Please Login to view full dashboard.

பாகுபாடு

Author : Admin

11  
Topic updated on 02/14/2019 04:02am

புவித்தொகுதியின் மீது அல்லது உயிரின மண்டலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சகல உயிர்களும் இவற்றின் பிறப்புரிமை பதார்த்தங்களும் இவை காணப்படும் சகல சூழற்தொகுதிகளும் உயிர்ப்பல்வகைமை எனப்படும்.

பூமியில் ஏறத்தாழ 30 மில்லியன் இனங்கள் காணப்படலாமென மதிப்பிடப்பட்டுள்ளது.

பாகுபாட்டியியலாளர்களின் கருத்தின்படி இவற்றில் 12.5 மில்லியன் நம்பகத்தன்மையானவை.

இதுவரை 1.8 மில்லியன் உயிரினங்கள் பாகுபடுத்தப்பட்டுள்ளன.

பூமியில் 1 மில்லியன் வரையில் பூச்சியினங்கள் காணப்படுகின்றன.

இவையே அதிகளவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றையடுத்து பூக்குந் தாவரங்கள் அதிகளவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவை 250 000 வரையில் காணப்படுகின்றன.

இவற்றினை தொடர்ந்து கிரஸ்தேஸியாக்களும் அடுத்து மொலஸ்காக்களும் பங்கசுகளும் காணப்படுகின்றன.

முள்ளந்தண்டுளிகளில் என்பு மீன்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

அயனமண்டல காடுகளிலேயே 50% – 90% வரையிலான இனங்கள் காணப்படுகின்றன.

இனப்பல்வகைமையை அதிகளவில் கொண்ட அயனமண்டல காடுகளாக அமேசன் காடுகளும் அடுத்து கொங்கோ காடுகளும் காணப்படுகின்றன.

நீர்ச்சூழலில் முருகைகற்பாறைகளும் கண்டல் தாவர சூழற்தொகுதிகளும் இனச்செறிவு மிக்கவை.

இனச்செறிவு குறைந்த பகுதிகளாக பாலைவனச்சூழற்தொகுதி, Tundra, சமுத்திர பாதாள வலயம் ஆகியன காணப்படுகின்றன.
இனம் என்பது…

தமக்கிடையே பல பொதுவான இயல்புகளை கொண்டதும் ஏனையவற்றிலிருந்து திட்டவட்டமாக வேறுபாடுகளை காண்பிப்பதும் இயற்கையான நிபந்தனைகளில் தமக்கிடையே இனங்கலந்து வளமான எச்சங்களை உருவாக்கக்கூடிய திறனுள்ள, பாகுபாட்டியலில் இயற்கைக்குரிய அடிப்படை மட்டமாக அமைகின்ற அங்கிக்கூட்டம் இனம் எனப்படும்.

உயிரினவியல் பாகுபாடும் பெயரீடும்  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

பூமியில் காணப்படும் 30 மில்லியன் வரையிலான அங்கிகளை கற்கதென்பது இலகுவான விடயமல்ல. எனவே அங்கிகளை அவற்றின் பொதுவான இயல்புகளின் அடிப்படையில் கூட்டமாக்கி அவற்றின் இயல்புகளை கற்பதன் மூலம் அங்கிகளை கற்பதே அடிப்படை நோக்கமாகும்.
உயிரினங்களை அவை கொண்டுள்ள பொதுவான வேறுபட்ட இயல்புகளை கருத்தில் எடுத்து பொது இயல்புகளின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தி அவற்றை கூட்டங்களாக வகைப்படுத்தி அடையாளம் காண்கின்ற, பெயரிடுகின்ற விபரிக்கின்ற செயற்பாடு உயிரினவியல் பாகுபாடு எனப்படும்.

செயற்கை முறை பாகுபாடு

உயிரிகளை அவற்றின் வாழ்விடம், புறவுருவவியல், தொழிற்பாடு போன்ற குறைந்த எண்ணிக்கையான இயல்புகளை கருத்தில் கொண்டு மேல் எழுந்தவாரியாக உருவாக்கப்பட்ட பாகுபாடு செயற்கை முறை பாகுபாடு எனப்படும். ஒரே கூட்ட அங்கிகளிடையே ஒத்த இயல்புகளை விட வேறுபாடுகளே அதிகம் காணப்பட்டமையினால் இம்முறை தற்காலத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. 18ஆம் நூற்றாண்டுக்கு முன் வரை பயன்பாட்டில் இருந்தது.

இயற்கை முறை பாகுபாடு

உயிரிகளை அவற்றின் உடலமைப்பியல், உடற்தொழிலியல், பிறப்புரிமையியல், முளையவியல், உயிர் இரசாயனவியல் போன்ற பெரும் எண்ணிக்கையான இயல்புகளை கருத்தில் கொண்டு கணவரலாற்றுத் தொடர்புகளையும் கூர்ப்பின் போக்கையும் காண்பிக்கும் விதத்தில் வகைப்படுத்துகின்ற பாகுபாடு இயற்கை முறை பாகுபாடு எனப்படும்.
பூமியில் வாழும் சகல உயிர்களும் ஒரு பொது மூதாதையரிலிருந்து கூர்ப்படைந்தவை என்பதை வலியுறுத்துகிறது.
RNA யின் நைதரசன் மூல ஒழுங்கிலிருந்து கணவரலாற்று தொடர்புகள் அறியப்படக்கின்றன.

பாகுபாட்டு செயன்முறை ஒழுங்கு

  1. உயிரிகளை பாகுபடுத்தல்
  2. அடையாளம் காணுதல்
  3. பெயரிடுதல்
  4. விபரித்தல்

இயற்கை பாகுபாட்டின் நன்மைகள்

  • அங்கிகளை ஆராய்ந்து அவற்றை விபரிப்பதற்கு வசதியளித்தல்
  • அங்கிகளை கற்கவும் ஞாபகப்படுத்தவும் இலகுவானது
  • உயிரினங்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்தி மேலும் தெளிவாக்கல்
  • ஓர் இன அங்கத்தவர்களுக்கிடையில் நிலையான தனித்துவமான சர்வதேச பெயரொன்றை ஏற்படுத்தல்
  • கணவரலாற்று தொடர்புகளையும் கூர்ப்பின் போக்கினையும் அறிந்து கொள்ளல்
  • புதிய அங்கிகளை எளிதாக விபரிக்க முடிதல்
  • புதிய கண்டுபிடிப்புகளுக்கேற்ப மாற்றியமைக்கப்படக் கூடியதாகவிருத்தல்.

இயற்கை முறை பாகுபாட்டின் குறைபாடுகள்

  • பாகுபடுத்தலில் விஞ்ஞானிகளிடையே கருத்து ஒருமைபாடுகள் காணப்படாமை
  • கூர்ப்பின் போக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட பாகுபாட்டு மட்டங்களுக்குரிய இயல்புகளைக் கொண்டிருக்கும் போது அவற்றை பாகுபடுத்தலிலுள்ள சர்ச்சை.
  • இலிங்கமுறை இனப்பெருக்கத்தில் ஈடுபடாத அங்கிகளை நுட்பமாக பரிசோதிக்க வேண்டிய நிலை.

 

இயற்கை முறை பாகுபாடு செயற்கை முறை பாகுபாடு
கூர்ப்பின் போக்கைக் காட்டக்கூடியது. கூர்ப்பின் போக்கைக் காட்டாது.
பல இயல்புகளை அடிப்படையாகக் கொண்டது ஒரு சில இயல்புகளை அடிப்படையாகக் கொண்டது
இலகுவான பாகுபாட்டு முறையன்று இலகுவான பாகுபாட்டு முறை
இயற்கையானது செயற்கையானது
Carolus Linnaeus இனால் அறிமுகப்படுத்தப்பட்டது. 18ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.

சாவிகள்

அங்கிகளை இனங்காணவும் அவற்றை கூட்டமாக பிரிக்கவும் சாவிகள் பயன்படுகின்றன.

பொதுவான சாவிகளாக இணைக்கவர்ச்சுட்டி பயன்படும். இது கூர்ப்பு தொடர்பைக் காட்டாது.

அங்கிகளை விரைவாக அடையாளப்படுத்துவதை இலகுப்படுத்தும் பொருட்டு அடையாளப்படுத்தும் இயல்புகள் இணைக்கவர் சோடிகளாக அமையும் வண்ணம் தயாரிக்கப்படும் ஒரு அட்டவணை இணைக்கவர்சுட்டி இருக்கிளைச்சாவி எனப்படும்.

பெரும்பாலும் புற இயல்புகளை அடிப்படையாகக் கொண்டது. சில நேரங்களில் அக இயல்புகள் பயன்படலாம். ஒருபோதும் உடல் தொழிலியல் இயல்புகள் கருதப்படுவதில்லை. மேலும் பருமன் நிறம் ஆகியனவும் பயன்படுவதில்லை.

இருகிளைச்சாவி அமைக்கும். போது,

  • ஏதாவது ஒரு இயல்பு காணப்படுகின்றமை அல்லது காணப்படாமை
  • ஒரு இயல்பின் விருத்தி மட்டம்
  • ஒரு கட்டமைப்பின் மட்டம் கருத்திற்கொள்ளப்படும்.

 

பாகுபாட்டின் வளர்ச்சியில் விஞ்ஞானிகளின் பங்கு

ஆரம்பக்கால பாகுபாடுகள் யாவும் செயற்கைமுறையானதாகவே அமைந்தன.

மனித நாகரிக ஆரம்பம் தொட்டே மனிதன் தான் தங்கியிருந்த தாவர விலங்குகளை இனங்கண்டு பெயரிட ஆரம்பித்தான்.

முதன்முதலில் தெளிவான அவதானங்கள் மூலம் புற இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு அங்கிகளை பாகுபடுத்தியவர் அரிஸ்டோட்டில் (384 – 322 B.C) ஆவார்

மேலும்,

  • இடம்பெயரும் முறை
  • இனப்பெருக்கும் முறை
  • செங்குருதி உள்ளவை/இல்லாதவை எனவும் பிரித்தார்.

Theophrastus (370 – 287BC). அரிஸ்டோட்டிலின் மாணவன். தாவரங்களின் தோற்றங்களை பொருத்து மரம், செடி, பூண்டு எனவும், வாழ்வுக்காலத்தை பொருத்து ஓராண்டு, ஈராண்டு, பல்லாண்டு எனவும் பாகுபடுத்தினார்.

இனம் பற்றிய கருத்தை முன்வைத்து புதிய முறையிலான பாகுபாட்டுக்கு வழிவகுத்தவர் John Ray ஆவார்.

அங்கிகளை தாவரம் விலங்கு என இரு இராச்சியங்களாக வகைப்படுத்தியவர் Carolus Linnaeus ஆவார்.

கூர்ப்புக் கொள்கையின் அடிப்படைக்கு மேற்கூறப்பட்ட வகைப்பாடுகள் இனங்காதலால் அவை செயற்கை முறை பாகுபாடாகவே கருதப்படுகின்றன.

தனிக்கல உயிரிகளின் அறிமுகத்தை தொடர்ந்து Ernest Haeckel இனால் 3 இராச்சிய பாகுபாடு அறிமுகமாகியது. கணம் என்ற மட்டத்தையும் இவரே அறிமுகப்படுத்தினார்.

1956 இல் புரோகரியோற்றா அங்கிகளை வேறுபிரித்து மொனறா இராச்சியமாக 4 இராச்சிய பாகுபாட்டை H.F.Copeland அறிமுகப்படுத்தினார்.

1969 இல் R.H Whittaker இனால் பங்கசு இராச்சியம் உருவாக்கத்துடன் 5 இராச்சிய பாகுபாடு அறிமுகமாகியது.

  • Kingdom Plantae              Carolus Linnaeus
  • Kingdom Animalia           Carolus Linnaeus
  • Kingdom Protista              Ernest Haeckel
  • Kingdom Monera              F.Copeland
  • Kingdom Fungi                  H Whittaker

R.H Whittaker இன் பாகுபாட்டில் திருத்தங்களை மேற்கொண்டு எளிமையாக L.Morgulis, K.V.Schwarts மாற்றியமைத்தனர்.

மூலக்கூற்று அறிவின் வெளிப்பாட்டால் அவற்றின் ஆரம்ப கூர்ப்பை அடிப்படையாகக் கொண்டு 3 பேரீராச்சியங்களாக Carl woese (1977) பாகுபடுத்தினார்.

நவீன பாகுபாட்டு பிரமானங்கள்

  • முக்கிய பரம்பரையலகிலுள்ள DNAயின் மூல ஒழுங்கு
  • இழைமணியின் DNA யின் மூல ஒழுங்கு
  • Ribosome RNA யின் மூல ஒழுங்கு
  • பொதுவான புரதங்களின் அமினோ அமில ஒழுங்கு
  • கலக்கூறுகளின் மூலக்கூற்றுக் கட்டமைப்பு

Kingdom Protista ஒரு இயற்கையான கூட்டமல்ல.!  இது வேறு கூர்ப்புத் தோற்றம் கொண்ட அங்கிகளை உள்ளடக்கிய செயற்கையான கூட்டம்.

RATE CONTENT 0, 0
QBANK (11 QUESTIONS)

விலங்கினப் பாகுபாடு?

Review Topic
QID: 2954
Hide Comments(0)

Leave a Reply

அங்கிகள் ஐந்து இராச்சியங்களின் கீழ்ப் பாகுபடுத்தப்படும் போது பின்வருவனற்றின் எது கணமாகக் கருதப்படுவதில்லை?

Review Topic
QID: 3125
Hide Comments(0)

Leave a Reply

இயற்கையாகத் துணியப்படும் பாகுபாட்டியற் கூட்டம்?

Review Topic
QID: 3124
Hide Comments(0)

Leave a Reply

முள்ளந்தண்டு விலங்குகளின் சேகரிப்பு ஒன்றை அவற்றின் உரிய வகுப்புகளாக வேறுபடுத்துவதற்கான இணைக்கவர்ச்சாவியை அமைப்பதிலே பின்வரும்
அம்சங்களில் எதனைப் பயன்படுத்த முடியாது?

Review Topic
QID: 3157
Hide Comments(0)

Leave a Reply

Whittaker என்பவர் அங்கிகளை ஐந்து இராச்சியங்களாகப் பாகுபடுத்தினார். Monera, Protista, Fungi, Animalia, Plantae என்பன அவையாகும். பின்வரும் இராச்சியங்களுள் எவை ஒரு கலத்திலான அங்கிகளை உள்ளடக்குவன?

Review Topic
QID: 3165
Hide Comments(0)

Leave a Reply

அங்கிகளை ஐந்து இராச்சியங்களாகப் பாகுபடுத்தும் போது பயன்படுத்தும் முக்கிய நியதி / நியதிகள் பின்வருவனவற்றுள் எது / எவை?

Review Topic
QID: 3193
Hide Comments(0)

Leave a Reply

விலங்கினப் பாகுபாடு?

Review Topic
QID: 2954

அங்கிகள் ஐந்து இராச்சியங்களின் கீழ்ப் பாகுபடுத்தப்படும் போது பின்வருவனற்றின் எது கணமாகக் கருதப்படுவதில்லை?

Review Topic
QID: 3125

இயற்கையாகத் துணியப்படும் பாகுபாட்டியற் கூட்டம்?

Review Topic
QID: 3124

முள்ளந்தண்டு விலங்குகளின் சேகரிப்பு ஒன்றை அவற்றின் உரிய வகுப்புகளாக வேறுபடுத்துவதற்கான இணைக்கவர்ச்சாவியை அமைப்பதிலே பின்வரும்
அம்சங்களில் எதனைப் பயன்படுத்த முடியாது?

Review Topic
QID: 3157

Whittaker என்பவர் அங்கிகளை ஐந்து இராச்சியங்களாகப் பாகுபடுத்தினார். Monera, Protista, Fungi, Animalia, Plantae என்பன அவையாகும். பின்வரும் இராச்சியங்களுள் எவை ஒரு கலத்திலான அங்கிகளை உள்ளடக்குவன?

Review Topic
QID: 3165

அங்கிகளை ஐந்து இராச்சியங்களாகப் பாகுபடுத்தும் போது பயன்படுத்தும் முக்கிய நியதி / நியதிகள் பின்வருவனவற்றுள் எது / எவை?

Review Topic
QID: 3193
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank