Please Login to view full dashboard.

ஒளித்தாக்கம்,இருள்நிலைத் தாக்கம்

Author : Admin

17  
Topic updated on 02/14/2019 08:47am

ஒளித்தாக்கம் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

light-reaction

  • ஒளித்தொகுதி I, ஒளித்தொகுதி II என்பவற்றிலுள்ள உணர்கொம்புச்சிக்கல் ஒளித்தொகுப்பு நிறப்பொருட்களால் சூரிய ஒளிச்சக்தி Photon / ஒளிச்சொட்டுகளாக அகத்துறிஞ்சப்படுகின்றன.
  • சிவப்பு, நீலக் கதிர்கள் அதிகளவில் அகத்துறிஞ்சப்படுகின்றன.
  • இரு ஒளித்தொகுதிகளும் ஒரே நேரத்தில் ஒளிச்சக்தியை அகத்துறிஞ்சி தாக்கமையத்திற்குக் கடத்தி குளோரபில் a மூலக்கூறுகள் ஒட்சியேற்றப்படுகின்றது.
  • ஒளித்தொகுதி II தாக்கமைய குளோரபில் a ஒட்சியேற்றப்படுவதால் உயர்சக்தி கொண்ட en கள் வெளியேற்றப்படுகின்றன.
  • இவ் en முதலான en வாங்கியால் (PEA) வாங்கப்பட்டு பின் பல துணையான en  வாங்கிகளுக்கூடாகக் கடத்தப்படும். (துணையான en வாங்கியாக Cytochrome பங்குகொள்கின்றது)
  • இவ்வாறு கடத்தப்படும் போது en சக்திப்படிஇறக்கம் செய்யப்படுகின்றது. இதன் போது காலலாக்கப்படும் சக்தி தையிலகொயிட் மென்சவ்வில் உள்ள ATP Synthase ஊக்குவிப்பால் ATP தொகுப்பிற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
  • சூரிய ஒளிச்சக்தி மூலம் அருட்டப்பட்ட en இலிருந்து காலலாப்படும் சக்தியைப் பயன்படுத்தி ATP Synthase ஊக்குவிப்பால் புரோத்திரன் பம்பி மூலம் ATP தொகுக்கப்படும் செயன்முறை ஒளிப்பொஸ்பரலேற்றம் எனப்படும்.
  • இவ்முறையிலான ATP தொகுப்பு ஒளிப்பொஸ்பரலேற்றம் எனப்படும்.
  • இறுதியாக இவ் en ஒளித்தொகுதி I இனால் வாங்கப்படும்.
  • ஒளித்தொகுதி II இன் தாக்கமைய குளோரபில் a இன் en பற்றாக்குறையை / வெற்றிடத்தை நீர் பிரிகையடைந்து வெளியேற்றப்படும் eபிரதியீடு செய்யும்.
  • இதன் போது உருவாகும் O2 பக்கவிளைபொருளாக வெளியேற்றப்படும்.
  • புரோத்திரன் / H+ NADP தாழ்த்தலுக்குப் பயன்படுத்தப்படும்.
  • ஒளி முன்னிலையில் நீரின் இப்பிரிகை நீரில் ஒளிப்பகுப்பு எனப்படும்.
  • ஒளித்தொகுதி I அருட்டப்படும் உயர் சக்தி en முதலான en வாங்கியினால் வாங்கப்பட்டு பின்பு துணையான en வாங்கிகளினூடாகக் கடத்தப்பட்டு இறுதியில் துணை நொதியம், Nucleotide ஆன NADP யினால் வாங்கப்படும்.
  • இவ் en இடம்மாற்றும் சங்கிலியில் ATP உருவாக்கப்படுவதில்லை.
  • NADP ஒளித்தொகுதி I en களையும் நீரின் ஒளிப்பகுப்பு புரோத்திரன்களையும் கொண்டு NADPH ஆகத் தாழ்த்தப்படும்.
  • இவ்வாறு en ஒளித்தொகுதி II இலிருந்து வெளியேற்றப்பட்டு ஒளித்தொகுதி I ஐ அடைந்து மீண்டும் அருட்டப்பட்டு NADP யினால் வாங்கப்படுதல் வட்டஅடுக்கற்ற ஒளிப்பொஸ்பரலேற்றம் எனப்படும்.
  • இதன் போது ATP உற்பத்தி செய்யப்படும் முறை வட்ட அடுக்கற்ற ஒளிப்பொஸ்பரலேற்றம் ஆகும்.
  • இதன் போது en ‘Z’ வடிவில் / Zig Zag வடிவில் அசைகின்றது.
  • இதற்கு மேலதிகமாக சில தாவரங்கள் வட்ட அடுக்கான ஒளிப்பொஸ்பரலேற்றத்தை மேற்கொள்கின்றன. இதன்போது ஒளித்தொகுதி I இல் உள்ள en அருட்டப்பட்டு மீண்டும் ஒளித்தொகுதி I ஐ அடைகின்றது. en வட்டப்பாதையில் அசைகின்றது. ATP மட்டும் விளைவாக்கப்படுகின்றது. Please Login to view the Question

இருள்நிலைத் தாக்கம்

calvin

  • இருள்நிலைத் தாக்கம் / ஒளியில் தங்கியிராத தாக்கம் பச்சையவுருமணியின் பஞ்சணையில் நிகழும்.
  • இது ஒரு வட்டப்பாதையில் நிகழ்கின்றது. அப்பாதை Melvin Calvin எனும் விஞ்ஞானியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • எனவே இவ்வட்டம் Calvin வட்டம் எனப்படும்.
  • இக் Calvin வட்டம் 03 நிலைகளைக் கொண்டது.
    1. காபொக்சிலேற்றம் / CO2 பதித்தல்
    2. PGA,PGAL ஆக தாழ்த்தப்படுதல் / PGA,PGAL ஆன மாற்றம்
    3. RUBP புத்துயிர்ப்பு
  • இதற்கு மேலதிகமாக காபோவைதரேற்றும் ஏனைய சேதனச் சேர்வைகளின் தொகுப்பும் நிகழ்கின்றது.

காபொக்சிலேற்றம்

the-calvin-cycle

  • பஞ்சணையில் உள்ள CO2 வாங்கியான 5C சேர்வையான RUBP வளிமண்டல CO2 ஐ வாங்கி ஒரு உறுதியற்ற 6C சேர்வையை உருவாக்கும்.
  • இது உடனடியாக உடைந்து உறுதியான 3C சேர்வையான PGA இன் இரு மூலக்கூறுகளைத் தரும். இத் தாக்கமானது RUBP Carboxylase நொதியத்தினால் / Rubico நொதியத்தினால் ஊக்குவிக்கப்படுகின்றது. இந்நொதியம் பஞ்சணையில் காணப்படுகின்றது.
  • எனவே இவ் CO2 பதித்தலில் முதல் உறுதியான விளைபொருள் 3C சேர்வை PGA ஆகும்.
  • (வளிமண்டல CO2 இலைவாயினூடாக உட்சென்று இலையின் காற்றிடைவெளிகளை அடைந்து இலைநடுவிழையக் கலத்தின் கலச்சுவர், முதலுரு மென்சவ்விற் கூடாக பரவலடைந்து குழியவுருவில் கரைந்து பச்சையவுருமணியின் மென்சவ்வுகளுக்கூடாகப் பரவலடைந்து பஞ்சணையை அடையும்)

PGA இன் தாழ்த்தல் Please Login to view the Question

  • ஒவ்வொரு PGA மூலக்கூறும் 3C PGAL ஆகத் தாழ்த்தப்படும்.
  • இத்தாழ்த்தலுக்கு ஒளித்தாக்கத்தில் விளைவாக்கப்பட்ட முழு NADPH உம் பயன்படுத்தப்படும். அல்லது H வழங்கியாகத் தொழிற்படும்.
  • ஒளித்தாக்கத்தில் விளைவாக்கப்பட்டATP யின் ஒரு பகுதி இத்தாழ்த்தலுக்குப் பயன்படுத்தப்படும்.

RUBP யின் புத்துயிர்ப்பு

  • PGAL யின் பெரும்பகுதி (5/6) RUBP புத்துயிர்ப்புக்கு உள்ளாகும்.
  • இது பல தொடரான தாக்கங்களின் ஊடாக நிகழும்.
  • இடைநிலையாக RUBP பெறப்படும்.
  • RUBP ஒளித்தாக்கத்தின் மிகுதி ATP ஐப் பயன்படுத்தி RUBP யாக மாற்றப்படும்.
  • ஒரு சிறு பகுதி (1/6) தொடரான தாக்கங்களினூடாக Glucose ஆக மாற்றப்படுகின்றது. பின்பு இவ்வெல்லம் இருசக்கரைட்டு, பல்சக்கரைட்டு, மாப்பொருள், வேறு சேதனச் சேர்வைகளாக மாற்றப்படுகின்றது.
RATE CONTENT 5, 1
QBANK (17 QUESTIONS)

RuBP காபொட்சிலேஸ் நொதியம் தொடர்பாக தவறா னது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3309
Hide Comments(0)

Leave a Reply

ஒளித் தொகுப்பின் ஒளித்தாக்கங்கள் தொடர்பாக தவறான கூற்று பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3310
Hide Comments(0)

Leave a Reply

ஒளித்தொகுப்பின் ஒளித்தாக்கங்களின் போது உற்பத்தி செய்யப்படுவது / செய்யப்படுவன பின்வரும் சேர்வை களுள் எது /  எவை?

Review Topic
QID: 3362
Hide Comments(0)

Leave a Reply

RUBP  காபொட்சிலேசு நொதியம் தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் எது / எவை சரியானது / சரியானவை?

Review Topic
QID: 3513
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

Review Topic
QID: 3528
Hide Comments(0)

Leave a Reply

ஒளிப்பொசுபரைலேற்றத்துக்கும் ஒட்சியேற்றுnபொசு பரைலேற்றுக்கும் இடையிலான ஒப்பீடு பற்றிய பின்வரும் கூறுகளில் தவறானது எது?

Review Topic
QID: 3556
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது / எவை ஒளித்தொகுப்பு தொடர்பாக சரியானது / சரியானவை?

Review Topic
QID: 3595
Hide Comments(0)

Leave a Reply

RuBP காபொட்சிலேஸ் நொதியம் தொடர்பாக தவறா னது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3309

ஒளித் தொகுப்பின் ஒளித்தாக்கங்கள் தொடர்பாக தவறான கூற்று பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3310

ஒளித்தொகுப்பின் ஒளித்தாக்கங்களின் போது உற்பத்தி செய்யப்படுவது / செய்யப்படுவன பின்வரும் சேர்வை களுள் எது /  எவை?

Review Topic
QID: 3362

RUBP  காபொட்சிலேசு நொதியம் தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் எது / எவை சரியானது / சரியானவை?

Review Topic
QID: 3513

பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

Review Topic
QID: 3528

ஒளிப்பொசுபரைலேற்றத்துக்கும் ஒட்சியேற்றுnபொசு பரைலேற்றுக்கும் இடையிலான ஒப்பீடு பற்றிய பின்வரும் கூறுகளில் தவறானது எது?

Review Topic
QID: 3556

பின்வருவனவற்றுள் எது / எவை ஒளித்தொகுப்பு தொடர்பாக சரியானது / சரியானவை?

Review Topic
QID: 3595
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank