Please Login to view full dashboard.

கூலிக் காலம்

Author : Admin Astan

4  
Topic updated on 05/15/2023 01:45pm
கூலிக்கிரயம்

பொருள் அல்லது சேவையை உற்பத்தி செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் தம்மாம் அர்ப்பணிப்படும் உழைப்பின் சார்பாக நேரடியாக / மறைமுகமாக மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகள் கூலிக்கிரயம் எனப்படும்.

கூலிக்கிரயத்தில் உள்ளடக்கப்படுவது
  1. ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் / கூலி
  2. மேலதிக நேரவேலைக் கொடுப்பனவு
  3. ஏனைய மேலதிகக் கொடுப்பனவுகள்
  4. வைத்திய / ஏனைய விசேட கொடுப்பனவு
  5. ஊழியர் சேமலாப நிதியப் பங்களிப்பு
  6. ஊழியர் நம்பிக்கை நிதியப் பங்களிப்பு
உழைப்புக் காலத்தை அறிக்கைப்படுத்தக்கூடிய முறைகள் இரண்டு காணப்படுகின்றன.
  1. தோற்றும் கால அறிக்கை
  2. தொழிற்படும் கால அறிக்கை
தோற்றும் கால அறிக்கை

சேவை நிலையத்திற்கு வருகை தரும் நேரம் மற்றும் புறப்படு நேரம் என்பவற்றைப் பதிவு செய்தலாகும். இது தரித்திருக்கும் காலம் எனப் பொருள்படும். இதற்காகப் உபாய முறைகள் பயன்படுத்தப்படும்.
உதாரணம் : வரவு இடாப்புப் பயன்பாடு, விரல் அடையாள இயந்திரப் பயன்பாடு, விசேட உடனான அட்டைகளைப் பயன்படுத்தும், நேரப் பதிவு இயந்திரப் பயன்பாடு.

தொழிற்படும் காலத்தைப் பதிவு செய்யும் அறிக்கை

ஊழியரொருவர் வெவ்வேறு வேலைகளில் ஈடுபட்ட / செலவிட்ட காலத்தை அறிக்கைப்படுத்துவதற்காகப் பயன்படுத்துவதற்காகப் பயன்படுத்தும் அறிக்கையாகும். நிறுவனத்தின் தன்மை, வேலையின் தன்மை என்பவற்றைப் பொறுத்து இவ்வறிக்கை பல்வேறு வகைப்பட்டதாகக் காணப்பட முடியும்.
செயற்பாட்டுக் காலத்தைப் பதிவு செய்யும் அறிக்கைகள்

  1. வேலைநேர அட்டை : நாளாந்த வேலை நேர அட்டை, வாராந்த வேலை நேர அட்டை
  2. வேலைச்சீட்டு
  3. வேலைக் கிரய அட்டை
  4. துண்டு வேலை அட்டை
  5. வீணான நேர அட்டை
வேலைநேர அட்டை

ஒவ்வொரு வேலைக்குமாகச் செலவிடப்பட்ட காலத்தை உள்ளடக்கி ஊழியரொருவரினால் பூரணப்படுத்தப்படும் அட்டையே வேலை நேர அட்டையாகும்.

வேலைச் சீட்டு

ஊழியரொருவரினால் பூர்த்தி செய்ய வேண்டிய கருமங்கள், அதற்குரிய ஆலோசனைகள் வழங்கல், அக்கருமங்களுக்காக செலவிடப்பட்ட வேலை நேரத்தையும் பதிவு செய்யும் அட்டையே வேலைச்சீட்டு ஆகும்.

வேலைக்கிரய அட்டை

ஒரு கருமத்தை பலரது ஒத்துழைப்புடன் பூர்த்தி செய்யும் பொழுது ஒவ்வொரு ஊழியர்களினாலும் மேற்கொள்ளப்பட்ட வேலையின் சார்பாக செலவிடப்பட்ட நேரத்தைப் பதிவு செய்வதற்காக அடுத்தடுத்து வரும் ஊழியர்களுக்கு ஒப்படைக்கப்பட்டு கைக்கு கை மாறும் ஆவணமொன்றாகும்.

வீணான வேலை நேர அட்டை

மின்சாரம் தடைப்படல், மூலப்பொருள் பற்றாக்குறையாதல் போன்ற காரணிகளால் ஊழியர்களின் உற்பத்திச் செயற்பாடு வீணாவதை பதிவுசெய்யும் அட்டை வீணான வேலை நேர அட்டை ஆகும்.

RATE CONTENT
QBANK (4 QUESTIONS)

ஒரு ஊழியரினால் செய்ய வேண்டிய வேலை தொடர்பான அறிவுறுத்தல்களையும் அவ்வேலைக்கு ஊழியர் செலவு செய்த நேரத்தினையும் அறிக்கைப்படுத்தல் பயன்படுத்தும் மூல ஆவணம்

Review Topic
QID: 33166
Hide Comments(0)

Leave a Reply

சம்பளப்பட்டியலில் குறிக்கப்படும் ஊழியரின் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் பற்றிய தகவலைப் பெற்றுக்கொள்ளக்கூடிய மூலம் யாது?

Review Topic
QID: 33186
Hide Comments(0)

Leave a Reply

உற்பத்தி நிறுவனமொன்றின் குறிப்பிட்ட செய்முறை தொடர்பான நியமங்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளன.

  • வேலையை முடிப்பதற்கு அனுமதித்த நியம நேரம் 20 மணித்தியாலயங்கள் (கொடுப்பனவுக்குரிய உச்ச காலம் 20 மணித்தியாலங்களாகும்).
  • மணித்தியாலமொன்றிற்கான கொடுப்பனவு ரூ. 100
    நிறுவன ஊழியர்கள் மேற்படி வேலையை செய்து முடிப்பதற்கு எடுத்துக்கொண்ட நேரம் பின்வருமாறு :
    X, Y என்ற இரு ஊழியர்கள் இவ்வேலைகளை எடுத்துக் கொண்ட காலம் பின்வருமாறு :
    X 18 மணி Y 24 மணி

சேமிக்கப்பட்ட காலத்தின் 50% இற்கு மிகையுதியம் வழங்கப்படுமானால் நிறுவனத்தின் மொத்த கூலிக் கிரயம் எவ்வளவு

Review Topic
QID: 33240
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் வரைபடமானது ஊழியர் ஒருவர் வாரம் ஒன்றிற்கான 45 மணித்தியாலங்கள் வேலை செய்ததனால் பெற்ற சம்பளத்தைக் காட்டுகின்றது. இவரின் சம்பளம் வேலை செய்த மணித்தியாலங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வாரம் ஒன்றிற்கான சாதாரண
வேலை மணித்தியாலங்கள் 40 ஆக இருப்பின், இந்த ஊழியருக்கான மணித்தியாலமொன்றிற்கு விதிக்கக் கூடிய மேலதிக நேரக் கொடுப்பனவு வீதம் யாது?

Review Topic
QID: 33320

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank