Please Login to view full dashboard.

உயிரின் தோற்றமும் கூர்ப்பும்

Author : Admin

37  
Topic updated on 02/14/2019 04:54am

உயிரின் தோற்றம் தொடர்பான கொள்கைகள். Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

சிறப்புப் படைப்புக் கொள்கை

  • சகல உயிரினங்களும் இன்றுள்ளவாறே சர்வ வல்லமையுள்ள கடவுளினால் படைக்கப்பட்டன. பல்வேறு சமயங்களினாலும் பிரதானமாக கிறிஸ்தவ சமயத்தினால் இக்கொள்கை பரப்பப்படலாயிற்று.

தன்னிச்சைப் பிறப்பாக்கக் கொள்கை

  • உயிர் எந்தச் சந்தர்ப்பத்திலும் உயிரற்ற சடப்பொருளிலிருந்து தானாகவே தோன்றுகின்றது. அழுக்குகளில் இருந்து புழுக்கள், பூச்சிகள், எலிகள் பொருத்தமான நிபந்தனைகளின் கீழ் உருவாவதாக இக்கொள்கை குறிப்பிடுகின்றது.

அண்ட வெளிப்பிறப்புக் கொள்கை

  • அண்டவெளிக்கு அப்பாலான பகுதியிலிருந்து பூமிக்கு உயிர் வந்தது. இன்றுகூட சில விஞ்ஞானிகள் உயிரிகள் எமது ஞாயிற்றுத்தொகுதிக்கு அப்பாற்பட்ட ஏனைய கோள்களில் சாதாரணமாகக் காணப்படுவதாகவும் பூமியை நோக்கி வந்த எரிகற்கள் அல்லது வேற்றுக்கிரக விண்வெளி ஊர்திகள் ஊடாகப் பூமியை வந்தடைந்ததாக நம்புகின்றனர்.

உயிரிரசாயனக் கூர்ப்புக் கொள்கை  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • ஆதியான வளிமண்டலத்தில் காணப்பட்ட அசேதன வாயுக்கள் மின்னிறக்கத் தாக்கங்களாலும் சூரியக் கதிர்வீச்சாலும் தாக்கமடைந்து சேதன மூலக்கூறுகளைத் தோற்றுவித்தன. இப்பதார்த்தங்கள் சமுத்திர நீரில் கரைந்து முதல் உயிரியை உருவாக்கியது.
  • அலெக்சாண்டர் ஒப்பாரினும் (1923) J.B.S கல்டேனும் இக்கொள்கையை முதலில் உருவாக்கினர். 1953இல் ஸ்ரான்லி மில்லர் ஆதி உலகின் நிபந்தனைகளைக் குடுவைகளுள் உருவாக்கிப் பரிசோதனைச் சான்றுகளைப் பெற்றார்.
  • சிறிய சேதன மூலக்கூறுகளில் இருந்து ஐதரோக் காபன்கள், அமினோவமிலம் போன்ற சேதனச் சேர்வைகள் சமுத்திரங்களில் உருவாகியிருக்கும். பெருமளவு சூரியக்கதிர்வீச்சு, மின்னல்களின் போது ஏற்பட்ட வலுவானமின்புயல், உக்கிரமான எரிமலை வெடிப்புக்கள், கதிரியக்கத்தேய்வினால் ஏற்பட்ட வெப்பம் என்பன இத்தாக்கங்களுக்கு வேண்டிய சக்தியை வழங்கியிருக்கும்.
  • ஆதியான சமுத்திரம் இத்தகைய சேதனப் பதார்த்தங்களை அதிகளவில் கொண்ட
    ஆதிக்கூழாக இருந்திருக்கும். சேதனக் கூழானது அமினோஅமிலங்கள், நைதரசன்
    மூலங்கள், எளியவெல்லம், நியுக்கிளியோரைட்டுக்கள் போன்றவற்றைக் கொண்டிருந்திருக்கும்.
  • இந்த மூலக்கூறுகள் ஒன்றுதிரண்டு இலிப்பிட்டுப்படை ஒன்றினால் சூழப்படலாயின. இந்தச் சிக்கலான சேர்வைகள் ஆதியான கலத்தை உருவாக்கலாயின. இக்கலம் உயிர்க்கலங்களில் காணப்படும் வளர்ச்சி, தற்பகர்ப்பு போன்ற இயல்புகளையும் பிரதிபலிக்கலாயின. முதலில் உருவாகிய உயிரிகள் பிறபோசணைக்குரிய காற்றின்றி வாழ் புரோகரியோட்டா என நம்பப்படுகின்றது.
  • இது 3.5 பில்லியன்வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றது.

உயிர்ப்பல்வகைமைக் கூர்ப்பு  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • வசதிக்காக புவிச்சரிதவியல் காலங்கள் நான்கு யுகங்களாகவும், 11 காலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. யுகங்கள் நான்கும்
    Archaeozoic
    Palaeozoic
    Mesozoic
    Cenozoic எனப் பிரிக்கப்பட்டுள்ளன.
  • Archeozoic   யுகத்தில் Precambrian காலப்பகுதியில் காணப்பட்ட அங்கி வகைகள் பற்றீரியாக்களும் புரோடிஸ்டாக்களும் மட்டுமேயாகும்.
  • 2.7 தொடக்கம் 0.7 பில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் ஒளித்தொகுப்புச் செய்யும் அங்கிகள் தோன்றி பல்வகைமை அடைந்தன. ஆரம்பகால ஒளித்தொகுப்பு அங்கிகள் ஒட்சிசனைத் தோற்றுவிப்பதற்கான பாதையைக் கொண்டிருக்கவில்லை. வளிமண்டலத்தில் ஒட்சிசன் அளவு அதிகரித்துச் சென்று அது அயனாக்கமடைந்து ஓசோன் படை தோன்றியது.
  • 1- 1.5 பில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் முதன் முதலில் இயூக்கரியோட்டாக்கள் தோன்றின. அதாவது 2 பில்லியன் வருட காலப்பகுதியிலும் உயிர் தோன்றியதில் இருந்து பூமியில் புரோகரியோட்டாக்கள் மட்டுமே காணப்பட்டு வந்துள்ளன.
  • புரோடிஸ்டாக்கள் பல்வகைமை அடைந்து சகல பிரதான முள்ளந்தண்டற்ற கணங்களின் தோற்றமும் 0.7 பில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் நடைபெற்றன.
  • பற்றீரியாக்களில் இருந்து தனிக்கல இயூக்கரியோட்டாக்கள் கூர்ப்படைந்தன. ஆதியான
    பல்கலத்தாலான விலங்குகள் கடலில் தோன்றின. உ-ம்: முருகைக்கல், கடல்அனிமனிகள்
    போன்ற நைடேரியன்கள், சில அனெலிட்டுக்கள், ஆதியான ஆத்திரப்பொட்டுக்கள்.
  • 700 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியிலிருந்து இன்று வரை சமுத்திரங்களில் அங்கிப் பல்வகைமை தொடர்கிறது.
  • முள்ளந்தண்டுளிகளின் தோற்றமும், மொலஸ்காக்கள், ரைலபையிட்டுக்கள், கிறஸ்ரேசியாக்கள் என்பவற்றின் எண்ணிக்கையின் அதிகரிப்பும், ஏறத்தாழ 500 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றது.
  • தாவரங்களினுடைய தரையை நோக்கிய குடியேற்றம் 480 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றது. இவற்றின் பல்வகைமையாதல் அன்றிலிருந்து இன்று வரை தொடர்கிறது.
  • விலங்குகளின் தரையை நோக்கிய குடியேறுகை 420 மில்லியன் வருடங்களுக்கு முன் நடைபெற்றது. அன்றிலிருந்து இன்று வரை அவற்றின் பல்வகைமையாதல் தொடர்கின்றது.
  • தரையை நோக்கிக் குடிபெயர்ந்த முதல் முள்ளந்தண்டுளிகள் அம்பிபியாக்களாகும்.தரைக்கும், நீருக்குமான குடிபெயரும் தன்மையை தற்பொழுதும் அவை பேணுகின்றன. Latimeria போன்ற சோணைச் செட்டைகளையுடைய மீன்களில் இருந்து அம்பிபியாக்கள் உருவாகின.
  • அம்பிபியாக்களில் இருந்து ரெப்ரீலியாக்கள் தோன்றின. இவை தரைவாழ்க்கைக்கு முழுமையாக இசைவாக்கமடைந்த அங்கிகளாகும். இவை இதற்காக விசேடமான கட்டமைப்பு, உடற்றொழிலியல் ரீதியிலான இயல்புகளை விருத்தியாக்கியுள்ளன.
  • இதே காலப்பகுதியில் ஆரம்பகால மெய்ப்பாசிகளும், பன்னங்களும் செழிப்படைந்தன.
  • பறவைகள், ரெப்ரீலியாக்களில் இருந்து தோன்றின. பறவைகள் தமது பறக்கும் ஆற்றல் காரணமாக பெரும்பாலான இடங்களில் பரவிக் காணப்படுகின்றன.
  • பூச்சிகள், காபோனிபெரஸ் காலப்பகுதியில் முதலில் தோன்றி பின்னர் பல்வகைமையில் அதிகரித்துள்ளன. மரப்பன்னங்கள், குண்டாந்தடிப்பாசிகள், ஆரம்ப கால வித்துமூடியிலித் தாவரங்கள் கொண்ட பாரிய மழைக்காடுகள், காபோனிபெரஸ் காலப்பகுதியில் பெருமளவு வியாபித்திருந்தன. இன்று பயன்படுத்தப்படும் நிலக்கரிப்படிவுகள் இக்காலப் பகுதியில் காணப்பட்ட காடுகளில் இருந்து தோன்றியவை.
  • 280 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட பேர்மியன் காலப்பகுதியில் கூம்புளிகள் தோன்றின.
  • Triassic காலப்பகுதியில் ஊர்வனவற்றினுடைய இசைவு விரிகை காரணமாக டைனசோர்கள்
    உருவாகின. மீசொசோயிக் யுகத்தில் தரையில் டைனசோர்கள் ஆட்சியுடையனவாகி Cretaceous காலப் பகுதியில் உச்ச நிலையை எய்தின.
  • ஆரம்ப கால முலையூட்டிகளும் கூட Triassic காலப்பகுதியிலேயே உருவாகியவை. ஆயினும் பல மில்லியன் கணக்கான வருடங்களாக அவை சிறிய கூட்டங்களாகவே எஞ்சியிருந்தன.
  • Cretaceous காலப்பகுதியில் பூக்கும் தாவரங்கள் ஆட்சியானவையாகியமையும் சூல்வித்தகம் கொண்ட முலையூட்டிகளினதும் நவீன மீனினங்களினதும் தோற்றமும் இடம்பெற்றன.
  • பூக்கும் தாரவங்கள் பரவலடைந்து இசைவு விரிகையினால் செழிப்படைந்தன.
  • Tertiary காலப்பகுதியில் முலையூட்டிகளின் இசைவுவிரிகையினால் பல இனங்கள்
    தோன்றின.
  • மனித இனம் அண்மைக் காலத்திற்குரிய இனமாகும். 500 000 வருடங்களுக்கு
    முற்பட்ட காலப்பகுதியில் நவீன மனித வர்க்கம் தோன்றியது.

இனங்களின் அழிவு  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • இனங்கள் தாம் அழிந்து கொள்வதன் மூலம் அல்லது தம்மை மாற்றியமைத்துக் கொள்வதன் மூலம் புதிய இனங்களுக்கு வழிவிடவேண்டும்.எனவே இனங்களினுடைய இயற்கை அழிவானது கூர்ப்புச் செய்முறையின் ஒரு படிமுறையாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
  • பொதுவாக அழிவு வீதத்திலும் பார்க்க கூர்ப்பு வீதம் உயர்வானதாக இருக்கும். எனவே, நீண்டகால அடிப்படையில் உயிர்ப் பல்வகைமையில் அதிகரிப்பு ஏற்படும்.
  • ஒரு இனத்தின் இறுதித் தனியனும் புவியில் இருந்து அகற்றப்படுகின்றமையானது இன அழிவாகும்.
  • உயிர்ப்பல்வகைமை வரலாற்றில் இனங்களின் பேரழிவால் ஏற்பட்ட அழிவுகள்
  • உயிர்பல்வகைமை வரலாற்றில் பெரும் பேரழிவுகள் பல இடம்பெற்றுள்ளன.
  • Trilobite களின் அழிவு-பிந்திய Permian (ஏறத்தாழ 200மில்லியன் வருடங்களுக்கு முன்பு)
  • Ammonites களின் அழிவு-பிந்திய Cretaceous (ஏறத்தாள 65மில்லியன் வருடங்களுக்கு முன்பு)
  • Dinosaurs களின் அழிவு- பிந்திய Cretaceous (ஏறத்தாள 65மில்லியன் வருடங்களுக்கு முன்பு)
  • மனிதக் குடித்தொகை அதிகரிப்பும் நாகரீக வளர்ச்சியும் உயிர்ப்பல்வகைமை அழிவுவீதத்தை பெருமளவு அதிகரிக்கச் செய்துள்ளன. இன்று மனிதன் புவியில் ஆட்சியுடையவனாக இருக்கின்றான். புவி மேற்பரப்பில் மனிதத் தலையீட்டுக்கு உள்ளாகாத எந்தவொரு சூழற்றொகுதியும் இல்லை.
  • அடுத்த 30 வருட காலப்பகுதியுள் தற்போதைய இனங்களுள் 5 தொடக்கம் 10 வீதம் வரையிலானவை அழிவை எதிர்கொள்ளலாம் எனப் பொதுவாக மதிப்பிடப்பட்டுள்ளது. மனிதக் குடித்தொகை அதிகரிப்பும், வளங்களினது பயன்பாட்டின் அதிகரிப்பும் விவசாயம், கைத்தொழில், வனவளப் பாவனை, போக்குவரத்து, நகரமயமாதல் போன்ற மனித நடவடிக்கைகளால் பேணப்படுகின்றது. இத்தகைய செயற்பாடுகள் சூழற்றொகுதிகளின் தொழிற்பாடுகளை மாற்றியமைத்ததன விளைவாக பல்வகைமை இழப்பை ஏற்படுத்தின.
RATE CONTENT 5, 1
QBANK (37 QUESTIONS)

பூமியின் கண் முதன்முதலாகத் தோன்றி அங்கி வகைகள் காண்பித்த ஊட்டல் முறை எனக் கருதப்படுவது,

Review Topic
QID: 8283
Hide Comments(0)

Leave a Reply

155-158 வரையிலுள்ள வினாக்கள் கீழ்க்காணும் படத்தின் அடிப்படையிலுள்ளன.

படத்திலுள்ள வரைபடங்களில் எது உவர்த்தன்மையைப் பொறுத்தளவில் பரந்த சகிப்பு வீச்சுடைய பிராணிகளைக் குறிக்கும்.

Review Topic
QID: 8285
Hide Comments(0)

Leave a Reply

பொங்குமுகங்களில் காணப்படும் சவர்நீர்களுக்கு வரையறுக் கப்பட்டிருக்கும் பிராணிகளைக் குறிக்கும் வரைபடம் எது?

Review Topic
QID: 8288
Hide Comments(0)

Leave a Reply

நன்நீரில் வாழும் பிராணிகளைக் குறிக்கும் வரைபடம் எது?

Review Topic
QID: 8291
Hide Comments(0)

Leave a Reply

ஒரு குளத்தில் தும்பிக் குடம்பிகளைக் காணக்கூடிய இடமாவது,

Review Topic
QID: 8293

 

Hide Comments(0)

Leave a Reply

வீக்கம் (turgor) தாவரங்களுக்கு முக்கியமாவதன்  காரணம் / காரணங்கள்

 

Review Topic
QID: 8516

 

 

 

 

 

Hide Comments(0)

Leave a Reply

உலக மனிதக் குடித்தொகைப் பருமன்,காலத்துடன் மாறுபடுவதைத் திறமாகக் காண்பிக்கும் வரைபடம் பின்வருவனவற்றுள் எது?
(x அச்சு =காலம்,y=மனிதக் குடித்தொகைகப்பருமன்)

Review Topic
QID: 8562
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அங்கிகளில் மிகச் சிறிய மாற்றத்துடன் புவியில் நீண்ட காலமாக வாழ்ந்து வருவது எது?

Review Topic
QID: 8568
Hide Comments(0)

Leave a Reply

புவியியல் அங்கிகளின் உற்பத்தி பற்றி மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கிரமப்படியான தொடரி பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 8590
Hide Comments(0)

Leave a Reply

கூர்ப்பு முறை தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் தவறானது  எது?

Review Topic
QID: 8608

 

Hide Comments(0)

Leave a Reply

கடந்த பல்வேறு காலப் பகுதிகளில் புவியின் சில நிலைமைகள் பின்வருமாறு இருந்தன.         A.    ஒரே உயிர்வாழ் வடிவங்களாக ஒளித்தொகுப்பு
அங்கிகளைக் கொண்ட சமுத்திரங்கள்.
B.    ஆதி முள் மீன்கள் இருத்தல்.
C. ரைலோபைற்றுகள் இருத்தல்.
D.   ஐதரசனைப் பிரதான கூறாகக் கொண்ட வளிமண்டலம்.

E.   காபனீரொட்சைட்டு,மீதேன், அமோனியா ஆகியவற்றைக் கொண்ட வளிமண்டலம்.
மேற்குறித்த நிலைமைகளின் சரியான காலக்கிரம ஒழுங்கினைப் பின்வருவனவற்றுள் எது தருகின்றது?

Review Topic
QID: 8629
Hide Comments(0)

Leave a Reply

ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்  மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்
நிகழ்ந்த பேரழிவின்போது அழிந்த விலங்குக்கூட்டம் கூட்டங்கள் பின்வருவனவற்றில் யாது /  யாவை?

Review Topic
QID: 8665
Hide Comments(0)

Leave a Reply

ஒளித்தொகுப்புக்குரிய அங்கிகள் தோன்றிய காலத்தின் போது

Review Topic
QID: 8713
Hide Comments(0)

Leave a Reply

அங்கிகளின் கூர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள்  தவறானது எது?

Review Topic
QID: 8720
Hide Comments(0)

Leave a Reply

தரையில் முதன்முதலாகத் தோன்றிய அங்கிக் கூட்டங்கள்  பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8782
Hide Comments(0)

Leave a Reply

பூமியின் கண் முதன்முதலாகத் தோன்றி அங்கி வகைகள் காண்பித்த ஊட்டல் முறை எனக் கருதப்படுவது,

Review Topic
QID: 8283

155-158 வரையிலுள்ள வினாக்கள் கீழ்க்காணும் படத்தின் அடிப்படையிலுள்ளன.

படத்திலுள்ள வரைபடங்களில் எது உவர்த்தன்மையைப் பொறுத்தளவில் பரந்த சகிப்பு வீச்சுடைய பிராணிகளைக் குறிக்கும்.

Review Topic
QID: 8285

பொங்குமுகங்களில் காணப்படும் சவர்நீர்களுக்கு வரையறுக் கப்பட்டிருக்கும் பிராணிகளைக் குறிக்கும் வரைபடம் எது?

Review Topic
QID: 8288

நன்நீரில் வாழும் பிராணிகளைக் குறிக்கும் வரைபடம் எது?

Review Topic
QID: 8291

ஒரு குளத்தில் தும்பிக் குடம்பிகளைக் காணக்கூடிய இடமாவது,

Review Topic
QID: 8293

 

வீக்கம் (turgor) தாவரங்களுக்கு முக்கியமாவதன்  காரணம் / காரணங்கள்

 

Review Topic
QID: 8516

 

 

 

 

 

உலக மனிதக் குடித்தொகைப் பருமன்,காலத்துடன் மாறுபடுவதைத் திறமாகக் காண்பிக்கும் வரைபடம் பின்வருவனவற்றுள் எது?
(x அச்சு =காலம்,y=மனிதக் குடித்தொகைகப்பருமன்)

Review Topic
QID: 8562

பின்வரும் அங்கிகளில் மிகச் சிறிய மாற்றத்துடன் புவியில் நீண்ட காலமாக வாழ்ந்து வருவது எது?

Review Topic
QID: 8568

புவியியல் அங்கிகளின் உற்பத்தி பற்றி மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கிரமப்படியான தொடரி பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 8590

கூர்ப்பு முறை தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் தவறானது  எது?

Review Topic
QID: 8608

 

கடந்த பல்வேறு காலப் பகுதிகளில் புவியின் சில நிலைமைகள் பின்வருமாறு இருந்தன.         A.    ஒரே உயிர்வாழ் வடிவங்களாக ஒளித்தொகுப்பு
அங்கிகளைக் கொண்ட சமுத்திரங்கள்.
B.    ஆதி முள் மீன்கள் இருத்தல்.
C. ரைலோபைற்றுகள் இருத்தல்.
D.   ஐதரசனைப் பிரதான கூறாகக் கொண்ட வளிமண்டலம்.

E.   காபனீரொட்சைட்டு,மீதேன், அமோனியா ஆகியவற்றைக் கொண்ட வளிமண்டலம்.
மேற்குறித்த நிலைமைகளின் சரியான காலக்கிரம ஒழுங்கினைப் பின்வருவனவற்றுள் எது தருகின்றது?

Review Topic
QID: 8629

ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்  மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்
நிகழ்ந்த பேரழிவின்போது அழிந்த விலங்குக்கூட்டம் கூட்டங்கள் பின்வருவனவற்றில் யாது /  யாவை?

Review Topic
QID: 8665

ஒளித்தொகுப்புக்குரிய அங்கிகள் தோன்றிய காலத்தின் போது

Review Topic
QID: 8713

அங்கிகளின் கூர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள்  தவறானது எது?

Review Topic
QID: 8720

தரையில் முதன்முதலாகத் தோன்றிய அங்கிக் கூட்டங்கள்  பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 8782
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank