Please Login to view full dashboard.

தாவரங்களின் அசைவு

Author : Admin

10  
Topic updated on 02/14/2019 05:13am
  • தாவரங்கள் இடம்பெயராதவை.
  • இவற்றின் அனேகமான துலங்கல்கள் வளர்ச்சி அசைவாக காணலாம்.
  • இவ்வசைவுகள் மெதுவானவை.
  • புறத்தூண்டலுக்கு தாவரங்களில் நடைபெறும் அசைவுகள் பிரதானமாக 3 வகைப்படும். Please Login to view the Question  
    • திருப்ப அசைவு
    • முன்னிலை அசைவு
    • இரசணை அசைவு

 

திருப்ப அசைவு
  • தூண்டலின் திசைக்கேற்ப துலங்கலின் திசையில் நடைபெறும் வளர்ச்சி அசைவுகள் திருப்ப அசைவுகளாகும். Please Login to view the QuestionPlease Login to view the Question    
  • இவ்வகை அசைவின் போது வேறுபட்ட வளர்ச்சி மாற்றங்கள் நடைபெறும்.
  • தாவரத்தின் ஒரு பகுதி மட்டும் அசையும், திருப்ப அசைவுகள் ஒருபோதும் மீளாதவை.
  • இங்கு துலங்கலின் திசை தூண்டலை நோக்கி நடைபெறலாம் அல்லது தூண்டலை விலத்தி நடைபெறலாம்.
  • எனவே, இங்கு தூண்டலின் திசை துலங்களின் திசையை தீர்மானிக்கின்றது.
  • திருப்ப அசைவில், தூண்டல் காரணியை பொருத்து பல வகைகளுண்டு.
    • ஒளித்திருப்ப அசைவு
    • புவித்திருப்ப அசைவு
    • தொடுகைதிருப்ப அசைவு

ஒளித்திருப்ப அசைவு

  • ஒளித்தூண்டலுக்கு தாவரத்தின் தண்டு / அங்குரம் நேர் ஒளித்திருப்ப அசைவைக் காட்டுகின்றது. பொதுவாக தாவர வேர்கள் ஒளித்துண்டலுக்கு துலங்களைக் காட்டுவதில்லை. எனினும், ஏறும் தாவரங்களின் ஏறும் வேர் / பற்றும் வேர்கள் ஒளித் தூண்டலுக்கு எதிர் ஒளித் திருப்ப அசைவைக் காட்டும்.
    images (9)

புவித்திருப்ப அசைவு

  • புவியீர்ப்பு தூண்டலுக்கு வேர் நேர் புவித்திருப்ப அசைவைக் காட்டும் தண்டு / அங்குரம் எதிர் புவித்திருப்ப அசைவைக் காட்டும்.

images (3)

images (1)

  • எல்லா வகையிலும் ஒரே வகையான இரு சாடித் தாவரங்கள் பெறப்பட்டு, ஒன்று சாதாரணமாக தரைக்கு கிடையாக சரித்து வைக்கப்படும். மற்றைய தாவரம் சாய்வு நிறுத்தியில் பொருத்தப்பட்டு மிக மெதுவான வேகத்தில் சுழலவிடப்படும். சில நாட்களின் பின் இரு தாவரங்களையும் அவதானித்தபோது, சாதாரணமாக புவிக்கு கிடையாக சரித்து வைத்த தாவரத்தின் அங்குரம் புவிக்கு எதிராக வளர்ந்திருப்பதை அவதானிக்கலாம். ஆனால் சாய்வு நிறுத்தியில் பொருத்தப்பட்ட தாவர அங்குரம் திருப்ப அசைவு ஏற்படாது புவிக்கு கிடையாக வளர்ந்திரப்பதைக் காணலாம்.
  • இப்பரிசோதனை அவதானங்களிலிருந்து புவியீர்ப்புத் தூண்டலால் தாவரங்களில் திருப்ப அசைவு நடைபெறுகின்றது என முடிவு செய்யலாம்.
  • சாய்வு நிறுத்தியில் தாவரத்தை பொருத்தி சுழற்றுவதால் ஒரு பக்கமான புவியீர்ப்புத் தூண்டல் தாவரத்திற்கு இல்லாது போகின்றது. இங்கு தாவரத்தின் எல்லா பகுதிகளுக்கும் சம அளவான புவியீர்ப்புத்தூண்டல் கிடைக்கப் பெறுகின்றன.

தொடுகை திருப்ப அசைவு

  • தொடுகை தூண்டல் காரணமாக தாவரத்தின் தண்டு / தந்து ஆதாரத்தை பற்றி சுற்றி வளர்தல் தொடுகை திருப்ப அசைவு ஆகும்.
    (உ – ம்) கொடித்தேடையும் தந்து (Passiflora)

download

முன்னிலை அசைவு
  • தூண்டலின் திசைக்கு தொடர்பில்லாது துலங்களின் திசை காணப்படும் அசைவு ஆகும். Please Login to view the Question  
  • இங்கு தாவர ஒரு பகுதி மட்டும் அசையும் இது வளர்ச்சி அசைவாகவோ / வளர்ச்சியற்ற அசைவாகவோ இருக்கலாம். வளர்ச்சி அசைவு எனின் இது மீளாது. வளர்ச்சியற்ற அசைவுகள் வீக்க அமுக்கத்தால் ஏற்படுகின்றன.  
  • இவ்வகை அசைவில் தூண்டலின் திசை துலங்களின் அசைவை தீர்மானிக்காது.
  • தூண்டல் குறித்த திசைக்குரியதல்ல.
  • (உ-ம்)
    • வெப்பநிலை
    • ஈரப்பதன்
    • சாதாரண ஒளியூட்டல் மட்டம்
  • இவை முன்னிலை துலங்கல்கள் எனலாம்.
  • (உ-ம்)
    • பூக்கள் மலர்தலும் மூடுதலும்
  • முன்னிலை அசைவில் பல வகைகளுண்டு.
    • தொடுகை முன்னிலை அசைவு
    • உறங்கல் முன்னிலை அசைவு

தொடுகை முன்னிலை அசைவு Please Login to view the Question  

  • (உ-ம்)
    • தொட்டாச்சுருங்கி (Mimosa Pudica)
  • இத்தாவரத்தின் இலைகள்,சீறிலைகள் என்பன தொடுகை /அதிர்வுத் தூண்டலால் மடிகின்றன. பின்னர் தூண்டல் அகற்றப்பட்டதும் பழைய நிலைக்கு மீளுகின்றன.
  • தொடுகைத் தூண்டலால் இலை , சீறிலைகளின் அடியிலுள்ள புடைப்புக்களின் சில கலங்கள் புறப்பிரசாரணம் மூலம் அயற் கலங்களுக்கு நீரை இழப்பதால் கலங்கள் வீக்கம் குறைந்து தளர்வடைந்து இலை, சீறிலைகள் மடியும். தூண்டல் அகற்றப்பட்டதும் தளர்ந்த புடைப்புக் கலங்கள் அயற்கலங்களிலிருந்து நீரை பெற்று மீண்டும் வீக்கமடையும் இலை, சீறிலைகள் நிமிரும்/விரியும்.
  • தொடுகை முன்னிலை அசைவு  ஐ அதிர்ச்சி முன்னிலை அசைவு  எனலாம்.

உறங்கல் முன்னிலை அசைவு

  • (உ-ம்)
    • சில Daisy பூக்கள்.
  • இவை ஒளியுள்ள போது திறந்து இருளின் போது மூடிக்கொள்கின்றன. Sesbania (அகத்தி) போன்ற அவரைக்குடும்ப தாவர இலைகள் இருளில் மடிந்து ஒளியில் மலருகின்றன.
  • தொட்டாச் சுருங்கி ஒரு அவரைக்குடும்ப தாவரமாகும். எனவே இதில் தொடுகை முன்னிலை அசைவும்,உறங்கல் முன்னிலை அசைவும் காணப்படும்.

images (1)

இரசனை அசைவு
  • தூண்டலின் திசைக்கேற்ப துலங்களின் திசை காணப்படும் வளர்ச்சியற்ற இடப்பெயர்ச்சி அசைவு இரசனை அசைவு ஆகும். Please Login to view the Question  
  • இவ்வசைவு சவுக்குமுளை / பிசிர்களின் அடிப்பால் நடைபெறும்.இவ்வசைவால் தாவரத்தின் முழு உடலும் அசையும். எனவே இடப்பெயர்ச்சி நடைபெறும்.
  • இரசனை அசைவு Protistaக்களில் சிறப்பாக அவதானிக்கப்பட்டுள்ளது.
  • (உ-ம்)
    • Chlamydomonas
    • உயர் தாவர புணரிகள் – விந்துப்போலிகள்
      (தாழ் தாவர புணரிகளும்)
  • Chlamydomonas எனும் தனிக்கல பச்சை அல்காக்கள் ஒளித்தூண்டுதலை நோக்கி இடம்பெயருகின்றன.
  • இவ் அசைவு நேர் ஒளி இரசாயன அசைவாகும்.
  • தாவரங்களின் ஆண்புணரிகள் முட்டைக் கலத்தை நோக்கி ஒரு வகை இரசாயனப் பதார்த்தங்களின் கிண்டலால் இடம்பெயருகின்றன.
  • இது நேர் இரசாயன இரசனை அசைவு ஆகும்.
RATE CONTENT 0, 0
QBANK (10 QUESTIONS)

தாவரங்களின் திருப்பவசைவுகளுக்கும் முன்னிலையசைவுகளுக்கும் இடையிலான ஒப்பீடு பற்றிய பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 6706
Hide Comments(0)

Leave a Reply

தாவரங்களில் அசைவுகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 6739
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் தாவர அசைவுகளுள் எது / எவை தூண்டியின் திசை தூண்டற்பேறின் திசையைத் தீர்மானிக்கும்?

Review Topic
QID: 6743
Hide Comments(0)

Leave a Reply

தாவரங்களில் இலிக்னினைக் கொண்டிராத தாங்குமிழையம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6746
Hide Comments(0)

Leave a Reply

தாவரங்களின் திருப்பவசைவுகளுக்கும் முன்னிலையசைவுகளுக்கும் இடையிலான ஒப்பீடு பற்றிய பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 6706

தாவரங்களில் அசைவுகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 6739

பின்வரும் தாவர அசைவுகளுள் எது / எவை தூண்டியின் திசை தூண்டற்பேறின் திசையைத் தீர்மானிக்கும்?

Review Topic
QID: 6743

தாவரங்களில் இலிக்னினைக் கொண்டிராத தாங்குமிழையம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6746
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank