Please Login to view full dashboard.

உலகில் பிரதான உயிரினக்கூட்டங்கள்

Author : Admin

54  
Topic updated on 02/14/2019 09:24am

அதிகளவில் காணப்படும் தாவரவர்க்கம், பிரதேசத்துக்குரிய சிறப்பியல்பான காலநிலை, குறித்த சூழலுக்கான அங்கிகளின் இசைவாக்கம் என்பவற்றை கருத்திற்கொண்டு பாகுபடுத்தப்படுவதும் உலகில் பெரும் பரப்புக்களில் வியாபித்துள்ளதுமான  பிரதான  சூழற்றொகுதிகள்  உயிரினக்கூட்டங்கள்  எனப்படும். Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

உலகில் எட்டு பிரதான தரைக்குரிய உயிரினக்கூட்டங்களும் பல சிறிய உயிரினக்கூட்டங்களும் காணப்படுகின்றன.
உலகின் தரைக்குரிய எட்டு பிரதான உயிரினக் கூட்டங்களாவன;

  • அயனமண்டலக் காடுகள்
  • சவன்னா
  • பாலைவனம்
  • பரட்டைக்காடு
  • இடைவெப்பவலயப் புல்வெளிகள்
  • இடைவெப்பவலய அகன்றஇலைக்காடுகள்
  • தைகா (கூம்புக்காடுகள்)
  • துந்திரா (Tundra)

அயனமண்டலக் காடுகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பரம்பல் : அயனமண்டல வலயத்தில் 30°  வட அகலாங்குக்கும் 30°  தென் அகலாங்குக்கும் இடையில் அமைந்துள்ளது.
  • அயனமண்டலக் காட்டி ல் இரு பிரதான வகைகள் உண்டு.
  1. அயனமண்டல மழைக்காடு (Tropical rain forest)
  2. அயனமண்டல உலர்காடு (Tropical dry forest)

(1)  அயனமண்டல மழைக்காடு (Tropical rain forest)

  • காலநிலை இயல்புகள் :
    • வெப்பநிலை 25°C  தொடக்கம் 27°C  சீரானது.
    • உயர் மழைவீழ்ச்சி – 2500 mm – 4000 mm (வருடாந்த மழைவீழ்ச்சி).
    • உலர் காலநிலை இல்லை.
    • வளியின் சாரீரப்பதன் உயர்வு
  • தாவர இயல்புகள்  :
    • உயிர்ப்பல்வகைமை மிக அதிகம்.
    • படையாதல் சிறப்பாக காணப்படும்.
    • விதானப்படை மூடியது.
    • அகன்ற இலை கொண்ட என்றும் பசுமையான மரங்கள் ஆட்சியாக காணப்படும்.
    • மேலொட்டிகள், மரமயவேறிகள் அதிகம் காணப்படும்.
  • விலங்குகள் :
    • அதிகளவில் விலங்குப் பல்வகைமை காணப்படும்.
    • முலையூட்டிகள், பறவைகள், நகருயிர்கள், ஈரூடகவாழிகள், பூச்சிகள் அதிகளவில் காணப்படும். இதில் பெரிய முலையூட்டிகள் குறைவு.
  • மனித தலையீடு :
    • அபிவிருத்தி, விவசாயம் போன்ற தேவைகளுக்காக பெருமளவில் அழிக்கப்படுகின்றன.
  • (உ – ம்) : அமேசன்  (Ameson), மடகஸ்காரின் கொங்கோ காடுகள், சிங்கராஜவனம், Queen island – Austrailia.

(2)  அயனமண்டல உலர்காடு (Tropical dry forest)

  • காலநிலை இயல்புகள் :
    • மழைவீழ்ச்சி குறைவு.
    • வருட மழைவீழ்ச்சி 1500 mm – 2000 mm.
    • வெப்பநிலை 30 – 35°C.
    • நீண்ட உலர் காலம் காணப்படும்.
    • வளியின் சாரீரப்பதன் குறைவு.
  • தாவர இயல்புகள்  :
    • தெளிவான படையாதல் இல்லை / குறைவு.
    • விதானப்படை தொடர்ச்சியற்றது. வெளிப்பாட்டுப் படையில்லை.
    • ஓரளவு உயரமான மரங்கள்.
    • நன்கு கிளைத்த தண்டு. தண்டின் மேற்பரப்பு / சுற்றுப்பட்டை அழுத்தமற்றது.
    • இலைகள் சிறியவை. தடித்தவை.
    • என்றும் பச்சையான மரங்களும் இலையுதிர் மரங்களும் உண்டு.
    • அயன மண்டல மழைக்காட்டுடன் ஒப்பிடுகையில் உயிர்ப்பல்வகைமை / இனப் பல்வகைமை குறைவு.
    • உள்நாட்டுக்குரிய இனங்கள் குறைவு.
    • மழைக்காலத்தில் தரைக்குரிய படை நன்கு வளர்ந்து காணப்படும்.
  • விலங்குகள் :
    • பெரிய முலையூட்டிகள் அதிகம்.
    • பறவைகள், பூச்சிகள் காணப்படும்.
  • மனித  தலையீடு :
    • அபிவிருத்தி, விவசாயம் போன்ற தேவைகளுக்காக பெருமளவில் அழிக்கப்படுகின்றன.

சவன்னா  Please Login to view the Question

  • பரம்பல் :அயன மண்டலத்தில் 30°  வட அகலாங்குக்கும் 30°  தென் அகலாக்கும் இடையில் காணப்படும்.
  • காலநிலை இயல்புகள் :
    • வெப்பநிலை 24 – 29°C.
    • மழைவீழ்ச்சி குறைவு. வருடாந்த மழைவீழ்ச்சி 300mm – 500 mm.
    • நீண்ட உலர் காலம் காணப்படும்.
  • தாவர இயல்புகள்  :
    • உயர்ந்து வளரும் புற்களால் தரை மூடப்பட்டுள்ளது.
    • இடையிடையே அதிக உயரமில்லாத மரங்கள் காணப்படும். தீக்கெதிர்ப்புள்ள சுற்றுப்பட்டையை இம்மரங்கள் கொண்டுள்ளன.
    • மேய்ச்சலுக்கு சகிப்புத் தன்மையுள்ள பூண்டுகள் உண்டு.
  • விலங்குகள் :
    • பெரிய தாவர உண்ணி விலங்குகளின் கூட்டம் அதிகம் காணப்படும்.
    • இவ்விலங்குகளை இரையாக்கும் இரைகௌவிகளும் காணப்படும்.
  • மனிதத் தலையீடு :
    • ஆரம்பகால மனிதன் சவன்னாவில் வாழ்ந்துள்ளான். இதனால் தொடர்ச்சியாக மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பெரிய முலையூட்டிகள் மிகையாக வேட்டையாடப்படுவதால் அழிக்கப்பட்டுள்ளன.
  • (உ – ம்) : ஆபிரிக்கா, பிரேசில், அவுஸ்திரேலிய காடுகள்.

பாலைவனம்

  • பரம்பல் : அயன மண்டலத்தில் 30°  வட அகலாங்குக்கும்,  30° தென்  அகலாங்குக்கும் இடையில் காணப்படும்.
  • காலநிலை இயல்புகள் :
    • – 30° – + 50°C  வெப்பநிலை.
    • மழைவீழ்ச்சி மிக குறைவு. வருடாந்த மழைவீழ்ச்சி  300 mm ஆகும்.
    • நீண்ட உலர் காலம் காணப்படும்.
  • தாவர இயல்புகள் :
    • வறள் நிலத்தாவர இசைவாக்கங்களை பெரும்பாலும் கொண்டுள்ளன. தடித்த புறத்தோல். இலைகள் முட்களாக திரிபடைந்திருத்தல். குழிகளில் அமைந்த இலைவாய்கள். இலையின் பரப்பு குறைக்கப்பட்டிருத்தல். நீர் சேமிப்பு இழையங்கள். பெரும்பாலும் C4  ஒளித்தொகுப்புடையவை. (நீரிழப்பு குறைவு) ஆழமான வேர்த்தொகுதியை கொண்டவை.
    • முட்கள் பெருமளவில் உள்ளதால் தாவர உண்ணிகளிலிருந்து தாவரங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
  • விலங்குகள் :
    • பெருமளவில் இராக்காலத்துக்குரியவை.
    • சில விலங்குகள் ஒருபோதும் நீர் எடுக்காதவை. இவை தாம் உணவாக்கும் வித்துக்களை அனுசேபத்தாக்கத்திற்குள்ளாக்கி அதிலிருந்து நீரை பெறும்.
  • மனித தலையீடு :
    • நகராக்கல், நீர்ப்பாசனம் செய்யப்படும் விவசாயம் போன்றவற்றுக்காக பாலைவனங்கள் அழிக்கப்படுகின்றன.
  • (உ – ம்) : சகாரா பாலைவனம் – Africa,  அரிசோனா பாலைவனம் – America,  சில இடை வெப்பவலய பாலைவனங்கள் – கோபி பாலைவனம்

பரட்டைக் காடு

  • பரம்பல் : இடை வெப்பவலயம். (Austrailia, Newzeland, Keliphornea, South Africa காடுகள்)
  • காலநிலை இயல்புகள் :
    • வெப்பநிலை பருவகாலத்திற்கேற்ப வேறுபடும். (-30°C – 30°C )
    • மழைவீழ்ச்சி பருவத்திற்குரியது. வருடாந்த மழைவீழ்ச்சி 300 – 500mm.
  • தாவர இயல்புகள் :
    • இனப் பல்வகைமை அதிகம்.
    • சிறிய மரம், புல்பூண்டு, செடிகள் காணப்படும்.
    • தீ, உலர்தலுக்கு இசைவாக்கமுடையவை. சில வித்துக்கள் தீ ஏற்பட்ட பின்பே முளைக்கக் கூடியவை.
  • விலங்குகள் :
    • சிறிய Mammalians,  Amphibians, Reptiles, Aves.
  • மனித தலையீடு :
    • நகராக்கல், நீர்ப்பாசனம் செய்யப்படும் விவசாயம் போன்றவற்றுக்காக பாலைவனங்கள் அழிக்கப்படுகின்றன.

இடை வெப்பவலய, அகன்ற இலைக்காடு

  • பரம்பல் : இடை வெப்பவலயம். (Canada, USA, Urop, Austrailia, Newzeland காடுகள்)
  • காலநிலை இயல்புகள் :
    • வெப்பநிலை பருவகாலத்திற்கேற்ப வேறுபடும். (-30°C – 30°C )
    • மழைவீழ்ச்சி பருவத்திற்குரியது. வருடாந்த மழைவீழ்ச்சி 300 – 500mm.
  • தாவர இயல்புகள் :
    • விதானப்படை மூடியது. (அயனமண்டல மழைக் காட்டின் மூடலிலும் குறைவு)
    • மேலொட்டிகள், ஏறிகள் குறைவு.
    • குளிர் காலங்களில் மரங்கள் இலைகளை உதிர்க்கின்றன.
    • ஆட்சியான மரங்கள் அதிகம் உயரமற்றவை. (30m)
  • விலங்குகள் :
    • குடிபெயரும் பறவைகள் அதிகம் உண்டு.
    • சிறிய Mammalians, Reptiles, Insects உண்டு.
  • மனித தலையீடு :
    • விவசாயம், வெட்டு மரங்களுக்காக பெருமளவு  காடுகள் அழிக்கப்படுகின்றன.

இடை வெப்பவலய  புல்வெளி

  • பரம்பல் :  இடை வெப்ப வலயம். ( Veld – South Africa, Pampus – Argentina, Downs – Austrailia )
  • காலநிலை இயல்புகள் :
    • வெப்பநிலை பெருமளவில் மாறுபடும். (-30°C – 30°C)
    • வருடாந்த மழைவீழ்ச்சி  300 – 1000 mm.
  • தாவர இயல்புகள் :
    • புற்கள், பூண்டுகளால் தரை மூடப்பட்டுள்ளது.
    • தீ, வறட்சிக்கு இசைவாக்கமுடையவை.
    • பருவத்திற்குரிய வறட்சி. இடையிடையே காட்டுத்தீ, பெரிய முலையூட்டிகளின் மேய்ச்சல் போன்ற காரணங்களால் மரம், செடிகள் விருத்தியடைதல் தவிர்க்கப்படும்.
  • விலங்குகள் :
    • மேய்ச்சலுக்குரிய பெரிய முலையூட்டிகள் அதிகம் காணப்படும்.
  • மனித தலையீடு :
    • விவசாயத்திற்காக பெருமளவில் அழிக்கப்படுகின்றன. இது விவசாயத்திற்கு வளமான நிலமாக அமைகின்றது. இங்கு ஆழமாக மண் உண்டு. அதிகளவில் போசணைப் பொருட்களுமுண்டு.

தைகா / கூம்புக்காடு Please Login to view the Question

♦  உலகில் மிகப்பெரிய உயிரினக் கூட்டம் இதுவாகும்.

  • பரம்பல் : வட இடை வெப்பவலயத்தின் வடக்குப் பகுதி. ( Norve, Suedan காடுகள் )
  • காலநிலை இயல்புகள் :
    • வெப்பநிலை பருவ காலத்திற்கேற்ப பெருமளவில் வேறுபடும். ( -70°C – 30°C )
    • வருடாந்த மழைவீழ்ச்சி  300 – 700mm.
    • குளிர் காலங்களில் கடுமையாக பனிக்கட்டிகள் வீழ்ச்சியடையும். நீண்ட குளிர்காலம் காணப்படும்.
    • வெப்பமான காலம் சில மாதங்களுக்கு காணப்படும்.
  • தாவர இயல்புகள் :
    • கூம்புவடிவாக வளரும் மரங்கள்.
    • ஓரளவு உயரமான மரங்கள்.
    • இலைகள் ஊசிவடிவானவை.
    • மரங்கள் கூம்புவடிவாக இருப்பதால் பனிக்கட்டிகள் மரக்கிளைகளில் தேங்காமல் வடிந்தோடக் கூடியதாக
    • இருத்தல். இதனால் கிளைகள் முறிவது தடுக்கப்படும்.
    • வித்து மூடியிலிகள் (Gymnosperm) பெரும்பாலும் காணப்படும்.
      (உ – ம்) : பைனஸ் (Pinus tree)
  • விலங்குகள் :
    • குடிபெயரும் பறவைகள், முலையூட்டிகள் என்பன அதிகமாக காணப்படும். (மரங்களில் பறவை கூடுகள் அதிகம் காணப்படும்)

துந்திரா

  • பரம்பல் : வட குளிர் வலயம்
  • காலநிலை இயல்புகள் :
    • வெப்பநிலை  -70°C – 10° C.
    • குறுகிய வெப்பமான காலம்.
    • மழைவீழ்ச்சி மிக குறைவு. வருடாந்த மழைவீழ்ச்சி  300 mm.
    • பலமான காற்று வீசும்.
  • தாவர இயல்புகள் :
    • ஒராண்டுக்குரிய தாவரம், முட்புதர், பூண்டுகள், செடிகள் உண்டு.
    • பல்லாண்டுக்குரிய தாவரங்களில்லை.( நீண்டகால கடும் குளிர், பலமான காற்று போன்ற காரணங்களினால்)
  • விலங்குகள் :
    • துருவ கரடி, ஓநாய், மான் போன்ற விலங்குகள் காணப்படும்.
இலங்கையின் சூழற்றொகுதிகள்
  • காடுகள்  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
    • அயனமண்டல மழைக் காடுகள்
    • என்றும் பசுமையான உலர் கலப்புக் காடுகள்
    • மலைசார்ந்த காடுகள்
    • முட்புதர்க் காடுகள் / புதர்கள்
  • புல்வெளிகள்
    • சவன்னாக்கள்
    • பத்தனைகள்
  • உள்நாட்டுக்குரிய ஈர நிலங்கள்
    • ஆறுகளும் அருவிகளும்
    • நீர்த்தேக்கங்கள், வாவிகள்
    • சேற்று நிலங்களும் சதுப்பு நிலங்களும்
    • வில்லுகள்
  • கரையோரச்  சூழற்தொகுதிகள் Please Login to view the Question
    • பொங்குமுகங்கள், குடாக்கடல்
    • கண்டல்கள்
    • முருகைப்பார்த்  தொடர்கள்
    • கடற்புற்படுக்கைகள்
    • கடற்கரைகள்

அயனமண்டல மழைக்காடு  (Tropical Rain forest) Please Login to view the QuestionPlease Login to view the Question

  • பரம்பல் : இலங்கையின் தென்மேற்குப் பகுதியில், தாழ்நிலை ஈரவலயத்தில்  கடல் மட்டத்திலிருந்து  1200m குத்துயரத்தில் காணப்படும்.
  • காலநிலை இயல்புகள் :
    • சராசரி வெப்பநிலை 25° C – 30° C. வெப்பநிலை சீரானது.
    • உயர் மழைவீழ்ச்சி. வருடம் முழுவதும் மழை பெய்யும். வருடாந்த  சராசரி மழைவீழ்ச்சி 2500 – 5000 mm. தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றினால் மழை கிடைக்கும்.
    • வளியின் சாரீரப்பதன் உயர்வு.  (85%<)
  • மண்ணின் தன்மை :
    • அமிலத் தன்மையானது.
    • புற்கள் அதிகம்.
    • நுண்ணங்கிகளின் தொழிற்பாடு, பிரிகையாக்கல் என்பன அதிகம்.
    • உயிர் புவி இரசாயன வட்டங்கள் சிறப்பாக நடைபெறும். எனினும் ஒப்பீட்டளவில் மண்ணின் வளம் குறைவு. ஏனெனில், அதிகளவு தாவரங்கள் காணப்படுவதால் உருவாகும் போசணைப் பொருள்கள் உடனுக்குடன் தாவரங்கள் அகத்துறிஞ்சுகின்றன.
  • தாவர இயல்புகள் :
    • உயிர்ப் பல்வகைமை / இனப்பல்வகைமை மிக உயர்வானது.
    • உள்நாட்டுக்குரிய இனங்கள் மிக அதிகம். (70%<)
    • படையாதல் சிறப்பாக (தெளிவாக) காணப்படும்.
      வெளிப்பாட்டுப் படை, விதானப்படை, உபவிதானப்படை, செடிக்குரிய படை, தரைக்குரிய படை / கீழ் வளரிப்படை.
    • வெளிப்பாட்டுப்படையில் நன்கு உயர்ந்து வரும் மரங்கள் உண்டு. (40m<)
    • விதானப்படை மூடியது. இதனால் தரைக்கு நேரடி ஒளி ஊடுறுவல் இல்லை. பரவல் ஒளியே காணப்படும்.
    • தரைக்குரிய படையில் தாவரங்கள் குறைவு. Bryofites, Theridophites என்பன காணப்படும். புற்கள் இல்லை.
    • மரங்கள் மிக நெருக்கமாக காணப்படும்.
    • கம்பவுருவான நீண்ட தண்டு. தண்டின் மேற்பரப்பு / சுற்றுப்பட்டை அழுத்தமானது. உச்சியில் கிளைவிடல் காணப்படும். தண்டின் அடியில் பெரும்பாலும் உதைப்பு வேருண்டு. அடிமலர்தல் பெரும்பாலும் காணப்படும்.
    • பெரும்பாலும் மேலொட்டித் தாவரம், மரமயவேறித்தாவரங்கள் காணப்படும். என்றும் பசுமையான தாவரங்களும் காணப்படும்.
    • அகன்ற இலைபரப்புடையவை. இலை வடிநுனி உண்டு.
    • மேலொட்டித் தாவரங்களாக ஓர்கிட், பன்னம், இலைக்கண் என்பன காணப்படும். தாவரத் தண்டு பச்சைநிறமானதாக காணப்படும்.
  • ஆட்சியுள்ள தாவரங்கள் :
    • Dipterocarpus  zeylanicus , Shorea, Megua, Mongifera  என்பனவாகும்.
  • விலங்குகள் :
    • விலங்குப் பல்வகைமை அதிகம்.  Mammals, Aves, Reptiles, pieces, Amphibians, Insects என்பன அதிகம்.
    • மரங்களில் வாழும் விலங்குகள் மிக அதிகம்.
      (உ – ம்) குரங்கு, சிறுத்தை, பாம்பு, பறவை
    • பெரிய முலையூட்டிகள் குறைவு.

என்றும் பசிய உலர்கலப்பு காடுகள் Please Login to view the Question

  • (உ-ம்) :  உடவளவ, மாதுரு ஓயா, ரிட்டிகல காடுகள்

இலங்கையின் அயனமண்டல மலைக்காடுகள்

  • (உ-ம்) :  Peak wilderness, Knuckles, Horton Plains, சுமனல மலைத் தொடர்பு காடுகள்

முட்புதர் காடுகள்

  • (உ-ம்) : யால , வில்பத்து காடுகள்,  பந்தல, வீரவில சரணாலயங்கள்

புல் நிலங்கள்

(1)  சவன்னாக்கள்

  • (உ-ம்) : ஹல்துமுல்ல, மெதகல, பைபிள், எகிரியாகும்புர

(2)  பத்தனைகள்

  • ஈரப்பத்தனை
    • (உ-ம்) : Hoton சமவெளி, Elk சமவெளி, Moon சமவெளி, சீதஎலியா,  பொகவந்தலாவா
  • உலர்பத்தனை
    • (உ-ம்) : வெலிமடை, தெனியாய

வில்லுகள்

  • நீரின் உவர்த் தன்மை, ஆழம் என்பன தொடர்ந்து மாறியவாறு காணப்படும்.
  • (உ-ம்) : மகாவலி வெள்ள வடிநிலப்பகுதி, பொலனறுவை தமன்கடுவ,
    மாதுரு ஓயா

பொங்குமுகம்

  • கடல் நீரும், நன்னீரும் கலக்குமிடத்தில் பொங்குமுகம் காணப்படும்.
  • அதிகளவான உயிர்ப்பல்வகைமை காணப்படும்.
  • மீன்பிடியில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஈர நிலங்கள்

  • தாவரங்கள், விலங்குகளின் சாசியங்களை உள்ளடக்கியவையும் தற்காலிகமாகவோ / நிரந்தரமாகவோ  நீரை உள்ளடக்கிய நிலையில் காணப்படும் வாழிடங்களாகும்.
  • இவை  இயற்கையானவையாகவோ / செயற்கையானவையாகவோ இருக்கலாம்.
  • இங்குள்ள நீர்  சவர்நீர் / உவர்நீராக காணப்படலாம்.
  • உள்நாட்டிற்குரிய இயற்கையான ஈரநிலங்கள்
    • (உ-ம்) : ஆறுகள், அருவிகள், நீர்த் தேக்கங்கள் / வாவிகள், சதுப்புநிலம், சேற்றுநிலம், வில்லு
  • மனிதனால் ஆக்கப்பட்ட ஈரநிலங்கள்
    • (உ-ம்) : நீர்த்தேக்கங்கள், நெல்வயல்கள், அணைக்கட்டுகள், உப்பளங்கள்
  • கடல்சார் ஈரநிலங்கள்
    • (உ-ம்) : கண்டல், கடல்புற்படுக்கைகள், கடலேரிகள்

ஈரநிலங்களின் முக்கியத்துவம் :

  • வெள்ளப் பெருக்கு ஏற்படுவதை குறைவடையச் செய்யும்.
  • கரையோர அரிப்பிலிருந்து பாதுகாப்பை வழங்குதல்.
  • காபன் தாழியாக தொழிற்படல்.
  • உண்ணக்கூடிய மீன்கள்  பலவற்றின்  இனப்பெருக்க  நிலையிடங்களாக இருத்தல்.
  • வண்டல்களை  தேக்கமடையச் செய்தல்.
  • நீரிலுள்ள  நச்சுப் பதார்த்தங்களை அகற்றி  தூய்மைப்படுத்தல்.

ஈரநிலங்கள்  பாதிப்படைவதற்கான காரணங்கள் :

  • சேதனப் பதார்த்தங்களாலும் இரசாயன வெளிப்பாய்வுகளாலும் நீர் மாசாக்கப்படுதல்.
  • மலம், சிறுநீர் கழிவுகள் விடப்படுதல்.
  • குப்பைகள் இடப்படுதல்.
  • முறையாகத் திட்டமிடப்படாத நீர்ப்பாசன முறைகளால் நீரின் தரம் மாற்றமடைதல்.
  • மணல், கனிப்பொருள் அகழ்வு.

 

இலங்கையின் காலநிலை வலயங்களும் சூழற்தொகுதிகளும்
காலநிலை வலயம்  சூழற்தொகுதிகள்
 ஈரவலய தாழ்நிலம்
  • அயனமண்டல மழைக்காடு
  • கண்டல் காடுகள்
  • நன்னீர் சதுப்புநிலம்
  • கடற்கரைசார் சூழற்தொகுதிகள்
 இடைவலயம்
  • நடுத்தர என்றும் பசிய காடுகள்
உலர் வலய தாழ்நிலம்
  • அயனமண்டல என்றும் பசிய உலர் கலப்புக் காடுகள்
  • சவன்னா
  • வில்லு
  • கண்டல் காடுகள்
  • கடற்கரைசார் சூழற்தொகுதிகள்
ஈரவலய உயர்நிலம்
  •  மலைக்காடுகள்
  • ஈரப்பத்தனை
  • புல்நிலம்
 வறள் வலயம்
  • முட்புதர்காடுகள்

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

RATE CONTENT 0, 0
QBANK (54 QUESTIONS)

193-195 வரையுள்ள வினாக்கள் இலங்கையில் காணப்படும் பின்வரும் ஐந்து தாவர இனங்களை அடிப்படையாகக் கொண்டவை.உலர்ந்த என்றும்பச்சையான கலப்புக்காட்டில் இயற்கை யாக வளரக் காணப்படும் தாவரம் மேற்காண்பவற்றுள் எது?

 

 

 

 

 

 

 

 

Review Topic
QID: 8405
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் உட்பிரதேசத்துக்குரிய (endemic) தாவரம் மேற்காணப்படுபவற்றுள் எது?

 

Review Topic
QID: 8406

 

 

Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் உவர்ச்சேற்று நிலத்துக்குரிய சூழலில் காணப்படக்கூடிய தாவரம் மேற்காணப்படுபவற்றுள் எது?

 

 

Review Topic
QID: 8407
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் விலங்குகளின் நிறையுடலி வடிவங்களில் எது இலங்கையிலே பாறைகள் கொண்ட கடற்கரையில் உபபடையுடன் நிலையாக இணைந்து காணப்படுகின்றது,

 

 

 

 

Review Topic
QID: 8413
Hide Comments(0)

Leave a Reply

மூச்சுவேர்களைத் தோற்றுவிக்கும் தாவரம் பின்வருவனவற்றுள் எது?

 

 

Review Topic
QID: 8523
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எப்பட்டியலில் எப்பட்டியல்களில் எல்லா மரவினங்களும் உலர் கலப்பு என்றும் பச்சையான காட்டின் ஆட்சியான இனங்களைக் கொண்டிருக்கும்?

Review Topic
QID: 8534
Hide Comments(0)

Leave a Reply

கண்டற்தாவரங்களில் சாதாரணமாகக் காணப்படும் இசைவாக்கம் அல்லாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8538
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையின்உயிரினகாலநிலை வலயங்கள் தொடர் பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 8539
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையின் ஈர மலைசார்ந்த காடுகள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 8546
Hide Comments(0)

Leave a Reply

தற்போது இலங்கையில் காடுகளால் மூடப்பட்ட தரை அண்ணளவாக என்ன வீதம் ஆகும்?

Review Topic
QID: 8558
Hide Comments(0)

Leave a Reply

ஒருவர் புவியின் வடக்கிலிருந்து மத்தியகோட்டுக்குப் பிரயாணம் செய்யும் போது அவதானிக்கத்தக்க உயிரினக் கூட்டங்களின் சரியான ஒழுங்கு

Review Topic
QID: 8574
Hide Comments(0)

Leave a Reply

அயனமண்டல மழைக் காடுகளின் மண்கள் பொதுவாகப் போசணை குறைந்ததாக இருப்பதற்குக் காரணம்

Review Topic
QID: 8594
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் உயிரினக்கூட்டங்களில் எது அதியுயர் விலங்குப் பல்வகைப்பமையைக் கொண்டுள்ளது?

Review Topic
QID: 8596
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையின் நன்னீர்க் குளங்களில் காணப்படாத அங்கிகளைக் கொண்டது பின்வரும் பாகுபாட்டுக் கூட்டங்களுள் எது?

Review Topic
QID: 8614

 

Hide Comments(0)

Leave a Reply

இலங்கைக் காடுகள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?

Review Topic
QID: 8618
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் உலர் பத்தனை புல் நிலங்கள் காணப்படுவது

Review Topic
QID: 8652
Hide Comments(0)

Leave a Reply

அயனமண்டல உயிரினக்கூட்டங்களுடன் ஒப்பிடும்போது
இடைவெப்பநிலை உயிரினக்கூட்டங்கள்?

Review Topic
QID: 8670
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அங்கிகளுள் கடற் சூழற்றொகுதியில் இல்லாதது எது?

Review Topic
QID: 8678
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் காட்டுச் சூழற்றொகுதிகளின் பல்வகைமையைப் பாதிக்காதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8679
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் உயிரியற்காலநிலை வலயங்களை வகைப்படுத்துவதற்கு அடிப்படையாக அமைவது
பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8686
Hide Comments(0)

Leave a Reply

இலங்கையில் அயனமண்டல மழைக்காடுகள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?

Review Topic
QID: 8722
Hide Comments(0)

Leave a Reply

புவியின் மத்திய கோட்டுக்கும் கடகக்கோட்டுக்கும்  இடையே காணப்படும் உயிரினக் கூட்டங்கள் பின்வருவனவற்றுள் எவை?

Review Topic
QID: 8727
Hide Comments(0)

Leave a Reply

தொடரான விதானத்தைக் கொண்ட என்றும் பச்சையான  மரங்களையுடைய சூழற்தொகுதி பின்வருவனவற்றுள்            எது?

Review Topic
QID: 8738
Hide Comments(0)

Leave a Reply

193-195 வரையுள்ள வினாக்கள் இலங்கையில் காணப்படும் பின்வரும் ஐந்து தாவர இனங்களை அடிப்படையாகக் கொண்டவை.உலர்ந்த என்றும்பச்சையான கலப்புக்காட்டில் இயற்கை யாக வளரக் காணப்படும் தாவரம் மேற்காண்பவற்றுள் எது?

 

 

 

 

 

 

 

 

Review Topic
QID: 8405

இலங்கையில் உட்பிரதேசத்துக்குரிய (endemic) தாவரம் மேற்காணப்படுபவற்றுள் எது?

 

Review Topic
QID: 8406

 

 

இலங்கையில் உவர்ச்சேற்று நிலத்துக்குரிய சூழலில் காணப்படக்கூடிய தாவரம் மேற்காணப்படுபவற்றுள் எது?

 

 

Review Topic
QID: 8407

பின்வரும் விலங்குகளின் நிறையுடலி வடிவங்களில் எது இலங்கையிலே பாறைகள் கொண்ட கடற்கரையில் உபபடையுடன் நிலையாக இணைந்து காணப்படுகின்றது,

 

 

 

 

Review Topic
QID: 8413

மூச்சுவேர்களைத் தோற்றுவிக்கும் தாவரம் பின்வருவனவற்றுள் எது?

 

 

Review Topic
QID: 8523

பின்வருவனவற்றுள் எப்பட்டியலில் எப்பட்டியல்களில் எல்லா மரவினங்களும் உலர் கலப்பு என்றும் பச்சையான காட்டின் ஆட்சியான இனங்களைக் கொண்டிருக்கும்?

Review Topic
QID: 8534

கண்டற்தாவரங்களில் சாதாரணமாகக் காணப்படும் இசைவாக்கம் அல்லாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8538

இலங்கையின்உயிரினகாலநிலை வலயங்கள் தொடர் பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 8539

இலங்கையின் ஈர மலைசார்ந்த காடுகள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?

Review Topic
QID: 8546

தற்போது இலங்கையில் காடுகளால் மூடப்பட்ட தரை அண்ணளவாக என்ன வீதம் ஆகும்?

Review Topic
QID: 8558

ஒருவர் புவியின் வடக்கிலிருந்து மத்தியகோட்டுக்குப் பிரயாணம் செய்யும் போது அவதானிக்கத்தக்க உயிரினக் கூட்டங்களின் சரியான ஒழுங்கு

Review Topic
QID: 8574

அயனமண்டல மழைக் காடுகளின் மண்கள் பொதுவாகப் போசணை குறைந்ததாக இருப்பதற்குக் காரணம்

Review Topic
QID: 8594

பின்வரும் உயிரினக்கூட்டங்களில் எது அதியுயர் விலங்குப் பல்வகைப்பமையைக் கொண்டுள்ளது?

Review Topic
QID: 8596

இலங்கையின் நன்னீர்க் குளங்களில் காணப்படாத அங்கிகளைக் கொண்டது பின்வரும் பாகுபாட்டுக் கூட்டங்களுள் எது?

Review Topic
QID: 8614

 

இலங்கைக் காடுகள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?

Review Topic
QID: 8618

இலங்கையில் உலர் பத்தனை புல் நிலங்கள் காணப்படுவது

Review Topic
QID: 8652

அயனமண்டல உயிரினக்கூட்டங்களுடன் ஒப்பிடும்போது
இடைவெப்பநிலை உயிரினக்கூட்டங்கள்?

Review Topic
QID: 8670

பின்வரும் அங்கிகளுள் கடற் சூழற்றொகுதியில் இல்லாதது எது?

Review Topic
QID: 8678

இலங்கையில் காட்டுச் சூழற்றொகுதிகளின் பல்வகைமையைப் பாதிக்காதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8679

இலங்கையில் உயிரியற்காலநிலை வலயங்களை வகைப்படுத்துவதற்கு அடிப்படையாக அமைவது
பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8686

இலங்கையில் அயனமண்டல மழைக்காடுகள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் சரியானது எது?

Review Topic
QID: 8722

புவியின் மத்திய கோட்டுக்கும் கடகக்கோட்டுக்கும்  இடையே காணப்படும் உயிரினக் கூட்டங்கள் பின்வருவனவற்றுள் எவை?

Review Topic
QID: 8727

தொடரான விதானத்தைக் கொண்ட என்றும் பச்சையான  மரங்களையுடைய சூழற்தொகுதி பின்வருவனவற்றுள்            எது?

Review Topic
QID: 8738
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank