Please Login to view full dashboard.

பரம்பரையலகு தொழில்நுட்பம்

Author : Admin

24  
Topic updated on 02/15/2019 08:48am

DNA தொடர்பான ஆய்வுகூட சோதனைகள்

  • DNA தொடர்பான ஆய்வுகூட சோதனைகளில் மூன்று அடிப்படை செய்முறைகள் உயிரியல் தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்படுகிறது. அவையாவன :
  1. உயிர்க் கலமொன்றில் இருந்து DNA ஐ பிரித்தெடுத்தல்.
  2. விரும்பிய DNA இன் பகுதியை ஆய்வுகூடத்தில் பெருக்கம் செய்தல்.
  3. DNA ஒன்றில் பிறிதொரு இனத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அந்நிய பரம்பரை அலகு ஒன்றை புகுத்துவதன் மூலம் அதனை மாற்றம் செய்தல்.Please Login to view the QuestionPlease Login to view the Question

DNA ஐ பிரித்தெடுத்தல்

  1. கலத்தின் பிற கூறுகளைக் கரைத்தல்.
  2. DNA ஐ வீழ்ப்படிவாக்கம் செய்தல்.
  3. அடர்த்திப்படித்திறன் மையநீக்கல் முறையில் DNA ஐ செறிவாக்கம் செய்து வேறுபடுத்தல்.

DNAதொடர்பான ஆய்வுகூட சோதனைகளில் பயன்படும் நொதியங்கள்

Restriction endonuclease

  • endonuclease நொதியங்கள் DNA மூலக்கூறில் தனித்துவமான மூலத்தொடர் உடைய வரையறுக்கப்பட்ட பகுதிகளில் அதன் வெல்ல பொஸ்பேற்று முதுகென்புப் பகுதியில் உடைவை ஏற்படுத்துவதன் மூலம் DNA ஐ சிறு துண்டுகளாக வெட்டுவதற்குப் பயன்படும்.

DNA Ligase

  • வெட்டப்பட்ட DNA இன் சிறுதுண்டுகளை ஒட்டுவதற்கு அல்லது திறக்கப்பட்ட பிளாஸ்மிட்டுடன் பரம்பரை அலகைக் கொண்டிருக்கும் புதிய DNA துண்டை ஒட்டுவதற்குப் பயன்படும்.

DNA Polymerase

  • DNA Polymerase PCR தொழில்நுட்பத்தில் (Polymerase Chain Reaction) DNA மூலக்கூறுகளின் பிரதிகளைத் தொகுப்பதற்கு பயன்படுகிறது.

DNA Probe / துருவுகோல்

  • DNA Probe என்பது, கதிர்த் தொழிற்பாட்டு P32 இனால் அடையாளமிடப்பட்டதும், தெரிந்த சேதன நைதரசன் மூலத்தொடரொழுங்கைக் கொண்டதுமான DNA இன் தனிப்பட்டிகை ஆகும்.
  • குறித்த Probe ஒன்று அதற்கு நிரப்பும் தன்மை உடைய மூலத்தொடரொழுங்கைக் கொண்ட DNA உடன் பிணைப்படையக் கூடியது.
  • DNA இன் சிறிய துண்டுகளை 95°C ற்கு வெப்பமாக்குவதன் மூலம் இயல்பு மாற்றம் செய்யலாம்.
  • இயல்பு மாற்றம் செய்யப்பட்ட DNA இன் தனிப்பட்டிகைகளில் காணப்படும் குறை நிரப்புகின்ற பகுதியுடன் அதற்குரிய DNA Probe இணைப்படைந்து விடும். இது DNA Probe இன் கலப்புப் பிறப்பாக்கம் எனப்படும்.

DNA Probe இன் உபயோகங்கள் :

  1. DNA மூலக்கூறு ஒன்றை அடையாளங்காணல்.
  2. பரம்பரையலகு ஒன்றை இனங்காணல்.
  3. DNA Finger Printing ல் பயன்படுகிறது.
  4. நோயாக்கிகளை இனங்காணல்.
  5. பரம்பரை அலகு விகாரங்களை இனங்கண்டு கொள்ளல்.

DNA மீளச்சேர்த்தல் தொழில்நுட்பம்Please Login to view the Question

ஒரு இனத்தில் இருந்து பெறப்பட்ட பரம்பரை அலகைக் கொண்டு DNA இன் பகுதியை பிறிதொரு இனத்தில்DNA மூலக்கூறுடன் இணைத்து தொழிற்பாடு உள்ள DNA மூலக்கூறொன்றை உருவாக்குதல். DNA மீளச் சேர்த்தல் தொழில்நுட்பம் எனப்படும்.

பற்றீரியா ஒன்றை DNA மீளச்சேர்தல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாரம்பரிய முறையில் மாற்றியமைத்தல்Please Login to view the Question

  • பற்றீரியா கலமொன்றினுள் வேறொரு இனத்தில் இருந்து பெறப்பட்ட பரம்பரை அலகுடைய DNA துண்டை அதன் பாரம்பரிய பதார்த்தத்துடன் சேர்ப்பதன் மூலம் அதனை பிறப்புரிமைக்குரிய முறையில் மாற்றியமைத்தல் பற்றீரியா மாற்றம் எனப்படும்.
  • இதன் பயன்பாடுகள் :
  1. பரம்பரை அலகின் முளைவகைப் பெருக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
  2. மனித இன்சுலின் தயாரித்தல்.
  3. மனித வளர்ச்சி ஓமோன் தயாரித்தல்.

DNA ஒற்றி எடுத்தல் (DNA Blotting)Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • படிமுறைகளாவன :
  1. DNA மாதிரியை Restriction நொதியங்களைப் பயன்படுத்தி சிறிய துண்டுகளாக்கல்.
  2. Agarose gel  மின்னயன முறையினால் DNA துண்டுகளை வேறுபடுத்தல்.
  3. gel தட்டினை கார ஊடக நிலைக்குரிய PH இனை ஏற்படுத்தி DNA துண்டுகளை தனிப்பட்டிகைகளாக்கல்.
  4. DNA துண்டுகளை மென்சவ்வு அல்லது வடிதாளிற்கு மாற்றீடு செய்தல்.Please Login to view the Question

Agarose gel மின்னயனம்

  •  DNA மூலக்கூறுகளின் துண்டுகளை அவற்றின் பருமனின் அடிப்படையில் வேறுபடுத்துவதற்கு ஆய்வு கூடத்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்.
  • இதில் Agarose gel இனால் ஆக்கப்பட்ட gel ஊடகம் பயன்படுத்தப்படுகிறது.
  • இவ்வூடகத்தின் ஒரு முனையில் வேறுபடுத்தப்பட வேண்டிய DNA துண்டுகளைக் கொண்ட மாதிரி வைக்கப்படுகிறது.
  • இவ்வூடகத்தில் நேரோட்ட மின்புலமொன்று செயற்பட விடப்படுகின்றது.
  • DNA துண்டுகள் எதிரேற்றமுரடையவை ஆகையால், மின்புலத்தை பிரயோகிக்கும் போது நேர்முனைவை நோக்கி இடம்பெயரும்.
  • DNA இன் சிறிய துண்டுகள் வேகமாக இடம்பெயருவதால் பெரிய துண்டுகளை விட அதிகளவு தூரத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
  • இவ்வாறு DNA துண்டுகள் வேறுபடுத்தப்படும்.

Agarose – gel மின்னயனம் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் :

  1. பரம்பரை அலகுகளைக் கண்டறியும் DNA பகுப்புகளில்
  2. DNA மீளச் சேர்தல் தொழில்நுட்பத்தில்
  3. Plasmid ஐ வேறுபடுத்துவதில்
  4. DNA Finger PrintingPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

DNA  Finger Printing

  • DNA இனது தனித்துவமான தானங்களிலுள்ள பாரம்பரிய மாறுபாட்டினைக் கொண்டு அங்கியொன்றை அடையாளம் அறிகின்ற தொழில்நுட்பம் DNA Finger Printing ஆகும்.
  • DNAஇல் பரம்பரை அலகின் எதனையும் வகைக் குறிக்காத Satelite எனப்படும் பகுதிகளே இத் தொழில்நுட்பத்தில் பயனுடையவையாகும்.
  • Satelite பகுதியில் நியுக்கிளியோதைட்டின் ஒரே வகையான மீளத் தொடர் ஒழுங்கு மீண்டும் மீண்டும் காணப்படும்.
  • இவ் ஒரே வகையான மூலத்தொடரொழுங்கு எத்தனை தடவை மீண்டும் மீண்டும் காணப்படுகிறது என்பது ஆளுக்காள் வேறுபடும்.
  • இதனடிப்படையில் DNA Finger Printing அங்கியொன்றிற்கு தனித்துவமானது. விதிவிலக்கு ஒத்த இரட்டையர்கள்
  • குதிக்கால் பகுதி, உடற்கலங்கள், சுக்கில பாய்மத்தில் காணப்படும் கலங்களில் இருந்து DNA மாதிரிகள் பெறப்படும்.
  • பெறப்பட்ட DNA மாதிரிகள் Restriction endonuclease இனால் சிறுதுண்டுகளாக்கப்படும்.
  • DNAதுண்டுகள் இயல்பு மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு தனிப்பட்டிகைகளாக்கப்படும்.
  • DNA ஒற்றி எடுக்கப்படும்.
  • இதன் மீது அடையாளமிடப்பட்ட DNA Probes விசிறப்படும்.
  • DNA Probes அதற்குரிய குறைநிரப்பும் தன்மையுள்ள DNA இன் தனிப்பட்டிகையுடன் இணையும்.
  • மேலதிக DNA Probe கழுவி அகற்றப்படும்.
  • பின்னர் இவ் மென்சவ்வு புளோரொளிர்வு திரையில் இட்டு அவதானிக்கும் போது, DNA Probe இணைந்துள்ள DNA பகுதிகளை அவதானிக்கலாம்.
  • இதிலிருந்து DNA Finger Printing பெறப்படும்.

பாரம்பரிய முறையில் மாற்றியமைக்கப்பட்ட அங்கிகள்

  • பிறிதொரு இனத்தில் இருந்து பெறப்பட்ட பரம்பரை அலகை தனது பாரம்பரிய பதார்த்தங்களுடன் கொண்டிருக்கும் அங்கி பாரம்பரிய முறையில் மாற்றியமைக்கப்பட்ட அங்கி எனப்படும்.Please Login to view the Question

RATE CONTENT 0, 0
QBANK (24 QUESTIONS)

பரம்பரையலகுகளின் தலைமுறையுரிமை தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 6410
Hide Comments(0)

Leave a Reply

பருமனில் மிகப் பெரியதிலிருந்து மிகச்சிறியதாக சரியான ஒழுங்கில் வரிசைப்படுத்தப்பட்டிருப்பது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6414
Hide Comments(0)

Leave a Reply

கலங்களின் புரதத்தொகுப்பில் RNA இன் மூன்று வகைகள் சம்பந்தப்படுகின்றன. புரதத் தொகுப்பில் அவை பங்கு கொள்ளும் போது மூன்று வகையான RNA க்களின் சரியான தொடரொழுங்கைக் காட்டுவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6415
Hide Comments(0)

Leave a Reply

A குருதிக் கூட்டத்தையுடைய ஆண் ஒருவர் B குருதிக் கூட்டத்தையுடைய பெண்ணொருவரை மணமுடிக்கின்றார் அவர்களின் முதற்பிள்ளை O குருதிக்
கூட்டத்தைக் கொண்டுள்ளார். இப்பெண்ணின் சர்வசம இரட்டைச் சகோதரியான மற்றைய பெண் AB குருதிக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆணை மணமுடிக்கின்றார் அவர்களின் பிள்ளைகளின் குருதிக் கூட்டங்களாக அமையக்கூடியன.

Review Topic
QID: 6429
Hide Comments(0)

Leave a Reply

ஒரு பொலிபெப்ரைட்டைத் தோற்றுவிப்பதற்காக றைபோசோமில் அமினோ அமிலங்கள் ஒன்றுகூடும் செயன்முறை

Review Topic
QID: 6427
Hide Comments(0)

Leave a Reply

தற்போது மீளச்சேர்க்கைக்குரிய DNA தொழினுட்பத்தின் பொதுவான பிரயோகம் அல்லாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6437
Hide Comments(0)

Leave a Reply

DNA பகர்ப்பில் ஈடுபடும் ஐந்து நொதியங்கள் கீழே தரப்பட்டுள்ளன.DNA இன் இரட்டைப் பட்டிகைக் கட்டமைப்பின் சுற்றவிழ்தலை ஊக்குவிப்பது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6440
Hide Comments(0)

Leave a Reply

புரதத் தொகுப்பு தொடர்பாக பின்வருவனவற்றுள் தவறானது எது?

Review Topic
QID: 6441
Hide Comments(0)

Leave a Reply

DNA மூலக்கூறு ஒன்று 20% அடினைனைக் கொண்டுள்ள 8 000 நியுக்கிளியோரைட்டுகளைக் கொண்டிருந்தால் இதே DNA மூலக்கூறில் காணப்படும்
குவானின் நியுக்கிளியோரைட்டுகளின் எண்ணிக்கை

Review Topic
QID: 6430
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவன ஒடுக்கற்பிரிவுச் செயன்முறையின் போது இடம்பெறும் சில நிலைகளாகும்.
A – நான்கு மகட்கலங்கள் உருவாதல்
B – அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் வேறாதல்
C – பரம்பரைப் பதார்த்தங்கள் பரிமாற்றம்
D – நிறமூர்த்தங்கள் இரட்டித்தல்
E – குழியவுரு பிரிதல்
F – அமைப்பொத்த நிறமூர்த்தங்கள் சோடியாதல்
ஒடுக்கற்பிரிவின் நிலைகளுள் சரியான ஒழுங்கில் அமைந்திருப்பது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 6424
Hide Comments(0)

Leave a Reply

பரம்பரையலகு பொறிமுறை தொழினுட்பத்தில் மீளச் சேர்க்கைக்குரிய DNA ஐ உருவாக்குவதற்கு பல நொதியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. DNA இல் நியூக்கிளியோரைட் மூலங்களின் குறித்த தொடரொழுங்கு ஒன்றை அடையாளங்கண்டு வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படுவது பின்வரும் நொதியங்களுள் எது?

Review Topic
QID: 6425
Hide Comments(0)

Leave a Reply

195 ஆம் 196 ஆம் வினாக்கள் மூலக்கூற்றுப் பிறப்புரிமையியலில் பயன்படுத்தப்படும் பின்வரும் பதங்களை அடிப்படையாகக் கொண்டவை.
1. பிரதியெடுத்தல்
2. உருமாற்றம்
3. இணைதல்
4. பின்புறமடிதல்
5. மொழிபெயர்த்தல்
DNA அச்சு ஒன்றைப் பயன்படுத்தி RNA ஐத் தோற்றுவிக்கும் செயன்முறை

Review Topic
QID: 6426

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank