Please Login to view full dashboard.

வணிகத் திட்டமொன்றின் உள்ளடக்கங்கள்

Author : Admin

12  
Topic updated on 02/15/2019 10:57am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

வணிகத் திட்டமொன்றின் உள்ளடக்கங்கள்

  • நிறைவேற்றுச் சுருக்கம்
  • வணிக விவரணம்
  • சந்தைப்படுத்தல் திட்டம்
  • செயற்பாட்டுத் திட்டம்
  • மனித வளத் திட்டம்
  • நிதித் திட்டம்

நிறைவேற்றுச் சுருக்கம்

  • வணிகத் திட்டமொன்றில் அடங்கியுள்ள அடிப்படை விடயங்களை பொழிப்பாக்கிக் காட்டும் பகுதி ஆகும்.
  • நிறைவேற்றுச் சுருக்கத்தின் முக்கியத்துவம்
    • முழு வணிகத் திட்டம் தொடர்பான முன்னுணர் நோக்கினை உருவாக்குதல்.
    • வணிகத் திட்டம் தொடர்பான வழிகாட்டலொன்றை உருவாக்குதல்.
    • வணிகத் திட்டம் தொடர்பான நம்பிக்கையொன்றை உருவாக்குதல்.
  • நிறைவேற்றுச் சுருக்கம் எப்பொழுதும் சுருக்கமாகவும் கவர்ச்சிகரமானதாகவும் இருத்தல் வேண்டும்.

வணிக விவரணம்

  • வணிகம் தொடர்பாகவும், அது வழங்கும் பண்டங்கள் தொடர்பாகவும், அது வாடிக்கையாளருக்கு வழங்கும் நன்மைகள் தொர்பாகவும் விபரித்தல் ஆகும்.
    • பெயரும் முகவரியும்
    • குறிக்கோள்/ நோக்கம்
    • தோற்றுவிப்பாளர்கள்/ மேம்பாட்டாளர்கள்
    • நிறுவனக் கட்டமைப்பு முறை
    • நிறுவன அமைப்பு முறை
    • பணிப்பாளர் சபை

சந்தைப்படுத்தல் திட்டம்

  • சந்தை, போட்டித்தன்மை, விநியோக சந்தைப்படுத்தல் வழிமுறைகள், விற்பனை போன்றவை தொடர்பான தகவல்களை விரிவாக முன் வைக்கின்ற பகுதி சந்தைப்படுத்தல் திட்டமாகும்.
  • இதன் முக்கியத்துவம்
    • உற்பத்திக்கு போதுமானதும் விருத்தியடையக் கூடியதுமான சந்தையொன்று காணப்படுகின்றது என்பதை வெளிப்படுத்தல்.
    • சந்தையின் போட்டி நிலைமைக்கு முகங்கொடுக்கக் கூடிய திறன் உள்ளது என்பதை வெளிப்படுத்தல்.
  • இதில் உள்ளடங்கும் விடயங்கள்
    • தொழிற்சாலை , சந்தை என்பவற்றின் பகுப்பாய்வு
    • இலக்குச் சந்தை
    • போட்டி நிலைமைகளின் பகுப்பாய்வு
    • சந்தைப்படுத்த எதிர்பார்க்கும் பண்டங்கள்
    • திட்டமிட்ட விற்பனைகள்
    • சந்தைப்படுத்தல் செலவு

செயற்பாட்டுத் திட்டம்

  • உற்பத்தி நடைமுறைகள், உற்பத்திக்கான இயந்திரம் மற்றும் உபகரணங்கள், தேவையான உற்பத்தி மட்டம் தொழிற்சாலையினை நிறுவுதல், உற்பத்தியின் போது பின்பற்றுகின்ற தேசிய, சர்வதேச நியமங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பகுதிச் செயற்பாட்டுத் திட்டம் ஆகும்.
  • இதன் முக்கியத்துவம்
    • உற்பத்தி தரத்தை உயர்த்த
    • உற்பத்தி செயல்முறையை தொடர்ந்து மேற்கொள்ள
    • எதிர்கால செயல்முறை நடவடிக்கைகள் தொடர்பாக முன்னரே விளங்கிக் கொள்ளலாம்.
  • செயல்முறைத் திட்டமொன்றில் பின்வரும் பிரிவுகள் உள்ளடக்கப்படும்
    • உற்பத்தித்திட்டம்
    • இயந்திர உபகரணங்கள்
    • மூலப்பொருட்களின் தேவை
    • ஊழியர்களின் தேவை
    • உற்பத்தி பொது மேந்தலைக் கிரயம்
    • மொத்த உற்பத்தி கிரயமும் அலகுக் கிரயமும்
    • தொழிற்சாலையின் இட அமைவுத்திட்டம்
    • கழிவுப் பொருட்களை வெளியேற்றலும், சூழலின் தாக்கமும்

மனித வளத்திட்டம்

  • யாதேனும் நிறுவனமொன்றின் அடிப்படைக் குறிக்கோளினையும் நோக்கத்தினையும் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு எதிர்கால மனித வளத் தேவைப்பாட்டினை நிச்சயித்து அத் தேவைப்பாட்டினை நிறைவேற்றிக் கொள்ளும் முறையில் உள்ளடக்கப்படும் பிரிவுகள்.
  • இதன் முக்கியத்துவம்
    • எதிர்கால பணியாளர்களின் தேவைப்பாட்டினையும் கிரயத்தினையும் எதிர்வு கூற முடிதல்.
    • மனித வளங்களை மிகவும் வினைத்திறன் கொண்டதாக பயன்படுத்த முடிதல்
    • ஊழியர்களின் பயிற்சியும் அபிவிருத்தியும் தொடர்பான தேவைகளை இனங்காண முடியுமாக இருத்தல்.
  • இதில் உள்ளடங்குபவை
    • அமைப்பு முறையும் அமைப்பு வரைபடமும்
    • பதவிகளும் பொறுப்புக்களும்
    • மனித வளங்களுக்கான வருடாந்தச் செலவுகள்

நிதித் திட்டம்

  • வணிகமொன்றின் சகல மதிப்பிட்ட நிதித் தகவல்களையும் உள்ளடக்குகின்ற பிரிவு ஆகும்.
  • இதன் முக்கியத்துவம்
    • வணிகக் கருமங்களுக்குத் தேவையான நிதி அளவினைத் தீர்மானிப்பதற்கும், அதனைப் பெறுவதற்கும்.
    • காசு மிகை,குறையினை இனங்கண்டு அதனை முகாமை செய்ய.
  • இதில் உள்ளடங்கும் விடயங்கள்
    • மதிப்பிட்ட கிரயம்
    • மதிப்பிட்ட வருமானக் கூற்று
    • மதிப்பிட்ட காசுப்பாய்ச்சல் கூற்று
    • கடனை மீளச் செலுத்தும் அட்டவணை
    • மதிப்பிட்ட ஐந்தொகை
RATE CONTENT 0, 0
QBANK (12 QUESTIONS)

எந்தவொரு வணிகத் திட்டத்தினதும் பிரதான பகுதிகளை உள்ளடக்கும் தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 17930
Hide Comments(0)

Leave a Reply

ஒரு வணிகத் திட்டத்தின் விரிவான தகவல்களைச் சுருக்கமாக விளங்குவது?

Review Topic
QID: 17934
Hide Comments(0)

Leave a Reply

வணிகமொன்றின் இலட்சிய நோக்கைக் (mission) குறிப்பிடுவதற்கு வணிகத் திட்டத்தில் மிகவும் பொருத்தமான பிரிவு?

Review Topic
QID: 17938
Hide Comments(0)

Leave a Reply

வணிகத் திட்டமிடல் ஒன்றிலுள்ள ‘வணிக விபரத்தில்” உள்ளடங்காத முக்கிய விடயம் எது?

Review Topic
QID: 17963
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் நிதித் திட்டம் ஒன்றில் உள்ளடக்கப்படாத ஒரு உருப்படி?

Review Topic
QID: 17971
Hide Comments(0)

Leave a Reply

எந்தவொரு வணிகத் திட்டத்தினதும் பிரதான பகுதிகளை உள்ளடக்கும் தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 17930

ஒரு வணிகத் திட்டத்தின் விரிவான தகவல்களைச் சுருக்கமாக விளங்குவது?

Review Topic
QID: 17934

வணிகமொன்றின் இலட்சிய நோக்கைக் (mission) குறிப்பிடுவதற்கு வணிகத் திட்டத்தில் மிகவும் பொருத்தமான பிரிவு?

Review Topic
QID: 17938

வணிகத் திட்டமிடல் ஒன்றிலுள்ள ‘வணிக விபரத்தில்” உள்ளடங்காத முக்கிய விடயம் எது?

Review Topic
QID: 17963

பின்வருவனவற்றுள் நிதித் திட்டம் ஒன்றில் உள்ளடக்கப்படாத ஒரு உருப்படி?

Review Topic
QID: 17971
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank