Please Login to view full dashboard.

முகாமையில் நீண்டகால தீர்மானம்

Author : Admin Astan

4  
Topic updated on 05/17/2023 09:41am
வரைவிலக்கணம்

எதிர்வரும் பல வருடங்களுக்குப் பொருளாதார நலன்களை எதிர்பார்த்து வணிகத்தில் நிதியத்தை ஈடுபடுத்தல் தொடர்பான தீர்மானம் நீண்டகாலத் தீர்மானம் எனப்படும்.

முதலீட்டு தீர்மானங்களில் நீண்டகால தீர்மானங்கள்
  1. தொழிற்சாலைகளை நிறுவுதல்.
  2. ஆதனம், பொறி உபகரணங்கள் கொள்வனவு செய்தல்.
  3. மோட்டார் வாகனத் தரிப்பிடமொன்றை நிறுவுதல்.
  4. தொழில்சார் / பாடசாலை போன்ற நிறுவனங்களின் பாடநெறிகளை மறுசீரமைத்தல்.
  5. புதிய தொலைபேசி முறைமையொன்றை நிர்மாணித்தல்.
  6. புதிய கணினி முறைமையொன்றை உருவாக்குதல்.
நீண்டகாலத் தீர்மானங்களின் பண்புகள்
  1. ஈடுபடுத்துவதற்காக எதிர்பார்க்கும் நிதி அதிகமாக இருத்தல்.
  2. நீண்டகாலமொன்றாக இருப்பதனால் இடரொன்று காணப்படுதல்.
  3. நீண்டகாலத் தீர்மானங்களில் மாற்றம் செய்ய முடியாதிருத்தல். (அதாவது பிழையான தீர்மானங்களையும் நீண்டகாலத்திற்கு மாற்றம் செய்ய முடியாத நிலை காணப்படல்.)
  4. நீண்டகாலம் முழுவதும் முதலீட்டுத் தொகை முடக்கப்படுதல்.
  5. விரைவாகத் தீர்மானங்களை மேற்கொள்ளாது மதிப்பீடு செய்து தீர்மானங்களை எடுத்தல்.
நீண்டகாலத் தீர்மானம் எடுக்கும் பொழுது பின்பற்றப்பட வேண்டிய படிமுறைகள்
  1. மாற்று முதலீட்டு வழிமுறைகளை இனங்காணல்.
  2. மாற்று முதலீடுகளுக்கான காசுப்பாய்ச்சலை
  3. மதிப்பீடு செய்தல்.
    மாற்று முதலீட்டினை மதிப்பீடு செய்தல்.
  4. பொருத்தமான செயற்திட்டத்தைத் தெரிவு செய்தலும் நடைமுறைப்படுத்தலும் காசுப்பாய்ச்சலை மதிப்பீடு செய்தல், மாற்று முதலீட்டு வழிமுறைகள் ஆகிய படிமுறைகள் இரண்டும் முக்கியமானதாகும்.
காசுப்பாய்ச்சலை மதிப்பீடு செய்தல்

முதலீடொன்றின் ஆரம்பச் சந்தர்ப்பம் முதல் இறுதி வரையிலான காசு உட்பாய்ச்சல்கள் காசுவெளிப்பாய்ச்சல்கள் என்பவை “காசுப்பாய்ச்சல்” எனப்படும். இக்காசுப் பாய்ச்சல்கள் எதிர்வு கூறப்படுதல் வேண்டும். இதனைக் காசுப்பாய்ச்சல் மதிப்பீடு செய்தல் என்பர்.

வரிக்குப் பின்னரான காசுப்பாய்ச்சல் கவனத்தில் கொள்ளப்படும்.
  1. எதிர்காலக் காசுப்பாய்ச்சலை மட்டும் கருத்திற் கொள்ளல்.
  2. முதலீட்டிற்குரிய அனைத்து மறைமுகமாக ஏற்படும் தாக்கங்களின் காரணமாக ஏற்படும் காசுப்பாய்ச்சல்கள் உட்படுத்துதல்.
  3. தற்போதைய நிலை வரையில் செலவிடப்பட்ட கிரயம் காசுப் பாய்ச்சலாகக் கருதப்படுவதில்லை.
  4. வட்டிப் பணம் காசுப்பாய்ச்சலில் உட்படுத்துவதில்லை.
  5. தேய்மானம் மற்றும் காசல்லாத உருப்படிகள் காசுப்பாய்ச்சல்களாகக் கருதப்படுவதில்லை.
தொடக்க முதலீட்டின் காசுப்பாய்ச்சல் மாதிரி

வருடாந்த செயற்பாட்டுக் காசுப்பாய்ச்சல்

முதலீட்டுச் செயற்பாடுகளின் பின்னர் குறித்த காலத்திற்கான செயற்பாட்டுக் கருமங்களுக்காகப் பயன்படுத்துவதன் மூலம் உருவாகும் காசு உட்பாய்ச்சல், காசு வெளிப்பாய்ச்சல் போன்றன வருடாந்தச் செயற்பாட்டுக் காசுப்பாய்ச்சல் எனப்படும்.

உதாரணம் :

  1. உடன் காசு விற்பனைகள் மூலம் பெற்ற காசு
  2. கடன்படுனர்களிடம் பெற்ற காசு
  3. உடன் காசுக் கொள்வனவுகளுக்கான கொடுப்பனவுகள்.
  4. கடன் கொடுத்தோர்களுக்காகச் செலுத்திய காசு
  5. செயற்பாட்டுச் செலவுகளுக்கான கொடுப்பனவுகள்
  6. பெறுமானத்தேய்வு தவிர்ந்த ஆதனம், பொறி, உபகரணங்களுக்கான பராமரித்தல் செலவுகளுக்கான கொடுப்பனவுகள்

மேலுள்ள காசு உட்பாய்ச்சல், காசு வெளிப்பாய்ச்சல் என்பவற்றிற்கான வேறுபாடு செயற்பாட்டுத் தேறிய காசுப்பாய்ச்சல் எனப்படும்.

செயற்றிட்ட இறுதியிலான காசுப்பாய்ச்சல்

முதலீட்டின் பயன் தரு கால இறுதியிலே காணப்படும் காசு உட்பாய்ச்சல், காசு வெளிப்பாய்ச்சல்களை செயற்றிட்ட இறுதியிலான காசுப்பாய்ச்சல் எனப்படும்.
உதாரணம்:
முதலீட்டின் எஞ்சிய பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் காசு
தொழிற்படு மூலதனத்தை மீளவும் அறவிட்டுக் கொள்ளல்
ஏனைய பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் பெற்ற காசு

RATE CONTENT
QBANK (4 QUESTIONS)

முதலீட்டுத் தீர்மானங்களின் மதிப்பீட்டு நுட்பங்களுடன் தொடர்புடைய பின்வரும் கூற்றுக்களில் சரியான கூற்று எது?

Review Topic
QID: 35835
Hide Comments(0)

Leave a Reply

நீண்டகால முதலீட்டு செயற்திட்டத்தின் மதிப்பீடு பின்வருவனவற்றுள் எதனில் தங்கியுள்ளது?

Review Topic
QID: 35852
Hide Comments(0)

Leave a Reply

பணத்திற்கு காலப்பெறுமதி உண்டு. ஏனெனில்

Review Topic
QID: 35853
Hide Comments(0)

Leave a Reply

சாத்தியமான செயற்றிட்டமாக அடையாளம் காணப்பட்ட புதிய உற்பத்தி செய்முறை ஒன்றை தாபிப்பது தொடர்பில் எழுந்த பின்வரும் கிரயங்களில் எவைகளை மூலதனமாக்கக் கூடிய அபிவிருத்திக் கிரயங்களாக இனங் காணமுடியும்?
A – உற்பத்தி செய்முறையினை அபிவிருத்தி செய்வதற்குப் பயன்படுத்திய மூலப் பொருள்கள்
B – ஊழியர்கள் உற்பத்தி செய்முறையுடன் பரிச்சயமாவதற்கான பயிற்சிக் கிரயம்
C – உற்பத்தி செய்முறையின் சாத்தியத் தன்மையை மதிப்பிடல் தொடர்பில் ஏற்பட்ட ஆலோசனைக் கட்டணங்கள்
D – உற்பத்தி செய்முறையைத் தாபிக்கும் போது பயன்படுத்தப்பட்ட ஆய்வுகூட உபகரணங்களிற்கான பெறுமானத் தேய்வு

Review Topic
QID: 35858
Hide Comments(0)

Leave a Reply

முதலீட்டுத் தீர்மானங்களின் மதிப்பீட்டு நுட்பங்களுடன் தொடர்புடைய பின்வரும் கூற்றுக்களில் சரியான கூற்று எது?

Review Topic
QID: 35835

நீண்டகால முதலீட்டு செயற்திட்டத்தின் மதிப்பீடு பின்வருவனவற்றுள் எதனில் தங்கியுள்ளது?

Review Topic
QID: 35852

பணத்திற்கு காலப்பெறுமதி உண்டு. ஏனெனில்

Review Topic
QID: 35853

சாத்தியமான செயற்றிட்டமாக அடையாளம் காணப்பட்ட புதிய உற்பத்தி செய்முறை ஒன்றை தாபிப்பது தொடர்பில் எழுந்த பின்வரும் கிரயங்களில் எவைகளை மூலதனமாக்கக் கூடிய அபிவிருத்திக் கிரயங்களாக இனங் காணமுடியும்?
A – உற்பத்தி செய்முறையினை அபிவிருத்தி செய்வதற்குப் பயன்படுத்திய மூலப் பொருள்கள்
B – ஊழியர்கள் உற்பத்தி செய்முறையுடன் பரிச்சயமாவதற்கான பயிற்சிக் கிரயம்
C – உற்பத்தி செய்முறையின் சாத்தியத் தன்மையை மதிப்பிடல் தொடர்பில் ஏற்பட்ட ஆலோசனைக் கட்டணங்கள்
D – உற்பத்தி செய்முறையைத் தாபிக்கும் போது பயன்படுத்தப்பட்ட ஆய்வுகூட உபகரணங்களிற்கான பெறுமானத் தேய்வு

Review Topic
QID: 35858
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank