Please Login to view full dashboard.

கணக்கீட்டு எண்ணக்கருக்கள்

Author : Admin Astan

72  
Topic updated on 05/04/2023 02:44pm
1. அலகுசார் எண்ணக்கரு (The Business Entity concept)

நிறுவனங்களுக்குரிய கணக்குப் பதிவுகள் மேற்கொள்ளும் மேற்கொள்கையில் நிறுவனம் தனி அலகாகவும், கருதியே கணக்குப் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன இவ்வெண்ணக்கரு ஆகும்.
உதாரணம் : பற்று

2. தொடர்ந்து இயங்கும் எண்ணக்கரு (The Going concern concept)

நிறுவனங்களின் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்படும் போது அந்நிறுவனமானது அவை நீணடகாலப்போக்கில் தொடர்ந்து இயங்கும் தன்மை வாய்ந்தது என்ற அடிப்படையில் தயாரிக்கப்பட வேண்டும் என்ற எண்ணக்கருவை வலியுறுத்துகின்றது.
முதலீட்டாளர், ஊழியர், வழங்குனர், வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடிதல் மற்றும் ஒத்துழைப்புகளை பெறல் இதன் அனுகூலமாகும்.
உதாரணம் : சொத்துக்கள் நடைமுறைச் சொத்து, நடைமுறையல்லாச் சொத்து என வகைப்படல்.

3. பண அளவீட்டு எண்ணக்கரு (The Money Measurement concept)

வியாபார நிறுவனங்களில் இடம்பெறுகின்ற சகல கொடுக்கல் வாங்கல்களுக்குரிய கணக்குப்பதிவுகள் யாவும் பணம் என்ற பொதுவான கருவியால் அளவிடப்பட்டு பணவீக்க வீதம், பணச்சுருக்கம் போன்றவற்றால் ஏற்படுகின்ற மாற்றங்களை இது கவனத்தில்கொள்வதில்லை.
உதாரணம் : பரிமாற்று ஊடகமாக தொழிற்படல்

4. அட்டுறு எண்ணக்கரு (Accrual concept)

குறித்த காலப்பகுதிக்கான வணிகமொன்றின் நிதிப் பெறுபேற்றினைக் கணிப்பிடும் போது காலப்பகுதிக்குரிய சகல வருமானங்களும் பணமாகப் பெறப்பட்டிருந்தாலும், பெறப்படாதிருந்தாலும் அவை வருமானங்களாகவும், காலப்பகுதிக்குரிய சகல செலவுகளும் பணமாக செலுத்தப்பட்டிருந்தாலும், செலுத்தப்படாவிடினும் அவை செலவுகளாகவும் இனங்காணப்படல் வேண்டும் என்பது இந்த எண்ணக்கருவின் மூலம் வலியுறுத்தப்படுகின்றது.
உதாரணம் : முற்பண வாடகை, செலுத்தவேண்டிய மின்சாரம்

5. கொள்கை எண்ணக்கரு (Consistancy Concept)

நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல் நிகழ்வுகளில் ஆரம்பத்தில் பின்பற்றப்பட்ட கொள்கை, முறைகள், ஒழுங்குகள் எதுவோ அதனையே மாறாமல் எதிர்வரும் காலங்களிலும் பின்பற்ற வேண்டும்.
உதாரணம் : FIFO முறைக்குப் பதிலாக LIFO முறையை பின்பற்றியதால் இலாபம் ஈட்டியுள்ளது.

6. கால அளவு எண்ணக்கரு (Period concept)

நிறுவனத்தின் ஆயுட்காலத்தை சீரான சிறு சிறு கால இடவெளிகளாகப் பிரித்து ஒவ்வொரு காலப் பகுதிக்குரிய பெறுபேற்றினையும் தனித்தனியே கணித்துக் கொள்ள வேண்டும் என இது வலியுறுத்துகின்றது.
உதாரணம் : கான் நிறுவனத்தின் நிதிக்கூற்றுக்கள் 31-03-2022 நிறைவுசெய்யப்பட்டன.

7. வரலாற்றுக் கிரய எண்ணக்கரு (Historical cost concept)

வணிகத்திற்குரிய வளங்கள் அவைகளுக்குச் செலவிடப்பட்ட செலவுகள் என்பன அவற்றை உரிமையாக்கிக் கொள்ளும்போது பரிமாற்றம் செய்யப்பட்ட உண்மைக்கிரயத்தின் அடிப்படையில் ஏடுகளில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது இவ்வெண்ணக் கருவின் கருத்தாகும்.
கிரயத்தின் அடிப்படையில் பதிவு செய்வதன் காரணமாக பெறுமானத்தை உறுதிப்படுத்திக் கொள்வது தொடர்பாக, நம்பகத்தன்மை காணப்படும், இலகுவான தன்மை கொண்டது எனவும் நிறுவப்படும்.
உதாரணம் : முற்பண வாடகை, செலுத்தவேண்டிய மின்சாரம்

8. இணைதல் எண்ணக்கரு (MATCHING CONCEPT)

நிதியாண்டிற்குரிய நிதிப் பெறுபேற்றினைக் கணிப்பிடும் பொழுது அந்நிதியாண்டின் வருமானம், அவ்வருமானத்தை ஈட்டுவதற்காகப் பங்களிப்புச் செய்த செலவுகளுடன் பொருந்தச் செய்தல் வேண்டும் என்பதே இணைதல் எண்ணக்கருவின் மூலம் கருதப்படுகின்றது.
உ-ம் இவ்வாண்டில் நட்டம் ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்டபோதும் கடன்பட்டோரில் 10% ஐயக்கடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

9. தேறல் எண்ணக்கரு (REALIZATION CONCEPT)

வருமானம் உண்மையாக உழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தின்போது அவ்வருமானம் இனங்காணப்பட வேண்டுமென இவ் எண்ணக்கரு உணர்த்துகின்றது.
உ-ம் : கடன் விற்பனை, விற்பனை முற்பணம்

10. பாதுகாப்பு எண்ணக்கரு / முன்னெச்சரிக்கை எண்ணக்கரு (PRUCENCE CONCEPT)

இலாபத்தை எதிர்ப்பார்க்காதே எல்லா நட்டங்களுக்கும் ஏற்பாடு செய்வதை வலியுறுத்துகின்றது. அதாவது நிறுவனத்திற்கு எதிர்காலத்தில் செலவினங்கள் அல்லது நட்டங்களை ஏற்படும் என முன்கூட்டியே கருதி அவற்றிற்கான ஏற்பாடுகளை கணக்குகளில் உள்ளடக்க வேண்டும்.
உ-ம் : இருப்பு கிரயம், தேறிய பெறுமதி எது குறைவோ அதை நிதிக்கூற்றுக்களில் காட்டுதல்.

11. முக்கியத்துவ எண்ணக்கரு / பொருண்மை எண்ணக்கரு (MATERIALITY CONCEPT)

கணக்கீட்டு கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்யும்போது அவை நிதிக்கூற்றில் ஏற்படுத்தும் செல்வாக்கின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் கணக்குப் பதிவுக்கு உட்படுத்த வேண்டும் என இவ் எண்ணக்கரு வலியுறுத்துகின்றது. அதாவது நிறுவனத்தில் கொடுக்கல் வாங்கல்களுக்குரிய கணக்குப் பதிவுகள் மேற்கொள்ளும்போது நிறுவனத்தின் இயலளவு தன்மைக்கும், கொடுக்கல் வாங்கல்களின் தன்மை, அளவு அதன் முக்கியத்துவம் ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட்டு பதிவுகளை மேற்கொள்ள வேண்டாம் என்பதை வலியுறுத்துகின்றது.

12. வெளிப்படுத்தல் எண்ணக்கரு / தெரியப்படுத்தல் எண்ணக்கரு (DISCLOSURE CONCEPT)

நிதிக்கூற்றுக்களை பயன்படுத்தும் கட்சியினர் அதன் உண்மைத் தன்மையினை விளங்கிக்கொள்ளத்தக்க வகையில் அதில் போதியளவு தகவல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது இவ்வெண்ணக்கருவாகும்.
உ-ம் : மீளப்பெற்ற அறவிடமுடியாக் கடன் கடன் பட்டோர் கணக்கில் இருபக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

13. தோற்றத்திலும் கருத்து முக்கியம் எண்ணக்கரு (SUBSTANCE OVER FROM)

கொடுக்கல் வாங்கல்களை கணக்கீட்டுக்கு உட்படுத்தும்போது சட்டரீதியான விடயங்களை கவனத்தில கொள்ளாது நிதிசார்ந்த உண்மைத்தன்மையும் சார்புத் தன்மையுமானுமென்பது இந்த எண்ணக்கருவின் கருத்தாகும்.
உ-ம் : குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்ட பொறி நிதிக்கூற்றில் சொத்தாக காட்டப்படல்.

RATE CONTENT
QBANK (72 QUESTIONS)

நிதிக் கூற்றுக்களைத் தயார் செய்வதற்கான அடிப்படை வழிகாட்டியாக அமைவது

Review Topic
QID: 31643
Hide Comments(0)

Leave a Reply

நிதிக்கூற்று தயார் செய்யும் போது அடிப்படையாகப் பின்பற்றப்படும் கணக்கீட்டு எடுகோள் யாது?

Review Topic
QID: 31644
Hide Comments(0)

Leave a Reply

நிதிக்கூற்றுக்களைப் பயன்படுத்தி பொருளாதார தீர்மானங்களை மேற்கொள்ளும் கட்சியினருக்குப் பாதுகாப்பினை வழங்கும் எண்ணக்கரு எது?

Review Topic
QID: 31645
Hide Comments(0)

Leave a Reply

2000 ஆம் ஆண்டில் ரூபா 2 000 000 க்கு கொள்வனவு செய்யப்பட்ட காணியொன்று 2016.03.31 ஆம் திகதி நிதிக் கூற்றில் ரூபா 5 000 000 மீள் மதிப்பீட்டுப் பெறுமதியில் காட்டப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் பின்பற்றப்படாத கணக்கீட்டு எண்ணக் கருவும், மீள் மதிப்பீட்டு பெறுமதியை பதிவு செய்ததன் மூலம் வெளிப்படுத்தப்படுகின்ற தரரீதியான பண்பும் எவை?

Review Topic
QID: 31646
Hide Comments(0)

Leave a Reply

குறித்ததோர் மாதத்தில் வணிகமொன்று ரூபா 50 000 கிரயமான இருப்புக்களினை ரூபா 80 000 கடனுக்கு விற்பனை செய்தது மற்றோர் வாடிக்கையாளரிடமிருந்து விற்பனை முற்பணமாக ரூபா 20 000னை பெற்றிருந்தது. இக் கொடுக்கல்
வாங்கல்களினால் குறித்த இம்மாதத்திற்கான வருமானம் செலவு மற்றும் இவற்றினை இனங்காண்பதில் பிரயோகிக்கப்படும் கணக்கீட்டு எண்ணக்கரு முறையே

Review Topic
QID: 31652
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுக்களில் தொடர்ந்து செயற்படும் எண்ணக்கருவைக் குறித்து நிற்கும் கூற்று

Review Topic
QID: 31653
Hide Comments(0)

Leave a Reply

அட்டுறு, கால அளவீடு, தேறல் போன்ற எண்ணக்கருக்கள் மூன்றும் பொருத்தமாக அமையும் சந்தர்ப்பம் எது?

Review Topic
QID: 31654
Hide Comments(0)

Leave a Reply

‘தேறிய எனினும் இன்னும் கிடைக்கப் பெறாத வருமானங்கள் பொறுப்பாக கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.”என்பது பின்வரும் எந்த எண்ணக்கருவுக்கு / எண்ணக்கருக்களுக்கு பொருத்தமானது?

A – கொள்கை மாறாத
B – அட்டுறு
C – இணைதல்
D – தேறல்

Review Topic
QID: 31655
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்று/ கூற்றுக்களில் எது சரியானது / சரியானவை?
A – உரிமைக் கோட்பாடானது கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் சுயாதீனமாக பதிவு செய்யப்பணிக்கிறது.
B – வரலாற்றுக்கிரய எண்ணக்கருவினால் ஏடுகளில் மிகவும் நம்பகரமான பெறுமதியினைக் காட்டும் பொருட்டு சொத்துக்களினை அவற்றின் கிரயத்தில் பெறுமானமிடுகிறது.
C – அட்டுறு எண்ணக்கரு கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளின் தாக்கங்களை பணம் பெறும் போது அல்லது செலுத்தும் போது அல்லது அவை நிகழும் போது இனங்காணப்பணிப்பது
D – கொடுக்கல் வாங்கலொன்றின் சட்டவடிவம் நிதிக் கூற்றுக்களில் பிரதிபலித்தல் வேண்டும்.

Review Topic
QID: 31656
Hide Comments(0)

Leave a Reply

நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பில் பாரிய செல்வாக்கினைச் செலுத்துவதும் LKAS – 01 லும் அடிப்படை எண்ணக்கருவாகக் கருதப்படுவது எது?

Review Topic
QID: 31657
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்று / கூற்றுக்களில் எது/ எவை சரியானது / சரியானவை?

A – ரூபா 850, 000க்கு வாங்கிய காணி 2015.03.31 இன் நிதி அறிக்கையில் 1 150 000 ஆக காட்டப்பட்டமை வரலாற்றுக் கிரய எண்ணக்கரு மீறப்பட்டமையாகும்.
B – கொடுக்கல் வாங்கல்களையும், நிகழ்வுகளையும் ஏனைய பகுதியினரின் சுதந்திரத்தை பேணும் வகையில் பதிவதற்கு தொழில் முழுமை கூறு எண்ணக்கரு பொருத்தமானதாக அமைகின்றது.
C – நிதிநிலைமைக் கூற்றில் நடைமுறையல்லா சொத்துக்களின் திரண்ட பெறுமான தேய்வு ஏற்பாடாக காட்டப்படுதல் தொடர்ந்து செல் எண்ணக்கருவிற்கு அமைவானதாகும்.

Review Topic
QID: 31661
Hide Comments(0)

Leave a Reply

குத்தகையாளரிடமிருந்து பெறப்பட்ட குத்தகையாதனம் நிறுவனத்தின் ஐந்தொகையில் சொத்தாகக் காட்டுவதற்கு அடிப்படையாக அமைந்த எண்ணக்கரு யாது?

Review Topic
QID: 31662
Hide Comments(0)

Leave a Reply

ஐந்தொகையில் உரிமையாண்மை, நடைமுறைப் பொறுப்புக்கள் என தலைப்புக்கள் வகைப்படுத்தப்படுவதனை வலியுறுத்தும் எண்ணக்கரு பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 31665
Hide Comments(0)

Leave a Reply

நடைமுறையல்லா சொத்துக்களுக்கு பெறுமானத் தேய்விடுவதற்கு அடிப்படையாக அமைந்த கணக்கீட்டு எண்ணக்கரு யாது?

Review Topic
QID: 31663
Hide Comments(0)

Leave a Reply

வரையறுத்த மதுஷா கம்பனி 2011/2012 நிதியாண்டில் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்திருந்தது. நிதியாண்டு இறுதி ஐந்தொகையில் இக்குத்தகை வாகனத்தைச் சொத்தாகக் காட்டவில்லை. இங்கு எவ் எண்ணக்கரு மீறப்பட்டுள்ளது.

Review Topic
QID: 31664
Hide Comments(0)

Leave a Reply

பண்டங்களின் விற்பனை மூலம் ஈட்டப்பெறும் வருமானம் இனங்காணப்படுவதற்கு திருப்திப்படுத்த வேண்டிய நிபந்தனைகளில் பொருத்தமற்றது

Review Topic
QID: 31666
Hide Comments(0)

Leave a Reply

கீழ் தரப்பட்டுள்ள ஒவ்வோர் சந்தர்ப்பத்திலும் மிகவும் தொடர்புடைய கணக்கீட்டு எண்ணக்கரு முறையே

A – வருமானம் உழைக்கப்படும் போது அது கம்பனியின் வருமானக் கூற்றில் இனங்காணப்படல்.
B – கம்பனியின் நிதிக் கூற்றுகளில் பணவீக்கத்திற்கான சீராக்கம் செய்யப்படுவதில்லை.
C – ஏற்புடைய சாத்தியமான உத்தரவாத கோரிக்கை தொடர்பில் கம்பனி ஒன்றின் நிதிக்கூற்றுகளில் ஏற்பாடு ஒன்று செய்யப்படும்.
D – நிதிக்குத்தகையில் பெறப்பட்ட ஆதனம் ஒன்றை சொத்தாகவும் அதன் கடப்பாட்டினை பொறுப்பாகவும் இனங்காணல்.

Review Topic
QID: 31667
Hide Comments(0)

Leave a Reply

விற்பனைப் பட்டியலை வாடிக்கையாளருக்கு சமர்ப்பித்த வேளையில் விற்பனையானது ஒரு வருமானமாக இனங்காணப்படுகின்றது. இதற்கு அடிப்படையாக அமையும் எண்ணக்கரு

Review Topic
QID: 31674
Hide Comments(0)

Leave a Reply

Thermo Ltd இன் நிதி ஆண்டு 31.03.2012 ல் முடிவடைகிறது. 25 மார்ச் 2012 ல் ரூபா 300 000 வான இருப்புகளுக்கு கட்டளையிட்டது. பொருட்கள் 31.03.2012 ல் களஞ்சியத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் கொள்வனவு கிரயப்பட்டியல் வழங்குனரிடமிருந்து 03.04.2012ல் கிடைக்கப் பெற்றது. ஆனால் கம்பனி பெற்றுக் கொள்ளப்பட்டிருந்த பொருட்களினை 31.03.2012 ல் இருப்பு மதிப்பீட்டில் உள்ளடக்கியிருந்தது. எவ்எண்ணக்கருவுடன் இது ஒத்துச் செல்கிறது.

Review Topic
QID: 31675
Hide Comments(0)

Leave a Reply

“தேறல் எண்ணக்கரு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது ஃ எவை உண்மையானதாகும்.
A – வருமானம் உழைக்கப்படல் வேண்டும்.
B – வருமானம் தேறப்படல் வேண்டும்.
C – பொருட்கள் தொடர்பான உற்பத்திச் செயன்முறையினை முடிவுறுத்த வேண்டும் என்பது அவசியமில்லை.

Review Topic
QID: 31676
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் எண்ணக்கருக்கள் தொடர்பாக கூறப்பட்ட கூற்றுகளில் சரியானது / சரியானவை
A – தேறல் எண்ணக்கருவின் படி சேவை ஒன்று வழங்கப்பட்டதுமே அவை சேவை வருமானமாக காட்ட முடியும்.
B – நிதிக்கூற்றுகளை தயாரிக்கும் பொழுது பின்பற்றப்பட வேண்டிய அடிப்படை / அடிப்படைகள் பொருண்மை / அட்டுறு ஆகும்.
C – பாதுகாப்பு எண்ணக்கருவிற்கமைய கடன்கொடுத்தோர் கழிவு ஏற்பாடு பேணப்பட்டு இருத்தல்
D – தொடர்ந்து இயங்கும் எண்ணக்கருவிற்கமைவாக இருப்புகள் நடைமுறைச் சொத்து ஒன்றாக வெளிப்படுத்துவது

Review Topic
QID: 31677
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனத்தின் நாளாந்த பயன்பாட்டிலுள்ள சிறு உபகரணங்கள் ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலத்திற்கு பாவிக்கக்கூடியதாக இருந்தபோதும் இவைகளை கொள்வனவு செய்த ஆண்டின் வருமானக் கூற்றில் தாக்கல் செய்ய தேவிகா நிறுவனம் தீர்மானித்தது. இங்கு வலியுறுத்தும் எண்ணக்கரு

Review Topic
QID: 31678
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனமொன்றின் வங்கிக் கணக்கினூடாக உரிமையாளரின் வீட்டு மின்கட்டணம் தொடர்பாக செலுத்தப்பட்ட ரூபா 5 000 ஒரு நிறுவன செலவினமாக வருமானக்கூற்றில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இது எவ் எண்ணக்கருவினை மீறுவதாக உள்ளது?

Review Topic
QID: 31679
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனமொன்று அடுத்துவரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படவேண்டிய ரூபா 80 000 விற்பனை ஒப்பந்தம் தொடர்பாக நிகழாண்டில் ரூபா 20 000 முற்பணமாக பெற்று அதனை நிகழாண்டின் விற்பனைக் கணக்கினுள் உள்ளடக்கியுள்ளது. இது  எவ் எண்ணக்கருவினை மீறுவதாக உள்ளது?

Review Topic
QID: 31680
Hide Comments(0)

Leave a Reply

அஜித் வியாபாரம் காசாக செலுத்திய வருமானவரி தொகை ரூபா 60 000 வருமான வரிச் செலவுக்கணக்கில் பதிந்தது. அஜித்தின் வருமானவரி ரூபா 82 000 என கணக்காண்டுக்கு மதிப்பிடப்பட்டது. இங்கு மீறப்பட்ட கணக்கீட்டு எண்ணக்கரு
யாது?

Review Topic
QID: 31681
Hide Comments(0)

Leave a Reply

பிரதீஸ் வியாபாரம் மாதம் ரூ. 5 000 வாடகையாக செலுத்துகிறது. இவ்வாண்டில் 10 மாதங்களுக்கு செலுத்திய வாடகை மட்டும் நிதிக்கூற்றில் பதிவு செய்யப்பட்டது. இங்கு மீறப்பட்ட எண்ணக்கரு

Review Topic
QID: 31684
Hide Comments(0)

Leave a Reply

ஹரி வியாபார ஸ்தாபனம் 2012ம் ஆண்டு இயாஸ் என்னும் புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ. 300 000 பெறுமதியான பண்டங்களை கடனுக்கு விற்பனை செய்தது. 2013 ஆம் ஆண்டில் ரூ. 220 000 வசூலிக்கப்பட்டது. மிகுதியை
செலுத்துவதற்கு இயாஸ் வகையற்றவராக காணப்பட்டமையால் 2014 ஆம் ஆண்டில் அத்தொகை அறவிட முடியாக் கடனாக பதிவழிக்கப்பட்டது. இங்கு மீறப்பட்ட கணக்கியல் எண்ணக்கரு

Review Topic
QID: 31685
Hide Comments(0)

Leave a Reply

விற்பனை செய்யப்படாத கொள்வனவுகள் சொத்தாகவும், விற்பனை செய்யப்பட்ட கொள்வனவுகள் செலவினமாகவும் இனம் காண்பதற்கு அடிப்படையை வழங்கும் எண்ணக்கரு

Review Topic
QID: 31686
Hide Comments(0)

Leave a Reply

தொடர்ந்தியங்கும் எண்ணக்கரு கைவிடப்பட்டால் ஏற்படும் விளைவுகள் தரப்படுகிறது.

A- நடைமுறையல்லாச் சொத்துக்களுக்கு பெறுமானத் தேய்விட முடியாது.
B- வருமானங்களையும் செலவினங்களையும் ஒப்பிட முடியாது.
C- பொறுப்புக்களை நடைமுறைப் பொறுப்பு, நடைமுறையல்லா பொறுப்பு என வகைப்படுத்த முடியாது.
D- அட்டுறு செலவினங்கள், அட்டுறு வருமானங்களை பதிவு செய்ய முடியாமை.

மேற்படி கூற்றுக்களில் சரியானவை பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 31687
Hide Comments(0)

Leave a Reply

ஐயக்கடன் ஏற்பாடு செய்யப்படுவதுடன் தொடர்புடைய இரண்டு எண்ணக்கருக்கள் யாது?

Review Topic
QID: 31688
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுக்கள் உமக்கு தரப்படுகிறது.

A- சொத்தொன்றின் சந்தைப் பெறுமதியை புத்தகங்களில் பதிவு செய்தல் வரலாற்று கிரயத்திற்கு முரணானது.
B- உரிமையாளரின் சொந்த ஆயுட் காப்புறுதி கட்டணத்தை வியாபரத்தின் வருமானக்கூற்றில் பதியாது விடல் தொழில் முழுமைக்கூற்றுக்கு அமைவானதாகும்.
C- ஐயக்கடன் ஏற்பாடு செய்தல் பாதுகாப்பு எண்ணக்கருவிற்கு முரணானதாகும்.

மேற்படி கூற்றுக்களில் எது உண்மையானது?

Review Topic
QID: 31690
Hide Comments(0)

Leave a Reply

அட்டுறு, முன்னெச்சரிக்கை, இணைதல் ஆகிய மூன்று எண்ணக்கருவுக்கும் அமைவாகப் பதிவு செய்யப்படும் கொடுக்கல் வாங்கலாக அமைவது

Review Topic
QID: 31691
Hide Comments(0)

Leave a Reply

கடன் விற்பனையை வருமானமாக இனம் காண்பதுடன் தொடர்புடைய எண்ணக்கருக்களையுடைய தொகுதி

Review Topic
QID: 31692
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனம் ஒன்றின் நிதிக்கூற்றுக்களில் காட்டப்படும் சில விடயங்கள் வருமாறு :

A – கடன்பட்டோர், கடன்கொடுத்தோர் மீதி காட்டுதல்.
B – நடைமுறை, நடைமுறையல்லாத சொத்துக்கள், பொறுப்புக்களை வகைப்படுத்தல்.
C – உத்தரவாதங்களுக்கு ஏற்பாடு செய்து காட்டுதல்.

இவற்றினை வலியுறுத்தும் சரியான எண்ணக்கருக்கள் முறையே

Review Topic
QID: 31693
Hide Comments(0)

Leave a Reply

வரையறுத்த யாதவன் கம்பனி ஒவ்வொரு வருடமும் கடன்பட்டோர் மீதியில் 10% ஐயக்கடன் ஏற்பாட்டை மேற்கொள்கிறது. மேற்படி ஐயக்கடன் ஏற்பாடு செய்வதற்கு அடிப்படையாக அமையும் கணக்கீட்டு எண்ணக்கரு

Review Topic
QID: 31694
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எவ் எண்ணக்கரு வாடிக்கையாளருக்கு பொருள் விநியோகிக்கும் போது அதனை விற்பனை வருவாயாக இனம்காண்பதற்கான அடிப்படையை வழங்குகிறது?

Review Topic
QID: 31696
Hide Comments(0)

Leave a Reply

நிதிநிலைமைக்கூற்றில் இறுதி இருப்பானது நடைமுறைச் சொத்தாகவும், அதன் பெறுமதி தேறிய தேறத்தக்க பெறுமதியிலும் வெளிப்படுத்தி இருந்தது. இதனுடன் தொடர்புடைய பின்வரும் எண்ணக்கருக்களில் எது / எவை சரியானதாகும்
A -தேறல்                            B -முன்னெச்சரிக்கை                                     C – தொடர்ந்தியங்குதல்

Review Topic
QID: 31698
Hide Comments(0)

Leave a Reply

குறித்த கணக்காண்டில் கடன் விற்பனையை வருமானக் கூற்றில் வருமானமாக இனங்காண்பதுடன் தொடர்படைந்த எண்ணக்கருக்கள்?

Review Topic
QID: 31700
Hide Comments(0)

Leave a Reply

நிதியறிக்கைகளைத் தயாரிப்பதற்கு பின்பற்றப்படும் கணக்கீட்டு முறைகள், விதிகள் என்பவற்றை அடிக்கடி மாற்றாது தொடர்ந்து பின்பற்றுவதை உணர்த்துவது

Review Topic
QID: 31701
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனம் வேறு உரிமையாளர் வேறு எனும் அடிப்படையை வெளிக்காட்டும் எண்ணக்கரு

Review Topic
QID: 31702
Hide Comments(0)

Leave a Reply

நிதிக் கணக்கீட்டுக்கு எண்ணக்கரு ரீதியான சட்டகத்தை உருவாக்குவதற்கு காரணமாக அமைந்தது பின்வருவனவற்றுள் எதுவாகும்?

A – கணக்கீட்டு நியமத்தை தயாரிப்பதற்கான அடிப்படையை வழங்கல்.
B – நிதிக் கூற்றைப் பயன்படுத்துவோருக்கு அவற்றை நன்கு புரிந்து கொள்ள ஆற்றலை வழங்குதல்.
C – உரிய கணக்கீட்டு நியமம் இல்லாத சந்தர்ப்பத்தில் நிதிக்கூற்றை தயாரிப்பதற்கு வழி காட்டுதல்.
D – நிதித் தகவல்களின் பண்புத் தரத்தை மேம்படுத்துவதற்கு கோட்பாட்டு ரீதியான அடிப்படையை வழங்குதல்.

Review Topic
QID: 31717
Hide Comments(0)

Leave a Reply

உதிரிப் பாகங்களை ஒரு வருடத்திற்கும் மேலாக பாவனை செய்யக் கூடியதாக இருந்த போதும்,  இவைகள் கொள்வனவு செய்யப்பட்ட வருடத்திலேயே இதன் கிரயம் இலாப நட்டக் கணக்கில் முழுமையாக பதிவழிக்கப்பட்டுள்ளது. இதற்கான கணக்கீட்டினைப் பின்வரும் எந்தக் கணக்கீட்டு எண்ணக்கருவின் கீழ் கையாளப்படுகின்றது?

Review Topic
QID: 31719
Hide Comments(0)

Leave a Reply

வரலாற்றுக் கிரய எண்ணக்கருவானது விலைகள் அதிகரிக்கும் காலங்களில்

Review Topic
QID: 31720
Hide Comments(0)

Leave a Reply

ஐந்தொகையில் குறித்த விடயமொன்று சொத்து என அடையாளப்படுத்துவதற்குக் கீழே தரப்பட்ட நிபந்தனைகளில் எது அவசியமற்றது?

Review Topic
QID: 31721
Hide Comments(0)

Leave a Reply

நடைமுறையல்லாச் சொத்துக்களிற்குப் பெறுமானத் தேய்விடுவதற்கு அடிப்படையாக அமைந்த கணக்கீடு எண்ணக்கரு எது?

Review Topic
QID: 31722
Hide Comments(0)

Leave a Reply

ஒரு வருடத்தில் கொள்வனவு செய்த சரக்குகளின் கிரயத்தின் ஒரு பகுதியாக விற்ற சரக்கின் கொள்விலை (செலவு) ஆகவும் மீதியை வருட இறுதியில் இருப்புக்களாகவும் (சொத்து) இனம் காண்பதற்கு அடிப்படையாக அமையும் கணக்கீட்டு
எண்ணக்கரு

Review Topic
QID: 31723
Hide Comments(0)

Leave a Reply

கிரயம், தேறிய தேறக்கூடிய பெறுமானம் என்னும் இரு பெறுமானங்களிடையே குறைந்த பெறுமானத்தின் மீது இருப்பைக் கணிப்பதற்கான அடிப்படையை வழங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு

Review Topic
QID: 31724
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் சொத்து என்பதனாற் கருதப்படுவதைச் சிறப்பாக விளக்கும் கூற்று எது?

Review Topic
QID: 31725
Hide Comments(0)

Leave a Reply

ஒரு நிறுவனத்தின் இலாபக் கணிப்பு மிகச் சரியாக இருப்பது எப்பொழுதெனில், அதன் இலாபம்

Review Topic
QID: 31726
Hide Comments(0)

Leave a Reply

வியாபார நிறுவனமொன்று கணக்குப் புத்தகங்களில் கூடியளவு உண்மையான பெறுமதிகளைப் பேணும் பொருட்டு, இதன் சொத்துக்களை அதன் நடைமுறைச் சந்தை விற்பனை விலையில்பெறுமதியிட பிரேரணை செய்தது. இப்பிரேரணை
எந்த கணக்கீட்டு எண்ணக்கருவை மீறுகின்றது?

Review Topic
QID: 31727
Hide Comments(0)

Leave a Reply

வருமான இனங்காணல் தத்துவம் குறிப்பிடுவது யாதெனில் வருமானமானது

Review Topic
QID: 31728
Hide Comments(0)

Leave a Reply

நிமால் மண் அகழ்வு வியாபாரமொன்றை 2000 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது. இவ்வியாபாரத்தின் நிதிப் பெறுபேற்றை நிர்ணயிப்பதற்கு இவர் அகழ்வு முடிவடையும் வரை காத்துக்கொண்டிருக்கிறார். இத் தீர்மானத்தினால் கீழே தரப்பட்டுள்ள
கணக்கீட்டுக் கொள்கைகளில் எக் கொள்கை அடிப்படையாக மீறப்பட்டுள்ளது?

Review Topic
QID: 31729
Hide Comments(0)

Leave a Reply

2006ஆம் ஆண்டில் ரூ. 15 000 000 இற்கு வாங்கப்பட்ட காணியொன்று 2009 மார்ச் 31 இல் உள்ள படியான ஐந்தொகையில் இதன் மீள் மதிப்பீட்டுத் தொகை ரூ. 30 000 000 எனப் பதியப்பட்டிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் பின்வருவனவற்றுள் எக்கணக்கீட்டு எண்ணக்கரு பின்பற்றப்படவில்லை?

Review Topic
QID: 31730
Hide Comments(0)

Leave a Reply

வரையறுக்கப்பட்ட அமரா கம்பனியின் நிதிக் கூற்றுகளில் ஐயக்கடனுக்கான ஏற்பாடாக ரூ. 150 000 உள்ளடக்கப்பட்டிருந்தது. பின்வருவனவற்றுள் எக்கணக்கீட்டு எண்ணக்கரு இச்சீராக்கத்திற்கான அடிப்படையை வழங்குகின்றது?

Review Topic
QID: 31731
Hide Comments(0)

Leave a Reply

2009 மார்ச் 31 இல் உள்ளபடியான அமரசேன சகோதரர்களின் ஐந்தொகை கடன்பட்டோர், கடன்கொடுத்தோர் மீதிகளாக முறையே ரூ. 500 000 ஐயும் ரூ. 200 000 ஐயும் காட்டியது. மேலே கூறப்பட்ட கடன்பட்டோரையும் கடன் கொடுத்தோரையும் இனங்காண்பதற்கு எக்கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையாகவுள்ளது?

Review Topic
QID: 31732
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்று / கூற்றுகளில் எது சரியானது / சரியானவை?

(A) பண மதிப்பீட்டு எண்ணக்கரு குறிப்பிடுவது யாதெனில் நிதிக் கூற்றுகளில் காணப்படும் விடயங்கள் ஆரம்பத்தில் அவைகளின் வரலாற்றுக் கிரயத்தில் மதிப்பிடப்படுகின்றன.
(B) கணக்கீட்டுக் கொள்கைகளையும் அதன் மாற்றங்களையும் நிதிக் கூற்றுகளில் வெளிப்படுத்துவது பல்வேறு நிறுவனங்கள் தங்களுக்கிடையில் நிதிப் பெறுபேற்றை ஒப்பீடு செய்வதற்கு வசதியளிக்கின்றது.
(C) கொடுக்கல் வாங்கலொன்றின் சட்ட வடிவம் நிதிக் கூற்றுகளில் எப்போதும் கட்டாயமாகப் பிரதிபலிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

Review Topic
QID: 31733
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனமொன்றின் கொடுக்கல் வாங்கல்களையும் நிகழ்வுகளையும் ஏனைய பகுதியினரின் சுதந்திரத்தைப் பேணும் வகையில் பதிவிடுவதற்கு அனுமதிக்கும் கணக்கீட்டு எண்ணக்கரு

Review Topic
QID: 31734
Hide Comments(0)

Leave a Reply

நிலுவை (accrual) கணக்கீடு தொடர்பாகக் கீழே தரப்பட்டுள்ள கூற்றுகளில் எது / எவை சரியானது/சரியானவை?

A – தேறிய இலாபம் என்பது செலவுகளுக்கான காசு வெளிப்பாய்ச்சலை விட வருமானங்களினால் எழும் காசு
உட்பாய்ச்சல்களின் மேலதிகமாகும்.
B – காலமொன்றுக்கான வருமானம் இனங்காணப்படுவது அதனை உழைக்கும் போதாகும்.
C – காசு அடிப்படையை விட நிலுவை அடிப்படை பொருளாதாரப் பெறுபேற்றை சிறந்த முறையில் மதிப்பீடு செய்கின்றது.

Review Topic
QID: 31735
Hide Comments(0)

Leave a Reply

விற்பனைக் கிரயத்தை ஒரு செலவினமாகவும் வருட முடிவிலுள்ள சரக்கிருப்பைச் சொத்தொன்றாகவும் மிகச் சிறப்பாக இனம்காணப் பயன்படுத்தப்படும் எண்ணக்கரு பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 31737
Hide Comments(0)

Leave a Reply

நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் சமர்ப்பித்தல் சட்டகத்திற்கமைய நிதிக் கூற்றுக்களின் இரண்டு அடிப்படை எடுகோள்கள் எவை?

Review Topic
QID: 31736
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கணக்கீட்டு எண்ணக்கருக்களால் எது கணக்கீட்டுச் சமன்பாட்டில் உரிமையாண்மையினை ஒரு தனித்த கூறாக இனம் காணுமாறு வேண்டி நிற்கிறது?

Review Topic
QID: 31738
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கணக்கீட்டு எண்ணக்கருக்களில் எது / எவை நிறுவனமொன்றின் நிதிக் கூற்றுக்களில் உத்தரவாதத்திற்கு ஏற்பாட்டினை மேற்கொள்வதுடன் தொடர்புடையதாகும்?

A – அட்டுறு                               B – இணைத்தல்                     C – முன்னெச்சரிக்கை

Review Topic
QID: 31739
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் சமர்ப்பித்தல் சட்டகத்தின் படி நிதிக் கூற்றுக்களின் முக்கிய பண்புசார் குணாதிசயங்களாக கருதப்படுகிறது?

A – பொருத்தப்பாடு
B – விளங்கிக்கொள்ளக்கூடியதன்மை
C – முன்னெச்சரிக்கை
D – முக்கியத்துவத்தன்மை

Review Topic
QID: 31740
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கணக்கீட்டு எண்ணக்கருக்களில் எது நிதிக் கூற்றுகளில் கடன்பட்டோர் மற்றும் கடன்கொடுத்தோரை இனங்காண்பதற்கான அடிப்படையினை வழங்குகிறது ?

Review Topic
QID: 31741
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கணக்கீட்டு எண்ணக்கருக்களில் எது சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பவற்றை நடைமுறை மற்றும் நடைமுறையல்லாச் சொத்துகளாக வகைப்படுத்தலுக்கான அடிப்படையினை வழங்குகிறது ?

Review Topic
QID: 31742
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எவை நிதிக் கணக்கீட்டுக்கான எண்ணக்கரு சட்டகத்தின் படி சொத்தொன்றின் குணாதிசயங்களாகும்?

A – இது நிறுவனமொன்றினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மூலவளமாகும்.
B – இதனூடாக அதன் எதிர்கால பொருளாதார நன்மைகள் அந்நிறுவனத்துள் வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
C – இதன் கிரயம் அல்லது பெறுமதியை நம்பகரமாக அளவிட முடியும்.

Review Topic
QID: 31743
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கணக்கீட்டு எண்ணக்கருக்களில் எது வருமானக் கூற்றில் ஒவ்வொரு காலத்திற்குமான பெறுமானத் தேய்வினை இனங்காணுகின்றது?

Review Topic
QID: 31744
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கணக்கீட்டு எண்ணக்கருவில் எது வாடிக்கையாளருக்குப் பொருட்களை விநியோகிக்கும் நேரத்தில் அதனை விற்பனை வருவாயாக வருமானக் கூற்றில் இனங்காண்பதற்கான அடிப்படையாக வழங்குகிறது?

Review Topic
QID: 31745
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் எண்ணக்கருக்களில் எது நிதிநிலைமைக் கூற்றில் சொத்துக்களை நடைமுறை மற்றும் நடைமுறையல்லாச் சொத்துக்கள் என வகைப்படுத்துவதற்கான அடிப்படையை வழங்குகிறது?

Review Topic
QID: 31746
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் எண்ணக்கருக்களில் எது வருட முடிவிலுள்ள சரக்கிருப்பை கிரயத்தினதும் தேறிய தேறத்தக்க பெறுமதியினதும் ஆகக் குறைந்த பெறுமதியில் இனங்காண்பதற்கான அடிப்படையை வழங்குகிறது?

Review Topic
QID: 31747
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கணக்கீட்டு எண்ணக்கருக்களில் எது வியாபாரமொன்றின் நிதிக் கூற்றுக்களில் ஊழியர்களின் தேர்ச்சிகளை இனங்காணத் தேவையில்லை என்பதற்கான அடிப்படையை வழங்குகிறது?

Review Topic
QID: 31748
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கணக்கீட்டு எண்ணக்கருக்களில் எது வியாபாரமொன்றின் நிதிக் கூற்றுக்களில் கடன்பட்டோர் மற்றும் கடன் கொடுத்தோர் என இனங்காண்பதற்கான அடிப்படையை வழங்குகிறது?

Review Topic
QID: 31750

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank