட விந்துகளும், Y  நிறமூர்த்தத்தைக் கொண்ட விந்துகளும் காணப்படும்.
  • கருக்கட்டலின் போது, இப் புணரிகள் வழியாகக் கொண்டுவரப்பட்ட இலிங்க நிறமூர்த்தங்கள் ஒன்று சேர்க்கப்படும்.
  • இதனாலேயே குடித்தொகையில் ஆண், பெண் விகிதம் சமனானதாக உள்ளது.
RATE CONTENT 0, 0
QBANK (18 QUESTIONS)

மென்டலியன் அல்லாத தலைமுறையுரிமையின் வெவ்வேறு கோலங்களை பொருத்தமான உதாரணங்களைக் கொண்டு விவரிக்குக.

Review Topic
QID: 1304

நிறைவிலாட்சி Image Tip1

  • பரம்பரை அலகுகளின் எதிருருக்களின் ஆட்சி நிறைவற்றது / பகுதியானது
  • ஓரினநுக பெற்றோருக்கு (உறள்பொருள் இயல்புகளுடையவை) பல்லினநுகமுள்ள F1 இல் உருவாகும் சந்ததி, வேறுபட்ட / இடைப்பட்ட தோற்றவமைப்பைக் கொண்டிருக்கும்.
  • (ஒற்றைக் கலப்புக்குரிய) F2 தோற்றவமைப்பு விகிதம் 1:2:1 உ10ம் : ஆசையடிடைளை பூவின் நிறம்

இணை ஆட்சி Image Tipcodominance-inheritance-of-blood-group-2

பரம்பரை அலகுக்கான இரண்டு எதிருருக்களும் சமமாக ஆட்சியானவை / தெளிவான தோற்ற அமைப்புக்களை உருவாக்கும்.

பல்லினநுகம் இரு எதிருருக்களாலும் தீர்மானிக்கப்படும் இயல்புகளை வெளிக்காட்டுகின்றது.

ஒற்றைக்கலப்புப் பிறப்பாக்கல் F2 இனது தோற்றவமைப்பு விகிதம் 1:2:1

உ10ம் : மனித MN குருதிக்கூட்டங்கள் / மனித AB குருதிக்கூட்டம்

 

பரம்பரையலகு இடைத்தாக்கம் / மேலாட்சி

  • இரண்டு அல்லது மேற்பட்ட பரம்பரை அலகுகளினால் தீர்மானிக்கப்படும் இயல்புகளில் காணப்படும்.
  • ஒரு பரம்பரையலகின் வெளிப்படுத்தும் தன்மை வேறொரு பரம்பரை அலகினால் மறைக்கப்படல் / வெளிப்படாது தடுக்கப்படல்.

I. பின்னடைவான மேலாட்சி

  • பரம்பரை அலகு ஒன்றின் பின்னடைவான எதிருரு வேறொரு பரம்பரை அலகின் வெளிப்படுத்தலை மறைக்கும்.
  • இரட்டைக்கலப்புக்குரிய F2 தோற்ற அமைப்பு விகிதம் 9:7
  • உ10ம் : Lathyrus / இனிப்புப் பட்டாணியின் பூவின் நிறம்

II. ஆட்சியான மேலாட்சி

  • ஒரு பரம்பரை அலகின் ஆட்சியான எதிருருää வேறு ஒரு பரம்பரை அலகின் எதிருருக்களை மறைத்தல்.
  • இரட்டைக்கலப்புக்குரிய F2 தோற்றவமைப்பு விகிதம் 13:3
  • உ10ம் : வீட்டுக்கோழிகளின் இறக்கை நிறம்

 

பல்லெதிருருத்தன்மை

  • ஒரு பரம்பரையலகுக்கு இரண்டிற்கு மேற்பட்ட எதிருக்கள் காணப்படுதல். (குடித்தொகையில்)
  • எதிருருக்கள் ஆட்சி அல்லது இணையாட்சி / ஆட்சியின் வெவ்வேறு மட்டங்களை வெளிப்படுத்தலாம்.
  • உ+ம் : மனித A, B  O குருதிக்கூட்டங்கள்
  • IA, IB, iஎன்ற மூன்று எதிருருக்களினால் தீர்மானிக்கப்படும்.
  • IA யும் IB யும் இணையாட்சிக்குரியவை /IA, IB என்ற பிறப்புரிமையமைப்பு AB குருதிக் கூட்டவகையை உடையது.
  • IA, i என்ற எதிருருவுக்கு ஆட்சியானது / IAIA யும் IA i என்ற பிறப்புரிமையமைப்புகள் A குருதிக்கூட்டவகையை கொண்டிருக்கும்.
  • IB i என்ற பிறப்புரிமையமைப்புகள் B குருதிக் கூட்டத்தை உடையது.
  • i என்ற எதிருரு IA க்கும் IB க்கும் பின்னடைவானது / ii என்ற பிறப்புரிமையமைப்பு O குருதிக்கூட்டத்தைக் கொண்டிருக்கும்.

பல்பரம்பரையலகுப் பாரம்பரியம்

  • பல பரம்பரை அலகுகளினால் தீர்மானிக்கப்படும் ஒரு இயல்பு
  • பெறப்படும் இயல்பு அளவறியியல்பு உடையது.
  • பரம்பரையலகுகள் கூட்டத்தகவுடையன
  • எதிருருக்கள் ஆட்சியான இயல்பை காட்டக்கூடும்.
  • (குடித்தொகையில்) பரம்பரை இயல்புகள் சாதாரண பரம்பலைக் காட்டுகின்றன / இயல்புகளின் உச்ச நிலை அரிதாக காணப்படும், இடைநிலைகள் பொதுவானது.
  • மனிதனின் ஏதாவது அளந்தறியும் இயல்புகள்
  • உ10ம் : உயரம் / நிறை / நிறம் , பூக்களின் எண்ணிக்கை  பழங்களின் எண்ணிக்கை , முட்டைகளின் எண்ணிக்கை, பசுக்களில் உற்பத்தி செய்யப்படும் பால்

 

பரம்பரை அலகுகளின் இணைப்பு

  • ஒரே நிறமூர்த்தத்தில் உள்ள பரம்பரை அலகுகளின் இணைப்பு
  • இணைந்த பரம்பரையலகுகள் ஒன்றாகத் தனிப்படுத்தப்படும் / சுயாதீனமாக தனிப்படுத்தப்படுவதில்லை.
  • ‘இணைப்பை’ தீர்மானிப்பதற்கு சோதனை இனங்கலப்புகள் பயன்படுத்தப்படும்.
  • இரட்டைக் கலப்புப் பிறப்பாக்கலுக்குரிய தோற்ற அமைப்பு விகிதம் 1:1:1:1 சமமற்றது.
  • சோதனைக் கலப்பு எச்சங்களில், பெற்றோரை ஒத்த வகைகள் மிகப் பொதுவானதாகவும் மீளச் சேர்கை வகைகள் வழக்கமாகக் குறைவாகவும் காணப்படும்.
  • உதாரணம் : Drosophila இன் உடலின் நிறம், இறகின் நீளத்தின் பாரம்பரியம்

 

இலிங்க இணைப்பு / இலிங்கமிணைந்த பாரம்பரியம்

X நிறமூர்த்தத்தினால் காவப்படும் பரம்பரையலகுகளினால் இது காட்டப்படும்.

இயல்பு / வெளிப்படுத்தப்படும் நோய் (பெரும்பாலும்) ஆண்களில், ஏனெனில் அவை ஒரு X நிறமூர்த்தத்தைக் கொண்டன.

X நிறமூர்த்தத்தின் மீது பின்னடைவான எதிருரு காணப்படுதல் (பெரும்பாலும்)

இயல்பு / நோய் பெண்களில் ஓரினநுகத்துக்குரிய பின்னடைவான நிலையில் வெளிப்படும்.

பல்லினநுக பெண்கள் காவிகளாவர் / தாயிலிருந்து மகனுக்கு பாரம்பரியம் அடையும்

மனிதனில் நிறக்குருடு / ஹீமோபிலியா

Hide Comments(0)

Leave a Reply

பெற்ற இயல்புகளைப் பற்றி நாம் கூறக்கூடியது,

Review Topic
QID: 4294

 

Hide Comments(0)

Leave a Reply

மனிதரில் நீலக்கண் நிறம் கபிலக்கண் நிறத்துக்குப் பின்னிடைவானதாகும். இப்பரம்பரை அலகைச் சார்ந்தளவில் (Hardy – Weinberg) சமநிலையிற் காணப்படும் ஒரு சனத்தொகையில் பின்னடைவான ஓரினனுகத்தின் அதிர்வெண் 0.09  ஆகும். ஆட்சியுள்ள ஓரினனுகத்தின் அதிர்வெண் என்ன?

Review Topic
QID: 4300
Hide Comments(0)

Leave a Reply

கீழ்க்காணும் இயல்புகளில் மனிதனின் தனித்தன்மையாக அமையாத இயல்பு,

Review Topic
QID: 4344
Hide Comments(0)

Leave a Reply

தாவர இனப்பெருக்கத்தில் இழைய வளர்ப்புத் தொழிநுட்பங்களைப் பயன்படுத்தல் தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?

Review Topic
QID: 6363
Hide Comments(0)

Leave a Reply

மென்டலல்லாத தலைமுறையுரிமையின் ஐந்து வெவ்வேறு மாதிரிகளை ஒவ்வோர் உதாரணத்துடன் பின்வரும் பட்டியல் எடுத்துக்காட்டுகின்றது. தரப்பட்ட உதாரணங்களில் ஒன்று மாத்திரமே சரியானது. சரியான உதாரணத்துடன் உள்ள தலைமுறையுரிமை மாதிரியை தெரிந்தெடுக்க?

Review Topic
QID: 6376

 

Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்று / கூற்றுக்களின் தவறானது / தவறானவை எது / எவை?

Review Topic
QID: 4889

 

Hide Comments(0)

Leave a Reply

ஒடுக்கற்பிரிவு பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

Review Topic
QID: 5107
Hide Comments(0)

Leave a Reply

மேலாட்சி பற்றிப் பின்வருவனவற்றில் எது / எவை சரி யானது / சரியானவை?

Review Topic
QID: 5108
Hide Comments(0)

Leave a Reply

ரசல் வொலஸ் தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களுள் சரியானது எது?

Review Topic
QID: 5111
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது பிறப்புரிமையியல் ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட (Genetically modified) அங்கிகளின் ஒரு பிரயோகத்திற்கு உதாரணம் அன்று?

Review Topic
QID: 6407
Hide Comments(0)

Leave a Reply

சில அங்கிகளில் இலிங்கமுறை இனப்பெருக்கத்தின்போது குறிப்பான இயல்புகள் தன்வயத்தொகுப்பு அடைகின்றன. ஒடுக்கற் பிரிவின்போது ஏற்படும் பின்வரும் படிகளில் தன்வயத்தொகுப்பு அடைவதற்கு எந்தப்படி தேவையில்லை?

Review Topic
QID: 4363
Hide Comments(0)

Leave a Reply

மென்டலியன் அல்லாத தலைமுறையுரிமையின் வெவ்வேறு கோலங்களை பொருத்தமான உதாரணங்களைக் கொண்டு விவரிக்குக.

Review Topic
QID: 1304

பெற்ற இயல்புகளைப் பற்றி நாம் கூறக்கூடியது,

Review Topic
QID: 4294

 

மனிதரில் நீலக்கண் நிறம் கபிலக்கண் நிறத்துக்குப் பின்னிடைவானதாகும். இப்பரம்பரை அலகைச் சார்ந்தளவில் (Hardy – Weinberg) சமநிலையிற் காணப்படும் ஒரு சனத்தொகையில் பின்னடைவான ஓரினனுகத்தின் அதிர்வெண் 0.09  ஆகும். ஆட்சியுள்ள ஓரினனுகத்தின் அதிர்வெண் என்ன?

Review Topic
QID: 4300

கீழ்க்காணும் இயல்புகளில் மனிதனின் தனித்தன்மையாக அமையாத இயல்பு,

Review Topic
QID: 4344

தாவர இனப்பெருக்கத்தில் இழைய வளர்ப்புத் தொழிநுட்பங்களைப் பயன்படுத்தல் தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?

Review Topic
QID: 6363

மென்டலல்லாத தலைமுறையுரிமையின் ஐந்து வெவ்வேறு மாதிரிகளை ஒவ்வோர் உதாரணத்துடன் பின்வரும் பட்டியல் எடுத்துக்காட்டுகின்றது. தரப்பட்ட உதாரணங்களில் ஒன்று மாத்திரமே சரியானது. சரியான உதாரணத்துடன் உள்ள தலைமுறையுரிமை மாதிரியை தெரிந்தெடுக்க?

Review Topic
QID: 6376

 

பின்வரும் கூற்று / கூற்றுக்களின் தவறானது / தவறானவை எது / எவை?

Review Topic
QID: 4889

 

ஒடுக்கற்பிரிவு பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

Review Topic
QID: 5107

மேலாட்சி பற்றிப் பின்வருவனவற்றில் எது / எவை சரி யானது / சரியானவை?

Review Topic
QID: 5108

ரசல் வொலஸ் தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களுள் சரியானது எது?

Review Topic
QID: 5111

பின்வருவனவற்றுள் எது பிறப்புரிமையியல் ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட (Genetically modified) அங்கிகளின் ஒரு பிரயோகத்திற்கு உதாரணம் அன்று?

Review Topic
QID: 6407

சில அங்கிகளில் இலிங்கமுறை இனப்பெருக்கத்தின்போது குறிப்பான இயல்புகள் தன்வயத்தொகுப்பு அடைகின்றன. ஒடுக்கற் பிரிவின்போது ஏற்படும் பின்வரும் படிகளில் தன்வயத்தொகுப்பு அடைவதற்கு எந்தப்படி தேவையில்லை?

Review Topic
QID: 4363
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank