Please Login to view full dashboard.

பங்குடைமை கணக்கின் சட்ட சூழல்

Author : Admin Astan

8  
Topic updated on 05/09/2023 02:17pm
வரைவிலக்கணம்

1890 ம் ஆண்டின் பங்குடைமைக் கட்டளைச் சட்டத்திற்கேற்ப பங்குடைமை வணிகம் என்பது இலாபம் பெறும் நோக்கத்தில் வணிகமொன்றை நடத்திச் செல்லும் தனிநபர்களிடையே காணப்படுகின்ற உறவு முறையாகும்.

பங்குடைமை வணிகமொன்றில் காணப்பட வேண்டிய பிரதான விடயங்களில் சில பின்வருமாறு :

இலாபம் பெறும் நோக்கம்
தனிநபர்கள்
வணிக முயற்சியொன்று
பொது இணக்கப்பாடு

பங்குடைமை தொடர்பினான சட்டங்கள்
  1. 1890 ஆம் ஆண்டு பங்குடைமைக் கட்டளைச் சட்டம்
  2. 2007 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க கம்பனிச் சட்டத்தின் 519வது பிரிவு
  3. 1840 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க மோசடி தவிர்ப்புக் கட்டளைச் சட்டம்
  4. 1918 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க வணிகப் பெயர்ப் பதிவுக் கட்டளைச் சட்டம்
பங்குடைமை வணிகம் ஒப்பந்தம் ஆரம்பிக்கக்கூடிய முறைகள்
  1. எழுத்து மூலம்
  2. வாய்மொழி மூலம்
  3. பஙகாளர் நடத்தை மூலம்
பங்குடைமை ஒப்பந்தமொன்றில் உள்ளடக்கக்கூடிய நிபந்தனைகள்
  1. மூலதனத்திற்குப் பங்களிப்புச் செய்யும் முறை
  2. பங்காளர்கள் இலாப நட்டங்களைப் பகிர்ந்து கொள்ளும் முறை
  3. பங்காளர்கள் முகாமைத்துவத்திற்குப் பங்களிப்புச் செய்யும் முறை
  4. பங்காளர் சம்பளம் வழங்கப்படும் முறை
  5. மூலதனத்திற்குரிய வட்டி வழங்கப்படும் முறை
  6. பங்காளர் மூலதனத்திற்கு மேலதிகமாக வணிகத்திற்கு வழங்கியுள்ள கடன்களுக்கு வட்டி செலுத்துகின்ற முறை
  7. நன்மதிப்பினைப் பதிவு செய்யும் முறை
ஒப்பந்தமொன்று காணப்படாவிடின் பங்குடைமைக் கட்டளைச் சட்டத்தின் 24ம் பிரிவிற் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்கீட்டுக்குப் பிரதானமான சில பிரிவுகள் பின்வருமாறு :
  1. இலாப நட்டங்களைச் சமமாகப் பகிர்ந்து கொள்ளல் வேண்டும்.
  2. மூலதனத்திற்கு மேலதிகமாக பங்காளர் வழங்கியுள்ள கடனுக்கு ஆகக் குறைந்த வருடாந்த வட்டி 5% பெற உரிமையுண்டு.
  3. நிர்வாக நடவடிக்கைகளில் சகல பங்காளர்களும் ஈடுபட வேண்டும் என்பதுடன் அதற்காகச் சம்பளம் பெறும் உரிமை இல்லை.
  4. மூலதனத்திற்கு வட்டி பெறும் உரிமையில்லை.
  5. பங்குடைமை வணிகத்தின் செலவொன்றைப் பங்காளர் தனிப்பட்ட முறையில் செலுத்தியிருந்தால் அத்தொகை மீள வழங்கப்படல் வேண்டும்.
RATE CONTENT
QBANK (8 QUESTIONS)

பங்குடைமை வணிகமொன்றின் கணக்கு வைப்புத் தொடர்பான பின்வரும் கூற்றுக்களில் சரியான கூற்று / கூற்றுக்கள் ?
A – பங்குடைமை வணிகத்தின் நன்மதிப்பினை மூலதனக் கணக்கினூடாக சீராக்கும் போது மொத்த உரிமையாண்மை உயர்வடையும்.
B – பங்குடைமை வணிகத்திலிருந்து ஓய்வுபெறுகின்ற பங்காளருக்கு செலுத்த வேண்டிய உரிமையினை கடன் கணக்கிற்கு மாற்றும்போது மொத்த உரிமை குறைவடையும்.
C – வணிகத்தின் செலவினை பங்காளர் காசாக செலுத்தும் போது மொத்த உரிமையாண்மையில் எந்த தாக்கமும் ஏற்படாது.

Review Topic
QID: 32424
Hide Comments(0)

Leave a Reply

பங்குடைமை வியாபாரக் கட்டளைச் சட்டத்தின் 24 ம் பிரிவில் உள்ளடங்காத கூற்றாக அமைவது

Review Topic
QID: 32425
Hide Comments(0)

Leave a Reply

1890 ஆம் ஆண்டு பங்குடைமைக் கட்டளைச் சட்டத்தின் 24ஆம் பிரிவில் உள்ளடங்கியுள்ள விடயங்களாவன:
A – பங்காளர் மூலதனத்திற்கு வட்டி இல்லை.
B – இளைப்பாறிய பங்காளர் கடனுக்கான வட்டி வீதம் 5%?.
C – உழைக்கும் பங்காளருக்குச் சம்பளங்கள் உரித்தாக்கப்படும்.
D – இலாபநட்டம் சமமாகப் பகிரப்படும்

சரியான கூற்றுக்களைக் கொண்ட தொகுதி,

Review Topic
QID: 32426
Hide Comments(0)

Leave a Reply

பங்குடைமை தொடர்பில் மிகச்சரியான கூற்றினைத் தெரிவுசெய்க.

Review Topic
QID: 32427
Hide Comments(0)

Leave a Reply

பங்குடைமை வணிக கட்டளைச் சட்டத்தின் 24 ஆவது சரத்தில் உள்ளடங்கியுள்ள சில விடயங்கள் பின்வருமாறு
A – பங்காளரின் மூலதனத்துக்கு 5% வட்டி உரிமையாகும்.
B – பங்காளருக்கு சம்பளம் பெற உரிமை இல்லை.
C – பங்காளர் மூலதனத்துக்கு மேலதிகமாக வழங்கிய கடனுக்கு 10% வட்டி உரிமையாகும்.
D – பங்காளருக்கு இடையில் இலாப நட்டம் சமனாக பிரிக்கப்படல் வேண்டும்.

இச்சரத்து தொடர்பான சரியான விடயங்களை உள்ளடக்கிய விடை

Review Topic
QID: 32428
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுகளில் 1890 பங்குடைமை நிலையியற் கட்டளையின் 24 ஆம் சரத்தில் உள்ளடக்கியிருப்பவை எவை?
A – பங்காளர்களுக்கிடையில் இலாப நட்டங்கள் சமமாகப் பகிரப்பட வேண்டும்.
B – பங்காளர்கள் அவர்களின் மூலதன மீதிகளுக்கான வட்டிக்கு உரித்துடையோர் ஆவர்.
C – பங்காளர்கள் சம்பளங்களுக்கு உரித்துடையவர்கள் அல்லர்.
D – இளைப்பாறிய பங்காளரின் தீர்க்கப்படாத மீதிக்கு வட்டி செலுத்தப்படலாம்.

Review Topic
QID: 32613
Hide Comments(0)

Leave a Reply

பங்குடைமையின் கணக்குகள் தயாரிப்பது தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது பிழையானது ?

Review Topic
QID: 32615
Hide Comments(0)

Leave a Reply

பங்குடைமையொன்று தொடர்பில் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

Review Topic
QID: 32630

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank