Please Login to view full dashboard.

காபோவைதரேற்று

Author : Admin

45  
Topic updated on 02/14/2019 10:33am

மாமூலக்கூறுPlease Login to view the Question

ஒரு சேர்வை மாமூலக் கூறாக காணப்பட வேண்டின்

  • பல்பகுதிய சேர்வையாக இருக்க வேண்டும்
  • 104 விட அதிகமான மூலக்கூற்று நிறையை கொண்டிருக்க வேண்டும். (104 – 1010)

பல்பகுதிய சேர்வை எனப்படுவது கட்டமைப்பு அலகாக / ஆக்ககூறாக ஒரு சேர்வையை மட்டும் அதாவது ஒரு பாத்தை மட்டும் கொண்ட சேர்வைகளாகும்.

மூலக்கூற்று நிறை 10விட அதிகமாகவும், ஒரு பாத்து மீண்டும் மீண்டும் இணைவதால் உருவாகும் பல்பகுதிய சேர்வை மாமூலக்கூறு எனப்படும்.

உயிரியல் மூலக்கூறுகளில் இலிப்பிட்டு தவிர்ந்த ஏனையவை மாமூலக்கூறில் அடங்குகின்றன. எனினும், காபோவைதரேற்றில் பல்சக்கரைட்டுகள் மட்டும் மாமூலக்கூறுகள் ஆகும்.

மாமூலக்கூறு

ஒரு பாத்து / கட்டமைப்பலகு

ஒரு பாத்துகளுக்கு இடையிலான பிணைப்பு

பல்சக்கரைட் 

 

 

(காபோவைதரேற்று)

ஒரு சக்கரைட் கிளைக்கோசைடிக் பிணைப்பு
புரதம் அமினோ அமிலம் பெப்டைட்டு பிணைப்பு
நியூக்களிக்கமிலம்  நியூக்கிளியோரைட்டு பொஸ்போ இரு எசுத்தர் பிணைப்பு

காபோவைதரேற்றுPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • இவற்றில் C,H,O மூலகங்கள் காணப்படுகின்றன.
  • H: O = 2 : 1
  • இதன் பொது சூத்திரம் Cx(H2O)y எனவே இது நீரேற்றப்பட்டு காபன் என வர்ணிக்கப்படுகின்றது. (x,y முழு எண்கள், சமனாக / சமனற்று காணப்படல்).
  • பூமியின் மேற்பரப்பில் மிக அதிகளவில் காணப்படும் சேதன சேர்வை காபோவைதரேற்று ஆகும்.
  • சகல காபோவைதரேற்றுகளிலும் அதன் கட்டமைப்பில் மூன்று முக்கிய அம்சங்கள் காணப்படுகின்றன.
  1. காபன் வன்கூட்டு கட்டமைப்பு
  2. பல ஐதரொக்சி கூட்டங்கள் (-OH)
  3. காபனைல் கூட்டம் கொண்டது
  • காபனைல் கூட்டம் இரு வகைப்படும்.
  1. அல்டிகைட் கூட்டம்
  2. கீற்றோன் கூட்டம்

அல்டிகைட் கூட்டம் காணப்படின் அல்டோஸ் எனவும் கீற்றோன் கூட்டம் காணப்படின் கீடோஸ் எனவும் அழைக்கப்படும்.

  • காபோவைதரேற்று 3 உப வகுப்புக்களை கொண்டது.
  1. ஒரு சக்கரைட்டுக்கள்
  2. இரு சக்கரைட்டுக்கள்
  3. பல் சக்கரைட்டுக்கள்

ஒரு சக்கரைட்டுPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • ஒரு சக்கரைட்டுக்கள் தனி வெல்லம் / எளிய வெல்லம் என அழைக்கப்படும்.
    காரணம் – இரு சக்கரைட், பல் சக்கரைட் என்பவற்றின் கட்டமைப்பு கூறாக காணப்படுகின்றது.
  • இவற்றின் பௌதீக இயல்புகள் ஆவன,
  1. சிறிய மாமூலக்கூறுகள் ஆகும்
  2. இனிப்பு சுவையுடையவை
  3. யாவும் நீரில் கரையும்
  4. பளிங்குரு ஆக்க கூடியவை
  • இவற்றின் இரசாயன இயல்பாக தாழ்த்தும் தன்மை கொண்டவை. அதாவது இவற்றிலிருந்து சுயாதீன en வெளியேற்றப்பட்டு தாழ்த்துகின்றன.
  • இவற்றிற்குரிய தனித்துவமான பொது சூத்திரமாக (CH2O)n காணப்படுகின்றன. n 3 – 9 வரை காணப்படலாம்.

C எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு சக்கரைட்டுகள் மேலும் வகைப்படுத்தப்படுகின்றன. அவையாவன :
1. Triose – 3C வெல்லம்
2. Tetrose – 4C வெல்லம்
3. Pentose  – 5C வெல்லம்
4. Hexose – 6C வெல்லம்

ஒரு சக்கரைட்டுகளுக்கு உதாரணமும் தொழில்களும்

Triose (C3H6O3)

  • Glyceraldehyde(இரு ஐதரொக்சி அசற்றோன்)
  • சுவாசம், ஒளித்தொகுப்பு ஆகிய செயன் முறை களில் இடைநிலை சேர்வை
  • ஒரு சக்கரைட் வகை உ – ம் உயிரிகளில்

Tetrose (C4H8O4)

  • Erythrose
  • விலங்கு, தாவரங்களில் பொதுவாக காணப்படுவதில்லை
  • பக்றீரியாக்களில் அனுசேபத்தில் பங்கு கொள்கின்றது

Pentose (C5H10O5)

Ribose

  • RNA யின் கட்டமைப்பு கூறு
  • NAD,NADP ஆகிய துணை நொதியங்களின் கட்டமைப்பு கூறு
  • ATP,ADP,AMP  ஆகிய சக்தி சேர்வைகளின் கட்டமைப்பு கூறு

Ribulose

  • RUBP யின் கட்டமைப்பு கூறு (RUBP ஒளித் தொகுப்பில் CO2 வாங்கியாக தொழிற்படுகின்றது)

Deoxyribose

  • DNA யின் கட்டமைப்பு கூறு

Hexose (C6H12O6)

Glucose

  • சக்தி மூலம் / சுவாச கீழ் படையாக பயன்படுத்தல்
  • Glucose அங்கிகளில் பொதுவான சுவாச கீழ் படையாகும்.
  • இருசக்கரைட்டுகளின் கட்டமைப்பு கூறு.
  • பல்சக்கரைட்டின் கட்டமைப்பு கூறு.
  • உணவாக பயன்படுகின்றது.

Fructose

  • இரு சக்கரைட் ஆக்கம் (Sucrose)
  • உணவு
  • பல்சக்கரைட் ஆக்கம் (Inulin)

Galactose

  • இரு சக்கரைட் ஆக்கம் (Lactose)

இரு சக்கரைட்டுPlease Login to view the Question

  • இரு சக்கரைட்டின் பௌதீக இயல்புகள்.
  1. ஒப்பீட்டளவில் சிறிய மூலக்கூறு
  2. இனிப்பு சுவையுடையவை
  3. பளிங்காக்க கூடியது
  4. நீரில் கரையும்.
  • இரசாயன இயல்பாக சில தாழ்த்தும் வெல்லங்கள்
  • இரு சக்கரைட்டுகளுக்கு உதாரணம்
  1. Moltose
  2. Sucrose
  3. Lactose
  • இரு சக்கரைட்டுகளின் கட்டமைப்பு கூறு
  1. Moltose = Glucose + Glucose
  2. Sucrose = Glucose + Fructose
  3. Lactose = Glucose + Galactose
  • இரு சக்கரைட் ஆக்கத்தில் Glucose  சகல இருசக்கரைட்டி லும் ஆக்க கூறாக காணப்படுகின்றது
  • இரு சக்கரைட் ஆக்கத்தில் பங்குகொள்ளும் ஒரு சக்கரைட்டு Hexose ஆகும்.
  • இரு சக்கரைட் ஆக்கத்தில் பொதுவான மூலக்கூற்று சூத்திர அமைப்பு C12H22O11
  • இரு சக்கரைட் உருவாக்கும் தாக்கம் மீள்தாக்கத்திற்குரியது.
  • இரு சக்கரைட்டுகளுக்கு நீர் சேர்ப்பதன் மூலம் (நீர் பகுப்பு தாக்கத்தின் மூலம்) அதன் ஆக்க கூறுகளை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.
  • இவ் நீர் பகுப்பானது இரு முறைகளில் மேற்கொள்ளப்படலாம்.

இருசக்கரைட்டுக்குரிய தனித்துவமான நொதியத்தை சேர்த்தல்.Please Login to view the Question

  • சுக்குரோசு + H2O → Glucose + Fructose
  • Moltose + H2O→ Glucose + Glucose
  • Lactose + H2O → Glucose + Galactose

ஐதான அமிலம் சேர்த்து நீர்பகுப்பு தாக்கத்தை மேற்கொள்ளல்.

  • Moltose + ஐ.HCl → Glucose + Glucose

இரு சக்கரைட்டின் உயிரியல் முக்கியத்துவம்

1. Moltose :

  • இது தாவரம் விலங்குகளில் காணப்படுகின்றது.
  • மாப்பொருளின் சமிபாட்டின் இடைநிலையாக பெறப்படும்.
  • இச்சமிபாடானது விலங்குகளின் உணவுக் கால்வாயிலும் முளைக்கும் வித்துக்களிலும் நிகழ்கின்றது.

2. Lactose :

  • இது பாலில் காணப்படுவதால் பால்வெல்லம் எனப்படும்
  • இளம் முலையூட்டிகளுக்கு பாலில் சேமிப்பாக காணப்படுவதால் சக்தி மூலமாக தொழிற்படுகின்றது.
  • இவ் வெல்லமானது விலங்குகளில் மட்டும் காணப்படுகின்றது.

3. Sucrose :

  • கரும்பில் காணப்படுவதால் கரும்பு வெல்லம் எனப்படும்.
  • இயற்கையில் அதிகளவில் காணப்படும் இரு சக்கரைட் இதுவாகும்.
  • விலங்குகளிலும் தாவரங்களிலும் காணப்படுகின்றது.
  • தாவரங்ககளில் சேமிப்பாக காணப்படுகின்றது. (கரும்பு, பீற்றூட்)
  • தாவரங்களில் கொண்டுசெல்லல் கட்டமைப்பாக காணப்படுகின்றது.
  • தாவரங்களில் கொண்டு செல்லல் கட்டமைப்பாக Sucrose காணப்படுவதற்கு அது கொண்டுள்ள சிறப்பியல்புகள் ஆவன.
    01. நீரில் நன்றாக கரையக்கூடியது.
    02. இரசாயன ரீதியான உயிர்ப்பற்றது.
  • இரு சக்கரைட்டுகளில் Moltose, Lactose தாழ்த்தும் வெல்லங்கள் ஆகும்.
  • Sucrose தாழ்த்தா வெல்லமாகும்

பல்சக்கரைட்டுகள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பல்சக்கரைட்டின் பௌதீக இயல்புகள்
  1. நீரில் கரையாது / சிறிதளவு கரையும்
  2. மாமூலக்கூறுகள்
  3. இனிப்பு சுவையற்றது
  4. பளிங்காக்க முடியாது
  • இரசாயன இயல்பாக தாழ்த்தும் தன்மையற்றவை.
  • பல்சக்கரைட்டுக்கு உதாரணம்
    1. மாப்பொருள்
    2. கிளைக்கோஜன்
    3. செலிலோசு
    4. இனூலின்
  • பல்சக்கரைட்டின் கட்டமைப்பு கூறாக ஒருசக்கரைட்டுகள் அதிலும் Hexose காணப்படுகின்றது.

 

பல்சக்கரைட் கட்டமைப்பு கூறு
மாப்பொருள்  Glucose
கிளைக்கோஜன்  Glucose
செலிலோசு  Glucose
இனூலின்  Fructose

 மாப்பொருள்

  • குளுக்கோஸின் பல்பகுதியமாகும். அதாவது Glucose இனால் ஆக்கப்பட்ட பல்பகுதிய சங்கிலி பலவற்றை கொண்டது.
  • இதில் இரு வகையான சங்கிலிகள் காணப்படுகின்றன.
    1. அமைலோஸ் : கிளைவிடாத Glucose இன் நேரிய பல்பகுதிய சங்கிலி.
    இதில் 1, 4 Glycosidic பிணைப்பு காணப்படும்.
    2. அமைலோ பெக்ரின் : கிளைத்த Glucose இன் பல்பகுதிய சங்கிலி.
    இதில் 1, 4 Glycosidic பிணைப்பு 1, 6 Glycosidic பிணைப்பு காணப்படும்.
  • மாப்பொருளின் உயிரியல் முக்கியத்துவங்கள்
  1. தாவரங்களில் பிரதான சேமிப்பு
  2. சகல அங்கிகளுக்கும் உணவாக பயன்படுத்தப்படுகிறது.

கிளைக்கோஜன்

  • Glucose ன் பல்பகுதிய சேர்வை
  • அமைலோபெக்ரின் கூறை மாத்திரம் கொண்டது.
  • உயிரியல் முக்கியத்துவங்கள்
    1. விலங்கு, பங்கல், பக்ரீயா ஆகியவற்றில் சேமிப்பு
  • விலங்குகளில் கிளைகோஜன் ஈரல் கலங்களிலும், தசைக்கலங்களிலும் சேமிப்பாக காணப்படுகின்றது.
  • மாப்பொருள், கிளைகோஜனில் Glucose இன் பல்பகுதிய சங்கிலிகள் மடிப்படைந்து நெருக்கப்பட்டு ஒரு சிறிய கனவளவு இடத்தில் வைத்திருக்கப்படும். எனவே, இவை மணிகளாக சேமிக்கப்படும்.
  • மாப்பொருள் மாமணிகளாகவும், கிளைக்கோஜன் சிறுமணிகளாகவும் சேமிக்கப்படும். அத்துடன், இவை நீரில் கரைவதில்லை.

செலிலோசு

  • Glucose இன் பல்பகுதிய சேர்வை
  • கிளைவிடாத Glucose இன் நேரிய பல்பகுதிய சங்கிலியை மாத்திரம் கொண்டது.
  • இச் சங்கிலிகள் ஒன்றுக்கொன்று நேராக சமந்தரமாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்.
  • இவ் சமாந்தர சங்கிலிகளுக்கிடையில் ஐதரசன் பிணைப்பு காணப்படும்.
    இதனால் இவை நார் வடிவம் பெறுகின்றன.
  • இவ் ஒழுங்கமைப்பால் செலிலோசு உறுதி தன்மையை பெறுகின்றது.
  • கட்டமைப்பு தொழிற்பாட்டை மேற்கொள்கின்றது
  • பூமியல் அதிகளவு காணப்படும் சேதன சேர்வை செலிலோசு ஆகும்.
  • உயிரியல் முக்கியத்துவங்கள்
    1. தாவர கலச்சுவரில் கட்டமைப்பு கூறாக காணப்பட்டு உறுதியை வழங்குகின்றது.

இனூலின்

  • Fructose இன் பல்பகுதியம்
  • Fructose இன் கிளைவிடாத நேரிய பல்பகுதிய சங்கிலியை கொண்டது.
  • இச் சங்கிலிகள் ஒன்றுக்கொன்று நேராக சமாந்தரமாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். எனவே சேமிப்பு தொழிலை புரிகின்றது.
  • உயிரியல் முக்கியத்துவங்கள்
    01. Dahlia தாவரத்தின் சேமிப்பு கூறு

காபோவைதரேற்றின் பெறுதிகள்Please Login to view the Question

  • இவை உண்மையான காபோவைதரேற்றுகள் அல்ல. இவை போலியான காபோவைதரேற்றுகள் ஆகும். அதாவது பல்சக்கரைட்டின் அமைப்பை ஒத்தவை.
  • உதாரணம் :
  1. கைற்றின்
  2. பெக்ரின்
  3. அரைச்செலிலோசு

கைற்றின்

  • இது Acetylglucosamin இன் பல்பகுதிய சேர்வையாகும்.
  • Acetylglucosamin Glucose இற்கு கட்டமைப்பில் ஒத்தது.
  • கைற்றினில் காணப்படும் மூலகங்களாவன C,H,O,N
  • கைற்றின் செலிலோசிற்கு கட்டமைப்பில் ஒத்தது.
  • உயிரியல் முக்கியத்துவம்
    01. பங்கஸின் கலச்சுவரின் கூறு.
    02. ஆத்திரபோடாக்களின் புறவன்கூட்டின் கட்டமைப்பு கூறு.

பெக்ரின்

  • Galactronic அமிலத்தின் பல்பகுதியம்.
  • உயிரியல் முக்கியத்துவம்
    01. தாவர கலச்சுவரின் நடுமென்தட்டின் கட்டமைப்பு கூறு.

அரைச்செலிலோசு

  • Pentose வெல்லத்தின் பல்பகுதிய சேர்வை (Pentose அமிலம்)
  • உயிரியல் முக்கியத்துவம் : தாவர கலச்சுவரில் கட்டமைப்பு கூறு.

காபோவைதரேற்று தொடர்பான ஆய்வுகூட பரிசோதனைகள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

தாழ்த்தும் வெல்லத்திற்கான பரிசோதனை

  • தாழ்த்தும் வெல்லங்கள் ஆவன சகல ஒரு சக்கரைட்டுகளும் அத்துடன் Moltose, Lactose இருசக்கரைட்டுகளும் ஆகும்.
  • பரிசோதனை படிமுறை
    1. ஒரு பரிசோதனை குழாயினுள் 2ml தாழ்த்தும் வெல்ல கரைசலை எடுக்க.
    2. இதனுள் 5ml பெனடிக்கின் கரைசல் / பீலிங்கின் கரைசல் சேர்க்க.
    3. நீர்தொட்டியில் வைத்து 2 நிமிடம் கொதிக்க வைக்க
    4. பின்வரும் நிறமாற்றம் அவதானிக்கப்படும்.
    நீலம் → பச்சை →  மஞ்சள் → செம்மஞ்சள் → செங்கட்டி சிவப்பு
    5. இந்நிறமாற்றம் தாழ்த்தும் வெல்லம் என்பதை உறுதிப்படுத்தும்

தாழ்த்தா வெல்லப் பரிசோதனை (Sucrose)

  • பரிசோதனை படிமுறை
  • 1. தாழ்த்தா வெல்லக்கரைசல் தயாரிக்கப்பட்டு அதில் 2ml பரிசோதனை குழாயினுள் எடுக்கப்படும்.
    2. அதனுள் 5ml பெனடிக்கரைசல் சேர்க்கப்படும்.
    3. நீர் தொட்டியில் வைத்து 2 நிமிடம் கொதிக்க வைக்கப்படும்.
    4. நிறமாற்றம் ஏற்படாதவிடத்து தாழ்த்தா தன்மை உறுதிப்படுத்தப்படும்.இக்கரைசல் தாழ்த்தா வெல்லம் என்பதை உறுதி செய்ய மேலும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.5. தாழ்த்தா வெல்லக் கரைசலின் வேறு ஒரு 2ml கரைசல் பரிசோதனை குழாயினுள்  எடுக்கப்படும்.
    6. அதனுள் 1ml ஐ. HCl சேர்க்கப்படும்.
    7. 1 நிமிடம் கொதிக்க வைத்து NaOH கரைசலினால் நடுநிலையாக்கப்பட்டு PH தாளினால் நடுநிலை உறுதிப்படுத்தப்படும்.
    8. பின்பு 2ml பெனடிக்கரைசல் சேர்த்து நீர்தொட்டியில் கொதிக்க வைக்கப்படும்.
    9. நிறமாற்றம் ஏற்படுவது தாழ்த்தா வெல்லம் என்பதை உறுதிப்படுத்தப்படும்.
  • இங்கு தாழ்த்தா வெல்லமானது அமில நீர்பகுப்பின் மூலம் அதன் ஆக்க கூறுகளான ஒருசக்கரைட்டாக மாற்றப்படுகின்றது.
  • அமில நீர் பகுப்பிற்கு பதிலாக நொதிய நீர்பகுப்பும் மேற்கொள்ளப்படலாம்.

மாப்பொருள் பரிசோதனைPlease Login to view the Question

  1. ஒரு பரிசோதனை குழாயினுள் 2ml மாப்பொருள் கரைசலை எடுக்க
  2. அதனுள் 3/2 துளி பெற்றாசியம் அயடைட்டு கரைசலில் கரைக்கப்பட்ட அயடீன் கரைசல் சேர்க்கப்படும்.
  3. கருநீலநிறம் உருவாகுவது மாப்பொருளை உறுதிப்படுத்தும்
RATE CONTENT 3.5, 2
QBANK (45 QUESTIONS)

கீழே காட்டியவாறு மூன்று பரிசோதனைக் குழாய்கள் தயார் செய்யப்பட்டன

I குளுக்கோசுக் கரைசல்
II சுக்குரோசுக்கரைசல்  + ஐதான HCL
III   மாப்பொருட் கரைசல்  + அமைலேசு
ஒரு மணித்தியாலத்தின் பின்னர்,மூன்று பரிசோதனைக் குழாய்களுக்கும் பெனடிக்ரின் கரைசல் சேர்க்கப்பட்டு பின்னர் மெதுவாக அவை நீர்த்தொட்டியில் சூடாக்கப்பட்டன. பின்வரும் எதனில் சிவப்பு வீழ்படிவு அவதானிக்கப்பட்டது?

Review Topic
QID: 3298
Hide Comments(0)

Leave a Reply

ஒரு மூலக்கூறு சுக்குரோசின் நீர்ப்பகுப்பு தோற்றுவிப்பது

Review Topic
QID: 3367
Hide Comments(0)

Leave a Reply

உயர்வாழும் அங்கிகளில் கட்டமைப்புப் பங்களிப்பை முக்கியமாகக் கொண்டது பின்வருவனவற்றுள் எது/  எவை?

Review Topic
QID: 3391
Hide Comments(0)

Leave a Reply

நீர்ப்பகுப்பின் போது மேற்குறித்த சேர்வையைத் தருவது பின்வரும் சேர்வைகளுள் எது?

Review Topic
QID: 3772
Hide Comments(0)

Leave a Reply

சுக்ரோசின் ஒருசக்கரைட்டு அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவது  பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3516
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் ஒருசக்கரைட்டு அல்லாதது எது?

Review Topic
QID: 3532
Hide Comments(0)

Leave a Reply

தாவரங்களிலுள்ள பின்வரும் பதார்த்தங்களில் எது முக்கியமாக சேமிப்புத் தொழிலைக் கொண்டது?

Review Topic
QID: 3536
Hide Comments(0)

Leave a Reply

பீலிங்கின் சோதனையுடன் நேர்த்தாக்கத்தைக் கொடுப்பது /கொடுப்பன பின்வரும் காபோவைதரேற்றுகளுள் எது /எவை?

Review Topic
QID: 3562
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் இருசக்கரைட்டு எது?

Review Topic
QID: 3620
Hide Comments(0)

Leave a Reply

காபோவைதரேற்றுகள் தொடர்பாகத் தவறான சேர்க்கை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3631
Hide Comments(0)

Leave a Reply

பெனடிக்ற்றின் சோதனையில் நேர்த்தாக்கத்தை தருவது /தருவன பின்வரும் காபோவைதரேற்று / காபோவைத ரேற்றுகளுள்  எது / எவை?

Review Topic
QID: 3637
Hide Comments(0)

Leave a Reply

பல்சக்கரைட்டு மூலக்கூறு ஒன்றின் ஒரு பகுதியின் கட்டமைப்பு வரிப்படத்தில் காட்டப்படுகின்றது. ஒருசக்கரைட்டு மூலக்கூறுகளை இணைப்பதில் ஈடுபடும் பிணைப்பின் வகை யாது?

Review Topic
QID: 3769
Hide Comments(0)

Leave a Reply

கரைசல் ஒன்றில் குளுக்கோஸ் காணப்படுவதைக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படக்கூடிய இரசாயனச் சோதனை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3650
Hide Comments(0)

Leave a Reply

கரப்பானின் வெளிவன்கூட்டினிற் காணப்படும் கைற்றின் என்னும் சேர்வை ஒரு,

Review Topic
QID: 2870
Hide Comments(0)

Leave a Reply

கொலாஜன் ஒரு

Review Topic
QID: 3313
Hide Comments(0)

Leave a Reply

373 ஆம் 374 ஆம் வினாக்கள் பின்வரும் சோதனைகளையும் அவற்றின் அவதானிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டவை .

சோதனை           கரைசல்  x                                      கரைசல் Y

பேர்லிங்          செங்கட்டிச் சிவப்பு,வீழ்படிவு         நிறமாற்றம் இல்லை
அயடீன்           கருநீலம் கொடுக்கும்                     கருநீலம் கொடுக்கும்
பையூரேற்        நிறமாற்றம் இல்லை                       ஊதா நிறம் கொடுக்கும்

மேற்கூறப்பட்ட அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பெறத்தக்க முடிவு, கரைசல் X

Review Topic
QID: 3345
Hide Comments(0)

Leave a Reply

மேற்கூறப்பட்ட அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பெறத்தக்க முடிவு கரைசல் Y

Review Topic
QID: 3346
Hide Comments(0)

Leave a Reply

தாவர சேமிப்பு அங்கங்களில் காபோவைதரேற்றுகள் பொதுவாக மாப்பொருளாக சேமிக்கப்படும். மாப்பொருளின் பின்வரும் இயல்புகளில் எது  எவை அதனைப் பயனுள்ள சேமிப்புத் திரவியமாக்குகின்றது?

Review Topic
QID: 3667
Hide Comments(0)

Leave a Reply

கீழே காட்டியவாறு மூன்று பரிசோதனைக் குழாய்கள் தயார் செய்யப்பட்டன

I குளுக்கோசுக் கரைசல்
II சுக்குரோசுக்கரைசல்  + ஐதான HCL
III   மாப்பொருட் கரைசல்  + அமைலேசு
ஒரு மணித்தியாலத்தின் பின்னர்,மூன்று பரிசோதனைக் குழாய்களுக்கும் பெனடிக்ரின் கரைசல் சேர்க்கப்பட்டு பின்னர் மெதுவாக அவை நீர்த்தொட்டியில் சூடாக்கப்பட்டன. பின்வரும் எதனில் சிவப்பு வீழ்படிவு அவதானிக்கப்பட்டது?

Review Topic
QID: 3298

ஒரு மூலக்கூறு சுக்குரோசின் நீர்ப்பகுப்பு தோற்றுவிப்பது

Review Topic
QID: 3367

உயர்வாழும் அங்கிகளில் கட்டமைப்புப் பங்களிப்பை முக்கியமாகக் கொண்டது பின்வருவனவற்றுள் எது/  எவை?

Review Topic
QID: 3391

நீர்ப்பகுப்பின் போது மேற்குறித்த சேர்வையைத் தருவது பின்வரும் சேர்வைகளுள் எது?

Review Topic
QID: 3772

சுக்ரோசின் ஒருசக்கரைட்டு அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவது  பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3516

பின்வருவனவற்றுள் ஒருசக்கரைட்டு அல்லாதது எது?

Review Topic
QID: 3532

தாவரங்களிலுள்ள பின்வரும் பதார்த்தங்களில் எது முக்கியமாக சேமிப்புத் தொழிலைக் கொண்டது?

Review Topic
QID: 3536

பீலிங்கின் சோதனையுடன் நேர்த்தாக்கத்தைக் கொடுப்பது /கொடுப்பன பின்வரும் காபோவைதரேற்றுகளுள் எது /எவை?

Review Topic
QID: 3562

பின்வருவனவற்றுள் இருசக்கரைட்டு எது?

Review Topic
QID: 3620

காபோவைதரேற்றுகள் தொடர்பாகத் தவறான சேர்க்கை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3631

பெனடிக்ற்றின் சோதனையில் நேர்த்தாக்கத்தை தருவது /தருவன பின்வரும் காபோவைதரேற்று / காபோவைத ரேற்றுகளுள்  எது / எவை?

Review Topic
QID: 3637

பல்சக்கரைட்டு மூலக்கூறு ஒன்றின் ஒரு பகுதியின் கட்டமைப்பு வரிப்படத்தில் காட்டப்படுகின்றது. ஒருசக்கரைட்டு மூலக்கூறுகளை இணைப்பதில் ஈடுபடும் பிணைப்பின் வகை யாது?

Review Topic
QID: 3769

கரைசல் ஒன்றில் குளுக்கோஸ் காணப்படுவதைக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படக்கூடிய இரசாயனச் சோதனை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3650

கரப்பானின் வெளிவன்கூட்டினிற் காணப்படும் கைற்றின் என்னும் சேர்வை ஒரு,

Review Topic
QID: 2870

கொலாஜன் ஒரு

Review Topic
QID: 3313

373 ஆம் 374 ஆம் வினாக்கள் பின்வரும் சோதனைகளையும் அவற்றின் அவதானிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டவை .

சோதனை           கரைசல்  x                                      கரைசல் Y

பேர்லிங்          செங்கட்டிச் சிவப்பு,வீழ்படிவு         நிறமாற்றம் இல்லை
அயடீன்           கருநீலம் கொடுக்கும்                     கருநீலம் கொடுக்கும்
பையூரேற்        நிறமாற்றம் இல்லை                       ஊதா நிறம் கொடுக்கும்

மேற்கூறப்பட்ட அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பெறத்தக்க முடிவு, கரைசல் X

Review Topic
QID: 3345

மேற்கூறப்பட்ட அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டு பெறத்தக்க முடிவு கரைசல் Y

Review Topic
QID: 3346

தாவர சேமிப்பு அங்கங்களில் காபோவைதரேற்றுகள் பொதுவாக மாப்பொருளாக சேமிக்கப்படும். மாப்பொருளின் பின்வரும் இயல்புகளில் எது  எவை அதனைப் பயனுள்ள சேமிப்புத் திரவியமாக்குகின்றது?

Review Topic
QID: 3667
Comments Hide Comments(7)
Shalini Kajan
Shalini Kajan commented at 12:54 pm on 01/01/2020
மிகவும் பயனுள்ளது. நன்றி
Pragansha Pragyaah
Pragansha Pragyaah commented at 17:21 pm on 11/07/2019
thank u so much for these questions.
Antony Jeradson
Antony Jeradson commented at 12:55 pm on 10/07/2018
Thanks you very much. And some questions la answers mattum thaan ituku, Question display aahala.
Antony Jeradson
Antony Jeradson commented at 12:55 pm on 10/07/2018
Thanks you. And some questions la answers mattum thaan ituku, Question display aahala.
Admin Admin
Admin Vinoth commented at 09:46 am on 21/07/2017
மாதிரி கேள்விகள் விரைவில் பதிவேற்றப்படும்.
Kantharuban Ukesh
Kantharuban Ukesh commented at 21:34 pm on 20/07/2017
past paper illama vera kelvi iruka
Kantharuban Ukesh
Kantharuban Ukesh commented at 18:45 pm on 20/07/2017
nalla kelvi
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank