Please Login to view full dashboard.

போசணைக் கூறு

Author : Admin

22  
Topic updated on 02/14/2019 08:29am

கலங்களின் அனுசேபத்திற்கு முக்கியமான இரசாயன பதார்த்தம் போசணைக் கூறு எனப்படும்.

7 பிரதான போசணைக்கூறுகள் காணப்படும். இவை சேதனச் சேர்வையாகவோ / அசேதன சேர்வையாகவோ காணப்படும்.

  • சேதன சேர்வைகள்
    • காபோவைதரேற்று
    • புரதம்
    • இலிப்பிட்டு
    • விற்றமின்
    • நார்
  • அசேதன சேர்வைகள்
    • நீர்
    • கனியுப்பு
  • காபோவைதரேற்றும் இலிப்பிட்டும் சக்தி மூலமாக பயன்படுத்தப்படுகிறது.
  • சக்தித்தேவை வயது,பால், உடற்பருமன், தொழிற்பாடு என்பவற்றுக்கு ஏற்ப மாறுபடும்.
  • காபோவைதரேற்றும் இலிப்பிட்டும் முறையே 16kJg-1, 37kJg-1 சக்தியை வழங்கக் கூடியது.
  • புரதம் பிரதானமாக வளர்ச்சி, கல புத்துயிர்ப்புக்கு பயன்படுகிறது.
  • சராசரியாக 1 நாளில் தேவைப்படும் புரத அளவு 40g ஆகும்.
  • புரதக் குறைபாட்டால் குவாஷியக்கோர், மரஸ்மஸ் ஆகிய குறைபாட்டு நோய்கள்  ஏற்படும்.

குவாஷியக்கோர், மரஸ்மஸ் நோய் அறிகுறி

  • உடல் மெலிந்து காணப்படல்.
  • வளர்ச்சி குன்றி இருத்தல்.
  • உயரத்திற்கேற்ற நிறை காணப்படாமை.
  • தசை விருத்தி குறைவாக இருத்தல்.
  • மூளை வளர்ச்சி மந்தமாக / மெதுவாக இருத்தல்.
  • தோல் மென்மையற்று கரடுமுரடானதாக இருத்தல்.
  • நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக காணப்படும்.

 

விற்றமின்கள்
  • உடல் ஆரோக்கியத்தையும் அனுசேபத்தையும் பேணுவதற்கு சிறிதளவில் தேவைப்படும் சேதனச் சேர்வையாகும். Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question
  • அநேகமான  விற்றமின்கள்  உடலால் தொகுக்கப்பட முடியாதவை. எனவே உணவின் மூலம் உடலுக்கு வழங்கப்படவேண்டும்.
  • உடலினால் தொகுக்கப்படவேண்டிய விற்றமின்கள்.
    விற்றமின் A : ஈரலால், விற்றமின் D : – தோல்
  • சில விற்றமின்கள் உணவுக்கால்வாயிலுள்ள பக்றீரியாக்களால் தொகுக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
    அவை விற்றமின் K, Folic acid, Biotin.
  • பிரதானமாக 6  வகையான விற்றமின்கள் உள்ளன.
    விற்றமின் A, விற்றமின் B சிக்கல், விற்றமின் C, விற்றமின் D, விற்றமின் E, விற்றமின் K
  • இவ் விற்றமின்களுள் கொழுப்பில் கரையும் விற்றமின்களாவன;
    விற்றமின் A, விற்றமின் D, விற்றமின் E, விற்றமின் K. இவை ஈரலில் சேமிக்கப்படும்.
  • நீரில் கரையும் விற்றமின்களாவன; விற்றமின் B சிக்கல், விற்றமின் C.
  • நீரில் கரையும் விற்றமின்களுள் சில ஈரலில் சேமிக்கப்படும்.
    (உ+ம்) : விற்றமின் B12
  • இவ் விற்றமின்களின் குறைபாடு குறைபாட்டு நோய்களை ஏற்படுத்தும்.
 விற்றமின் தொழில், அறிகுறி   குறைபாட்டு நோய் 
 Vitamin – A Retinol
  • சாதாரண மேலணி விழிவெண்படலம் சுகாதாரம் பேணல்.
  • Rodopsin பார்வை நிறப்பொருள் உற்பத்திக்கு அவசியம்.
  • உலர்தோல் காணப்படல்
  • வளர்ச்சி குன்றல்
  • மாலைக்கண் நோய்
 Vitamin – D Calciferol
  • Calcium,Phosphate அகத்துறிஞ்சலை கட்டுப்படுத்தல். அத்துடன் Calcium அனுசேபத்தில் பங்கு கொள்ளும்.
  • Phosphorus அகத்துறிஞ்சலில் பங்கு கொள்ளும்.
  • என்பு,பல் உற்பத்திக்கு அவசியம்.
  • என்புருக்கி – என்புகள் பலமற்று காணப்படும். இதனால் சிறு பிள்ளைகளில் கால் வளைந்து காணப்படல்.
  • Osteophorosis, Osteomalacia – வளர்ந்தவர்களில் என்பு உடைதல், என்புகளில் நோய் ஏற்படல்.
 Vitamin – K Phylloquinone
  • ஈரலில் Prothrombin உற்பத்திக்கு அவசியம். எனவே குருதி உறைதலுக்கு அவசியம்.
  • குருதி உறையா நோய் – குருதி உறைய நீண்ட நேரம் எடுக்கும்.
 Vitamin – E Tocopherol
  •  கலச்சுவாசத்தில் பங்கு கொள்ளல் (ஒட்சியேற்ற எதிரி)
  • குருதிச்சோகை
  • பார்வை குழப்பம்
 Vitamin – C Ascorbic acid
  • தொடுப்பிழைய உற்பத்தியில் பங்கு கொண்டு உறுதியான தோல் உருவாக்கல்
  • Collagen நார்களை உற்பத்தி செய்தல்
  • RBC இன் முதிர்ச்சிக்கு தேவை ஒட்சியேற்ற எதிரி
  •  ஸ்கேவி – முரசு பலவீனமடைந்து குருதிக்கசிவு ஏற்படல்.
  • குருதிச்சோகை
  • காயங்கள் மாற தாமதித்தல்.
 Vitamin – B  Thiamine
  • துணைநொதியமாக தொழிற்படல். (சுவாசத்தில் கிரப்பின் வட்டத்தில் காபொக்சைல் அகற்றலில் பங்கு கொள்ளும்)
  • காபோவைதரேற்று அனுசேபம்.
 (1) பெரிபெரி (Beriberi)

  • நரம்புத்தொகுதி பாதிக்கும். தசைகள் பலவீனமடைந்து தொழிற்படும் போது வலி உணரப்படல்.
  • நரம்புத் தளர்ச்சியும் ஏற்படும்.
  • களைப்படைதல்.
  • வளர்ச்சி குன்றல்.

(2) இதயசெயழிழப்பு

 Vitamin – B2  Riboflavin
  •  சங்கலித கூட்டத்தின் ஆக்கக்கூறு (உ+ம்) FMN
  • en  கடத்தல் சங்கிலியில் பயன்படுகிறது.
  • காபோவைதரேற்று, புரத அனுசேபம்.
  • கண், தோல் ஆரோக்கியம் பேணல்.
  • நாக்கில் புண்கள் ஏற்படல்.
  • வாயின் ஓரங்களில் புண்கள் ஏற்படல். (கடவாய் அவிதல்)
  • தோலில் புண்கள் ஏற்படல்.
 Vitamin – B3 Nicotinic acid / Niacin
  • NAD,NADP இன் கட்டமைப்பு கூறு. இவை சுவாசம், ஒளித்தொகுப்பில் பங்கு கொள்கிறது. (அவசியம்)
  • துணைநொதியம் A இன் ஒரு பகுதியாக காணப்படுகிறது.
  • Cholestrol உற்பத்தியை நிரோதிக்கும்.
  • பெலகரா (Pellagra)
  • தோலில் புண்கள், அவிச்சல் ஏற்படல்.
 Vitamin – B5 Pantothenic acid
  •  துணைநொதியம் A  இன் பகுதி.
  • அமினோவமில அனுசேபத்திற்கு பயன்படும்.
  • மிகக்குறைவான நரம்பு, தசை இயைபாக்கம்.
  • தசைப்பிடிப்பு
  • தசைகள் களைப்படைதல்.
Vitamin – B6 Pyridoxine
  • அமினோவமிலம், கொழுப்பமிலங்களை துணைநொதியமாக மாற்றும்.
  • அனுசேபத்தில் பங்கு கொள்ளும் – புரத அனுசேபம்
  • மனஅழுத்தம், உள நெருக்கீடு
  • குருதிச்சோகை
Vitamin – B12 Cyano cobalamin
  • RNA, DNA தொகுப்புக்குப் பயன்படும்.
  • குருதிச்சோகை
  • முள்ளந்தண்டுடன் தொடர்பான நரம்பு நாண்கள் அழிக்கப்படல்.
 Folic Acid
  • RBC உற்பத்தி
  • நியூக்ளிக்கமில அனுசேபத்தில் துணைநொதியமாக   தொழிற்படும்.
  • DNA தொகுப்பு
  • குருதிச்சோகை
Biotin
  • துணைநொதியமாக தொழிற்படும்.
  • புரதத் தொகுப்பில் பயன்படும்.
  • காபோவைதரேற்று, கொழுப்பு அனுசேபம்.
  • குருதிச்சோகை
  • தசை நோ
  • தோலில் அழற்சி ஏற்படல்.

கனியுப்புக்கள்

  • கனியுப்புக்கள் மிகக் குறைந்தளவில் தேவைப்படுகின்ற அசேதன கூறுகளாகும்.

நார்கள்

  • நார்கள்  செலுலோசினால் ஆக்கப்பட்ட சேதன பதார்த்தமாகும்.
  • நார்களின் தொழில்கள் :
    • உணவுக்கால்வாயில் சுற்றுச்சுருக்கை  தூண்டல் / அதிகரிக்கச் செய்தல். இதன் மூலம் மலச்சிக்கல் ஏற்படுவதை தடுத்தல்.
    • உணவுக்கால்வாய் தொடர்பான  நோய்களை தடுத்தல்.
    • பசி உணர்வை தூண்டல்.
RATE CONTENT 0, 0
QBANK (22 QUESTIONS)

பின்வரும் விற்றமின்களில் எது துணைநொதியமாகச் செயற்படுகின்றது?

Review Topic
QID: 3949
Hide Comments(0)

Leave a Reply

காயப்படும்போது இரத்தம் உறைதல் தாமதப்படுவதற்குக் காரணமாகவிருப்பது பின்வரும் எதனின் குறைபாடாக விருக்கலாம்.

Review Topic
QID: 4116
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் எவ்விற்றமினின் குறைபாடு முரசிலிருந்து குருதி பெருக்குக்கு பங்களிப்புச் செய்யும்?

Review Topic
QID: 4122
Hide Comments(0)

Leave a Reply

விற்றமின் E தொடர்பான பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எது எவை?

Review Topic
QID: 4127
Hide Comments(0)

Leave a Reply

RNA இன் தொகுப்புடன் சம்பந்தப்பட்டுள்ள விற்றமின்?

Review Topic
QID: 4133
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் விற்றமின்களில் எது / எவை குடற் பற்றீரியாக்களினால் தொகுக்கப்படுகின்றது / தொகுக்கப்படுகின்றன?

Review Topic
QID: 4135
Hide Comments(0)

Leave a Reply

மனிதனில் சாதாரண உடனலத்துக்குச் சோடியம் அயன்களும் கல்சியம் அயன்களும் முக்கியமானவை. இவ்விரு அயன்களும் பின்வருவனவற்றில் எதற்குத் தேவைப்படும்?

Review Topic
QID: 4139
Hide Comments(0)

Leave a Reply

இரைப்பையழற்சிக்கு பங்களிப்பு செய்யும் காரணியாக அமையாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 4146
Hide Comments(0)

Leave a Reply

பிள்ளையொன்று விற்றமின் குறைபாட்டின் பின்வரும் அறிகுறிகளைக் காட்டுகின்றது

(A) இளைப்பு
(B) குருதிச்சோகை
(C) புண் குணப்படுவதில் தாமதம்

அவருடைய குறைபாட்டுக்குரிய விற்றமின்களைப் பின்வருவனவற்றுள் எது காட்டுகின்றது?

Review Topic
QID: 4147
Hide Comments(0)

Leave a Reply

விற்றமின்கள் தொடர்பாக சரியானது பின்வரும் கூற்றுகளுள் எது?

Review Topic
QID: 4149
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் விற்றமின்களில் எது துணைநொதியமாகச் செயற்படுகின்றது?

Review Topic
QID: 3949

காயப்படும்போது இரத்தம் உறைதல் தாமதப்படுவதற்குக் காரணமாகவிருப்பது பின்வரும் எதனின் குறைபாடாக விருக்கலாம்.

Review Topic
QID: 4116

பின்வரும் எவ்விற்றமினின் குறைபாடு முரசிலிருந்து குருதி பெருக்குக்கு பங்களிப்புச் செய்யும்?

Review Topic
QID: 4122

விற்றமின் E தொடர்பான பின்வரும் கூற்றுகளில் சரியானது / சரியானவை எது எவை?

Review Topic
QID: 4127

RNA இன் தொகுப்புடன் சம்பந்தப்பட்டுள்ள விற்றமின்?

Review Topic
QID: 4133

பின்வரும் விற்றமின்களில் எது / எவை குடற் பற்றீரியாக்களினால் தொகுக்கப்படுகின்றது / தொகுக்கப்படுகின்றன?

Review Topic
QID: 4135

மனிதனில் சாதாரண உடனலத்துக்குச் சோடியம் அயன்களும் கல்சியம் அயன்களும் முக்கியமானவை. இவ்விரு அயன்களும் பின்வருவனவற்றில் எதற்குத் தேவைப்படும்?

Review Topic
QID: 4139

இரைப்பையழற்சிக்கு பங்களிப்பு செய்யும் காரணியாக அமையாதது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 4146

பிள்ளையொன்று விற்றமின் குறைபாட்டின் பின்வரும் அறிகுறிகளைக் காட்டுகின்றது

(A) இளைப்பு
(B) குருதிச்சோகை
(C) புண் குணப்படுவதில் தாமதம்

அவருடைய குறைபாட்டுக்குரிய விற்றமின்களைப் பின்வருவனவற்றுள் எது காட்டுகின்றது?

Review Topic
QID: 4147

விற்றமின்கள் தொடர்பாக சரியானது பின்வரும் கூற்றுகளுள் எது?

Review Topic
QID: 4149
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank